நாடும் நடப்பும்,

இன்று இந்தியாவை அச்சுறுத்தும் நிலை இந்திய பணத்தின் வீழ்வுதான்.
இதை தடுக்க முடியாதா?
முடியும்.
suran
அதை செய்ய வேண்டிய  மன்மோகன் சிங்,ப.சிதம்பரம் கூட்டம் மென்மேலும் சீர்திருத்தம் என்ற பெயரில் பணத்தின் மதிப்பை கீழே தள்ளியதும் போதாது என்று புதைக்க குழியை தோண்டுகிறார்கள் .
இன்னமும் பொதுத்துறை நிறுவனங்களை அந்நிய நிறுவனங்களுக்கு தாரை வார்க்க முயலுகிறார்கள்.
லட்சம் கோடிகளில் மதிப்புமிக்க இந்திய எண்ணை கழகத்தின் பங்குகளை விற்பதாக கூறு வைக்கிறார்கள்.இந்நிறுவனம் இந்த ஆண்டு லாப ஈவுத்தொகையாக 10000 கோடிகளை இந்திய அரசுக்கு வழங்கியுள்ளது.இதன் பங்குகளை ஏற்கனவே பத்து சதம் விற்று விட்டனர்.இன்னமும் 20 சதம் விற்றால் அது பகாசுர தனியார் கையில் போய் விடும்.பின் இது போன்ற ஈவுத்தொகை எங்கே கிடைக்கும்.அவை அந்நிய நிறுவனங்களுக்குத்தான்.பெட்ரோல் விலை அடிக்கடி கூடுவதற்கும் அதன் மூலம் விலைவாசி கூடுவதற்கும் காரணமே இது போன்ற பெட்ரோலிய நிறுவனங்கள் தனியாருக்கு அம்பானி போன்றோருக்கு தாரை வார்க்கப்பட்டதுதான். அவர்கள் தங்கள் கல்லாவில் கொட்டும் பணத்தின் மதிப்பை குறைய விடாமல் அதிகரிக்க வைப்பதுதான் தினசரி பெட்ரோல் விலை எற்றம்.
அதன் மூலம் மறை முக விலைவாசிகள் எற்றம்.
இனி பீப்புள் டெமாக்ரசி ஆங்கில இதழில் வெளியான கட்டுரையின் தமிழ் வடிவம்:
பணக்காரர்களுக்கான மானியத்தை நிறுத்து.!
 பொது முதலீட்டை அதிகப்படுத்து!!

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணா அளவிற்கு சரிந்துள்ளது.
இதை விட மோசமான நிலை என்னவெனில் இவ்வாறு சரிவது நிற்குமா என்றே தெரிய வில்லை.
நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங்களுக்கு லாலி பாடிய மேதாவிகள், உணவுப் பாதுகாப்புச் சட்ட முன்வடிவினை மக்களவையில் நிறை வேற்றியதுதான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு உடனடிக் காரணம் என்று கூறத் தொடங்கி உள்ளனர்.
இந்திய கார்ப்ப ரேட்டுகளும் சர்வதேச நிதி மூலதன நிகழ்ச்சி நிரலுக்கு வக்காலத்து வாங்கும் ஊடக அடிமைகளும் உணவுப் பாது காப்புச் சட்டம் ‘‘பொது நிதிகளுக்குச் சரி யான அடி கொடுத்துள்ளது’’ என்று எழுதிக் கொண்டிருக்கின்றனர்.
suran
இந்தியத் தொழில்களின் கூட்டமைப்பு (சிஐஐ) தலைவர் சிவப்புக் கொடியை உயர்த்தி, ‘இந்த நேரத்தில் இவ்வாறு பெரும் தொகையை (உணவுப் பாதுகாப்புக்காக) ஒதுக்குவது நிச்சயமாக நிதிப் பற்றாக் குறையில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்று கூறியிருக்கிறார்.உயர் நிதிப் பற்றாக்குறையை எதிர் பார்ப்பது நிச்சயமாக இந்தியாவில் முத லீடு செய்துள்ள சர்வதேச நிதி முதலீட் டாளர்களை நடுங்க வைத்திருக்கிறது. அவர்கள் இந்தியச் சந்தையிலிருந்து வெளியேறிக் கொண்டிருக் கிறார்கள்.
அதன் காரணமாக ரூபாயின் மதிப்பும் சரிந்து கொண்டிருக்கிறது. சர்வதேச அளவில் உள்ள நிச்சயமற்ற தன்மையின் காரணமாக வளர்முக நாடுகளின் கரன்சி களும் கூர்மையாக சரிந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்திய ரூபாயின் மதிப்பு இந்த ஆண்டின் தொடக்கத்தி லிருந்து 20 விழுக்காடு அளவிற்கு சரிந் திருக்கிறது. தென் ஆப்ரிக்காவின் கரன்சி யான ரேண்ட் (சுயனே)-உம் கிட்டத்தட்ட 23 விழுக்காடு அளவிற்கு வீழ்ச்சியடைந் திருக்கிறது.
நிச்சயமாக இதற்கு இந்திய உணவுப் பாதுகாப்புச் சட்டமுன்வடிவை இம்மேதாவிகள் காரணமாய் கூறமாட் டார்கள் என்று நம்பலாம்.தாங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற் கான வாய்ப்பு வாசல்களைப் பாதுகாத் திடும் முயற்சியின் காரணமாகத் தான் இந் திய கார்ப்பரேட்டுகள், ‘‘நாடு எப்படி பட் டினி கிடப்பவர்களுக்குப் பசியாற வைப் பதற்கான வேலைகளில் ஈடுபடலாம்’’ என்று மிகவும் மனிதாபிமானமற்ற முறை யில் கூக்குரல் எழுப்புகிறார்கள். தற்போ தைய உணவுப் பாதுகாப்புச் சட்டமுன் வடிவில் அனைத்து மக்களுக்கும் எட்ட முடியாது என்று தெரிந்தும் மிகவும் அற் பதமான ஒதுக்கீட்டையே அரசு செய் திருக்கிறது.
ஆயினும் இதனைக்கூட தாங் கள் கொள்ளைலாபம் அடிப்பதைக் கட் டுப்படுத்தும் செயலாக ‘இவர்கள்’ பார்க் கிறார்கள். நம்முடைய மக்களுக்கு ஓர் அர்த்தமுள்ள உணவுப் பாதுகாப்பு என்பது எப்போது சாத்தியமாகும்? நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பத்தினருக்கும் மாதத் திற்கு குறைந்தபட்சம் 35 கிலோ கிராம் உணவு தானியங்களை கிலோ கிராம் 2 ரூபாய்க்கு மிகைப்படாத விலையில் கொடுக்கும்போதுதான் சாத்தியமாகும்.
suran
 இப்போது நிறைவேறியிருக்கும் சட்ட முன்வடிவு இந்தக் குறிக்கோளை எய்து வதற்குப் போதுமானதில்லை.ஆயினும் இவ்வாறு அரசாங்கம் கொண்டு வந்திருக்கும் அரைகுறையான இச்சட்டமுன்வடிவிற்கே அரசின் கரு வூலத்திற்கு ஆண்டொன்றுக்கு, கூடுத லாக 30 ஆயிரம் கோடி ரூபாய் செலவா கும். இதற்காக பட்ஜெட்டில் ஏற்கனவே 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டிருக் கிறது.
 எனவே மேலும் கூடுதலாக ஒதுக்க வேண்டிய தொகை 20 ஆயிரம் கோடி ரூபாய்தான். இத்தொகையைத்தான் நமது பொருளாதாரத்தால் ஒதுக்க முடியாது என்று இந்திய கார்ப்பரேட்டுகள் கூறு கிறார்கள். பசியால் வாடிக் கொண்டிருக் கும் தம் மக்களுக்கு உணவளிக்க முடி யாத ஒரு நாடு நிச்சயமாக தங்கள் நாட் டில் இருக்கும் விரல்விட்டு எண்ணக் கூடிய பணக்காரர்கள் மட்டும் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வாய்ப்புவாசல் களைத் திறந்துவிட முடியாது.
இதே இந்திய கார்ப்பரேட்டுகள், தங்களுக்கு வளர்ச்சியை மேம்படுத்து வதற்காக என்று கூறி பல்லாயிரம் கோடி ரூபாய்களை ‘முடுக்கிவிடும் நிவாரண உதவி’ (`ளவiஅரடரள யீயஉமயபநள’) என்ற பெய ரில் ‘ஊக்கத்தொகைகளாக’ (`inஉநவேiஎநள’) பெற்றுக் கொண்டிருப்பது குறித்து வாயே திறப்பதில்லை. கடந்த மூன்றாண்டு களாக, மத்திய அரசால் ஒவ்வோராண்டும் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டின்போதும் அது வரிவசூல் செய்யாமல் கைவிட்ட தொகை குறித்தும் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது.
 அதன்படி ஒவ்வோராண் டும் 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் வரி வசூல் செய்யாமல் மத்திய அரசால் கைவிடப்பட்டிருந்தது. இதில் பெரும் தொகை வழக்கில் சிக்கிக் கொண்டிருப்ப தால் இத்தொகை முழுவதையுமே வசூ லிக்க முடியாது என்று கூறப்பட்டது. ஆயி னும் அரசுத் தரப்பில் கூறப்படும் வாதத் தை அப்படியே ஏற்றுக்கொண்டா லும்கூட, இத்தொகையில் சுமார் மூன்றில் ஒரு பங்குத் தொகை ஒவ்வோராண்டும் பணக்காரர் களுக்கும் கார்ப்பரேட்டுகளுக் கும் வரிச் சலுகைகளாக வழங்கப்பட்டு வருகிறது.
suran
 இதில் இவர்கள் கூறும் ‘‘ஊக் கத் தொகைகள்’’ என்பது வேறெதுவும் இல்லை. கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப் படும் மானியங்கள்தான். இவ்வாறு இவர் களுக்கு சலுகைகளை வாரி வழங்கி யிருந்த போதிலும்கூட, இந்த ஆண்டு மே மாதத்தில் தொழில் உற்பத்தியின் வளர்ச்சி அட்டவணையைப் பார்த் தோமானால் அது -1.6 என்ற ரீதியில்தான் இருக்கிறது. இதற்குப் பிந்தைய மாதங் களில் அதுவும் வீழ்ச்சி யடைந்தது. இவ் வாறு பணக்காரர்களுக்கு சலுகைகளை வாரி வழங்கிய போதிலும், அதனால் நாட் டின் வளர்ச்சிக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று நன்கு தெரிந்த பின்னரும் கூட, பணக்காரர் களுக்கு அளித்து வரும் மானியங்களை நிறுத்தக்கூட வேண்டாம், அதனைக் குறைப்பது குறித்து கூட பேச்சு எதையும் அரசுத்தரப்பில் காணோம்.
ஆனால் அதே சமயத்தில் பணக்காரர் களுக்கு அளிக்கும் மானியங்களோடு ஒப்பிடுகையில் அதில் மிகவும் சொற்ப அளவிற்கு ஏழைகளுக்கு அளிக்கப்படு கையில் கார்ப்பரேட்டுகளும், பணக்காரர் களும் குய்யோ முறையோ என்று கூச்சல் போடுகிறார்கள். ஏற்கனவே அரசாங்கம், அதிகரித்து வரும் மானியங்களையும், நிதிப் பற்றாக்குறை மேலும் உயர்வதைச் சரிக்கட்டுதல் என்ற பெயர்களால், பெட் ரோலியப் பொருட்களின் விலைகளை மேலும் உயர்த்த முடிவெடுத்துவிட்டது.
 இவற்றின் விளைவாக அரசாங்கம் தற் போது மக்களுக்கு அளிக்கவிருக்கும் உணவுப் பாதுகாப்புச் சட்டமுன்வடிவு அளித்திட இருக்கும் கொஞ்சநஞ்ச பயன் களும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு முழுமையாகச் சென்று அடையப் போவதில்லை.மேலும் அரசின் இந்த நடவடிக்கை வளர்ச்சிக்கு உதவாது.
உயர் பணவீக்கம் உள்ள பின்னணியில் இத்தகைய உயர்வு களும் அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வுகளும் மக்க ளின் வாங்கும் சக்தியை மேலும் குறைத் திடும்.
அதன் மூலம் நம் பொருளாதாரத் தின் உள்நாட்டுச் சந்தையும் சுருங்கும். இவை தொடர்ந்து பொறியியல் மற்றும் எந் திரவியல் போன்ற உற்பத்தித் துறைகளி லும் வேலைகளைச் சுருக்கி, நாட்டின் ஒட்டுமொத்த அளவில் மொத்த உள் நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தையும் குறைத்திடும்.
ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக நம் பொருளாதாரத் தில் மொத்த நுகர்வு செலவினம் மிகவும் ஆரோக்கியமான விதத்தில் ஒவ்வோராண்டும் 8 விழுக்காடு என்ற அளவிற்கு வளர்ந்து கொண்டிருந்த தானது, கடந்த சில ஆண்டுகளாக வெறும் 4.4 விழுக்காடு அளவிற்குக் குறைந்து விட்டது.கார்ப்பரேட்டுகளின் அறிக்கைகளும் இவற்றை உறுதிப்படுத்துகின்றன.
suran

அவர் களது அறிக்கைகளின்படி நுகர்வுப் பொருட்கள் விற்பனை என்பது 2012 தொடக்கத்திலிருந்து 2013 வரை கணிச மான அளவிற்கு மந்தமாகிவிட்டது.
 நாட் டில் நுகர்வுப் பொருட்களை விற்கும் 12 பெரிய கம்பெனிகள் இந்த ஜூன் மாதம் தங்கள் விற்பனை வளர்ச்சி 5 விழுக்காடு என்று காட்டியிருக்கிறது.
 இதே கம்பெனி கள் சென்ற ஜூனில் இதனை 29.3 விழுக்காடு வளர்ச்சி என்று காட்டியிருந்த தோடு ஒப்பிட்டோமானால் எந்த அள விற்கு மக்களிடம் வாங்கும் சக்தி குறைந் திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இந்தியாவின் மிகப்பெரிய நுகர் வுப்பொருட்களை விற்பனை செய்திடும் நிறுவனமான இந்துஸ்தான் யூனிலீவர் கம்பெனி, ‘‘மக்கள் தங்கள் செலவுகளை வெட்டிச் சுருக்கிக்கொண்டுவிட்டார்கள்’’ என்று அறிக்கை தாக்கல் செய்திருக் கிறது. மோட்டார் கார்கள் விற்பனை சென்ற நிதியாண்டில் 6.7 விழுக்காடு வீழ்ச்சி யடைந்துள்ளது.
இவ்வாறு வீழ்ச்சி அடைந்துள்ளது என்பது கடந்த பத்தாண் டில் இதுவே முதன்முறையாகும். 2013 ஏப் ரல் - ஜூன் மாதத்தில் இது 10 விழுக்காடு அளவிற்கு வீழ்ச்சியடைந்ததாக இந்திய ஆட்டோமோபைல் உற்பத்தியாளர் சங்கம் கூறியிருக்கிறது. மேலும் இந்த நிதி யாண்டில் மக்களின் வாங்கும் சக்தி குறைந்திருப்பதால் இது 5 - 12 விழுக் காடு அளவிற்கு விற்பனை குறையும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அதேபோன்று, வாஷிங் மெஷின், தொலைக்காட்சிப் பெட்டி, மைக்ரோவேவ் போன்ற அனைத்து நுகர்வுப் பொருள் களின் விற்பனையும் கணிசமான அள விற்கு வீழ்ச்சி அடைந்திருக்கின்றன.நம் நாட்டின் பொருளாதாரத்தில் ஒட்டு மொத்த உள்நாட்டுத் தேவை சுருங்கியதே இதற்கு முக்கிய காரணமாகும். இவற்றின் நேரடி விளைவு, பணக்காரர்களும் இந்திய கார்ப்பரேட்டுகளும் தங்களிடம் உள்ள கணிசமான உபரியை உற்பத்தியில் முத லீடு செய்வதைத் தவிர்க்கிறார்கள். ஏனெ னில் அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் உலகப் பொருளாதார நெருக் கடியின் காரணமாக சர்வதேசச் சந்தை யிலும் விலை போகாது, இந்தியச் சந் தையில் மக்களின் வாங்கும் சக்தி குறைந் திருப்பதால் இங்கும் விற்காது என்று அவர்கள் கருதுகிறார்கள்.
கடந்த ஓராண் டாக நம் பிரதமரும் நிதி அமைச்சரும் நம் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களைக் கூட அவற்றின் ரொக்க இருப்புகளை முதலீடு செய்வதற்குத் தூண்டத் தவறி விட்டார்கள். இத்தகைய சூழ்நிலைகளின் கீழ், பணக்காரர்கள் தங்களிடம் உள்ள கையிருப்புகளைப் போட்டு வைக்க வழி தேடினார்கள். இதற்கு அவர்கள் தங்கம், ரியல் எஸ்டேட் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை வாங்குவது முதலியவை களில் ஈடுபட்டார்கள். வரலாற்றில் முன் னெப்போதும் இல்லாத அளவிற்கு தங்கத் தின் விலை பத்து கிராம் 33 ஆயிரத்து 590 ரூபாயை எட்டியது.
 வெள்ளியின் விலை கூட கடந்த ஆறு மாதங்களில் கடுமை யாக உயர்ந்துள்ளது. ரியல் எஸ்டேட் விலைகள் உலகிலேயே இந்தியாவில் தான் அதிகமான அளவில் உயர்ந்திருக் கிறது. ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி அமெரிக்க டாலர் மற்றும் இதர வெளிநாட்டு கரன்சி களின் தேவையையும் கூர்மையாக அதி கரித்திருக்கிறது.
suran
இவற்றுடன், சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் தொடுக்கக்கூடும் என்ற அச் சுறுத்தலும், எண்ணெய் விலைகள் மீது நிச்சயமற்ற தன்மை அதிகரித்திருப்பதும் இந்திய பங்குச் சந்தை மீதும் ரூபாய் மதிப் பின்மீதும் பாதிப்பை ஏற்படுத்தி இருக் கிறது.
 இவ்வாறான சர்வதேச நிச்சயமற்ற தன்மைகளும் இந்தியத் தொழில்களின் கூட்டமைப்பு இந்தியச் சந்தைகளி லிருந்து வெளியேற வலுவான காரணி களாக அமைந்திருக்கிறது. இந்தியாவில் உள்ள பிரச்சனை களுக்குத் தீர்வு, மேலும் சீர்திருத்தங்கள் என்ற கூக்குரலில் அடங்கி இருக்கவில் லை.
இத்தகைய கூக்குரல்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய ‘ஒளிரும் இந்தி யர்களை’, ‘அல்லல்பட்டு அவதிக்குள் ளாகி’ இருக்கும் இந்தியர்களின் வயிற்றில் அடித்து மேலும் ஒளிரச் செய்வதற்கான குரலே தவிர வேறல்ல.
மக்கள் எந்த அளவிற்கு அல்லல்பட்டு அவதிக்குள் ளாகி இருக்கிறார்களோ அந்த அளவிற்கு ஒளிரும் இந்தியர்கள் பிரகாசமாய் இருப் பார்கள்.
எனவே, தீர்வு என்பது பணக்காரர் களுக்கு அளிக்கப்படும் மானியங்களை நிறுத்துவதிலும், அவற்றை மிகப்பெரிய அளவில் பொது முதலீடுகளில் செலுத்தி, நமக்கு மிகவும் தேவையான உள்கட்ட மைப்பு வசதிகளைப் பெருக்குவதிலும் தான் அடங்கி இருக்கிறது. இதன் மூலம் கணிசமான அளவிற்கு வேலைவாய்ப்பு களைப் பெருக்கிட முடியும்.
 அதன் காரண மாக உள்நாட்டுத் தேவைகளும் அதி கரித்து, அது நம்நாட்டின் பொறியியல் மற் றும் எந்திரவியல் போன்ற உற்பத்தித் துறை வளர்ச்சிக்கும் தூண்டுதலாக அமைந்திடும்.(தமிழில்: ச.வீரமணி)
suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?