15000 கோடிகள் கொட்டி வெற்றி

நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஊடக பிரசாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி ரூ. 15 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது ஊடகங்கள் வாயிலாக பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ரூ. 15 ஆயிரம் கோடி செலவு செய்தார். 
ஊடகங்களில் பிரசாரம் செய்வதற்காக தில்லி கன்னெüட் பகுதியில் 200 பேரை மோடி வேலைக்கு வைத்திருந்தார்.
இந்தக் குழுவின் அயராத பிரசாரத்தின் விளைவாக மோடிக்கு மக்களிடையே நல்ல பரப்புரை கிடைத்தது.
மக்கள் நலன் குறித்து ஊடகங்களுக்கு இருந்த அக்கறை படிப்படியாகக் குறைந்து வருவது வேதனை அளிக்கிறது. சுதந்திரம் கிடைத்த போது ஊடகங்கள் தங்களின் கடமை உணர்வுடன் செயல்பட்டன. அப்போது, மக்களின் குரல்களைப் பிரதிபலிக்கும் கருவியாக ஊடகங்கள் இருந்தன.
ஆனால், அண்மைக் காலமாக இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு, பணத்தைப் பெற்றுக்கொண்டு ஒரு சிலரின் கருத்துகளை மக்கள் மீது திணிக்கும் போக்கு ஊடகங்களில் அதிகரித்து வருகிறது. அதாவது விளம்பரம் வாங்கிக்கொண்டு பணத்துக்கு செய்தியாக விளம்பரமாக இல்லாமல் தனது செய்திகளுடன்,செய்தியாக பிரசுரம் செய்து தனது இதழைப்படிப்பவர்களை நம்பச் செய்யும் இழிவான தொழிலை பத்திரிக்கை தர்மத்தை மீறி இன்றைய நாளிதழ்கள் செயல்படுகின்றன்.

இன்று ஊடகங்களுக்கு நடுநிலை கொள்கைகள் இல்லை.ஒரே கொள்கை பணம் சம்பாதிப்பது.அதில் இந்து போன்ற பாரம்பரியமிக்க ஊடகங்களும் சிக்கிக்கொண்டது கவலை அளிக்கிறது..ஊடகங்கள் சுயகட்டுப்பாட்டை வகுத்து கொண்டு, பொதுமக்களின் துயரங்களை அரசுக்கு எடுத்துரைக்கும் பணியில் ஈடுபட வேண்டும்.
சுதந்திர தின விழாவில், பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு, தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியது போல இருந்தது. 

ஏழைகளுக்கு ரூ. ஒரு லட்சம் காப்பீட்டு வசதியுடன் வங்கிக் கணக்குத் தொடங்கும் திட்டம் எப்போது தொடங்கப் போகிறது? 
செயல்படுத்தும் விதம் எப்படி? 
போன்ற கேள்விகளுக்கு அவரது பேச்சில் செயல்விளக்க பதில் இல்லை.
காப்பீட்டுத் திட்டத்தை அரசு செயல்படுத்துமா? 

தனியார் நிறுவனங்கள் செயல்படுத்துமா? 
என்பதும் தெரியவில்லை. 
திட்டக்குழுவைக் கலைக்கப் போவதாகவும் மோடி அறிவித்துள்ளார். 
இது தவறான முடிவாகும்.
மோடியின் திட்டங்கள் தேசத்திற்கு நஷ்டத்தையும், தனியார் நிறுவனங்களுக்கு லாபத்தையும் அளிக்கப்போகிறது. தனியார் பங்களிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது சரியல்ல என்றார் சீதாராம் யெச்சூரி.












தங்க வேட்டை!

திருவனந்தபுரத்தில்  பத்மநாப சுவாமி கோவி லில்  பி ரகசிய நில வறையை தவிர மற்ற 5 நிலவறைகளும் திறக்க ப்பட்டு அதிலிருந்த செல் வங்கள் கணக்கிடப்பட்ட தில் அவற்றின் மதிப்பு பல லட்சம் கோடி ரூபாய் என் பது தெரிய வந்தது.
தற் போது ஏ அறையின் பாது காப்பை பலப்படுத்தி அதில் இருந்து எடுக்கப்பட்ட செல்வங்களை மீண்டும் அந்த அறையிலேயே வைக் கும் பணி நடந்து வருகிறது.
suran
பி ரகசிய நிலவறையை திறக்க முயற்சிகள் நடந்தது. அங்கிருந்த 5 பெரிய இரும்பு கதவுகளில் 4 கதவுகளை மட்டுமே திறக்க முடிந்தது. 5ஆவது கதவை திறக்க முடியவில்லை. இதனால் இந்த பணி தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் பி ரகசிய நிலவறை நூறாண்டு களுக்கும் மேலாக திறக் கப்படவில்லை என்றும் அந்த அறையை திறந்தால் நாட்டுக்கு அழிவு ஏற்படும் என்றும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் அறிவித்ததால் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது. 
மேலும் அந்த பி அறையை திறக்க தடை விதிக்கக்கோரி மன்னர் குடும்பம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இதனால் மற்ற 5 அறை களில் உள்ள செல்வங் களை மதிப்பிட்ட பிறகு பி அறையை திறப்பது பற்றி தீர்மானிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட் டது. இந்த நிலையில் பத்மநாபசுவாமி கோவில் செல்வங்கள் மற்றும் சொத்துகள் குறித்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் சார்பில் முன்னாள் சொலி சிட்டர் ஜெனரலான மூத்த வழக்குரைஞர் கோபால் சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டார்.
அவர் கோவிலில் தங்கி பல மாதங்கள் ஆய்வு செய்து தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கை யில் பத்மநாபசுவாமி கோவிலில் இருந்த ஏராள மான செல்வங்களை திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் உள்பட பலர் திருடிச் சென்று உள்ளதாக குறிப்பிட்டு இருந்தார்.
இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 
suran




மேலும் மன்னர் குடும்பம் பத்மநாப சுவாமி கோவிலை நிர் வகிக்கக் கூடாது என்று அவர் பரிந்துரை செய்து இருந்ததால் திருவனந்த புரம் நீதிபதி தலைமையில் கோவிலை நிர்வகிக்க ஒரு குழுவையும் உச்சநீதிமன்றம் நியமித்தது.
மேலும் பத்மநாபசு வாமி கோவில் சொத்துகள் குறித்து சரியான மதிப்பீடு தயார் செய்ய முன்னாள் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி வினோத்ராய் தலைமையில் ஒரு குழு வையும் உச்சநீதிமன்றம் நியமித்தது.
இதைத் தொடர்ந்து வினோத்ராய் தனது ஆய்வை தொடங்கினார். தற்போது அவரது ஆய்வு அறிக்கை உச்சநீதிமன் றத்தில் தாக்கல் செய் யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் நூறாண்டு களாக திறக்கப்படவில்லை என்று கூறப்படும் பி ரகசிய நிலவறை 1990ஆம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டுக்குள் ஏழு முறை திறக்கப்பட் டுள்ளது.
ஏற்கனவே முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் திருவிதாங்க்கூர்  மன்னர் குடும்ப வாரிசுகள் பாயாச வாளிகளில் தங்கத்தை கடத்தியதாகக் கூறி குற்றம் சாட்டினார்.அப்போது அவர்கள் மறுத்து காட்டமான அறிக்கைகள் வெளியிட்டனர். ஆனால் இப்போது 7 முறை அறையும் கதவுகள் திறந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்து விட்டது. கதவை திறந்தாலே நாசம் உண்டாகும் என்றவர்கள் 7 முறை திறந்து மூடியது எதற்காக?
மேலும் அங்கு இருந்த ஏராளமான செல்வங்களும் திருடப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. இத னால் இந்த செல்வங்கள்கொள்ளை  விவகாரம் மீண்டும் பிரச்சினையாகி உள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------

suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?