இடுகைகள்

நவம்பர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

"மின் உற்பத்தி தடங்கல்" உண்மையில் யார் காரணம்?

படம்
தமிழகமெங்கும் மின்தடை தலையை விரித்துப்போட்டு ஆடுகிறது. ஊர் முழுக்க 12 மணி நேரம் இந்த ஆட்டம் நடந்தாலும் சென்னையில் மட்டும் 2 மணி நேரம்.ஆனால் ஏற்காட்டில் மின்வெட்டு என்றால் என்னவென்று கேட்கும் நிலையில் ஏற்காடு தொகுதியே ஒளிர்கிறது.அதுவும் வரும் 4ம் தேதி வரைதான். தமிழக மின் வெட்டுக்கு திமுக-காங் கூட்டணிதான் காரணம் என்று ஜெயலலிதா கண்டு பிடித்துள்ளார். அதற்கே அவருக்கு மூன்றாண்டுகள் ஆகியுள்ளது.பொறுப்புடன் குற்றம் சாட்டத்தான் இந்த கால அவகாசம். ஸ்டாலின் மேயாராக இருந்ததுதான் இன்றைய டெங்கு கொசுக்கடிக்கு காரணம் என்ற சைதை துரை சாமியாரின் அதிரடி குற்றசாட்டுக்கு அம்மாவின் குற்றசாட்டு கொஞ்சம் குறைவான மதிப்பெண்தான். சரி. திமுக ஆட்சி அலங்கோலத்தை சீராக்கத்தானே மக்கள் உங்களை கோட்டையில் அமர்த்தியுள்ளார்கள்? மூன்றாண்டுகளாக திமுக ஆட்சியையும்,கலைஞரையும்  குற்றம் சாட்டுவதிலும்.அவர்கள் மீது நிலபகரிப்பு வழக்கு போட்டதையும்,அவதூறு வழக்கை போட்டதையும் தவிர வேறு சாதனையை இந்த ஜெயா அரசு செய்துள்ளதாகத் தெரியவில்லையே. திட்டுவதை தவிர தமிழக முன்னேற்றத் திட்டங்களை இதுவரை ஒன்றையும் போட்டதாக கண்ணுக்கெட்டிய தூரம் வர

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்

படம்
பிறந்த தினம் ( நவ.29- 1908)     கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் .   தமிழ்த் திரையுலகில் புரட்சி செய்தவர் .புராண கதைகளை படமாக்கி மூடத்தனத்தில் இருந்த திரையுலகில் அப்புராண படங்களிலும் மக்களுக்கான புதுமை கருத்துக்களை புகுத்தியவர்.பகுத்தறிவை தனது நகைச்சுவை மூலம் பரப்பியவர். நல்ல கணீர் குரல்வளம்மிக்கவர் . பாடல்களில் அவர் கையாண்ட புதுமைகள்,கருத்துக்கள் இன்றைய அளவும் எற்றுக்கொள்ளக்கூடியவை. இன்று ஆபாச வார்த்தைகளை நகைச்சுவை என்ற பெயரில் உளறிக்கொட்டுபவர்கள் கலைவாணர் படங்களை ஒருமுறை பார்ப்பது நல்லது.அதிலும் சின்ன கலைவாணர் என்ற பட்டத்தை தனக்கு தானே வழங்கிக்கொண்டு சிலர் திரிவதுதான் மகா கொடுமை. பிறப்பு: நவம்பர் 29, 1908 பிறப்பிடம்: நாகர்கோயில், தமிழ்நாடு மாநிலம், இந்தியா பணி: நடிகர், பின்னணிப் பாடகர் மற்றும் எழுத்தாளர்    இறப்பு: ஆகஸ்ட் 30, 1957 நாட்டுரிமை: இந்தியன் பிறப்பு  அவர், 1908  ஆம் ஆண்டு நவம்பர் 29  ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “நாகர்கோவிலுக்கு” அருகில் ஒழுங்கினசேரி என்ற இடத்தில், ‘சுடலையாண்டி பிள்ளை’, என்பவருக்கும், ‘இசக்கியம்மாலுக்கு

நாயகன் மோடி?

படம்
.2013-ம் ஆண்டிற்கான 'டைம்ஸ்' இதழின் சிறந்த நபரை தேர்வு செய்ய டைம்ஸ் இதழ் ஆன்லைனில் நடத்திய வாக்கெடுப்பில் பதிவான ஓட்டுகளின் அடிப்படையில் டைம்ஸ் இதழ் சர்வதேசத் தலைவர்கள், தொழில் முனைவோர், பிரபலமானவர்கள் என 42 பேரை இறுதியாகப் பட்டியலிட்டுள்ளது. இந்த 42 பேரில், 2013-ஆம் ஆண்டிற்கான சிறந்த நபர் யார் என்பதை அடுத்த மாதம் அறிவிக்க இருக்கிறது. இந்தப் பட்டியலில், ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப் சாஹி, அமேசான் சி.இ.ஓ. ஜெஃப் பெசோஸ் மற்றும் அமெரிக்க ராணுவ ரக்சியங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்நோடன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கடந்த 2012 ஆம் ஆண்டிற்கான நபராக டைம்ஸ் பத்திரிகை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை தேர்வு செய்தது . குஜராத் முதல்வருமான நரேந்திர மோடியின் பெயர் இடம் பெற்றுள்ளது. பட்டியலில் இடம் பிடித்துள்ள ஒரே இந்தியர் மோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது. மோடி குறித்து ஆன்லைனில் ஓட்டளிக்கும் இடத்தில் " சர்ச்சைக்குரிய இந்து தேசியவாதி, குஜராத் மாநிலத்தின் முதல்வர், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டை ஆளும் காங்கிரஸ் கட்சியை பதவிய

பழிவாங்கப்படும்

படம்
                                                                                                              பணியாளர்கள்                                                                                                                         -எழில்.இளங்கோவன்   “வலியோர் சிலர் எளியோர்தமை வதையேமிகு புரிகுவதா” என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரின் பாடல் வரிகளை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது அதிமுக ஜெயா  அரசின் பழியுணர்வும், மக்கள் நலப்பணியாளர் களின் அவல நிலையும்.பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டார்கள், திராவிட முன்னேற்றக் கழக அரசினால். ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு 8.11.2011 அன்று, ஒரே நாளில் 13,000 மக்கள் நலப்பணி யாளர்களின் வேலையைப் பறித்து வீட்டிற்கு அனுப்பிவிட்டது. ஓர் அரசுக்குத் தன் குடிமக்களின் அடிப்படைத் தேவையான உணவு, உறை விடம், வேலை ஆகிய மூன்றையும் செய்து தர வேண்டிய கடமையும், பொறுப்பும் இருக்கிறது. இதற்கு மாறாக 13,000 குடும்பங்கள் பரிதவிக்கும் அளவுக்கு, மக்கள் நலப் பணியாளர்களைப் பணிநீக்கம் செய்தது அ.தி.மு.க. அரசு. இந்தப் பணிநீக்க அரசாணையை ஏற்காத பணி

இப்போதுதான் இப்படியா?.எப்போதுமே இப்படித்தானா??

படம்
  பழ.நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 80 பேர் திருச்சி மத்திய சிறையில் இருந்து இன்று காலை விடுவிக்கப்பட்டனர். மதுரை உயர் நீதிமன்றக் கிளை வழங்கிய பிணையை  அடுத்து அவர்கள் ம் விடுவிக்கப்பட்டனர். சிறை வாயிலில் அவர்களை,இதுவரை காணாமல் போயிருந்த  புதிய பார்வை ஆசிரியர் மு .நடராஜன் வரவேற்றார். இப்போதுதான் இப்படியா ?.எப்போதுமே இப்படித்தானா?? சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பழ.நெடுமாறன்: " தஞ்சை விளார் கிராமத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றச்சுவரை இடித்த அதிகாரிகள் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மீண்டும் அந்த இடத்தில் அதனை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் " என்றார். நெடுமாறன் சிறை வாயில் செவ்வி அவரை "சிரிப்பு போராளியாக" காட்டுகிறது. அவருக்கு சற்றும் சளைக்காதவர் சீமான். இவர்கள் பேச்சுகள் வடிவேலு நடிக்காத குறையைத் தான் போக்குகிறது. வடிவேலுவுடன் இந்த மாவீரர்களை சரிசமமாக்கக் கூ

இவர்கள் பயத்துக்கு பழனி மலையை பொக்கெட்டுக்குள் வைத்தாலும் பத்தாது!

படம்
மு ள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவரை இடித்துத் தள்ளி, அடுத்தது முற்றத்தையும் இடிக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார் நெடுமாறன்,சீமான் ஆகியோரின் ஈழத் தலைவி. கொளத்தூர் மணி  கைது, நெடுமாறன் கைது என்று கைதுகளுக்கும் குறைவில்லை.  சர்வாதிகார ஆட்சியின் காட்டுத் தர்பாரை எதிர்க்கத் துணிவற்ற தமிழ்த் தேசியவாதிகளோ… ‘இது மத்திய உளவுத் துறையின் சதி‘ என்கிறார்கள். அதாவது ஈழத்தாய் ஜெயலலிதாவுக்கும் இதற்கும் தொடர்பு இல்லையாம். ‘‘முற்றத்தை யாராவது அழிக்க நினைத்தால் அவர்களை, இறந்து போன தமிழர்களின் ஆன்மா மன்னிக்காது’’ கைதுக்கு முந்தைய நெடுமாறனின் பேட்டியைக் கவனியுங்கள்… ‘‘மத்திய புலனாய்வுத் துறை மூலமாக இதை இடிக்கவும் விழாவை தடுக்கவும் முயற்சி நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசும் ஏன் எதிராக செயல்படுகிறது என்றே தெரியவில்லை ” என்று புலம்பினார். “ஏன்” என்ற கேள்விக்கு நெடுமாறனுக்கு பதில் தெரியவில்லையென்றால் நடராஜனிடம் கேட்டால் சொல்லக் கூடும்.  முள்ளிவாய்க்கால் முற்றம் நிகழ்ச்சிக்கு இடையூறு செய்தது முதல் சுற்றுச் சுவரை இடித்தது வரை சகலமும் ஜெயலலிதாவின் வேலைதான் என்பதை அனைவரும் அறிந

ஏன் வீண் தயக்கம்?

படம்
 ஏ   வுதளம்’ இங்கே வந்திட ! மாவட்டத்தில் உள்ள மகேந்திரகிரியைச் சேர்ந்த திரவ எரிவாயு மையத்தில் பணிபுரிவோர் அனுப்பிய வேண்டு கோளினை பரிந்துரை செய்து நான் கடந்த 19-8-2013 அன்று பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்கு கடிதம் அனுப்பியிருந்தேன். கனிமொழி என்னிடம் வேண்டுகோள் கடிதத்தைக் கொடுத்ததோடு, மாநிலங்கள் அவையிலும் அதைப்பற்றி எழுப்பிய கேள்விக்கு, அளிக்கப்பட்ட பதிலில், ""“ISRO has two operational launching pads located at Satish Dhawan Space Centre, Sriharikota - the First Launch Pad and the Second Launch Pad, with necessary infra structure to support eight launches per year. The launching infra structure at Sriharikota will be strengthened with the addition of Second Vehicle Assembly Building at SLP, which will enhance the launch frequency to twelve launches per yearby 2017”" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எரிவாயு தொழில் நுட்ப மையம் அமைக்க வேண்டும் என்றும், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் """"இஸ்ரோ""வின் சார்பில் இரண்டாவது ராக்க