மோடி சுழலில் இந்தியா

உயர் தொழில் நுட்பத்தில் கோயபல்ஸ் பாணி மோடி வித்தை காட்டி ஆட்சியை பிடித்த பாஜக ஆட்சி தனது சுயமுகத்தை காட்ட ஆரம்பித்து விட்டது.
suran

மோடி அலையை இந்தியா முழுக்க வீச[?]ஆரம்பித்த போதே உண்மை நிலையை இடது சாரிகள் உட்பட பலர் புட்டு,புட்டு வைக்க ஆரம்பித்தனர்.ஆனாலும்வாங்கிய  பணக்காற்றில் ஊடகங்கள் எழுப்பிய மோடி பு[கழ்]ழுதிப் புயல்  மக்களின் கண்ணை மறைத்து வாக்குகளை மாற்றி விட்டது.
suran
காங்கிரசின் ஆட்சியும் மக்கள் விரோத ஆட்சிதான்.
யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் சிறுபான்மை ஆட்சி வந்தால் மக்கள் நலனுக்கு நல்லது .என்று எதிர்பார்த்தது நடவாமல் போய்விட்டது.
இதோ மோடி ஆட்சி .
குஜராத்தில் எல்லா துறைகளையும் தனியாரிடம்,அந்நிய முதலீட்டுக்கு விற்று விட்டதால் எப்போதும் போல் முதலில் நல்லது போல் காட்டப்பட்டது.
அதே நிலைதான் இன்று இந்தியாவுக்கு.
ரெயில் கட்டணம் இருமடங்காகி விட்டது.அது போக தனி யார்களிடம் விற்கும் வேலை நடக்கிறது.இந்தியை பரப்பும் பணி நடக்கிறது.
டீசல் விலை மதம்,மாதம் கூட்டும் காங்கிரசின் பனி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
suran


சமையல் எரிவாயு உருளை விலை மதம் மாதம் 10 ரூபாய் கூட்டப்படுமாம்.
பாதுகாப்புத்துறையில் அந்நிய முதலீடு.
எல்லாவற்றையும் தனியாரிடமும்,அந்நியர்களிடமும் கொடுத்து விட்டு மோடி பிரதமராக இருந்து எதை கிழிக்கப் போகிறார்?பாஜக மக்களவை உறுப்பினர்களை அதற்காகத்தான் மக்கள் மக்களவைக்கு அனுப்பினார்களா?
காங்கிரசுக்கும் -பாஜகவுக்கும் வித்தியாசம் பெயரில் மட்டும்தானா?
ஆக மோடி -பாஜக பதவி ஏற்று ஒரு மாதத்திற்குள்ளாகவே மக்கள் அவரது ஆட்சியின் திறமையை பார்த்து மனம் நொந்து விட்டார்கள்.
ஆனால் அவர்கள் வாக்களீத்ததற்கு இன்னமும் ஐந்தாண்டுகள் இந்த கொடுமையை அனுபவித்துதான் ஆக வேண்டும் .ஆனால் அதற்குள் இந்தியா மீண்டும் கிழக்கிந்திய கம்பெனியிடம் அல்லது வால்மார்ட் வகையறாக்களிடம் அடிமைப்பட்டுப் போய்விடும்.
மீண்டும் 1857 ஆண்டில் இருந்து துவக்க வேண்டும் .
suran

------------------------------------------------------------------------------------------------------------
120,00,000 கோடிகள்

-வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப் பட்டுள்ள இந்தியப் பெரும்புள்ளிகளின் கறுப்புப் பணத்தின் அளவு சுமார் ரூ.120 லட்சம் கோடி என சமீபத்திய ஆய்வு ஒன்றில் கணக்கிடப்பட்டுள்ளது.
தொழில் வர்த்தக அமைப்பான ‘அசோசம்’ நடத்திய இந்த ஆய்வில், வெளி நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தின் அளவு இந்தியாவின் சராசரி உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2013-14ம் நிதியாண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி ரூ.114 லட்சம் கோடி ஆகும்.இந்தியப் பெரும்புள்ளிகளின் ஏராள மான கறுப்புப் பணம் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறப் பட்டாலும், அவற்றின் சரியான மதிப்பு எவ்வளவு என இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை. இதற்கு முன் தரப்பட்ட கறுப்புப் பண மதிப்பீட்டு அளவு, சமீபத்திய அளவீடுகள் ஆகியவற் றைக் கொண்டு அசோசம் நிறுவனம், வெளிநாடுகளில் இருக்கும் கறுப்புப் பணம் குறித்து ஆய்வு மேற்கொண்டது.
இதற்கு முன் அளிக்கப்பட்ட மதிப்பீடுக ளின்படி, கறுப்புப் பணத்தின் அளவு 500 பில்லியன் டாலரில் இருந்து 1.4 டிரில்லி யன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என கூறப்படுகிறது.2011ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந் தியாவிலும், வெளிநாடுகளிலும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தின் மதிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட்டு வருகிறது. இந்த பணி அடுத்த 18 மாதங்களுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, புதிய அரசு, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் குறித்து ஆய்வு செய்வதற்காக சிறப்பு புல னாய்வுக் குழு ஒன்றை அமைத்துள்ளது.

suran


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?