முடிஞ்ச வேலைக்கு டெண்டர்.

கேள்வி :- செய்து முடிக்கப்பட்ட பணிக்கு டெண்டர் கோரும் அதிசயம் எங்கேயாவது நடந்திருக்கிறதா?
பதில் :- ஏன், இந்த அ.தி.மு.க. ஆட்சியிலேயே நடைபெற்றதாக என் கவனத்திற்கு ஒன்றைக் கொண்டு வந்தார்கள். அது தவறு என்றால், அரசு மறுக்கட்டும், ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
கடந்த மார்ச் திங்கள் 9ஆம் தேதியன்று தஞ்சையிலே மிகப் பெரிய விழா ஒன்றை
முதல் அமைச்சர் காவேரித் தண்ணீரைப் பெற்றுத் தந்து விட்டார் என்பதற்காக ஏற்பாடு செய்து பாராட்டோ பாராட்டு என்று பாராட்டியதை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த நிகழ்ச்சியின்போது தஞ்சை நகராட்சி சார்பில் மட்டும் முதல்வர் வருகைக்காக ஒன்றரைக் கோடி ரூபாய் அளவிற்குச் செலவு செய்திருக்கிறார்கள். அப்படி என்ன செலவு? எதற்கான செலவு?
ஒருசிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன்! வாகன நிறுத்துமிடம் சுத்தம் செய்ய 8 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய். மைதானத்தில் வாகன நிறுத்த இடத்தைச் சுத்தம் செய்ய 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய். மணிமண்டபம் சாலையைச் சுத்தம் செய்ய 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய். பேருந்து வளாகத் தடுப்பு வேலிக்கு வர்ணம் பூச 17 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய். ஆணையர் அறைக்கு நாற்காலி வாங்க 70 ஆயிரம் ரூபாய். ஒருவேளை வெள்ளி நாற்காலியாக இருக்குமோ?
இதுபோன்ற பணிகளை, நகராட்சி சட்டப் பிரிவு 15ன் படி மன்றத்தின் அனுமதியின்றி செய்து முடிக்க நகராட்சி ஆணையருக்கு அதிகாரம் வழங்கப்பட் டுள்ளது. ஆனால் தஞ்சையில் நகராட்சி ஆணையர் இதனைத் தவிர்த்து விட்டார். முதலமைச்சர் தஞ்சைக்கு வந்தது 9-3-2013. அதற்காக
30 லட்சம் ரூபாயில் ஹெலிகாப்டர் தளம் அமைத்தார்கள். இதற்காக ஒப்பந்தப் புள்ளிகளை 5-4-2013 அன்றுதான் பெற்றிருக்கிறார்கள். ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டு 9ஆம் தேதி முதலமைச்சரும் வந்து சென்ற பிறகு 26 நாட்கள் கழித்துத்தான் டெண்டர் பெற்று முடிவு செய்திருக் கிறார்கள். பணியை ஒருவரிடம் ஒப்படைத்து பணி முடிந்த பிறகு, அந்தப் பணிக்காக டெண்டர் கோரும் அதிசயம் அ.தி.மு.க. ஆட்சியிலேதான் நடந்துள்ளது.
இதிலே இன்னொரு வேடிக்கை. 9ஆம் தேதி முதலமைச்சர் வருவதற்கு முன்பு யார் ஹெலி காப்டர் தளம் அமைத்தாரோ, அதே நபர்தான் குறைந்த தொகையைக் குறிப்பிட்டதன் காரண மாக டெண்டர் பெற்றிருக்கிறார். மற்றவரைக் காட்டிலும், இவர் குறைந்த தொகையை எவ்வாறு ஒப்பந்தப் புள்ளியிலே குறிப்பிட்டார்? வேறு ஒப்பந்தக்காரர் ஒருவர், உண்மையாக ஹெலி காப்டர் தளம் அமைத்தவரைவிட மேலும் குறைவாகத் தொகை குறிப்பிட்டிருந்தால், அப்போது என்ன செய்திருப்பார்கள்?
அடுத்து இந்த முடிவு நகர்மன்றக் கூட்டத்திலே நிர்வாக அனுமதிக்காக வைக்கப்பட்டுள்ளது. எப்போது தெரியுமா?
 மே 28ஆம் தேதி.
 முடிக்கப் பட்ட ஒரு பணிக்கான மதிப்பீட்டுத் தொகைக்கு நிர்வாக அனுமதி 79 நாட்களுக்குப் பிறகு கோருவது என்பதே சட்ட விதிகளுக்குப் புறம்பான தாகும். 
                                                                                                             -கலைஞர் கருணாநிதி
 -------------------------------------------------------------------------ஆப்பிள் வாங்க அலை.

ஆப்பிள் புதிய வகை 5 சி,5எஸ் வகை கைப்பேசிகள் வாங்கிட ஜப்பானில் இப்போதே ஆப்பிள் கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோ துகிறதாம்.

suran


செப்டம்பர் 21ல் தான் விற்பனைக்கு வருகிறது.அதற்குள் கூட்டம் பதிவு செய்ய அலையடிக்கிறதாம்.
2013 ஆம் ஆண்டில், ஸ்மார்ட் போன்களின் விற்பனை 100 கோடி என்ற எண்ணிக்கையை எட்டும் என்று இதனைத் தொடர்ந்து கண்காணித்து வரும் ஐ.டி.சி. அமைப்பு அறிவித்துள்ளது. இது 2012 ஆம் ஆண்டைக் காட்டிலும் 40% கூடுதலாகும்.
 முந்தைய ஆண்டைக் காட்டிலும் 7.3% கூடுதலாக விற்பனை ஆகும் எனவும் தெரிவித்துள்ளது.
 ஸ்மார்ட் போன்கள் ஓர் அத்தியாவசியத் தேவையாக மாறி உள்ளது. 
2017 ஆம் ஆண்டு வாக்கில், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், மொபைல் போன்கள் என்றால், அவை ஸ்மார்ட் போன்களாக மட்டுமே இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இவற்றில் இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களாக, ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். முதல் இரண்டு இடத்தைப் பிடித்திருக்கும். 
2013ல் இதுவரை விற்பனையான ஸ்மார்ட் போன்களில், 75.3% போன்களில் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்துடன் சென்றுள்ளன.
 இவற்றில் முதல் இடம் பிடித்துள்ள நிறுவனம் சாம்சங். 
இதே காலத்தில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ்., 16.9% இடத்தைப் பிடித்துள்ளன. விண்டோஸ் 3.9%, பிளாக்பெரி 2.7% பங்கினைக் கொண்டுள்ளன.
 மைக்ரோசாப்ட், நோக்கியாவின் சாதனங்கள் பிரிவினை முழுமை யாக காப்புரிமை உட்பட வாங்கியுள்ளதால், அடுத்த ஆண்டில், இந்நிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. 
Click Here


----------------------------------------------------------------------------------------------------------------------------------- 
டோபி=புடின்?
--------------------------------
ஹாரி பாட்டர் படங்களில் வரும் டோபி என்ற கதாபாத்திரத்தை வேண்டுமென்றே ரஷ்ய அதிபர் புடினை போல் உருவாக்கியுள்ளதாக ரஷ்யா புகார் தெரிவித்துள்ளது.
ஹாரி பாட்டர் படங்களில் டோபி என்ற அசிங்கமான ஒரு மாயஜால கதாபாத்திரம் இருக்கிறது. ஹாரி பாட்டருக்கு உதவும் இந்த கதாபாத்திரத்தின் தோற்றம், ரஷ்ய அதிபர் புடின் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது என ரஷ்யா கூறியுள்ளது.
suran
புடினை கேவலப்படுத்துவதற்காகவே இதுபோல் செய்யப்பட்டுள்ளது. வழுக்கைத் தலை, பெரிய காதுகள், கூர்மையான மூக்கு, முட்டைக் கண்கள் என அனைத்துமே புடினை போலவே இருக்கிறது. இதற்காக ஹாரி பாட்டர் படத்தை தயாரித்த வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடரப் போவதாக ரஷ்ய வக்கீல்கள் தெரிவித்துள்ளதாக கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பிரிட்டனை சேர்ந்த ஜே.கே. ரவ்லிங் எழுதிய ஹாரி பாட்டர் நாவல்கள், உலகம் முழுவதும் 67 மொழிகளில் வெளிவந்துள்ளன. இதுவரை 45 கோடி பிரதிகள் விற்பனையாகியுள்ளன. நாவல்கள் அனைத்தும் திரைப்படமாக எடுக்கப்பட்டு கோடிகளை குவித்தன.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
பெரியண்ணனின் சின்னத்தனம்.
---------------------------------------------------------------------
 வெளிநாடுகளின் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் ஊடுருவி, ரகசிய தகவல்களை சேகரிக்கவில்லை என்று அமெரிக்கா கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவாதம் கொடுத்தாலும், அதன் உளவு அமைப்பு, பிரேசில் நாட்டின் எரிவாயு கம்பெனிகளின் கம்ப்யூட்டர்களில் இருந்த ரகசிய ஆவணங்களை ‘திருடியிருப்பது’ பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
   அமெரிக்காவின் உளவு அமைப்பான தேசிய பாதுகாப்பு ஏஜென்சி, வெளிநாடுகளுடன் ‘சைபர்’ போர் தாக்குதலை ஆரம்பித்திருக்கிறது.

பல ரகசிய ஆவணங்களை, அந்தந்த அரசுகளின் சீக்ரட் கம்ப்யூட்டர்களில் ஊடுருவி ‘திருடுகிறது’ என்று எட்வர்ட் ஸ்னோடென் சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார்.  அமெரிக்க உளவு ஏஜன்சியின் முன்னாள் அதிகாரியான இவர் இப்படி ரகசிய தகவல்களை வெளியிட்டதால், அவரை நாட்டை விட்டு துரத்தியது மட்டுமின்றி, அவரை கைது செய்ய துடித்தது அமெரிக்கா. ஆனால், அவர் பல நாடுகளில் அலைந்து கடைசியாக ரஷ்யாவில் தஞ்சம் புகுந்தார்.
suran
  அவர் இப்போது மீண்டும் ஒரு ரகசிய ஆவணத்தை வெளியிட்டுள்ளார். பிரேசில் நாட்டின் எண்ணெய் வளங்களை சாமர்த்தியமாக சுரண்டும் வகையில், கம்பெனிகள் ஏலம் தொடர்பான சில ரகசிய ஆவணங்களை அந்த நாட்டு அரசின் ரகசிய கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் ஊடுருவி, அமெரிக்கா எடுத்து விட்டதாக ஸ்னோடென் கூறியிருந்தார்.

  லண்டனை சேர்ந்த குளோப் டிவியில் கடந்த ஞாயிறன்று,  கார்டியன் பத்திரிகையாளர் கிளென் கிரீன்வால்டு இந்த ரகசிய தகவல்களை வெளியிட்டதை தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிரேசில் பிரதமர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா மற்றும் அவரின் அமைச்சர்கள், எண்ணெய் நிறுவனங்கள் குறிப்பாக பெட்ரோப்ராஸ் என்ற நிறுவனம் ஆகியவற்றின் கம்ப்யூட்டர்களில் ஊடுருவி,  ஏலம் தொடர்பான  ஆவணங்களை அமெரிக்க ஏஜென்சி ‘திருடி’யிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

   பிரேசில் நாடு, அமெரிக்காவுக்கு பிடிக்காத  நாடு. எண்ணெய் வளம் மிக்க நாடு. இதன் லிப்ரா எண்ணெய் வயலில் 1200 கோடி பேரல் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. அமெரிக்காவின் 2 ஆண்டுக்கான  எல்லா எண்ணெய் தேவைகளுக்கும் இது போதுமானது. இதுபோல, பெட்ரோப்ராஸ் என்ற நிறுவனம் ஏலம் விடப்பட உள்ளது. அதை தனக்கு வேண்டியவர்கள் கையில் பெற்றுத்தருவதே அமெரிக்க உளவு  அமைப்பின் எண்ணம். இதனால் தான் முக்கிய ஆவணங்களை கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் ஊடுருவி  எடுத்துள்ளது என்று புகார் எழுந்துள்ளது.

பிரேசிலின் மொத்த எண்ணெய் வளம் 10 ஆயிரம் கோடி பேரல்கள். மேலும் புதிய எண்ணெய் வயல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றை தன் வசம் கொண்டு வருவதே அமெரிக்காவின் நோக்கம் என்று பிரேசில் குற்றம்சாட்டுகிறது. அதற்காக, தன் உளவு வேலை மூலம், பிரேசிலில் ஏலம் எடுக்க சிலரை தயார் செய்கிறது  என்றும் அது சந்தேகிக்கிறது.
suran
இது தொடர்பாக பிரேசில் பிரதமர் லுலா கூறுகையில், அமெரிக்கா  மறைமுக ‘சைபர் போர்’ துவங்கியுள்ளது. பிரேசில் மட்டுமின்றி, சீனா, இந்தியா போன்ற நாடுகளிலும் இப்படி ‘சைபர்’ போரை துவங்கி உள்ளது. இது மிகவும் ஆபத்தானது. எந்த ஒரு ஆவணங்களும் ரகசியமானவை என்று கூற முடியாத நிலை உள்ளது. இதை உடனே கூட்டாக எதிர்த்து தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
 அமெரிக்க உளவு  அமைப்பு மட்டும் இந்த வேலையில் இறங்கவில்லை. அதற்கு முழு துணை நிற்பது, பிரிட்டனின் ஜிசிஎச்கியூ என்ற உளவு அமைப்பு.
 அமெக்காவின் இந்த சைபர் உளவு வேலையில் இப்போது இரு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒன்றுக்கு பெயர் பறக்கும் பன்றி.
இன்னொன்றின் பெயர் மவுன நாய்க்குட்டி.
இந்த திட்டங்களில் ஈடுபட சில தனியார் நிறுவனங்களையும் அமெரிக்க உளவு அமைப்பு நியமித்துள்ளது.

இந்த தனியார் நிறுவனங்களுக்கு ‘சைபர்’ தில்லுமுல்லுகளில் இறங்க முழு அதிகாரம் அளித்துள்ளது. எந்த நாட்டின் கம்ப்யூட்டர் நெட்வொர்க்குகளில் ஊடுருவி தகவல்களை எடுக்க வேண்டும், எந்த தகவல்கள் வேண்டும் என்று அமெரிக்க அமைப்பு சொல்லி விடும். அவற்றை இந்த தனியார் நிறுவனங்கள் சேகரித்து தரும்.

  இந்த இரு திட்டங்கள் மூலம், 212 நாடுகளின் 10,000 வங்கிகளின் ரகசிய ஆவணங்களை சேகரிப்பது முக்கிய நடவடிக்கை. ஏடிஎம்களில் பணம் எடுக்கும் தகவல்கள் போன்றவையும் இதில் அடங்கும். இந்த நாடுகளில் இந்தியாவும் உண்டு. தனிநபர் ஏடிஎம் கணக்கு வழக்குகளும் கூட இந்த ரகசிய நடவடிக்கை மூலம் அமெரிக்க உளவு அமைப்புக்கு போகிறது என்கிறார் கிரீன்வால்டு.
suran
* அமெரிக்காவுக்கு ‘எண்ணெய் பசி’ உண்டு. அதனால், பல நாட்டு  எண்ணெய் வளங்களை தன் வசம் வைக்கவே அதில் உளவு வேலை பார்க்கிறது.
* அடுத்து, நாட்டின் பிரதமர், அமைச்சர்கள், தூதரக அதிகாரிகளின் இமெயில்கள், ரகசிய கணக்குகள். அதிலும் உளவு பார்க்கிறது.
* இன்னொரு பக்கம், நிதி நடவடிக்கைகளை முடக்கும் உளவு வேலை. பங்கு சந்தை, நிதி நடவடிக்கைகள் தொடர்பான எல்லாவற்றையும் கண்காணிக்கிறது.
* ஏடிஎம்களில் பணம் புழக்கம் போன்றவற்றையும் அமெரிக்க உளவு ஏஜென்சி கண்காணிக்கிறது.
* எண்ணெய் வளம், நிதி வளம் எல்லாவற்றிலும் தன் ‘கை’ இருந்தால் எந்த நாடும் தைரியமாக எதிர்க்காது  என்பதற்காகவே இப்படி ‘சைபர்’ போரில் இறங்கியிருக்கிறது  என்பது ஸ்னோடென் குற்றச்சாட்டு.
* பிரேசிலில் உளவு பார்த்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆனால், அமெரிக்கா மவுனம் சாதிக்கிறது. ஐநா தலையிடுமா என்பதே இப்போதைய கேள்வி.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
suran
-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?