அரசு ஊழியர்களும் -அதிமுகவும்


தமிழ்த்திரை உலகப் பின்னணிப் பாடகர்களில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர், டி.எம்.சவுந்தரராஜன். எம்.ஜி.ஆருக்கும், சிவாஜி கணேசனுக்கும் அவர்கள் குரலின் சாயலில் அற்புதமாக பாடி இவர் சாதனை படைத்தார்.  

'டி.எம்.எஸ்' என்று அன்புடன் அழைக்கப்படும் டி.எம்.சவுந்தரராஜனின் சொந்த ஊர் மதுரை. தந்தை மீனாட்சி அய்யங்கார். தாயார் வெங்கடம்மாள். சவுந்தர்ராஜனுக்கு சிறு வயது முதலே பாடுவதிலும், நடிப்பதிலும் அதிக ஆர்வம் இருந்தது.  suran

சினிமாவில் எப்படியாவது நடித்து பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வாய்ப்பு கேட்டு, பல படக்கம்பெனிகளுக்குச் சென்றார். அவருடைய விடா முயற்சியால் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

1950-ம் ஆண்டு கிருஷ்ண விஜயம் படத்தில் 'ராதே உனக்கு கோபம் ஆகாதடி' என்ற பாடலைப் பாடி திரை இசைப்பாடகராக அறிமுகமான டி.எம். சவுந்தரராஜன் தனது கம்பீர குரலின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தார்.

1951-ம் ஆண்டு ராயல் டாக்கீஸ் டிஸ்டிரிபியூட்டர்ஸ் ‘சுதர்சன்' என்ற படத்தை எடுத்தனர். பி.யு.சின்னப்பா, கண்ணாம்பா நடித்த இப்படத்தில் பி.பி.ரங்காச்சாரி சாமியாராக நடித்தார். அவருக்கு சீடராக டி.எம்.சவுந்தரராஜன் நடித்தார். தொடர்ந்து 'கிருஷ்ணவிஜயம்', 'தேவகி' ஆகிய படங்களில் சிறு வேடங்களில் தோன்றியதோடு, சில பாடல்களையும் பாடினார்.

எம்.கே.தியாகராஜ பாகவதரைப் போன்ற இனிய குரல் சவுந்தரராஜனுக்கு இருந்தது. 'உள்ளம் உருகுதய்யா, முருகா!' என்ற பாடலை டி.எம்.எஸ். இசை அமைத்துப்பாட, அது இசைத்தட்டாக வெளிவந்தது. பட்டி, தொட்டி எங்கும் ஒலித்த இப்பாடலைக் கேட்டவர்கள், அது பாகவதர் பாடல் என்றே எண்ணினார்கள்.  

ஒரு முறை பழனிக்கு பாகவதர் பாட சென்றபோது, அங்கு டி.எம்.சவுந்தரராஜன் பாடிய பாட்டு ஒலிபெருக்கியில் ஒலித்தது. இந்த பாடலைக் கேட்ட பாகவதர், சவுந்தரராஜனின் குரலில் மனம் மகிழ்ந்து, அவரைக் காண விரும்பினார்.  

வேறொரு நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்தனர். அப்போது, 'உங்கள் குரல் அமிர்தமாக இருக்கிறது. ரொம்ப சந்தோஷம். எதிர்காலத்தில் பெரும் புகழ் அடைவீர்கள்' என்று சவுந்தரராஜனை பாகவதர் வாழ்த்தினார்.  

1950-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்த ‘மந்திரிகுமாரி' படத்தில் டி.எம்.சவுந்தரராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் 'அன்னமிட்ட வீட்டிலே' என்ற பாடலை பாடினார்.

தொடர்ந்து ,1954-ம் ஆண்டு 'மலைக்கள்ளன்' படத்தில் எம்.ஜி.ஆருக்காக சவுந்தரராஜன் பாடினார்.   பானுமதியை குதிரையில் வைத்து எம்.ஜி.ஆர். அழைத்துச் செல்லும்போது பாடப்படும் 'எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' என்ற பாடலை மிகவும் அற்புதமாக சவுந்தரராஜன் பாடினார்.  

எம்.ஜி.ஆருக்கு டி.எம்.சவுந்தரராஜனின் குரல் கனகச்சிதமாக பொருந்தி இருந்தது. இதே ஆண்டில், 'தூக்குத்தூக்கி' படத்தில் சிவாஜிகணேசனுக்காக பாடினார். டி.எம்.எஸ். குரல், சிவாஜிகணேசனுக்கு ரொம்பவும் பொருத்தமாக அமைந்தது. அனைத்து பாடல்களும் `ஹிட்' ஆயின.  

1954-ம் ஆண்டு, டி.எம்.எஸ். வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. திரை உலகின் இரு இமயங்களாகத் திகழ்ந்த எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் டி.எம்.எஸ். குரலே பொருத்தமானது என்று திரை உலகத்தினரும், ரசிகர்களும் ஏகமனதாக கருதினர்.  

இதன் காரணமாக, எம்.ஜி.ஆர். படங்களுக்கும், சிவாஜி படங்களுக்கும் அவர் தொடர்ந்து பாடினார். இதுபற்றி சவுந்தரராஜன் கூறும்போது, 'சிவாஜிக்கு பாடவேண்டும் என்றால் அடிவயிற்றில் இருந்து குரல் எடுத்து பாடுவேன். எம்.ஜி.ஆருக்கு பாடும்போது அடித்தொண்டையிலும், மூக்கிலும் சாரீரத்தை வரவழைத்து பாடுவேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.  

ஜெமினிகணேசன், ஜெய்சங்கர், அசோகன், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ் என அந்தக் காலகட்டத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் டி.எம்.சவுந்தரராஜன் குரல் கொடுத்துள்ளார்.  

குறிப்பாக 'தூங்காதே தம்பி தூங்காதே', 'உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்', 'எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி', 'நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்', 'யாருக்காக இது யாருக்காக', 'நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்' போன்ற ஏராளமான பாடல்கள் காலத்தை வென்று நிற்கும் பாடல்களாகும்.  

1962-ம் ஆண்டு இசை அமைப்பாளர் ஜி.ராமநாதன் சொந்தமாகத் தயாரித்த 'பட்டினத்தார்' படத்தில் சவுந்தரராஜன் கதாநாயகனாக நடித்தார். இதில் எம்.ஆர்.ராதா, லீலாவதி ஆகியோர் நடித்தனர். படத்தை சோமு இயக்கினார். இசை: ஜி.ராமநாதன்.  

சவுந்தரராஜன் பட்டினத்தாராக கச்சிதமாக நடித்து இருந்தார். அதில் அவர் பாடிய பாடல்களும் மிகவும் அருமையாக இருந்தன. குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட 'பட்டினத்தார்', ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வெற்றி வாகை சூடியது.  

அதனைத் தொடர்ந்து 1964-ம் ஆண்டு 'அருணகிரிநாதர்' படத்தில் சவுந்தரராஜன் கதாநாயகனாக நடித்தார். 'பட்டினத்தார்' போலவே இதுவும் வெற்றிப்படம். இப்படத்தில் இடம் பெறும் 'முத்தைத் திருநகையத்திச் சரவண...' என்ற கடினமான பாடலை, இனிமையாகப் பாடியிருந்தார்.  

அதேபோல 'கவிராய காளமேகம்' என்ற படத்திலும், சொந்த தயாரிப்பில் 'கல்லும் கனியாகும்' படத்திலும் டி.எம்.எஸ். நடித்தார். தமிழ் திரையுலக ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி மற்றும் ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ் என அனைத்து பிரபலங்களுக்கும் குரல் கொடுத்துள்ள டி.எம். சவுந்தரராஜன் ஆயிரக்கணக்கான பக்தி மற்றும் மெல்லிசை பாடல்களையும் பாடியுள்ளார்.

எந்த நடிகருக்காக பாடினாரோ, அந்த நடிகரின் முகத்தை தனது குரலின் மூலம் ரசிகர்களின் மனக்கண்ணில் நிலைநிறுத்தும் ஆற்றல் டி.எம். சவுந்தரராஜனுக்கு மட்டுமே உண்டு என்று தமிழக மக்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

வீரம், காதல், சோகம், துள்ளல், நையாண்டி, தத்துவம் மற்றும் கிராமிய ரசம் சொட்டும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள டி.எம். சவுந்தரராஜன் இ ன்றைய  கமலஹாசன் உள்ளிட்ட நட்சத்திரங்களுக்காகவும் பாடியுள்ளார்.

தமிழ்ப்பட உலகில் பெரும் திருப்புமுனை உண்டாக்கிய 'ஒருதலை ராகம்' படத்தில் இவர் பாடிய பாடல்கள் அற்புதமானவை. இதுதவிர, ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களையும், நூற்றுக் கணக்கான மெல்லிசை பாடல்களையும் பாடியுள்ள டி.எம்.எஸ்., தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆயிரக்கணக்கான மேடைக் கசேரிகளையும் நிகழ்த்தியுள்ளார்.

வீரம், காதல், சோகம், துள்ளல், நையாண்டி, தத்துவம் மற்றும் கிராமிய ரசம் சொட்டும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள டி.எம். சவுந்தரராஜனின் குரலில் பதிவான கடைசி பாடல், 2012-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக உருவான ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ என்ற பாடல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

1974 ஆம் ஆண்டில் தமிழக அரசு இவருக்கு ‘கலைமாமணி’ விருது வழங்கியது. மத்திய அரசு இவருக்கு, ‘பத்மஸ்ரீ விருது’ வழங்கிப் பாராட்டியது. தமிழ் திரைப்பட உலகின் தன்னிகரற்ற பின்னணி பாடகராக திகழ்ந்த டி.எம்.சவுந்தர்ராஜன் உடல் நலக்குறைவு காரணமாக 25-5-2013 அன்று சென்னையில் மரணம் அடைந்தார்.
===========================================================================
அரசு ஊழியர்களும் -அதிமுகவும்.
-----------------------------------------------------
இந்த மக்களவை தேர்தலில் அரசு ஊழியர்கள் திமுகவுக்கு வாக்களித்தது விகிதம் முன்பைவிட குறைந்துள்ளதாக தினமலர் ஆனந்தம் அடைந்து செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் இந்த 2014 மக்களவைத் தேர்தலில் அரசு ஊழியர்கள் வாக்களிக்க தபால் வாக்குகளே வழங்கப்படவில்லை என்பதும் அதை கேட்டு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதும் ஊடகமான தினமலருக்கு மறந்து விட்டது மட்டும் தெரிகிறது.
தமீழக அரசு ஊழியர்களை வாக்களிக்க விடாமல் செய்வது 2011 தேர்தல்களுக்கு பின்னர தேர்தல் ஆணையமே நடமுறை படுத்தி வரும் செயல்.
suran
தமிழக அரசு ஊழியர்களுக்கு இரவு பகலாக காத்துக்கிடந்து செய்யும் தேர்தல் முன்னேற்பாடுகள் பணிகள் வழங்கப்படும்.ஆனால் வாக்குப்பதிவு இடங்களில் பணிகள் மத்திய அரசுப்பணியாளர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள இடங்கள் மட்டுமே வழங்கப்படும்.இது அதிமுக மக்களவைத்தேர்தலில் 0 வாங்கியது முதல் தேர்தல் ஆணையம் ஜெயலலிதா அறிவுரைப்படி நடத்தி  வரும் நடைமுறை.
2014 தேர்தலிலும் மே 20 வரை அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குகள் வழங்கப்படவில்லை.சிலருக்கு வழங்கியதும் தவறான சீட்டுகள் என்று ஆகி விட்டது.தங்களுக்கு தபால் வாக்கு வழங்காததை கூறி தேர்தல் ஆணையர் பிரவீன்குமாருக்கு கடிதங்கள்,பேக்ஸ் கள் அனுப்பியும் எந்த பதிலும் இல்லை.இதற்காக மார்க்சிஸ்ட் கட்சியும் கடிதங்களை அனுப்பியது.
திமுக தனது வேட்பாளர்கள் மூலம் வழக்குரைஞர்கள் மூலம் சட்ட அறி விப்ப்புகள்  அனுப்பிய பின்னர் வெண்டா வெறுப்புடன் தபால் வாக்குகள் அனுப்பியது.ஆனால் அ வை வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர் தான் தேர்தல் அலுவர்களுக்கு கிடைக்கும் படி அனுப்பி வைக்கப்பட்டது.இன்று கூட மாவட்ட தேர்தல் அலுவலர்கள் அலுவலகத்தில் குவிந்துள்ள செல்லாமல் போன தபால் வாக்குகளை பார்க்கலாம்.
ஆனால் இதே போல் தேர்தல் பணிகள் வழங்கப்பட்ட காவலர்களுக்கு மட்டும் தேர்தலுக்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தபால் வாக்குகளை நேரிலேயே பதிய வாய்ப்பு தரப்பட்டு வாக்குப்பதிவும் நடந்தது
suran
ஏன் அரசு ஊழியர்களுக்கும் இதே போல் வாய்ப்பு அளிக்கப்பட வில்லை?அவை அனைத்தும் திமுக சார்பு வாக்குகள் என்ற பயம்தானே?
காவல்துறை யினர் வாக்குப்பதிவும் கெலிக்கூத்தாக நடந்தது.காவலர்களுக்கு தபால் வாக்கு சீட்டை வழங்கிய அதிகாரியே அவர் முன்னிலையில் பிரித்து யாருக்கு டிக் செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கி அதை வாங்கி பெட்டியில் போட்டார்.
அதிகாரி சொன்னதை மீறி வாக்களிக்க எந்த காவல்துறையினர் தயார்?
ஆக அரசு ஊழியர்களிடம் இந்த வாக்களிக்கும் ஆலோசனை செல்லுபடியாகாது என்பதாலேயே அவர்களுக்கு இது போல் தபால் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஆக தபால் வாக்குகள் அதிமுகவுக்கு அதிகம் என்பது இருனூறு கொடுத்து வாங்கிய வாக்குகளைப்போன்று தான்.அங்கு ரூபாய்.இங்கு அதிகாரம்.
தின மலருக்கு இந்த நடவடிக்கை தெரியாமாலா இருக்கும்.?ஆனாலும் ஊடகங்கள் தான் இந்த தேர்தலின் வாக்கு பதிவை முடிவு செய்தன.தாங்கள் வரவேண்டும். என்று நினைத்த கட்சிகளுக்கு ஆதரவாக மூளை சலவை செய்திகளை வெளியிட்டும்,கருத்துக்க[தி]ணிப்புகளை வெளியிட்டும் தங்கள் விருப்பை சாதித்துக்கொண்டன.
suran

இப்போதைய  தேர்தலில் பலம் பொருந்திய வீழ்த்த முடியா கூட்டணி அதிமுக அமைத்ததுதான்.
அவர் கூட்டணியில்  பணக்குவியல் ,துட்டுக்கு செய்தி  ஊடகங்கள்,காவல்துறை,அரசு அதிகாரிகள் இவர்களை விட வலிமையான 144 போட்ட தேர்தல் ஆணையர் பிரவின் குமார்  இருந்து சாதித்துக்காடினர்.
இந்தக்கூட்டணி  தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் 2016-லிலும் தொடருமேயானால் திமுக,கம்யூனிஸ்ட்  உட்பட அனைத்துக்கட்சிகளும் அம்போதான் .
வாழ்க மக்கள் தீர்ப்பு.


 இந்த தேர்தலின்  போது, ஆளும் கட்சிக்கு ஒத்துழைக்காத, போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய, அதிமுக அரசு திட்டமிட்டுள்ளதாக, காவல்துறையினர்  தெரிவிக்கின்றனர்.

2014 மக்களவைத் தேர்தலில்  அ.தி.மு.க., வெற்றி வெற்றி பெற்றுள்ளது.ஆனாலும் அமைச்சர்கள் கட்சியினர் மத்தியில் சரிவர தேர்தல் பணியாற்றாதவர்கள் மீது ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்த நடவடிக்கை இப்போது , சரியாக பணி செய்யாத அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளை முதல்வர் ஜெயலலிதா ., பதவி நீக்கம் செய்து வருகிறார்.இப்போது இந்த நடவடிக்கை அரசு அதிகாரிகள்,காவல்துறையினர் மீதும் தொடர்ந்து வர ஆரம்பித்துள்ளது.
suran
தேர்தலின் போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சில காவல் துறையினர் , ஆளும் கட்சிக் கு ஆதரவாக நடந்து கொள்ளாமல் நடுநிலையுடன் நடந்து கொண்டதாக ஆளுங்கட்சியினர் ஜெயலலிதாவுக்கு  புகார் அனுப்பி உள்ளனர். இவர்கள் பற்றிய பட்டியலையும், தேர்தலில், ஆளும்கட்சிக்கு ஒத்துழைத்த போலீஸ் அதிகாரிகளின் பட்டியலையும், முதல்வரிடம், கட்சியினர் சமர்பித்து உள்ளதாக, கூறப்படுகிறது.
இந்த பட்டியலின் அடிப்படையில், எஸ்.பி., முதல், பல போலீசார், இடமாற்றம் செய்யப்படலாம் என, கூறப்படுகிறது.
வாக்குப்பதிவு போது பணம் கொடுக்கவும் கள்ள வாக்குகளை பதியவும் ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு, சலுகைகள் வழங்கும் திட்டமும் உள்ளதாக, அதிகாரிகள் மட்டத்தில்  பேசப்படுகிறது.

தலைமைச்செயலக அதிகாரி ஒருவர்
" தேர்தலையொட்டி, சொந்த மாவட்டத்தில் பணியாற்றியவர்கள், வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டனர். இவர்களை, மீண்டும், அதே இடத்திற்கு, மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்நிலையில், தேர்தலின் போது, ஆளும் கட்சிக்கு ஒத்துழைத்த, ஒத்துழைக்காத போலீஸ் அதிகாரிகளை, இடம் மாற்றுவது என, அரசு திட்டமிட்டு, அதற்கான பட்டியல் தயாரிக்கிறது. ஓரிரு நாளில், இடமாற்றம் அறிவிப்பு வெளியாகலாம். இத்திட்டம், அதிகாரிகளின் மத்தியில், ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
என்று  கூறியுள்ளா ர்.

கொஞ்சம் போல் இப்படிப்பட்ட அதிகாரிகள் இருந்ததால்தான் எதிர் கட்சிகள் பல இடங்களில் காப்புத்தொகையை பெற முடிந்தது போல் தெரிகிறது.
கோவை,குமரி,தருமபுரி பகுதிகளில் நிச்சயம் இம்மாறுதலை எதிர்பார்க்கலாம்.
========================================================================
 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?