இடுகைகள்

ஏப்ரல், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கோடை காலத்தை ....

படம்
ஆரோக்கியத்துடன் கடத்திட...., ஆண்டுக்கு,ஆண்டு நாம் சொல்லும் வார்த்தை இந்த ஆண்டு வெயில் அதிகம் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்துக்கு முன்பே இந்த வெட் கையா?என்பதுதான். ஆனால் இந்த ஆண்டு வெயில் கொடுமை மிக அதிகமாகத்தான் இருக்கப்போகிறது.அப்படித்தான் வானிலை ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன. தமிழ் நாட்டில் 113 முதல் 115வரை வெப்ப நிலை இருக்கலாம்.இருக்கும் என்கிறது அந்த அறிக்கைகள். ஆண்டுக்கு ஆண்டு வெப்ப நிலை கூட .மழை அளவு குறைய மரங்களை வெட்டி சாய்ப்பதும்,நீர் நிலைகளை முழுக்க மனைகளாக்கி விற்றதும்தான் காரணம் என்பதை எத்தனை தடவைதான் கூறுவது.இதை கண்காணிக்க வேண்டிய அரசுதான் சாலை ஒர மரங்களை எல்லாம் நெடுஞ்சாலை விரிவாக்கம் என்று வெட்டித்தள்ளுகிறது. குளங்கள்,ஏரிகளை மழை நீர் இல்லாத காலங்களில் அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் மூலம் பட்டா போட்டு வீடுகளாக்கி விட்டனர். இந்நிலையில் இந்த அரசிடமே நாம் மரங்களை ,குளங்களை பாதுக்காக கூற முடியுமா? இவ்வளவு பட்டும் திருந்தாத அரசுகள் இனியும் திருந்தும் என்று தெரியவில்லை. காற்றுக்கு வீச பான் ஓலை விசிறி கூட கடைகளில் கிடைப்பதில்லை.மின் விசிறியால் வெப்பத்தை போக்கலாம் என

"மே தின வாழ்த்துக்கள்.!"

படம்
எதை ,எதையோ கொண்டாடுகிறோம்.ஆனால் உழைத்து வாழும்நாம்  நமக்கென்று உள்ள தொழிலாளர் தினமாகிய "மே தினத்தை "விருப்புடன் கொண்டாடுவதில்லை.நடிகர் ,நடிககையர்,அரசியல் வாதிகள் பிறந்ததினத்தை வெகு விமர்சையாக கடன் வாங்கியாவது கொண்டாடி மகிழ்கிறோம் . 18 ம் நூற்றாண்டில் தொழிலாளர்கள் பட்ட பாட்டை பற்றியும் அதலிருந்து மீண்டு இன்றைய நிலையை நாம் அடைய பட்ட பாட்டையும் ,விட்ட உயிர்களையும் பற்றி நாம் உணராததே இதற்கு ,இந்நிலைக்கு காரணம். 18 ம் நூற்றாண்டுவரையில் கடுமையான தொழில் புரட்சி உலக அளவில் ந டந்தது. அதுவரை ஆங்காங்கே குடிசைத்தொழில்களாக நடந்து வந்தவை ஓரிடத்தில் இணைந்து பணக்காரார்கள் முதலீட்டை கொட்ட தொழிற்சாலைகள் உலகம் முழுக்க குறிப்பாக அமெரிக்க,ஐரோப்பிய நாடுகளில் முளைத்தன. அதற்கு இயந்திரங்களுடன் ஓயாது உழைக்க மனிதர்கள் தேவை. அதற்காக எழைகள் தேவை.முதலில் அவர்களை  பார்த்த தொழிலில் இருந்தும் விவசாயத்திலிருந்தும். பிரித்து அரசு துணையுடன் தொழிற்சாலைகளில் உழைக்க அமர்த்தப்பட்டனர். அங்கேயே இருக்க ஓரமும்,உணவுக்கு காய்ந்த ரொட்டிகளும் கொடுக்கப்பட்டன.கிட்டத்தட்ட 24 மணி நேரமும் அவர்கள் உழைக்க வே ண்டியிருந

வரும் !.......ஆனா வராது?

படம்
கோச்சடையான் படம் .அன்னாகசாரே யின் லோக் பால் மசோதா வுக்கும்,தமிழ் நாட்டில் மின்தடை நீங்கும் காலம் வருவது எப்போது என்ற அள்வில் எதிர்பார்ப்புகளை தந்துள்ள படம் அவரது ரசிகர்களுக்கும்-ஊடகங்களுக்கும்.மக்களுக்கு அவர்களின் கவலை எல்லாம் மின் வெட்டு பற்றிதான். கொச்சடையான்  படம் திட்டமிட்ட தேதியில் ரிலீஸ் ஆகுமா? என்கிற பயமும் - குழப்பமும்  ரசிகர்களுக்கு மட்டுமல்ல, ரஜினிக்கே இருக்கிறது .இதுதான் இன்றைய நிலவரம்.. கொச்சடையான் மே 9ல் வெளியாகிறது விளம்பரம் கண்டு  சில தினங்களுக்கு முன் இந்த படத்தை தயாரித்து வரும் முரளி மனோகரை சந்திக்க கடன்காரர்கள் கூட்டமாக வந்துவிட்டார்கள்.  மாற்றான் படத்தை வெளியிட்ட வகையிலேயே இவர் பனிரெண்டு கோடி ரூபாய் நஷ்டத்தைஇவர் இன்னமும்  ஈடு கட்ட வேண்டியிக்கிற தா ம். இதுபோல் இவரின் சில படங்களையும் சேர்த்து சுமார் நாற்பது கோடி கடன். இந்த படம் வெளியாகிவிட்டால் முரளி மனோகர் லண்டனுக்கு சென்று  காணாமல் போய் விடுவார். அதற்கப்புறம் அவர் சென்னை வருவது எப்போது என்று யாருக்கும் தெரியாது.மேலும் கொச்சடையான் ரஜினி நடித்தப்படம் என்று விளம்பரம் செய்யப்பட்டாலும் அது அசைவூட்டப்படம்.அதான் அனிம

செல் பேசியின் தந்தை யார்?

படம்
  கூப்பர்?   ஸ்டுபிர்ஃபீல்டு?    இன்றைய காலக்கட்டத்தில் செல் பேசி மூலம், தொலைத் தொடர்பு, இணையத்தில் உலாவருதல், பொழுதுபோக்கு, இசை முதலிய சேவைகள் பெறுவது, நமது அன்றாட வாழ்க்கையில் பிரிக்க முடியாதது.. உலக தொலைத் தொடர்பு ஒன்றியம் 2013-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், தற்போது, உலகளவில் செல்பேசியைப் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை 680கோடி அடைந்துள்ளது.  இது, உலகின் பொது மக்கள் தொகையில் 96விழுக்காட்டு வகிக்கிறது. செல்லிட பேசியைப் பயன்படுத்துகின்ற போது, அதனைக் கண்டுபிடித்தவர் பற்றி, உங்களுக்கு தெரியுமா? 1973-ஆம் ஆண்டு, மார்ட்டீன் கூப்பர், உலகில் முதலாவது செல் பேசியைக் கண்டுபிடித்தார். நவீன செல்பேசியின் தந்தை என்னும் பெருமையை அவர் பெற்றார்.  எனினும், 2008-ஆம் ஆண்டு மே 13-ஆம் நாள், பிரிட்டானின் டெய்லி மெயில் (Daily Mail) ஏட்டில் வெளியிட்ட தகவலில், நாதன் ஸ்டுபின்ஃபீல்ட் (Nathan ubblefield) என்ற அமெரிக்கரே, செல்பேசியைக் கண்டுபிடித்த முதலாவது நபர் என வெளியாகியுள்ளது. மேலும், Virgin செல்பேசி வலைபின்னல் நிறுவனர் சர் ரிச்சார்டு பிரான்சனும், நாதனின் செல் பேசி தந்தையாக கருதுகின்றா

வேட்டுவைக்கும் நடவடிக்கை.......,

படம்
இன்று இந்தியாவை கவலையில் ஆழ்த்தும் ஒரு செயல் மலிவு விலையில் வந்து குவியும் சீனத் தயாரிப்புகள். கண்ணைக்கவரும் வகையில் தரக்குறைவான பொருட்களை  கண்டெய்னர்களில் அனுப்பி வரிந்து  கட்டிக்கொண்டு களம் இறங்குகிறது சீனா .  இங்குள்ள பெரிய பிரபல நிறுவனங்கள் தயார்ப்புகளைப்போல பேபி ஆயில், குளியல்  சோப்பு, பாடி ஸ்பிரே, பொம்மைகள் செல்பேசிகள்,எலக்ட்ரானிக் பொருட்களை  அடுக்கடுக்காக அனுப்பி  இந்தியாவை எந்த அளவுக்கு சீர்குலைக்க முடியுமோ அந்த அளவு  முயற்சி செய்கிறது.  கப்பல்களில் கன்டெய்னர், கன்டெய்னராக நிரப்பி  அனுப்பப்படும் இந்த பொருட்களை பயன்படுத்தினால்  உடல்நலத்துக்குத்தான் பாதிப்பு.  சீன அழகுசாதன பொருட்களை  பயன்படுத்த வேண்டாம் என தோல் நோய் நிபுணர்கள் எச்சரிக்கை  விடுக்கும் அளவுக்கு தரம் குறைந்தவையாக அவை உள்ளன. சுங்கத்துறையினர் இதை பல முறை கண்டுபிடித்து அவற்றை  சீனாவுக்கே திருப்பி அனுப்பினாலும் தனது விடா முயற்சியில் சீனா  தளர்வதே இல்லை. சில சமயம் பெரிய வெளிநாட்டு நிறுவனங்கள்  மூலமாகக்கூட தனது பொருட்களை சந்தைப்படுத்தி சாதுர்யத்தை  வெளிப்படுத்துகிறது சீனா. நமது சந்தையில் சீன தயாரிப்புகள்  அனைத்தும

உடல்நலம் காக்கும்

படம்
  பப்பாளி கரிகா பப்பயா  (Carica Papaya) என்னும் தாவரவியல் பெயரினைக் கொண்ட பப்பாளிப் பழம் வெப்பப் பகுதிகளில் வளரக்கூடியது.  மத்திய அமெரிக்காவிலும் மேற்கு இந்தியத் தீவுகளிலும் முதன்முதலில் அறியப்பட்ட பப்பாளி. போர்ச்சுகீசியராலும் ஸ்பானிஷ் மக்களாலும் பிற ஊர்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் பப்பாளி மரம் ஆரோக்கிய மரம் என்றும் பப்பாளிப் பழம் ஆரோக்கியப் பழம் என்றும் அழைக்கப்படுகிறது. வைட்டமின் ஏ அதிகம் உள்ள பழங்களுள் முதலிடத்தில் மாம்பழமும் இரண்டாம் இடத்தில் பப்பாளியும் உள்ளன. பப்பாளி பழுக்கப் பழுக்க வைட்டமின் சி சத்து அதிகரித்துக் கொண்டே செல்லும்.  100 கிராம் காயாக உள்ள பப்பாளியில் 32 மில்லி கிராமும், சிறிது பழுத்த பப்பாளியில் 40-72 மி.கிராமும், பாதிக்கு மேல் பழுத்ததில் 53-95 மி.கிராமும் நன்கு பழுத்ததில் 68-136 மி.கிராமும் வைட்டமின் சி இருக்கும். மேலும், வைட்டமின் பி1, பி2, போலிக் அமிலம், பொட்டாசியம், காப்பர், பாஸ்பரஸ், நார்ச்சத்து, நியாசின் போன்ற சத்துகளும் உள்ளன. நன்கு வளர்ந்த பழுக்காத காய் வாட்டான பப்பாளிக் காயில் உள்ள புரோடியா லிடிக

இதுதான் இந்தியா?

படம்
 கோவாவில்  ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை செய்யும் பணியாளர்களின் பட்டியலில் கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் உள்ளிட்ட பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த பட்டியலில் அமிர்கான், கபில்தேவ், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, யுவராஜ் சிங், கோவா முதல்வர் மனோகர் பரிக்கர், அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவர்களுக்கு நாள் ஒன்றிற்கு ரூ.100 வீதம் 150 நாட்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கணக்கு காட்டப்பட்டுள்ளது. அவுங்களும் பொய்யாக எத்தனை பெயர்களைத்தான் யோசிக்க முடியும் ?. ==================================================================== @நாட்டின் அன்­னியச் செலா­வணி கையி­ருப்பு, சென்ற 18ம் தேதி­யுடன் முடி­வ­டைந்த வாரத்தில், 3.16 கோடி  டாலர் சரி­வ­டைந்து, 30,941 கோடி டால­ராக குறைந்­துள்­ளது என, ரிசர்வ் வங்கி, வெளி­யிட்­டுள்ள புள்­ளி­வி­வ­ரத்தில் கூறப்பட்டுள்ளது.  ஏப்ரல் மாதத்தின் முதல், 15 தினங்­களில், முன்­பேர சந்­தை

பாதுகாப்பு-கையில் காப்பு?

படம்
- தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் குரல் எழுந்துள்ளது. அதிமுகவைத் தவிர மற்ற கட்சியினர் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை குற்றம் சாட்டுகின்றனர். ஜெயலலிதா தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டியது தனது ஹெலிகாப்டர் கணக்கு வேட்பாளர் கணக்கில் வருவது பற்றித்தான். பிரவின்குமாரின் தேர்தல் ஆணையம்  எதிர்கட்சிகளுக்கு எதிராக மட்டுமல்ல மக்களுக்கு எதிராகவும் நடந்து கொண்டுள்ளதாகத்தான் தெரிகிறது. ஒன்று பணம் வாங்கினால் கைது-சிறை என்று பாமர மக்களை ஒருபக்கம் மிரட்டி விட்டு வாக்கு சாவடி வரிசை வரை அதிமுகவினரை பணம் கொடுத்து இலைக்கு வாக்கு கேட்க அனுமதித்தது.அதற்காகவே மற்ற கட்சியினர் கூட்டம் போட்டு எதிர்ப்பதை தடுக்க 144 தடையை கொண்டு  வந்தது. இதனால் அப்போதைய கஞ்சிக்கு அதிமுக தரும் பணத்தை வாங்க மக்கள் பயந்து 1000 ரூபாய் வர வேண்டிய இடத்தில் மிகக் குறைவாக 200 மட்டுமே கொடுத்தது.இன்றைய விலைவாசி இருக்கும் நிலையில் இவ்வளவு குறைவாக வாக்குகளுக்கு விலை தந்தால் கட்டு படியாகுமா? கொலை செய்தவனை விட தூண்டியவனுக்குத்தான் தண்டனை அதிகம். ஆனால் தேர்தல் ஆணையம் சட்டப்படி பண