"மின் உற்பத்தி தடங்கல்" உண்மையில் யார் காரணம்?

தமிழகமெங்கும் மின்தடை தலையை விரித்துப்போட்டு ஆடுகிறது. ஊர் முழுக்க 12 மணி நேரம் இந்த ஆட்டம் நடந்தாலும் சென்னையில் மட்டும் 2 மணி நேரம்.ஆனால் ஏற்காட்டில் மின்வெட்டு என்றால் என்னவென்று கேட்கும் நிலையில் ஏற்காடு தொகுதியே ஒளிர்கிறது.அதுவும் வரும் 4ம் தேதி வரைதான்.
suran
தமிழக மின் வெட்டுக்கு திமுக-காங் கூட்டணிதான் காரணம் என்று ஜெயலலிதா கண்டு பிடித்துள்ளார்.
அதற்கே அவருக்கு மூன்றாண்டுகள் ஆகியுள்ளது.பொறுப்புடன் குற்றம் சாட்டத்தான் இந்த கால அவகாசம்.
ஸ்டாலின் மேயாராக இருந்ததுதான் இன்றைய டெங்கு கொசுக்கடிக்கு காரணம் என்ற சைதை துரை சாமியாரின்
அதிரடி குற்றசாட்டுக்கு அம்மாவின் குற்றசாட்டு கொஞ்சம் குறைவான மதிப்பெண்தான்.
சரி.
திமுக ஆட்சி அலங்கோலத்தை சீராக்கத்தானே மக்கள் உங்களை கோட்டையில் அமர்த்தியுள்ளார்கள்?
மூன்றாண்டுகளாக திமுக ஆட்சியையும்,கலைஞரையும்  குற்றம் சாட்டுவதிலும்.அவர்கள் மீது நிலபகரிப்பு வழக்கு போட்டதையும்,அவதூறு வழக்கை போட்டதையும் தவிர வேறு சாதனையை இந்த ஜெயா அரசு செய்துள்ளதாகத் தெரியவில்லையே.
திட்டுவதை தவிர தமிழக முன்னேற்றத் திட்டங்களை இதுவரை ஒன்றையும் போட்டதாக கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணோம் .
இதுவரை பத்திரிகைகளில் ஒரு பக்க விளம்பரங்களாக தந்து திறந்து வைத்த பாலங்கள்,கல்லுரிகள்,கூடங்க்கள்,சாலைகள்,காவல்துறை கட்டிடம் போன்றவை அனைத்துமே திமுக ஆட்சிக்கால திட்டங்கள் மட்டுமின்றி அந்தைய ஆதிகாலத்திலேயே 90% பணிகள் முடிந்தவை என்பதுதானே கசப்பான உண்மை.
அதை விடுங்கள்.ஏற்காட்டில் முன்னாள் துணை முதல்வர்  மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சுக்களை தருகிறோம்.அதற்கு முதல்வர் ஜெயலலிதாவின் பதில் என்ன?

" 10 மணி நேரம் முதல், 18 மணி நேரம் மின்தடை உள்ளது. தி.மு.க., ஆட்சியிலும் மின் தடை இருந்தது. ஆனால், அது, 2 மணி நேரம் தான்.
2006ல், தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், வடசென்னை அனல்மின்நிலைய அலகு ஒன்று, அலகு இரண்டு, தூத்துக்குடி, மேட்டூர் அனல்மின் நிலையங்களில், தலா, 600 மெகாவாட் என, 1,800 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திட்டம் வகுக்கப்பட்டது. இதற்காக, 7,280 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. 2008ல் அதற்கான பணிகளும் துவங்கப்பட்டது. கடந்த, 2011ல் ஆட்சி பொறுப்பேற்ற, அ.தி.மு.க., அத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த முயற்சிக்காமல் முடக்கி விட்டது. அதை நிறைவேற்றியிருந்தால், மின்தடை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருந்திருக்கும்.

கருணாநிதியின் திட்டம் எனக் கூறி அதற்கு தடைபோட்டு விட்டார். மேலும், என்.டி.சி., -என்.எல்.சி., பெல் ஆகிய நிறுவனங்கள் மூலம், 4,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யவும் திட்டமிட்டோம். அதையும் நிறுத்தி விட்டனர். அனைத்தையும் கிடப்பில் போட்டு விட்டு, மத்திய அரசு மீதும், தி.மு.க., மீதும் பழி சுமத்துகிறார். முதல்வர் ஜெயலலிதா, 8,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உடன்குடியில் மின்சார உற்பத்தி திட்டத்தை துவக்குவதாக அறிவித்தார். ஆனால், இதுநாள் வரையிலும், அத்திட்டத்துக்காக, சல்லி காசு கூட அவர் செலவழிக்கவில்லை. உண்மையை மூடி மறைத்து, பொய் பிரசாரம் செய்கிறார். மத்திய அரசு, தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களுக்காக ஒதுக்கிய நிதியை பெற்றுக்கொண்டு, காங்., - தி.மு.க., கூட்டு சதி செய்வதாக கூறுகிறார். மதுரவாயல் திட்டம், சேது சமுத்திர திட்டம், நாற்கர சாலை திட்டம் போன்ற மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடை போடுகிறாரே, அது யாருடைய சதி என்பது, மக்களுக்கு தெரியும். லாயக்கற்ற, அருகதையற்ற, அ.தி.மு.க., ஆட்சியை அகற்ற மக்கள் உறுதி எடுக்க வேண்டும். இடைத் தேர்தலில், மாறனை வெற்றி பெற செய்யுங்கள்."
இவ்வாறு பேசியுள்ளா ர்.
அதை ஏற்காடு தொகுதியினர் எந்த அளவுக்கு காது கொடுத்து கேட்டுள்ளார்களோ தெரியவில்லை .உங்கள் கீழ்ப்படிதலுள்ள ஊடகங்களும் அதை மக்கள் கவனத்துக்கு கொண்டு செல்லவில்லை.
உங்கள் பரப்புரை கூட்டத்தை முதல் பக்கத்தில் வெளியிட்ட அவை ஸ்டாலினை -அவரின் பரப்புரை செய்திகளை யாரும் அவ்வளவு எளிதில் கண்டு பிடிக்க முடியாதபடிதான் போட்டுள்ளார்கள் 
 
 இடைத் தேர்தலில் கூட்டத்தில் பேசியதற்கு ஸ்டாலின் பதில் தந்துள்ளார்.சட்டமன்றத்தில் வேண்டுமானால் பதில் தர முடியாத அளவு 110 இல் பேசியிருக்கலாம்.
அல்லது பதில் தர முனைவோரை குண்டுகட்டாக வெளியேற்றி இருக்கலாம்.
இது மக்கள் மன்றம் வெறு வழி இல்லை.பதில் சொல்லவேண்டும்.இல்லை என்றாலும் பரவாயில்லை மக்கள் நீங்கள் சொல்லுவதைத்தான் கேட்கிறார்கள்
பாலச்சந்திரன் காணொளிக்காக காத்திருக்கும் ஜெயலலிதா!
ஊடகங்களும் உங்கள் சார்பில்தான் எழுதுகிறார்கள்.
ஸ்டாலின் பதிலும்,அவரின் கேள்விகளும் உங்களை ஒன்றும் செய்யப்போவதில்லை.
ஆனால் அதில் இருக்கும் உண்மை எப்போதும் அப்படியே விட்டு விடாது.என்றாவது உங்கள் ஆட்சிக்கு இடையூறாகி விடும்.
எனவே திமுக சதி .அவர்களால்தான் மி ன்தடை என்பதை எப்படியாவது நிருபித்து விடுங்கள்.
அல்லது
இப்போது அனல் மின் நிலையங்களில் -மின் வாரியத்தில் வேலை பார்ப்போர் அனைவரும் திமுகவினர்தான் ,தொமுச சங்கத்தை செர்ந்தவர்கள் அவர்கள்தான் அரசுக்கு கெட்ட பெயர் வர மின்சாரம் உற்பத்தியாகாமல் தடுக்கிறார்கள்
என்று 110 விதியின் கீழ் ஒரு அறிக்கையை விட்டுப்பாருங்களேன்
அப்படி நீங்கள் செய்தீர்களேயானால் நாங்களும் இரவு -பகல் மின்தடையில் கொசுக்கடியில்  உங்கள் ஜெயா அரசை திட்டாமல் கருணாநிதியை அவர் ஆட்சிக்காலத்தை திட்டிக்கொண்டே இனிவரும் உங்கள் ஆட்சியின் மிச்ச இரண்டாண்டு காலத்தையும்  தள்ளிவிடுவோம்.
========================================================================

ரூ.20 ஆயிரம் கோடி சாரதா சீட்டுக்கம்பெனி ஊழல் பணம் கைமாறியதில் மம்தாவுக்கு தொடர்பு!

பிடிபட்ட திரிணாமுல் எம்.பி., உண்மைகளை அம்பலப்படுத்தினார் !
           


கடைசியில் `பூனைக்குட்டிவெளியே வந்துவிட்டது.’ மேற்குவங்கத்தில். மேற்குவங்க மாநிலத்தையே உலுக்கி எடுக்கும் சாரதாசீட்டுக் கம்பெனி ஊழலில் நெருங்கிய தொடர்புடையவர் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தான்என்பது அம்மாநில மக்களை -அவரது ஆதரவாளர்களை - அவரது சொந்தக் கட்சியினரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஏனென்றால் சாரதா சீட்டுக் கம்பெனியிடம், தாங்கள் வேர்வை சிந்தி சம்பாதித்த பணத்தை சிறுக சிறுக சேமித்து செலுத்திய ரூ.20 ஆயிரம் கோடி பணத்தை இழந்திருக்கிறார்கள் மேற்கு வங்க மக்கள். இந்த ஊழலில்மம்தா பானர்ஜிக்கும் தொடர்புஉண்டு என்பதை இடதுசாரி தலைவர்கள் எவரேனும் சொல்லியிருந்தால் ஊடகங்கள் அதற்கு எதிராகஊதித் தள்ளியிருக்கும்; கம்யூனிஸ்ட்டுகளின் சதி என்று மம்தா பானர்ஜியின் கட்சியினர் இன்னும் பல சிபிஎம் தொண்டர்களை வெட்டிச் சாய்த்திருப்பார்கள்.
ஆனால் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருப்பது மம்தா பானர்ஜியின் வலதுகரமாகசெயல்பட்ட அவரது சொந்தக்கட்சியின் மிக முக்கியமான நாடாளுமன்ற உறுப்பினர் குணால் கோஷ் ஆவார். சீட்டுக் கம்பெனி ஊழலில் முதலமைச்சரின் பெயரையே குற்றவாளி என்று அவரது வலதுகரமாக செயல்பட்ட ஒருவரே.பத்திரிகையாளர்களிடம் பகிரங்கமாக கூறியிருப்பதை தொடர்ந்து, இந்தஊழல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உடனடியாக உத்தரவிடவேண்டுமென்று மேற்குவங்க இடதுமுன்னணி வற்புறுத்தியுள்ளது.நவம்பர் 27 வியாழனன்று கொல்கத்தாவையே பரபரப்பாக்கியது அந்த சி.டி.(குறுந்தகடு). சாரதா சீட்டுக்கம்பெனி ஊழல்விவகாரத்தில் பிரதான குற்றவாளிகளில் ஒருவரான திரிணாமுல் கட்சி எம்.பி. குணால் கோஷ், இந்தவிவகாரத்தில் தொடர்புடையவர்கள் என்று மிகப்பெரும் பட்டியலை குறிப்பிட்டு விவரங்களை மேற்கண்ட குறுந்தகட்டின் மூலம்வெளியிட்டிருக்கிறார்.
அந்த குறுந்தகடு முதலில் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது. பின்னர் அது ஆயிரக்கணக்கில் பிரதி எடுக்கப்பட்டு இப்போது கொல்கத்தா முழுவதும் அனைத்து மக்களின் கைகளுக்கும் கிடைக்கும் விதமாக ஆகியிருக்கிறது. மேற்கண்ட குறுந்தகட்டில் குணால் கோஷ் எம்.பி., மிக விரிவாக பல விபரங்களை கூறியிருக்கிறார். ரூ.20 ஆயிரம் கோடியை சூறையாடிய சாரதா சீட்டுக்குழுமத்தின் ஊடகத்துறை தலைவராக இருந்தவர் குணால் கோஷ் எம்.பி. அவர் இந்த ஊழல் விவகாரத்தில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, திரிணாமுல் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் ரயில்வே அமைச்சருமான முகுல்ராய், திரிணாமுல் எம்.பி. சுவேந்து அதிகாரி, மேற்குவங்க மாநில போக்குவரத்து அமைச்சர் மதன்மித்ரா உள்பட பலரது பெயரையும், அவர்களுக்கு உள்ள தொடர்பையும் விரிவாக குறிப்பிட்டிருக்கிறார். இனி அந்த குறுந்தகட்டிலிருந்து...“நான் சாரதா சீட்டுக் குழுமத்தின் ஊடகப் பிரிவு பொறுப்பாளராக இருந்தேன். ஆனால் அந்த நிறுவனத்தின் சார்பில் எந்தவொரு ஆவணத்திலும் அல்லது பணவோலையிலும் கையெழுத்திடுவதற்கு கூட எனக்கு அதிகாரம்கிடையாது. ஆனால் அங்கெல்லாம் நான் தான் என்று ஊடகங்கள் தவறாக கூறுகின்றன.
சாரதா சீட்டுக்கம்பெனியில் பணம் போட்ட அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். ஆனால் சிலர் மட்டும் மிகப் பெரும் லாபம் அடைந்தார்கள். அவர்கள் இப்போது சுதந்திரமாக திரிகிறார்கள். இந்த வழக்கில் விசாரணை அமைப்புகள் என்னை மட்டுமே குறிவைக்கின்றன. ஆனால் ஒட்டுமொத்த கதையிலும் இருப்பவர்களை அவர்கள் யோசிக்கக்கூட இல்லை. இந்த பின்னணியிலேயே வேறு வழியில்லாமல், உண்மைகளை சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது. விசாரிக்கப்பட வேண்டிய நபர்கள் என்று நான் சிலரது பெயர்களை குறிப்பிட விரும்புகிறேன்.1. டுட்டு போஸ் மற்றும் ஸ்ரிஞ்ஜோய் போஸ் (இருவரும் திரிணாமுல் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள்):இவர்கள் இருவருடனும் சாரதா சீட்டுக் கம்பெனியின் தலைவர் சுதிப்தா சென்னுக்கு நேரடி தொடர்பு உண்டு. டுட்டு போசின் இல்லத்தில் தான் கலந்து ஆலோசனை நடத்துவார்கள். சாரதா குழுமத்தின் முதலீடுகளை இடமாற்றுவதற்காக ஒருபுதிய கம்பெனியை உருவாக்குவது குறித்து இவர்கள்தான் பேசினார்கள். 2. ரஜத் மஜூம்தார் (முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி). இவர் சுதிப்தா சென்னுக்கும், திரிணாமுல் பொதுச் செயலாளர் முகுல்ராய்க்கும், திரிணாமுல் மேலிடத் தலைமைக்கும் மிகவும் நெருக்கமான கையாள். இவர் சாரதா சீட்டுக் கம்பெனியின் பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டார்.
ஆனால் பின்னர் அந்த பொறுப்பிலிருந்து திடீரென ராஜினாமா செய்தார். அவர் ஏன் திடீரென்று ராஜினாமா செய்தார் என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை ஏதேனும் முறைகேடுகளை கண்டறிந்து அதை கட்சியின் தலைமைக்கோ அல்லது காவல் துறைக்கோ தெரிவிப்பார்என்று நினைத்தேன். ஆனால் உண்மையில் சாரதா சீட்டுக் கம்பெனியின் முதன்மையான வர்த்தகத்தில் இவருக்கு நேரடி தொடர்புஇருப்பது பின்னர் தான் எனக்கு தெரியவந்தது. அனைத்தும் தெரிந்த ஒரு உயர் ஐபிஎஸ் அதிகாரி, சாரதா சீட்டுக் கம்பெனியில் முறைகேடு நடப்பதை ஏன்அரசாங்கத்திற்கு தெரிவிக்கவில்லை? சீட்டுக்கம்பெனியின் தலைவர் சுதிப்தா சென் கைது செய்யப்படுவதற்கு முன்பு கடைசியாக இவரைத்தான் சந்தித்திருக்கிறார். முன்னதாக சுதிப்தா சென்தலை மறைவாகி விட்டதாக பரபரப்பு ஏற்படுத்தினார்கள். ஆனால் அவரது செல்போனில் மூன்று சிம்கார்டுகளும் கொல்கத்தா மாநகர எல்லைக்குள்தான் செயல்பட்டுக் கொண்டிருந்தன. அவரை யார் இயக்குகிறார்கள் என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும். 3. கிருஷ்ணா சக்கரவர்த்தி (திரிணாமுல் மாநகராட்சி உறுப்பினர்) மற்றும் அவரது கணவர் சமீர் சக்கரவர்த்தி: இவர்கள் இருவரையும் கட்டாயம் விசாரிக்க வேண்டும். கிருஷ்ணா சக்கரவர்த்தி, பிதான்நகர் (சால்ட் லேக்) மாநகராட்சி தலைவராக இருந்தார். கடந்தாண்டு பிதான் நகர் மாநகராட்சியால் நடத்தப்பட்ட திரைப்பட விழா மற்றும் மிகப்பெரும் விருந்துக்கு முழுக்க முழுக்க சாரதா குழுமத்தின் தலைவர் சுதிப்தா சென்னே பணம் கொடுத்தார். கிருஷ்ணாவின் கணவர் சமீர் சக்கரவர்த்தி, ஒரு தொழிலதிபர் என்ற போதிலும் ஊடகத் துறையில் இதுவரைக்கும் வந்ததேயில்லை.
வங்கிகளில் இருக்கும் உரிமை கோராத பணம் ரூ.2,482 கோடி: பாராளுமன்றத்தில் தகவல்
ஆனால் திடீரென்று சேனல் 10 என்ற தொலைக்காட்சி செய்தி சேனலை துவக்குகிறார். துபாயிலும் ஏராளமாக முதலீடு செய்கிறார். சமீருக்கும் அவரது துபாய் முதலீடுகளுக்கும், அவரது தொலைக்காட்சி தொழிலுக்கும், சாரதா சீட்டுக் கம்பெனிக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது; இங்கிருந்து அங்கு பணம் கைமாறியிருக்கிறது. அது முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். 4. சுவேந்து அதிகாரி மற்றும் சிசிர் அதிகாரி (இருவரும் திரிணாமுல் மக்களவை உறுப்பினர்கள்):ஒருநாள் சுதிப்தா சென் என்னை தொலைபேசியில் அழைத்தார். கிழக்கு மிட்னாப்பூரில் உள்ள காதி என்ற பகுதியில் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் இறங்க விரும்புவதாக கூறினார். ஆனால் சுவேந்து அதிகாரியும் அவரது குடும்பத்தினரும் கட்சி நிதி என்ற பெயரில் ஏராளமாக பணம் கேட்டு விரட்டுவதாக கூறினார். எனவே முதலமைச்சரிடம் இதுபற்றி பேசுமாறும், சுவேந்து குடும்பத்தினருக்கு கூடுதலாக பணம் கொடுத்தால் எப்படியாவது மேற்கண்ட பகுதியில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட முதலமைச்சர் நேரடியாக உதவி செய்வாரா என்று கேட்டுச் சொல்லுமாறும் கூறினார். நான் முதலமைச்சர் மம்தா பானர்ஜியிடம் அனைத்தையும் கூறினேன். அதற்கு, ஏற்கனவே இந்த விஷயத்தில் ஏராளமான பணத்தைசுதிப்தா சென் கொடுத்திருக்கிறார்; இனியும் கொடுக்க வேண்டாம் என்று பதிலளிக்குமாறு முதலமைச்சர் என்னிடம் தெரிவித்தார். பின்னர் சுவேந்து அதிகாரியின் மிரட்டல் தாங்க முடியாமல்சேனல் 10 தொலைக்காட்சியையும், `சகல்பேலா’ பத்திரிகையையும் இப்போதைக்கு எடுத்துக் கொள்ளுமாறும் சுவேந்துவிடம் கூறிவிட்டதாக சுதிப்தா சென் எனக்கு தெரிவித்தார். 5. மதன் மித்ரா (மேற்குவங்க விளையாட்டு அமைச்சர்).
இவர்நீண்டகாலமாகவே தெற்கு 24 பர்கானா மாவட்டத்தின் விஷ்ணுப்பூர் தொகுதி எம்எல்ஏவாகஇருக்கும்றார். இவர்தான் மேற்படி சுதிப்தா சென்னுக்கு மிக நெருக்கமான நண்பரும் வழிகாட்டியுமாவார். சாரதா சீட்டுக் கம்பெனி ஊழியர் சங்கத்தின் தலைவராகவும் இவரை ஆக்கினார்கள். ஊழியர்கூட்டங்களில் சுதிப்தா சென்னைபெரிய அளவிற்கு புகழ்ந்து பேசுவதுதான் மதன் மித்ராவின் வேலை. ஆனால் இப்போது சுதிப்தா சென் யாரென்றே தெரியாது என கூறிக்கொண்டிருக்கிறார். தெரியாத ஒரு நபரைப்பற்றி சாரதா சீட்டுக்கம்பெனி ஏஜெண்டுகளின் கூட்டங்களில் இவர் எப்படி புகழ்ந்து பேசினாரோ?6. கே.டி.சிங். (திரிணாமுல் மாநிலங்களவை எம்.பி.) சாரதா சீட்டுக் குழுமத்தில் பிரச்சனைகள் எழுந்தபோது தில்லியில் ஒரு கூட்டம் நடத்தினார்கள். அதில் கே.டி.சிங் பங்கேற்று பேசினார்.
நிதி ரீதியாக சாரதா குழுமத்திற்கு உதவி செய்வதாகவும், தனது நிறுவனத்தில் சாரதா குழும ஏஜெண்டுகள் வேலை செய்ய ஏற்பாடு செய்வதாகவும் அவர் பேசினார். அப்போது முகுல்ராய், ரஜத் மஜூம்தார் ஆகியோரும் கூட்டத்தில் இருந்தார்கள். கே.டி.சிங்கை விசாரித்தால் இன்னும் ஏராளமான விபரங்கள் வெளியாகும். 7. முகுல்ராய் (முன்னாள் ரயில்வே அமைச்சர், திரிணாமுல் பொதுச் செயலாளர், மாநிலங்களவை எம்.பி.,)முகுல்ராயை நான் மிகவும் மரியாதைக்குரிய நபராக நினைத்தேன். அவரை நேசித்தேன். ஆனால் முகுல்ராயை விசாரிப்பதுதான் இந்த வழக்கில் காவல்துறையின் வேலையை இன்னும் எளிதாக்கும். மேலே குறிப்பிட்ட ரஜத் மஜூம்தார் என்பவர் முகுல்ராயின் கையாள்; கே.டி.சிங்குடன் முகுல்ராய்க்கு நெருக்கமான தொடர்பு. சாரதா கம்பெனியில் பிரச்சனை எழத் தொடங்கியபோது, அதாவது இந்தாண்டு ஏப்ரல் மாததுவக்கத்தில், அனைத்து உண்மைகளையும் அரசாங்கத்திடம் கூறிவிட வேண்டுமென்று நான் சுதிப்தா சென்னிடம் சொன்னேன். இதையடுத்து நிஜாம் மாளிகையில் முகுல்ராயுடன் நாங்கள் சந்தித்து பேசினோம். அப்போது ரஜத் மஜூம் தாரும் இருந்தார். அந்த சந்திப்பில் சுதிப்தா சென் அநாகரிகமாக நடந்து கொண்டார். அப்போது முகுல்ராய், நீங்கள் பேசிவிட்டு வாருங்கள். நான் பின்னர் பேசிக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார். பிரச்சனைகள் தீவிரமடைந்தபோது சுதிப்தா சென் தலைமறைவாகிவிட்டார் என்ற பரபரப்பு எழுந்தது.
அப்போது முகுல்ராயிடம் பேசினேன். காவல்துறையிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினேன். ஆனால் முகுல்ராய் மவுனம் காத்தார். இதில் முகுல்ராய்க்கு முக்கியமான தொடர்பு இருக்கிறது என உறுதியாக நம்புகிறேன்.8. மம்தா பானர்ஜி (முதலமைச்சர்):நான் மிகவும் வேதனையோடு,நான் நேசித்த தலைவரின் பெயரைகுறிப்பிடுகிறேன். உண்மையில் அவரது பெயரை சொல்லிவிடக்கூடாது என்று உறுதியாக இருந்தேன். ஆனால் உண்மைகள் என்னை அழுத்தின. சில ஆண்டுகளுக்கு பிறகு இன்னும் பயங்கரமான நிகழ்வுகள் நடந்தால், அப்போதையே உண்மைகளை சொல்லிருயிக்கலாமே எனத் தோன்றி விடும். அதனால் தான் உண்மையை சொல்கிறேன். சாரதா சீட்டுக் கம்பெனி விவகாரம் தொடர்பாக எதையுமே மம்தாவிடமிருந்து நான் மறைத்ததில்லை. சாரதா சீட்டுக் கம்பெனியின் ஊடகக்குழு முழுக்க முழுக்க திரிணாமுல் கட்சியின் பிரச்சாரத்திற்காகவே பயன்படுத்தப்பட்டது. இந்த சமயத்தில் சாரதா குழுமத்தில் ஏதேனும் முறைகேடுகள் இருக்கிறதா என்று கேட்டு மத்திய அரசு கடிதம் எழுதியபோது அதை முதலமைச்சர் எங்களிடம் மறைத்தார் என்று தெரியவில்லை.
மேலும், மத்திய பெரும் நிறுவனங்கள் அமைச்சகம், சாரதா கம்பெனிகள் உள்பட பல நிறுவனங்கள் தொடர்பாக கேள்வியெழுப்பி முதலமைச்சருக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதியுள்ளது. அதை ஏன் அரசாங்கம் எங்களிடம் தெரிவிக்கவில்லை? சுதிப்தா சென்னை அழைத்து ஏன் அரசாங்கம் எச்சரிக்கவில்லை? ஏனென்றால் அந்த நேரத்தில் திரிணாமுல்லின் நேரடி அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமாகத்தான் சாரதா ஊடகக்குழு செயல்பட்டு வந்தது. அப்போதுதான் சாரதா நிறுவனம் பிரச்சனைகளில் சிக்கப்போகிறது என்று சுவேந்து அதிகாரிக்கு தெரிந்திருக்கிறது. அதைப்பயன்படுத்தித்தான் சுவேந்து அதிகாரி, சாரதா குழுமத்தின் தலைவர்சுதிப்தா சென்னிடமிருந்து தொடர்ந்து பணம் பறித்திருக்கிறார். இந்த இருவருக்கும் இடையில்பணம் கைமாறுவதற்கு இடைத்தரகராக செயல்பட்டதே மம்தா பானர்ஜிதான்.”

- கொல்கத்தாவிலிருந்துசந்தீப் சக்கரவர்த்தி

நன்றி:தீக்கதிர்.







 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?