"பணம் படுத்தும் பாடு!



 


suran
அம்பானி குடும்பத்தின் ஆடம்பரம்!!
-------------------------------------------------------------------------------------

நாட்டின் முதல் பெரிய கோடீஸ்வரர், முகேஷ் அம்பானியின், மனைவி, நிடா அம்பானி யின் 50வது பிறந்த நாள் (நவம்பர் 1). விழா ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் பிரம் மாண்டமான விருந்து, கேளிக்கை நிகழ்ச்சி களுடன் அம்ர்க்களப்பட்டது.நவம்பர் 1ம்தேதி நிடாவுக்கு, 50வது பிறந்த நாள் விழா என்பதால், இதை ஆடம்பரமாக கொண்டாட முகேஷ் அம்பானி முடிவு செய்தார்.விமானங்கள்இதற்காக மும்பை யில் இருந்து அம்பா னிக்கு சொந்தமான விமானங்களில் 250க்கும் மேற் பட்டோர் ஜோத்பூர் வந்துவிட்டனர். முகேஷ் அம்பானி, அவர் மகன்கள் ஆகாஷ், ஆனந்த், மகள் ஈஷா, தாய் கோகிலா பென், சகோதரி கள், நினா, தீப்தி என குடும்பத் தினர் அனைவரும் ஜோத்பூர் இறங்கினர். அவர் களுடன் ஒவ்வொருவரின் தனிச்செயலாளர் கள், மருத் துவர்கள், டயட்டீஷியன்கள் என வேலைக்காரர்கள், நூறு பேருக்கும் மேல் தனியாக வந்து சேர்ந்துள்ளனர்.முகேஷுக்கும், அவர் மனiவிக்கும் நண்பர்கள் என்ற வகையில், 200க்கும் மேற்பட்டவர்கள் ஜோத்பூருக்கு வெளியே அமைந்துள்ள இரண்டு பிரம்மாண்ட அரண் மனை ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
உதைத் பவான் பேலஸ், பல்சமந்த் லேக் பேலஸ் ஆகிய இரு அரண்மனைகளிலும், முகேஷ் நிடா தம்பதியின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தங்கினர்.இந்த தம்பதிக்கு சொந்தமான, மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள், வெளிநாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்டனர். அவர்களுடன், நட்சத்திர கிரிக் கெட் வீரர், டெண்டுல்கர், தன் காதல் மனைவி, அஞ்சலி, வாரிசுகள், மகன் அர்ஜுன், மகள் சாரா ஆகியோரும் பங்கேற்றனர்.இவர்களுடன், நாட்டின் முன்னணி தொழிலதிபர் களான, மகிந்தரா, பிர்லா, கோத்ரெஜ், மிட்டல், கோத்தாரி, குடும்பத்தினர் பங்கேற்றனர்.
பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான, இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரகுமான், நடிகைகள், பிரியங்கா சோப்ரா, ஜுஹி சாவ்லா போன்றோர் பங்கேற்றனர்.கலைநிகழ்ச்சிகள்மும்பை மற்றும் நாட்டின் பிற நகரங்களில் உள்ள, இந்த கோடீஸ்வர தம்பதியின் நண்பர்களை, ஜோத் பூருக்கு அழைத்து வர, 32க்கும் மேற்பட்ட விமானங்கள், பணியில் ஈடுபடுத்தப்பட்டன. நிகழ்ச்சியில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.நிடா, பரதநாட்டிய கலைஞர் என்பதால், பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளுடன், வெஸ்டர்ன், மேற்கத்திய இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதுபோன்றதொரு, 50வது பிறத்ந நாள் நிகழ்ச்சியை நாட்டில் வேறு யாரும் நடத்தியிருக்கக்கூடாது என்ற எண்ணத்தில், முகேஷ், தன் மனைவியின் 50வது பிறந்த நாள் நிகழ்ச்சியை படாடோபத்துடன் ஏற்பாடு செய்தார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?