பாலு மகேந்திரா .........!

suran-balumahendra

1939 மே 20-ம் தேதி இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தவர் பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா.

  ஒளி ஓவியர் பாலுமகேந்திரா தினம் இன்று.[மே -20]
 பாலு மகேந்திரா சிறந்த ஒளிப்பதிவாளர்.திரைப்பட இயக்குனர். ஆவார். சமகாலத் தமிழ் வாழ்க்கையை சித்தரிக்கும் பல படைப்புகளை உருவாக்கியவர்.
 தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, ஹிந்தி மொழித் திரைப்படங்களில் பணியாற்றியவர்.

இயற்பெயர், மகேந்திரா.
அவரது தந்தை பாலநாதன் ஒரு சிறந்த கணித ஆசிரியர், கல்லூரி அதிபர். லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்தார். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்ற பாலு மகேந்திரா 1969-ல் தங்கப்பதக்கம் பெற்றார்.

ப்ரிட்ஜ் ஒப் ரிவெர் க்வாய் (Bridge of river kwai) திரைப்படத்தின் ஒரு பகுதி இலங்கையில் படமாக்கப்படும்போது பாலகன் பாலு மகேந்திரா அதனை காண நேர்கின்றது. அந்த தாக்கமே அவரை திரைப்படத்துறையில் ஈடுபாடுடையவராக்குகின்றது.
suran

அவரது பட்டயப்படிப்பு திரைப்படத்தைக் கண்டு அவரைசெம்மீன் படப்புகழ் ராமு காரியத் அவரது நெல்லு படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார். அப்படத்துக்கு 1972-ல் சிறந்த ஒளிப்பதிவுக்கு கேரள மாநில விருது பெற்றார். அதைத்தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். கெ. எஸ். சேதுமாதவனின் சுக்கு, ஜீவிக்கான் மறந்நு போய ஸ்தீரி, சட்டக்காரி, பி என் மேனோனின் பணிமுடக்கு போன்றவை முக்கியமான படங்கள்.

தெலுங்கில் பிரபலமான சங்கராபரணம் படத்தை ஒளிப்பதிவு செய்தார். ஒளிப்பதிவில் தனக்கு என்று ஒரு புதிய பாணியினை அமைத்துக் கொண்டார். இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்துவது இவருடைய தனித்துவம். முதலில் ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்குனராக மாறியவர்.
suran-kamal_balu
 1977-ல் பாலு மகேந்திரா அவரது முதல் படமான கோகிலாவை கன்னட மொழியில் இயக்கினார்.உலக நாயகன் கமல்ஹாசன் இப்படத்தின் நாயகன்.
 பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்த முதல் தமிழ்படம் முள்ளும் மலரும் 1977-ல் வெளியாயிற்று.
1978-ல் தமிழில் அவரது முதல் படமான அழியாத கோலங்கள் வெளியாயிற்று.
இப்படத்திலும் கமல்ஹாசன் வந்து செல்வார்.
 பாலு மகேந்திரா மணிரத்தினம் போன்ற பல முக்கியமான இயக்குநர்களின் முதல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கமல்ஹாசன்-ஸ்ரீதேவி நடித்த "மூன்றாம் பிறை "பாலுமகேந்திராவை பட்டி தொட்டி எங்கும் பிரபலப்படுத்தியது.
அடித்தட்டு ரசிகனும் அவருக்கு மூன்றாம்பிறை பெற்றுந்தந்தது.இந்திய அரசின் விருதுகளையும் குவித்தது.

பாலு மகேந்திரா தனது பேச்சுக்களின் போது படைப்பாற்றல், நுண்ணுணர்வு பற்றி பின்வருமாறு கூறுவார்
"ஒரு படைப்பாளிக்கு அடிப்படைத்தேவை நுண்ணுணர்வு.
அந்த நுண்ணுணர்வு இல்லையென்றால் அவன் படைப்பாளியே அல்ல. மற்றவர்களால் பார்க்க முடியாத விடையங்களை உன்னால் பார்க்க முடிகிறதே எதனால்? உன்னிடம் நுண்ணுணர்வு உள்ளது. எந்த நுண்ணுணர்வு உனது படைப்பை உன்னதப்படுத்துகின்றதோ அதே நுண்ணுணர்வு உனது தனிப்பட்ட வாழ்வை நாறடித்துக்கொண்டிருக்கும்.ஏனெனில் நீ அதிகம் எதிர்வினை புரிபவனாய் இருப்பாய்.
உலகில் உள்ள படைப்பாளிகளுக்கு இருக்கக்கூடிய சாபக்கேடுதான் இது"
என்பதுதான் அவர் கூறும் அறிவுரை.suran சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பாலு மகேந்திரா மூன்று முறை பெற்றுள்ளார்.
வீடு, சந்தியாராகம், வண்ண வண்ண பூக்கள். சிறந்த திரைக்கதைக்கு கோகிலா, அழியாத கோலங்கள் ஆகியவை விருது பெற்றன. ஜூலி கணபதி சிறந்த படத்தொகுப்புக்கான சாந்தாராம் விருது பெற்றது. இம்மூன்று துறைகளிலும் விருதுபெற்ற ஒரே திரைப்பட நிபுணர் இவரே.

பாலு மகேந்திராவின் திறமையை பாராட்டி சத்யஜித் ராயின் ஒளிப்பதிவாளரும், இந்திய சினிமாவின் தலை சிறந்த ஒளிப்பதிவாளருமாக கருதப்படும் சுப்ரதா மித்ரா தனது காட்சிக் காணியை பரிசாக வழங்கியுள்ளார்.

கடைசியாக தலைமுறை என்ற படத்தி இயக்கி அதில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.

பாலு மகேந்திரா பெப்ரவரி 13, 2014 அன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார்.
suran
-------------------------------------------------------------------------------------------------------------------------
suran
சீனாவின் வளர்ச்சிக்கு காரணம்? 

-எம்.ஏ.உசைன்

அண்மையில் ஊடகங்களில் விவாதங்கள் நடக்கிறபோது, சில மேதாவிகள், அரசியல் பொருளாதார விஷயங்களில், சீனாவைக் குறித்து குறிப்பிடுகிற போது, அதை விடுங்க அது இப்போது கம்யூனிசத்தை பின்பற்றுவதில்லை. அது முதலாளித்துவத்தைக் கடைப் பிடிக்கிறது.
அதனால்தான் அங்கு வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்பட் டுள்ளது என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டு இன்று உலகத்தில் கம்யூனிசம் முடிவுக்கு வந்துவிட்டது. இங்கே இந்தியாவில் அந்த பழமை வாத சித்தாந்தத்திற்கு சிலர் வாதம் செய்கிறார்கள், என்று தீர்ப்பு சொல்லி விடுகின்றனர்.
ஆனால், உண்மை என்ன? இதோ ஒரு வரலாறு.உலகில் முதன் முதலாக கணினி (கம்ப்யூட்டர்) கண்டுபிடிக்கப்பட்ட போது, இதற்கு முன் நடைபெற்ற தொழில் புரட்சியை விட மிகப்பெரிய புரட்சி தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்டது என மனித சமூகம் எண்ணியது.
உலக முதலாளித்துவமோ, தனது கொள்ளை லாபத்திற்கும், சுரண்டலுக்கும் கிடைத்துள்ள மிகப்பெரிய வரப்பிரசாத மாக கருதியது. யதார்த்தமாக வளர்ந்து வரும் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியை முதலாளித்துவத்திற்கு எளி தில் கையகப்படுத்த வாய்ப்புள்ள காரணத்தால் உலக முதலாளித்துவம் இதையும் சுவீகரித்துக் கொண்டது.
அதன் மகிழ்ச்சி யின் ஒரு பகுதியாக அது எண்ணியது என்பது, இதை சோசலிச நாடுகள் எளி தாக கையாள முடியாது என்பதாகும். அதுவும் குறிப்பாக சீனா உலகில் தனிமைப்படுத்தப்பட்டு விடும் என எண்ணியது.
ஜப்பானின் காலனி ஆதிக்க நாடாக சீனா இருந்த காரணத்தால் அங்கு ஆங்கிலம் ஒரு பொது மொழியாகவோ, வழக்கிலும் இல்லாமலிருந்தது.கணினிமயத்திற்கு பிறகு இணைய தளங்களும் உலகில் வியாபித்தபிறகு, சீனா மிகவும் பலவீனமடைந்து விடும்என்று அவர்கள் கருதினார்கள்.
இதற்கானசாத்தியக்கூறுகள் அதிகமாக இருந்தது.
உலக முதலாளிகள், கணினி மற்றும் இணையதளங்கள் ஆளுமைகள் வந்த பிறகு தொழிலாளி பிரச்சனைகளும், தொழிலாளிகள் இடம் பெயர்தலும் ஒரு அளவுக்கு தமக்கு தொல்லைக் கொடுக் காது என்று கணக்குப் போட்டது.
அதுவும் ஏறக்குறைய உண்மைதான்.முதலாளித்துவம் இந்த தளங்களை தாங்கள் விரும்பும் நாடுகளில் வைத்துக் கொண்டு, நினைக்கிற இடங்களில் வைத்து உழைப்பாளிகளை அவர்களது இடங்களிலேயே வைத்து வேலை வாங்க முடியும் என்று கணக்குப் போட்டது.
அதற்கு வசதியான நாடுகள் என்று பார்க்கிற போது அவர்கள் சீனா, இந்தியா மற்றும் அதை ஒட்டிய ஏழைநாடுகளில் உள்ள அபரிமிதமான மனித வளங்களை பயன்படுத்த எண்ணினார்கள். அதில் அவர்களுக்கு வாய்ப்பான நாடு இந்தியா. காரணம், குறைந்த கூலிக்கு வேலைக்கு ஆட்கள் கிடைப்பது. மற்றொன்று சீனா. ஆதை அவர்கள் தவிர்த்தார்கள்.
இந்திய நிலை
இணையதளத்தில் வேலை செய்ய வசதியாக கணினி பாடத்தில் தொழில்நுட்ப பட்டதாரிகள் தேவைப்பட் டார்கள். அதற்கு வசதியாக இந்திய அரசு அதுவரை கெடுபிடியாக நடத்திவந்த பொறியியற் பட்டப்படிப்பைத் தனி யாருக்கு தாரைவார்த்து பயிற்சி கட் டணமாக லட்சங்களில் ஏராளமான பட்டதாரிகளை உற்பத்தி செய்தது.
இந்த கல்லூரிகளை கூட அரசியல்வாதிகள் மற்றும் மத அமைப்பு கள் நடத்தி கொள்ளையடிப்பதற்கு வசதி செய்யப்பட்டது. ஏராளமான கணினி பட்டதாரிகள் வந்த பிறகு பல தொழில் நிறுவனங்கள் தங்களது பாரம்பரிய தொழில்களை விட்டு விட்டு தகவல் தொழில்நுட்பம் மூலம் மேற்கத்திய நாடுகளின் சேவைத் துறையை அவுட் சோர்சிங் மூலமாக இந்தியாவில் குறிப் பாக பெங்களூருவை மையமாக வைத்து துவக்கின.
இந்தியாவின் மற்ற பெரு நகரங்களை விட பெங்களூருவில் ஐ.டி துறை குவிந்த தற்கு காரணம் சீதோஷ்ண நிலை. பக்கத்திலுள்ள பிடர் நகரத்துக்கு கூட நகரமறுக் கிறது. இதனால் உற்பத்தியில் ஈடுபடாத, சேவைத்துறை சார்ந்த முதலாளிகள் உருவானார்கள்.
 உற்பத்தி முதலாளிகள் கிட்டத்தட்ட அனைவரும் படிப்படியாக சேவைத்துறையில் கணினி சார்ந்த தொழிலுக்கு மாறியும் தங்களது பழைய தொழிலுடன் இணைத்தும் நடத்தினர்.
விளைவுகள்
பல தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கு ரூ.20,000லிருந்து 45,000 வரையும், சில ருக்கு சற்று கூடுதலாகவும் சம்பளமாக கிடைத்தது. விஷேச மண்டலங்கள் என்ற பெயரில் எந்த தொழிற்சங்க சட்டங்களுக்கும் பொருந்தாமல் பார்த்து கொண்டு கீழ் காணும் நிறுவனங்கள் கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்து நவீன முதலாளிகளானார்கள்.
உதாரணம் : சத்தியம் கம்யூட்டர்ஸ், இன்போசிஸ், சிடிஎஸ், டிசிஎஸ், விப்ரோ, ஆரக்கிள் முதலியன.ஊழியர்கள் காலநேரமில்லாமல் உழைக்க வேண்டும். வேலைக்கும் உத்தரவாதமில்லை. மேலும் புதியதாக கோடிக்கணக்கான சொத்துக்களைக் கொண்ட நவீன முதலாளிகள் பெருகினார்கள்.
சீனாவின் நிலை
ஆங்கிலமும், கணினி பயிற்சியும் இல்லாத காரணத்தால் சீனா ஒரு புதிய யுக்தியை கையாண்டது. அது தனது நாட்டில் நாடு முழுவதும் ஏராளமான மிகப்பெரிய மைதானங்களில் பிரம்மாண்ட மான திரைகளும், ஏராளமான கணினி களையும் இலவசமாக வைத்து இரவும் பகலும் கணினி பாடங்களும், ஆங்கில கல்வியும் இலவசமாக திரையிட்டு மக்களை படிக்க ஏற்பாடு செய்தது. வயதுவரம்பு எதுவும் கிடையாது.
பலவருடங் கள் இது நடைபெற்றது. மைதானம் முழுவதும் கணினிகள் ஏராளமாக வைக்கப் பட்டது. (இதுகுறித்து அந்த நாட்களில் பிரண்ட்லைன் பத்திரிகையில் சிலதொடர் செய்திகள் வந்த வண்ண மிருந்தது.)மேற்கத்திய நாடுகள் அதிரும் வண்ணம் கோடிக்கணக்கான தேர்வு பெற்ற இளைஞர்கள் இணையதளம் முன் அவுட்சோர்சிங் மற்றும் புராஜக்ட் வேலைக்கு தயாராகிவிட்டனர். மேலும் அது இந்தியா போன்ற நாடுகளின் வேலை யாட்களை விட மலிவாக கிடைத்தார்கள். இளைஞர்கள் நேரடியாக வேலைகளைப் பெற்றனர்.
suran
அது அங்கு பீக்கிங்கிலோ, ஹாங்காங்கிலோ, ஷாங்கையிலோ சென்று முடங்கவில்லை. மாறாக சீனாமுழுவதையும் வியாபித்து இருந்தது.
மட்டுமல்ல அங்கு ஃவிப்ரோ டிசி எஸ், இன்போசிஸ், சி.டி.எஸ் என இடைத்தரகர்கள் இல்லாததால் புதிய முதலாளி களுக்கு பதிலாக சீனா முழுவதுமிருந்து இளைஞர்கள் நல்ல வாழ்க்கை முறை உடையவர்களானார்கள்.
அரசு அந்த சேமிப்புகளை சீன தேச முழுமைக்கும் பயன்படுத்தியது. தேச வருமானம் பெருகியது. வளர்ச்சியும் ஏற்பட்டது. அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடு களுக்கு கடன் கொடுத்தது.அந்த நாளில் இந்து பத்திரிகையில் ஒரு கட்டுரையாளர் பேக்-டு-பெங்களூரு பேக்-டு-சீனா என்று எழுதினார். ஏன்அவர் பேக்-டு-பெங்களூரு என்று சொல்லிவிட்டு பேக்-டு-சீனா என்று சொல்ல வேண்டும்?
 அல்லது பேக்டுஇந்தியா என்று சொல்லாமல் பெங் களூரு என்று சொன்னார்? என்று ஆர்வத்துடன் பார்க்கிறபோது அவர் இந்த மேற் குறிப்பிட்ட கணினி இணையதளத் தாக்கத்தைதான் இந்தியா சீனாவை ஒப்பிட்டு அவ்வாறு தலைப்பில் கூறியிருந்தார்.
அவர் அதை முடிக்கிற போது காரணமாகச் சொன்னது:சீனாவின் அடிப்படை கட்டமைப்பு சோசலிசம் தான். சீனாவிற்கு இந்த மாபெரும் சவாலை சந்திக்கிற வலிமையை கொடுத்தது. இந்தியா முதலாளித் துவ கட்டமைப்பை கொண்டதால்தான் இடைத்தரகர்களாக உழைப்பிற்கும் மூலதனத்திற்கும் உள்ள முரண்பாட்டில் உலவி வருகிற நவீன முதலாளிகள் (சேவைதுறை மூலம்) கொள்ளை லாபம் பெற வாய்ப்புள்ளது.
 இது சீனாவில் முடியாது. இது இங்குள்ள மேதாவிகளுக்கு ஒன்றும் தெரியவில்லையா அல்லது வர்க்க விரோத கண்ணோட்டத்தில் மறுதலிக்கிறார்களா? ஆகவே அங்குஏற்பட்டுள்ள வளர்ச்சி சோசலித்தால் தான். கம்யூனிசம் அந்த நாட்டின் தன் மைக்கேற்ப செழுமையுடன் உள்ளது. அது மட்டுமல்ல அண்மையில் நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின்மாநாடு நாங்கள் சோசலிசத்தை கடைப்பிடிக்கிறோம். சோசலிசம்தான்எங்கள் அடிப்படை சித்தாந்தம். முத லாளித்துவத்தை அனுமதிக்கமாட்டோம் என்று பிரகடனப்படுத்தினார்கள்.
ஆகவே இந்திய மோதவிகளே சீனாவின் வளர்ச்சிக்கு காரணம் சோசலிச சித்தாந் தமே!; அவர்கள் கடைபிடிப்பதும் அதுவே.
மேற்குறிப்பிட்ட மிகப்பெரிய சமூக வளர்ச்சி சோசலிச அமைப்பில் எவ் வாறு எதிர்கொண்டு அந்த சவால் சமூகமுழுமைக்கும் பயன்படுகிறது என்பதும் அது இல்லாத இந்தியாவில் அதே தொழில்நுட்பம் எவ்வாறு சிலரை கோடீஸ் வரர்களாகவும் பலரது உழைப்பை சுரண்டவும் பயன்பட்டது என்பது நிரூ பிக்கப்பட்டுள்ளது
. ஒரே காலகட்டத்தில் இந்தியாவிலும், சீனாவிலும் நடந்துள் ளதை வைத்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் சீனாவின் வளர்ச்சிக்கு காரணம் சோசலிசமே!
-------------------------------------------------------------------------------------------------------------------------
 
 
பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை வீழ்த்தி வியட்நாமுக்கு கிடைத்த விடுதலையை அமெரிக்கா கம்யூனிச எதிர்ப்பு என சொல்லிக்கொண்டு உலகப்போரில் செலுத்திய குண்டுகளை விட அதிகம் வியட்நாமில் எறிந்து நாட்டை அடிமையாக்க  முயன்றது அமெரிக்கா. 
அப்பொழுது மக்களை வழிநடத்தி கொரில்லா போர் முறையால் நாட்டை வெற்றிப்பாதை நோக்கி அழைத்து சென்ற புரட்சித்தலைவன் தலைவர்  ஹோ சி மின்.
ஆனால் இன்று எதற்கெல்லாமோ புரட்சி பட்டம் பயன்படுகிறது.
















 
 
suran
 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?