ஜெயலலிதா அரசு பொய் வழக்கு?


suran 25/08/13

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவத்தில் சிறையில் இருக்கும் நளினியின் செல்போன் வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது!
வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நளினியிடம் இருந்து 2010 ஏப்ரல் மாதம் [20] செல்போனை பறிமுதல் செய்ததாகவும் அரசுப் பணியாளர்களைப் பணிசெய்யவிடாமல் தடுத்ததாகவும் சிறைக் கண்காணிப்பாளர் இராஜலட்சுமி புகார் அளித்தார்.
இந்தவழக்கில், வேலூர் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 6ஆஜர்படுத்தபட்டார் நளினி. அப்போது, ”20 வருடங்களுக்கு மேலாக நான் சிறையில் இருக்கிறேன். என்னை யார் யார் பார்க்க வருகிறார்கள் என்பது பொலிஸுக்குத் தெரியும்.
அவர்களை மீறி எப்படி செல்போன் என்னிடம் வரும்? பொய்வழக்குப் போட்டிருக்கிறார்கள். வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் விசாரிக்க வேண்டாம். கோர்ட்டில் வந்து பேசுகிறேன்” என்று உணர்ச்சிவசப்பட்டார்.
கடந்த 19-ம் திகதி மீண்டும் ஆஜரானார். நளினியிடம் இருந்து செல்போன் கைப்பற்றிய போது பணியில் இருந்த சிறைக் கண்காணிப்பாளர் இராஜலட்சுமி உட்பட 11 பேரிடம் நீதிபதி விசாரித்தார்.
suran
நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி, ”இது முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டு. காவல்துறை சார்பில் அளிக்கப்பட்ட வரைபடத்தில் சிறையில் நளினியிடம் இருந்து செல்போன் கண்டெடுக்கப்பட்ட இடத்தைக் காட்டியுள்ளனர்.
அந்த இடத்தை நாங்கள் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றோம். அதற்கு நீதிபதி, சட்டத்தில் அதற்கு அனுமதி இல்லை. ஆனால் நீதிபதி மூலமாகப் பரிசோதிக்கலாம் என்றார்.
சிறை அதிகாரிகளிடம் விசாரணை முடிந்த பிறகு எங்களது வாதத்தைத் தொடர்வோம். செல்போனை பறித்தவர்கள் அதன் சிம் அட்டை பற்றி ஏன் கூறவில்லை? என்றார்.
செல்போன் இருந்தது நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டு தண்டனை வழங்கப்படும். இதனால், நன்னடத்தை காரணமாக நளினி விடுதலையாவது சிரமம்தான்.
செல்போன் வழக்கின் தீர்ப்பு 30- வருகிறது. அதுவரை காத்திருப்போம்!
-
------------------------------------------------------------------------------------------------------------------------------------
ரூபாயின்  வீழ்ச்சி..!
================

 ரூபாயின் மதிப்பு,டாலருக்கு எதிராக வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்து வருகிறது.
இதற்கு, அரசின் தவறான பொருளாதார கொள்கை காரணம்.
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வை, தடுக்க அரசு எடுத்த, நடவடிக்கைகள், நீண்ட நாட்களுக்கு தாக்குப் பிடிக்க முடியவில்லை. சர்வதேச அளவில் நிலவும் விலைவாசி உயர்வை இப்போது நாம் சந்திக்கிறோம் எனவும் கூறப்படுகின்றன.
suran
இதற்கிடையே, ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவது, நாட்டின் பொருளாதாரத்தை நிலைகுலைய வைக்கும். டாலர் கையிருப்பு குறைவதால், தங்கத்தை விற்றோ, அடமானம் வைத்தோ, டாலரை கொள்முதல் செய்து, பொருளாதாரத்தை சீர்செய்ய வேண்டும் என்கின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி, அடுத்த சில ஆண்டுகளுக்கு நீடிக்கும். இதன் தாக்கம், நாட்டில் உள்ள மத்திய தர குடும்பங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் .
ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகரித்ததால், அன்னிய செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அடுத்து, அமெரிக்காவின் பொருளாதார மந்த நிலை மேம்பட்டு வருவதால், இந்தியாவில் செய்திருந்த அன்னிய முதலீடுகளை திரும்பப் பெற்று, அதிக லாபம் கிடைக்கும் என, அமெரிக்காவில் முதலீடு செய்கின்றனர்.
இவற்றினால், இந்தியாவின் டாலர் தேவை அதிகரித்து, அதற்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைகிறது.
நடப்பு பற்றாக்குறையை சரிசெய்ய, ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். அதேபோல், இறக்குமதியை குறைக்க வேண்டும். இறக்குமதியில், பெரும் பங்கு தங்கம் என்பதால், தங்க இறக்குமதிக்கு தடை போட வேண்டும். நாட்டில், நுகர்வுக்கு வாங்கப்படும் தங்கத்தை விட, பதுக்கி வைக்க வாங்கும் தங்கம் தான் பெருமளவு உள்ளது.
 கறுப்பு பணத்தை காப்பாற்றிக் கொள்ள, தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றனர்.
இதைத் தடுக்க வேண்டும். தங்கத்தை பதுக்குவோர் மீது, அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால், இதை அரசு செய்யுமா என்பது தான் இப்போதுள்ள கேள்வி. ?
ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதால், முதலாளிகளோ, ஏழைகளோ பாதிக்கப்படுவதில்லை. இந்தியாவில், பெரும் எண்ணிக்கையில் உள்ள நடுத்தர மக்கள் தான் பாதிக்கப்படுவர்.
suran

அடுத்த ஐந்தாண்டுகளுக்கு, நடுத்தர மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு சொல்லிமாளாது. அரசு செயல்படுத்தும் இலவச திட்டங்களுக்கும், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கும் தொடர்பில்லை. தாராள மயக்கொள்கையால், நாட்டில் ஏற்பட்டுள்ள, ஏற்றத் தாழ்வை சரிக்கட்ட வேண்டிய கட்டாயம், அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
அதற்கு தான், இலவச திட்டங்களை அமல் செய்கிறது. இலவச திட்டங்கள் இல்லையென்றால், பெரும்பகுதி மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி, போராட்டத்தில் குதிக்கும் அபாய நிலையை, மத்திய, மாநில அரசுகள் சந்திக்க நேரிடும்.

வருமுன் காப்போம் என, நடவடிக்கை எடுக்கத் தவறியதால், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது.
இதை இப்போதைக்கு தடுக்க முடியாது. விலைவாசி உயர்வைத் தடுப்பதற்காக, அரசு எடுத்த நடவடிக்கையின் பலனாக, இப்போதைய நெருக்கடியை சந்திக்கிறோம். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், டாலரின் மதிப்பு 39 ரூபாய் இருந்தது. அப்போது, டாலரை சேமிக்கவும், அதிக கையிருப்பு வைக்கவும் தவறி விட்டோம். சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தம், விலைவாசி உயர்வு ஆகியவற்றின் தாக்கம், இந்தியாவுக்கும் வந்தது. அந்தத் தாக்கத்தை நாம் ஏற்க, அப்போது மறுத்தோம். சர்வதேச நெருக்கடியைத் தவிர்க்கிறோம் என்ற போர்வையில், நடவடிக்கைகளை மேற்கொண்டோம். இச்செயல், நீண்ட நாட்களுக்கு தாக்குப் பிடிக்காது. விரைவில், பொருளாதார நெருக்கடியை சந்திக்க வேண்டும் என திட்டமிட்டு, டாலர் கையிருப்பை அதிகரிக்க ஏற்றுமதியை மேம்படுத்தி இருக்க வேண்டும். தேவையற்ற இறக்குமதியை குறைத்திருக்க வேண்டும்.
வந்த பின் பார்த்துக் கொள்வோம் என, இருந்துவிட்டதால், இப்போது தாக்குதல் அதிகரிக்கும்போது அலறுகிறோம். ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையே நிலவும், நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க, ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் நிலவும், பொருளாதார மந்த நிலையில், திட்டமிடும் அளவுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க முடியாது. பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதியைத் தடுக்கவும் முடியாது. தங்கம் இறக்குமதியை தடை செய்தால், கடத்தல் அதிகரிக்கும். அதற்கு, இறக்குமதியை அனுமதித்து, வரியைப் பெற்றுக் கொள்ளலாம் என, தங்க இறக்குமதியை அரசு அனுமதிக்கிறது. எனவே, டாலருக்கு எதிரான, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவது நிற்கும் வரை பொறுத்திருந்து தான் ஆக வேண்டும்.
suran

இந்தியாவில், டாலரின் தேவை அதிகரித்து உள்ளதால், அதன் மதிப்பு கடந்த சில நாட்களில், 58.65 ரூபாயிலிருந்து, 65 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதற்கு, இறக்குமதி அதிகரித்து, ஏற்றுமதி குறைந்தது; டாலரில் செலுத்த வேண்டிய கடனின் அளவு அதிகரித்துள்ளது; தங்கத்தின் மீது நிலவும் குறையாத மோகம் போன்றவையே காரணம். மொத்த இறக்குமதியில், டீசல், பெட்ரோலின் மதிப்பு, 60 சதவீதத்துக்கு மேல் உள்ளது. தங்கத்தின் இறக்குமதி, 20 சதவீதம். மீதமுள்ள, 20 சதவீதம் தான், பிற பொருட்களை இறக்குமதி செய்கிறோம். உலகின் நம்பிக்கை பெற்ற பணம், டாலர் என்பதால், உலக நாடுகள் அனைத்தும், டாலரில் தான் வர்த்தகம் செய்கின்றன. நம் இறக்குமதியும், டாலரில் தான் நடைபெறுகிறது. இந்நிலையில், டாலரின் தேவை அதிகரித்து, அதன் மதிப்பு உயர்ந்துள்ளது. இதனால், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து உள்ளது. டாலரின் பற்றாக்குறையை சரிக்கட்ட, கையிருப்பில் உள்ள டாலரை, வெளிசந்தைக்கு கொண்டு வரலாம்.
ஆனால் தற்போது, இந்தியாவிடம் உள்ள டாலர் அனைத்தையும் வெளிசந்தைக்கு கொண்டு வர முடியாது. அப்படி கொண்டு வந்தால், கையிருப்பு அனைத்தும் தீர்ந்துபோய், அரசிடம் டாலர் கையிருப்பு இல்லை என, அன்னிய முதலீடுகள் குறைவதோடு, பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ள அன்னிய முதலீட்டாளர்கள், நாட்டின் பொருளாதாரத்தின் மீது நம்பிக்கை இழந்துவிடுவர். மேலும், இந்தியாவுக்கு வரும் புதிய அன்னிய முதலீடுகளும் நின்றுபோய் விடும். ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்த, டாலரில் செய்யும் தேவையற்ற இறக்குமதியை உடனடியாகக் குறைக்க வேண்டும்.
குறிப்பாக, தங்கத்தின் மீது நாம் கொண்டுள்ள மோகத்தை முற்றிலும் கைவிட வேண்டும். இல்லையேல், டாலர் தீர்ந்துபோய், தங்கத்தில் வர்த்தகம் செய்யும் சூழல் ஏற்படும்.
suran

டாலரின் மதிப்பு அதிகரிப்பதால், நாட்டின் கடன் சுமை அதிகரிக்கும். இதனால், மக்கள் வளம் பெற மேற்கொள்ளப்படும் பொருளாதார வளர்ச்சி என்பதற்கு மாறாக, கடனை அடைக்க செய்யும் வேலை என்றாகிவிடும். அமெரிக்க டாலரை கொண்டு தான், அனைத்து நாடுகளிலும் வர்த்தகம் நடக்கிறது. இந்தியாவும், அதற்கு விதிவிலக்கு அல்ல. ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நேரத்தில் கூட, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பெரிய பின்னடைவை சந்திக்கவில்லை.
இப்போது, டாலர் மதிப்பு அதிகரிப்பால், நாட்டின் பொருளாதார நெருக்கடி அதிகரித்து, வளர்ச்சிப் பாதையில், பின்னோக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்படுகிறோம்.
நாட்டின் கடன் முழுவதும் டாலரில் பெறப்பட்டவை. அவை அனைத்தையும், டாலரில் தான் திருப்பி செலுத்த வேண்டும். டாலர் மதிப்பு கட்டுக்குள் இருந்தால், அதைத் திருப்பி செலுத்துவதிலும் சிரமம் இருக்காது.
பெற்ற கடனையும், அதைத் திருப்பிச் செலுத்தும் அளவையும், நாம் திட்டமிட்டு வைத்திருப்போம்.
 திடீரென கடனின் மதிப்பு உயருகிறது. இதற்கு, டாலர் மதிப்பு கட்டுக்கடங்காமல் உயருவது தான் காரணம். கடனின் மதிப்பு உயரும்போது, கையிருப்பு இருக்கும் டாலரைக் கொண்டு முழுமையாக செலுத்த முடியாது.
suran
 டாலரை சம்பாதிக்க, கூடுதல் உழைப்பை செலுத்த வேண்டும். நாம் அளிக்கும் கூடுதல் உழைப்பு, நாட்டின் வளர்ச்சிக்கு என்பதைக் காட்டிலும், கொடுக்க வேண்டிய கடனுக்காக என்பதால், அந்த வளர்ச்சியால் மக்களுக்கு பெரும் பயன் இருக்காது.
மேலும், சம்பாதிக்கும் தொகையை கடனுக்கு அளிக்கும்போது, நாட்டின் சேமிப்பு குறையும். சேமிப்பு குறையும்போது, தொழில்களுக்கான மறு முதலீடு குறையும். தொழில் குறையும்போது, உற்பத்தி குறையும்.
இவ்வாறு, சங்கிலித் தொடர்போல், நம்மீதான தாக்குதலை, டாலர் மதிப்பு உயர்வு ஏற்படுத்தும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?