3.5 லட்சம் கோடி.மகா ஊழல்,

suran
சோனியா மருமகன் " ராபர்ட் வாத்ரா"


இந்த ஊழல் முன்பே எழுந்ததுதான்.
ஆனால் சோனியா கூட்டம் ஆய்வுக்குழு ஒன்றை வழக்கம் போல் நியமித்து ஒன்றும் முறைகேடுகள் நடக்க வில்லை.சோனியா மருமகன் வதேரா உத்தமர்,கறைபடிய முடியாத கரத்துக்கு உரிமையாளர் என்று சோனியா சொல்லிக் கொடுத்ததை ஊதி அறிக்கையாக தந்து முடித்தார்கள்.
ஆனால் இம்முறை கேடுகளை வெளிக் கொண்டுவந்த அசோக் கெம்கா இப்போது 100 பக்கங்களில் அறிக்கையாக வெளியிட்டு வதேரா வண்டவாளங்களை ராஜதானி எக்ஸ்பிரசில் இந்தியாவை வலம் வர வைத்து விட்டார்.

காங்கிரஸ்தலைவர் சோனியாவின் மருமகன் " ராபர்ட் வாத்ரா"பெரும் நில பேர மோசடியில் ஈடுபட்டது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 
3.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நடந்த மெகா ஊழலை, அரியானா மாநில, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, அசோக் கெம்கா அம்பலப் படுத்தியுள்ளார்.  
அரியானாவில், பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது.
இங்கு குர்கான் அருகேயுள்ள, சிகோபூர் கிராமத்தில், நிலம் வாங்கியதில், காங்., தலைவர் சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ரா, முறைகேட்டில் ஈடுபட்டதாக, "ஏழை மக்கள் கட்சி' தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டுகூறினார்.

இந்த முறைகேட்டுக்கு முட்டுக்கட்டையாக இருந்த, அரியானா மாநில, பத்திரப் பதிவு மற்றும் நில ஆவணத் துறை அதிகாரி, அசோக் கெம்கா, பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும், அவர் கூறினார்.
 பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போர்க்கொடி தூக்கியதால், இதுகுறித்து விசாரிப்பதற்காக, மூன்று பேர் அடங்கிய குழுவை, அரியானா மாநில அரசு அமைத்தது. இந்த குழு, அக்டோபரில், மாநில அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது.
அதில், "ராபர்ட் வாத்ரா, எந்தவிதமான முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. விதிமுறைகளின்படி தான், அவர், நிலத்தை வாங்கியுள்ளார்' என்று, நற்சான்று அளித்திருந்தது.

 இந்நிலையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி கெம்கா ராபர்ட் வாத்ராவின் நில முறைகேடு குறித்து, விரிவாக விசாரித்து, 100 பக்கங்கள் அடங்கிய அறிக்கையை, அரியானா மாநில அரசிடம் அளித்துள்ளார். இதில், சோனியாவின் மருமகன் முறைகேட்டில் ஈடுபட்டதாக, அவர் கூறியுள்ளார்.

அவர் அளித்துள்ள அறிக்கை:"அரியானாவில், 2004லிருந்து, காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. 2008ல், குர்கான் அருகேயுள்ள, ஷிகோபூர் கிராமத்தில், 3.5 ஏக்கர் நிலத்தை, "ஓங்காரேஷ்வர் பிராப்பர்ட்டி' என்ற நிறுவனத்திடமிருந்து, ராபர்ட் வாத்ராவின், "ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி' என்ற நிறுவனம் வாங்கியது.
அசோக் கெம்கா
 பின், இந்த இடத்திற்கு நகர திட்டமிடல் துறை, ஒப்புதல் வழங்கியது. ஓங்காரேஷ்வர் பிராப்பர்ட்டியிடம் இருந்து, நிலத்தை வாங்குவதற்கு ராபர்ட் வாத்ரா நிறுவனம், பணம் எதுவும் கொடுக்கவில்லை. பணம் கொடுத்தது போன்ற, போலியான ஆவணங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
காங்., தலைவர் சோனியாவின் மருமகன் என்பதற்காக, அரியானா மாநில அரசு, விதிமுறைகளை புறக்கணித்து,நிலத்தை கைமாற்றுவதற்கு, அனுமதி வழங்கியுள்ளது.
ராபர்ட் வாத்ராவின் றுவனத்துக்கும், ஓங்காரேஷ்வர் நிறுவனத்துக்கும் இடையேயான, ஒப்பந்தமே, மோசடியானது. 
இதன் பின், 2012ல், இந்த நிலம், வாத்ரா நிறுவனத்திடமிருந்து, டி.எல்.எப்., ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு கைமாறியுள்ளது.டி.எல்.எப்., நிறுவனம், இந்த நிலத்துக்காக, 58 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. 
இது தொடர்பாக, இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்துக்கு, அரியானா மாநில நகர திட்டமிடல் துறை, அனுமதி அளித்துள்ளது. இந்த பரிமாற்றம் சுமுகமாக நடைபெறுவதற்காக, அரியானா மாநில அரசே, சட்ட விரோதமாக சில சலுகைகளை அளித்துள்ளது. 
இந்த ஒப்பந்தத்தில், அங்கீகாரம் பெறாத அதிகாரி, கையெழுத்திட்டுள்ளார்.

அரியானாவில், பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான அரசு, 2005 முதல், 2012 வரை, ஆட்சியில் இருந்துள்ளது. இந்த எட்டு ஆண்டுகளில், 21 ஆயிரத்து, 366 ஏக்கர் நிலத்தில், வீடுகள் கட்டுவதற்கான உரிமங்களை, அம்மாநில நகர திட்டமிடல் துறை, அனுமதி வழங்கியுள்ளது.
 வீடுகள் கட்டுவதற்கான, உரிமங்கள் பெற்றுத் தர, ஏக்கர் ஒன்றுக்கு, 1 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டு, லஞ்சம் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில், எட்டு ஆண்டுகளில், 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை, பேரம் நடந்திருக்கலாம்.

ஆனால், இது போன்ற உரிமங்கள் பலவற்றை பெற்றுத் தந்த, ராபர்ட் வாத்ராவின் நிறுவனம், ஏக்கர் ஒன்றுக்கு, 15.78 கோடி ரூபாய் வரை விலை பெற்றுள்ளது.

 இதன் மூலம், 3.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மெகா ஊழல் நடந்திருக்க வாய்ப்பு உள்ளது.

ராபர்ட் வாத்ராவின் முறைகேடுகளுக்கு, அரியானா மாநில காங்., அரசும், இதற்கு உடந்தையாக இருந்துள்ளது.
இந்த சட்ட விரோத செயல் காரணமாக, அரியானா அரசுக்கு, பெரும் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.'
இவ்வாறு அறிக்கையில், கெம்கா தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தியின் மருமகன் வதேரா, அரியானா மாநிலத்தில் பல ஏக்கர் நிலம் வாங்கி குவித்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்ட ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா 19 ஆண்டுகளில் அவர் 43 முறை டிரான்ஸ்பர் செய்யப்பட்டவர் .

இந்தியாவில் வேறு எந்த ஒரு ஐஏஎஸ் அதிகாரியும் இது போல் இடமாற்றத்துக்கு ஆளானதில்லை .
அசோக் கெம்கால் ஒரு இன்ஜினியரிங் பட்டதாரி.
1993-ம் ஆண்டு ஐஏஎஸ் ஆனார். தற்போது அவர் இணை செயலர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி ஆவார்.
 இவரது 19 ஆண்டுகால ஐஏஎஸ் பணிகாலத்தில் அதிகபட்சமாக ஒரு பதவியில் 22 மாதங்கள் இருந்துள்ளார்.
சில பதவிகளில் ஒரு மாதத்துக்கும் குறைவாகவே இருந்துள்ளார்.
இவ்வாறு 8 முறை நடந்துள்ளது.
=======================================================
ராபர்ட் வாத்ரா 2007 முதல் 2010 வரை ஐந்து புதிய கம்பெனிகள் தொடங்கியிருக்கிறார். அதில் ஒன்று ஸ்கை லைட் ஹாஸ்பிட்டாலிட்டி.  இந்த நிறுவனம்  சீக்காபூர் என்ற இடத்தில் டிஎல்எஃப்  எழுப்பும் ஓர் ஆடம்பர குடியிருப்புக்கு அருகில்  3.5 ஏக்கர் நிலத்தை 12.39 கோடிக்கு வாங்கி அதை டிஎல்எஃப் நிறுவனத்துக்கு நல்ல விலைக்கு விற்கிறது.
 நிலம் வாங்கியதிலோ விற்றதிலோ ஆச்சரியமில்லை.
suran
ஆனால்  வெறும் 50 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனத்தால் எப்படி இந்த நிலத்தை இவ்வளவு பணம் கொடுத்து வாங்க முடிந்தது? அதைவிட ஆச்சரியம் அந்த நிலத்தை வாங்க  டிஎல்எஃப் கொடுத்த விலை 50 கோடிக்கும் மேல். 
ஒரே இரவில் ராபர்ட் வாத்ராவின் நிறுவனத்துக்கு கிடைத்த லாபம் 37 கோடிகளுக்கும் மேல்.
"எங்கள் நிறுவனம் ஒரு லிமிடெட் கம்பெனி.
அதன் ஆண்டு அறிக்கைகள் ரிஜிஸ்டிரார் ஆஃப் கம்பெனியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது, எவரும் பார்க்கலாம் என்று வாத்ரா அறிவித்திருந்தார்.  அதனை ஆராய்ந்த தி ஹிந்து போன்ற பத்திரிகைகள் அதிர்ச்சியான தகவல்களைத் தந்தன.  நிலம் வாங்க திரட்டப்பட்ட 12.39 கோடியில் 7.94 கோடி டெல்லி கார்ப்பரேஷன் வங்கியின் ஃபிரண்ட்ஸ் காலனி கிளையில் ஓவர் டிராஃப்டாக பெறப்பட்டதாகவும் மீதியில் கணிசமான பகுதி ஏர்டெக்ஸ் கம்பெனியிலிருந்து கடனாகப் பெற்றதாகவும்  ஸ்கைலைட் கம்பெனியின் பாலன்ஸ் ஷீட்டில் சொல்லப்பட்டிருந்தது. வெறும் 50 லட்சம் முதலீடு உள்ள கட்டுமானத் தொழிலில் எந்த முன் அனுபவும் இல்லாத ஒரு நிறுவனத்துக்கு எந்தவிதமான செக்யூரிட்டியும் இல்லாமல் எப்படி ஒரு வங்கி இவ்வளவு பெரிய  தொகையைக் கடனாக வழங்கியது என்று கேள்வி எழுப்பப்பட்டபோது கார்ப்பரேஷன் வங்கி அதை மறுத்தது.
suran
மீதி பணத்தை கடனாகத் தந்த ஏர்டெக்ஸ் நிறுவனத்தின் அந்த ஆண்டின் மொத்த லாபமே சில லட்சங்கள் தான். 
அப்படியானால் பணம் எங்கிருந்து வந்தது?
யாருடையது?
 ஒரு வங்கியின் தலைவர் தரும் தகவல் தவறாக இருக்க வாய்ப்பில்லை. அப்படியானால் தாக்கல் செய்யப்பட்ட ஆண்டு அறிக்கை தவறானதா?
அதை தணிக்கை செய்து  ஒப்புதல் அளித்த ஆடிட்டர்கள் தவறு செய்துவிட்டார்களா? ஆடிட்டர்கள் ஒப்பமிடும் அறிக்கைகளில் எப்போதும் ‘எங்களுக்குத் தந்த தகவல்களின் படி’ என்ற தற்காப்பு வாசகம் இருக்கும். ஆனால்  வங்கியில் வாங்கிய கடனுக்கான ஆவணங்களைக்கூட சோதிக்காமல் கையெழுத்திட்டிருப்பது மற்றொரு ஆச்சரியம். இத்தனைக்கும் ஆடிட் செய்திருப்பது குரானா என்ற பெரிய தணிக்கை நிறுவனம்.
இதைப்போல தொடர்ந்து எல்லா நிறுவனங்களின் மூலமும் பல இடங்களில் நிலங்களும், பிளாட்களும் வாங்கி பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. கிடைத்த லாபங்களிலிருந்து டெல்லியிலுள்ள ஓர் ஆடம்பர ஹோட்டலின்  50% பங்குகளை வாத்ரா வாங்கியிருக்கிறார். இதுவும்,  மற்ற ஆடம்பர அடுக்குமாடி வீடுகளும் டிஎல்எஃப் நிறுவனத்திடம் இருந்து மிகக்குறைவான விலைக்கு வாங்கப்பட்டிருக்கின்றன. மார்க் கெட்டில் விற்பதைவிட இவருக்கு மட்டும் ஏன் இப்படி குறைந்த விலைக்கு டிஎல்எஃப் விற்க வேண்டும்?

========================================================
இப்படி பல கேள்விகள் எழுகிறது.
இதற்கு விடைகளை சோனியாவின் மருமகனும்,சோனியாவும்,காங்கிரசும் தான் தர வேண்டும் .ஆனால் இதைவிட பல மகா ஊழல்களிலும் கூட மழுப்பியே வந்தவர்கள்.விடையை எப்படி தருவார்கள்.
இதில் பழியைப் போட ஆ.ராசா போல் ஒருவர் தலையும் சிக்கவில்லை.காரணம் இது ஆட்சியில் நடக்கவில்லை.மருமான் கடையில் நடந்த கொள்ளை.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
suran

 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?