செப்டம்பர்20 ம்,22ம்

 பெங்களூரில் 18 ஆண்டுகளாக நடந்து வந்த முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை, நீண்ட இழுபறிக்குப் பின் 118 வாய்தாக்களுக்குப்பின் நேற்று இறுதி வாதம் முடிந்தது. 
 செப்டம்பர் 20ம் தேதி தீர்ப்பு அளிப்பதாக பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி ஜான்மைக்கல் டிகுணா அறிவித்துள்ளார்

அன்றைய தினம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஜெயலலிதா கடந்த 1991 முதல் 1996 வரை தமிழக முதல்வராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூ.66.64 கோடி சொத்து சேர்த்ததாக ஜனதா கட்சி தலைவராக இருந்த சுப்ரமணியசுவாமி சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார். 
அதையேற்று விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. 

தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் விசாரணை நடத்திய பின், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். சென்னையில் 1996 முதல் 2003 வரை விசாரணை நடந்தது. பின்னர், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் 2004ம் ஆண்டு பெங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டது. அங்கு தனி நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. கடந்த 18 ஆண்டுகளாக சென்னை மற்றும் பெங்களூரில் நடந்த இந்த வழக்கு விசாரணை நேற்றுடன் நிறைவு பெற்றது. இதற்கு முன்பாக, 42 நாட்களுக்கு மேலாக குற்றவாளிகள் தரப்பில் இறுதிவாதம் செயயப்பட்டு வந்தது.

பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘அரசு தரப்பும், குற்றவாளிகள் தரப்பும் தங்களுடைய இறுதிவாதத்தை வியாழனன்று  கண்டிப்பாக முன்வைக்க வேண்டும்’ என்று நீதிபதி ஜான்மைக்கல் டிகுணா கெடு விதித்தார். 
அதன்படி, நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றவாளிகள் நேரில் ஆஜராகாமல் இருக்க விலக்களிக்கக் கோரி வக்கீல் சி.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஏற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து காலை 11 மணி முதல் 12.15 மணி வரை குற்றவாளிகள் தரப்பில் வக்கீல் பி.குமார் இறுதிவாதம் செய்தார். 

அப்போது, ‘‘இந்த வழக்கு முழுக்க முழுக்க அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கத்தில் தொடரப்பட்டது என்பதை ஏற்கனவே ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளோம். குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளவர்களின் தனிப்பட்ட சொத்து, அவர்கள் சார்ந்த கம்பெனிகள் மூலம் கிடைத்த வருவாய் அனைத்தும் வருமானத்திற்கு அதிகமான சொத்து பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், வங்கி கணக்குகளில் பண பரிமாற்றம் செய்ததிலும் தவறான கணக்கு காட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கு பழிவாங்கும் நோக்கத்தில் தொடரப்பட்டுள்ளதால், குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்’’ என்று வக்கீல் குமார் வாதிட்டார்.அதைத் தொடர்ந்து அரசு வக்கீல் முருகேஷ் எஸ்.மரடி வாதம் செய்தபோது கூறியதாவது:

”வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா, 1991 முதல் 1996 வரை தமிழக முதல்வராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்த்துள்ளதாக அரசியல் கட்சி தலைவர் ஒருவர் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புகார் மூலம் வழக்கு விசாரணைக்கு வந்தது. 
தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் நடத்திய விசாரணையில் குற்றவாளிகள் மீதான புகாரில் உண்மை இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து,குற்றவாளிகளுக்கு சொந்தமான அசையும், அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆட்சிகாலத்தில் ஜெயலலிதா மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பலமாக வாங்கினார்.ஆனால்4000 கோடிகள் சொத்துகள் சேர்க்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சொத்து சேர்த்துள்ளதற்கான ஆதாரங்கள் உரிய சாட்சி, ஆதாரங்களுடன் குற்றபத்திரிகையாக தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. எதிரிகள் சொல்வதை போல், இந்த வழக்கு அரசியல் ரீதியாக பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடரப்பட்டதல்ல. நேர்மையாக விசாரணை நடத்தி, குற்றவாளிகள் தவறு செய்துள்ளதை உரிய ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளோம்.

உதாரணமாக, சொத்து குவிப்பு வழக்கில் நமது எம்.ஜி.ஆர். பத்திரிகைக்கு சந்தா மூலம் ஸி14 கோடி கிடைத்ததாக குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், சந்தா பெற்றதற்காக ஆவணங்கள் அனைத்தும் ஓரிஜினலாக இல்லாமல் நகலாக இருந்தது. இது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியபோது, ஓரிஜினல் ஆவணங்கள் காரில் எடுத்து சென்றபோது திருடு போய்விட்டதாக தெரிவித்தனர். ஆனால், நீதிமன்றத்தில் குற்றவாளிகள் தரப்பு சாட்சியத்தின் போது ஓரிஜினல் சந்தா படிவங்கள் காட்டப்பட்டது. காணமால் போன சந்தா படிவம் எப்படி கிடைத்தது? உண்மையில் நமது எம்.ஜி.ஆர். பத்திரிகைக்கு ரூ.14 கோடி சந்தா மூலம் வருவாய் கிடைக்கவில்லை. 

ஜெயலலிதாவின் ஆட்சி, அதிகாரத்தை பயன்படுத்தி சம்பாதித்த பணத்தை சந்தா என்ற பெயரில் முதலீடு செய்துள்ளனர். அதேபோல், சூப்பர்-டூப்பர் டி.வி. நிறுவனத்திற்கு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மூலம் 6 கோடி சந்தா மூலம் பெற்றதாக கூறியுள்ளனர். ஆனால், கேபிள் டி.வி.நெட்வொர்க் கட்டுப்பாடு சட்டம் 1995ன்படி, கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள் மூலம் முதலீடாக பெறப்படும் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. 

இந்த பணமும் வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்த்துள்ளதில் முதலீடு செய்யப்பட்டவைதான்.மேலும், வழக்கில் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சசிகலாவின் பொருளாதார பின்னணியை பார்க்கும்போது, அவரது தந்தை வழியில் பூர்வீக சொத்து 5 ஏக்கர் நிலம் இருந்தது. அவரது கண்வர் அரசு துறையில் பணியாற்றியுள்ளார். 3 மற்றும் 4வது குற்றவாளிகளின் பொருளாதாரமும் பெரியளவில் இல்லை. வருவாய் துறை அதிகாரி கொடுத்துள்ள வருமான சான்றிதழில் சுதாகரனின் ஆண்டு வருமானம் ஸி40 ஆயிரம் என்றும், இளவரசியின் ஆண்டு வருமானம் ஸி48 ஆயிரம் எனறும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவ்வளவு குறைவாக பொருளாதார நிலையில் உள்ளவர்கள் எப்படி பல கம்பெனிகளில் இயக்குனராகவும், பங்குதாரராகவும் இருந்து கோடிக்கணக்கில் எப்படி முதலீடு செய்ய முடியும்?மேலும், அவர்கள் பங்குதாரர்களாக உள்ள கம்பெனிகள் வழக்கு காலத்திற்கு முன் தொடங்கப்பட்டிருந்தாலும், வழக்கு காலத்தில்தான் வங்கி கணக்கு தொடங்கி பணபரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இதை பார்க்கும்போது ஜெயலலிதாவின் ஏஜென்டுகளாக மற்ற மூன்று பேரும் செயல்பட்டுள்ளனர் என்பது உறுதியாகிறது. ஆகவே, ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அதிகம் சொத்து சேர்த்துள்ளது உண்மை என்பதால், குற்றவாளிக்கு ஊழல் தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் உரிய தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்ட வேண்டும். 
இவ்வாறு மரடி வாதிட்டார்.தீர்ப்பு செப்டம்பர் 20ம் தேதி: அதைத் தொடர்ந்து அரசு தரப்பில் 15 புத்தகங்கள் அடங்கிய ஆவணங்களை எழுத்து மூலமாக நீதிபதியிடம் அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் கொடுத்தார்.பின்னர், ஜெயலலிதா தரப்பில் வக்கீல் பரணிகுமார், சசிகலா தரப்பில் வக்கீல் மணிசங்கர், சுதாகரன் தரப்பில் வக்கீல் ஜெயராமன், இளவரசி தரப்பில் வக்கீல் அசோகன் ஆகியோர் எழுத்து மூலமான ஆவணங்களை தாக்கல் செய்தனர்.அதைத் தொடர்ந்து தி.மு.க சார்பில் வக்கீல்கள் இராம.தாமரைசெல்வன், சரவணன், நடேசன் ஆகியோர் எழுத்துபூர்வமான ஆவணங்களை தாக்கல் செய்தனர். 

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘‘இவ்வழக்கு தொடர்பாக அரசு மற்றும் குற்றவாளிகள் தரப்பு வாதம் முழுமையாக முடிக்கப்பட்டது. மேலும், எழுத்து மூலமாக கொடுத்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டடுள்ளது. விசாரணை முடிந்துள்ள நிலையில், கர்நாடக குற்றப்பிரிவு சட்ட விதியின்படி விசாரணை முடிந்த 14 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும். இவ்வழக்கில் சாட்சிகள், எழுத்து பூர்வமான ஆதாரங்கள் அதிகம் உள்ளதால், கூடுதலாக ஒருவாரம் அவகாசம் எடுத்து கொண்டு செப்டம்பர் 20ம் தேதி தீர்ப்பு வழங்குகிறேன். 

தீர்ப்பு வழங்கும் நாளில் குற்றவாளிகள் நான்கு பேரும் கட்டாயம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். அவர்களுக்கான போலீஸ் பாதுகாப்பு வழங்க மாநகர போலீசாருக்கு உத்தரவிடப்படும்’’ என்று கூறினார்.இதன் மூலம் கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
நீதிபதி குன்கா 20ல் தீர்ப்பு என்றவுடன் மத்திய சட்ட அமைச்சர் சென்னை வந்து மரியாதைக்காக[?] முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தனியாக பேசியுள்ளார்.

தீர்ப்பை இந்த சந்திப்பு பாதிக்க வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்படுகிறது.ஆனால் நீதிபதி மைக்கேல் டி குன்கா மீது நடுனிலை தவறாதவர் என்ற நம்பிக்கை இருப்பதாக திமுக தரப்பில் கூறப்படுகிறது.
என்ன இருந்தாலும் செப்டம்பர் 20 அன்று பேருந்து,ரெயில் பயணங்களை ஒத்தி வைப்பது நல்லது என்று தெரிகிறது.தர்மபுரி பேருந்தும் மூன்று மாணவிகள் தீ வைத்து எரித்து துடி துடிக்க கொலை செய்யப்பட்டதும் தான் இப்போது நினைவுக்கு வருகிறது.அந்த தீவெட்டிக் கொலை கார பிறவிகள் இன்னமும் கரை வேட்டியுடன் அலைகின்றனர்.அவர்கள்  கட்சி குண்டர்களுக்கு முன்னுதாரணமாக மாறியிருக்க கூடாதே.
======================================================================
இடைத்தேர்தல் நிற்காதது ஏன்?

                                                         -கருணாநிதி விளக்கம்.
கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி மேயர் பதவி உட்பட, ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் செப்டம்பர் 18ஆம் தேதி அன்று நடைபெறும் என்றும், அதற்கான மனு தாக்கல், தேர்தல் அறிவிக்கப்பட்ட
28ஆம் தேதியன்றே தொடங்கும் என்றும் மனு தாக்கல் செய்ய இறுதி நாள் 4-9-2014 என்றும் மாநிலத் தேர்தல் ஆணையம் நேற்றையதினம் திடீரென அறிவித்து இன்று தேர்தல் பற்றிய அந்தச் செய்தி நாளேடுகளில் வெளிவந்துள்ளது.

தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்ய 28ஆம் தேதி முதல் துவக்கம் என்று 29ஆம் தேதிய நாளேடுகளில் வெளிவருகின்ற இந்த ஒன்றே இந்த ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல்கள் எவ்வாறு நடைபெறும் என்பதற்குத் தக்க உதாரணமாகும். அது மாத்திரமல்ல; எதிர்க்கட்சிகள் சார்பில் இந்தத் தேர்தலில் போட்டியிடும்வேட்பாளர்களை எப்போது அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள், எப்போது அறிவிப்பார்கள்
என்பதற்கே நேரம் கொடுக்காமல், இவ்வாறு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மனு தாக்கல் செய்ய இறுதி நாள் 4-9-2014 என்கிற போது, மற்ற எதிர்க்கட்சிகள் அங்கே போட்டியிட வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க நேரம் இருக்கிறதா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். ஏன் என்றால்,இடையில்29, 30, 31 ஆகிய நாட்கள் விடுமுறை நாட்கள். 
உள்ளாட்சி மன்றங்களில் காலியாக உள்ள இந்தப் பதவிகளுக்கான இடைத் தேர்தல் ஏற்கனவே ஒரு முறை அதாவது கடந்த 6-8-2014 அன்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது சட்ட மன்றக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், முதல் அமைச்சரால் விதி 110ன் கீழ் அன்றாடம் ஓரிரு அறிவிப்புகளை வெளியிட்டு, பத்திரிகைகளில் அவர் பெயரில் அறிக்கை வெளிவர முடியாது என்ற காரணத்தால், உள்ளாட்சி இடைத் தேர்தல்களுக்கான தேதி நிர்ணயிக்கப்பட்டு, ஏடுகளிலும் அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென்று அந்த அறிவிப்பினைத் திரும்பப் பெற்ற விநோதமும் அ.தி.மு.க. ஆட்சியிலே நடைபெற்றது.

சட்டப் பேரவைக் கூட்டம் முடிந்த பிறகுகூட, கடந்த ஒரு வார காலமாக அன்றாடம் முதல் அமைச்சர் உள்ளாட்சிகளுக்கு பல கோடி ரூபாயில் பல திட்டங்களை நிறைவேற்றப் போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். உதாரணமாக, தற்போது தேர்தல் நடைபெறவுள்ள கோவை மாநகராட்சிக்கு 2,377 கோடி ரூபாய்க் கான திட்டங்களும், தூத்துக்குடி, நெல்லை மாநகராட்சிகளுக்கு 800 கோடிரூபாயில் பாதாள சாக்கடைத் திட்டங்களும் நிறைவேற்றப்படுமென்று முதல் அமைச்சர் அறிவித்துள்ளார். இதே மாதத்தில் பேரவையில் பல்வேறு மானியக் கோரிக்கைகளும் விவாதித்து நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த உள்ளாட்சித் துறைக்கான மானியங்கள் நிறைவேற்றப்பட்ட போது, அந்தத் துறையின் அமைச்சரோ, அல்லது முதல் அமைச்சரோ இந்த அறிவிப்புகளை ஏன் செய்ய வில்லை? மாறாக தற்போது அவசர அவசரமாக இத்தனை கோடி ரூபாய்க்கு தேர்தல் நடைபெறவிருக்கின்ற மாநகராட்சிகளுக்கு திட்டங்களை முதல் அமைச்சர் அறிவிப்பது முறை தானா? இது தேர்தல் விதிகளுக்கு உட்பட்டது தானா என்பதை மாநிலத் தேர்தல் ஆணையம் தான் விளக்க வேண்டும்.

அது மாத்திரமல்ல; இந்த மாதம் 6ஆம் தேதியன்று தான் இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்து, அந்த அறிவிப்பு ஏடுகளிலும் வெளிவந்து, பின்னர் அதே நாள் மாலையில் அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பில், செப்டம்பர் 18ஆம் தேதியன்று தான் இந்த இடைத் தேர்தல்கள் நடைபெறும் என்று தான் சொல்லப்பட்டது. அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு, தற்போது மீண்டும் இடைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றால்,அதே செப்டம்பர் 18ஆம் தேதி அன்று தான் இடைத் தேர்தல்கள் நடைபெறும் என்று, எதிர்க்கட்சிகளுக்கு எந்தவிதமான முன்னறிவிப்பும் கொடுக்காமல் மாநிலத் தேர்தல்ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த உள்ளாட்சித் தேர்தலில் மற்றும் ஒரு கூத்தைக் கூற வேண்டுமென்றால், அ.தி.மு.க. அமைச்சர் மற்றும் நகராட்சி ஆணையரோடு ஏற்பட்ட பிச்சினைகளைத் தொடர்ந்து, நேற்று முன் தினம் கடலூர் நகராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அந்தக் கடலூர் நகராட்சிக்கு
இடைத்தேர்தல் என்று அவர் ராஜினாமா செய்த மறுநாளே அறிவிக்கப்படுகிறது என்றால், இதைவிட வேறொரு கோமாளிக் கூத்து நடைபெற முடியுமா? தமிழக உள்ளாட்சி தேர்தல் வரலாற்றில் இது போல, பதவி காலியான மறு நாளில்
இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதே இல்லை என்று "தினமலர்"நாளேடே குறிப்பிட்டுள்ளது. மேலும் அதே நாளேட்டில்,"மேயர் பதவிக்கான வேட்பாளர் தேர்வை அ.தி.மு.க. முடிவு செய்து விட்டது. 
கோவை மேயர் பதவிக்கு கணபதி ராஜ்குமார், தூத்துக்குடி மேயர் பதவிக்கு அந்தோணி கிரேஸி, திருநெல்வேலி மேயர் பதவிக்கு மேகலா கென்னடி ஆகியோர் பெயர் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
அவர்களே தலைமையால் அறிவிக்கப்பட்தும் உள்ளனர்.
அதே போல், நகராட்சித் தலைவர் பதவிக்கு, அமைச்சர்கள் பரிந்துரை செய்தவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி தினமான இன்று, வேட்பாளர் பட்டியலை, முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார் என கட்சி வட்டாரங்களில் எதிர் பார்க்கப்படுகிறது"" என்று இன்று செய்தி வெளி வந்துள்ளது.

எனவே அ.தி.மு.க. வேட்பாளர்களை யெல்லாம் தயார் செய்து வைத்துக் கொண்ட பிறகு மற்ற எதிர்க் கட்சிகளுக்கெல்லாம் நேரம் கொடுக்காமல் தேர்தல் தேதி மாநிலத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருப்பதில் இருந்தே, இந்த அரசின் விருப்பத்திற்கு ஏற்பத் தான் மாநிலத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறதே தவிர, நடுநிலை தவறி நடந்து கொள்கிறது என்பது ஊர்ஜிதமாகி விட்டது.

இன்னும் சொல்லப் போனால், 2011ஆம் அக்டோபர் மாதத்தில் உள்ளாட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடைபெற்ற போது, தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க. எப்படியெல்லாம் நடந்து கொண்டது என்பதை பல உதாரணங்களின் மூலமாக அப்போதே நான் எடுத்துக் காட்டியிருக்கிறேன். 
இந்த நிலையில் ஆளுங் கட்சியின் அராஜகங்கள், பல கோடி ரூபாய்க்கு பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிற விதிமுறை மீறல்கள், தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை குறிப்பிட்ட சில இடங்களுக்கு மாறுதல், வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு போதிய நேரம் எதிர்க் கட்சிகளுக்கு வழங்காமல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள கொடுமை ஆகியவற்றைக் கண்டிக்கின்ற வகையில், நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்ற இடைத் தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகம் கலந்து கொள்வதில்லை என்றும், புறக்கணிப்பது என்றும் முடிவு செய்து அறிவிக்கின்றது.

Photo: உள்ளாட்சி மன்ற இடைத் தேர்தல்களைப் புறக்கணிக்க 
தி.மு. கழகம் முடிவு. 

 கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி மேயர் பதவி உட்பட, ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் செப்டம்பர் 18ஆம் தேதி அன்று நடைபெறும் என்றும், அதற்கான மனு தாக்கல், தேர்தல் அறிவிக்கப்பட்ட 
28ஆம் தேதியன்றே தொடங்கும் என்றும் மனு தாக்கல் செய்ய இறுதி நாள் 4-9-2014 என்றும் மாநிலத் தேர்தல் ஆணையம் நேற்றையதினம் திடீரென அறிவித்து இன்று தேர்தல் பற்றிய அந்தச் செய்தி நாளேடுகளில் வெளிவந்துள்ளது  

 தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்ய 28ஆம் தேதி முதல்      துவக்கம் என்று 29ஆம் தேதிய நாளேடுகளில் வெளிவருகின்ற இந்த ஒன்றே இந்த ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல்கள் எவ்வாறு நடைபெறும் என்பதற்குத் தக்க உதாரணமாகும். அது மாத்திரமல்ல; எதிர்க்கட்சிகள் சார்பில் இந்தத் தேர்தலில் போட்டியிடும்வேட்பாளர்களை எப்போது அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள், எப்போது அறிவிப்பார்கள் 
என்பதற்கே நேரம் கொடுக்காமல், இவ்வாறு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மனு தாக்கல் செய்ய இறுதி நாள் 4-9-2014 என்கிற போது, மற்ற எதிர்க்கட்சிகள் அங்கே போட்டியிட வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க நேரம் இருக்கிறதா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். ஏன் என்றால்,இடையில்29, 30, 31 ஆகிய நாட்கள் விடுமுறை நாட்கள். 

 உள்ளாட்சி மன்றங்களில் காலியாக உள்ள இந்தப் பதவிகளுக்கான இடைத் தேர்தல் ஏற்கனவே ஒரு முறை அதாவது கடந்த 6-8-2014 அன்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது சட்ட மன்றக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், முதல் அமைச்சரால் விதி 110ன் கீழ் அன்றாடம் ஓரிரு அறிவிப்புகளை வெளியிட்டு, பத்திரிகைகளில் அவர் பெயரில் அறிக்கை வெளிவர முடியாது என்ற காரணத்தால், உள்ளாட்சி இடைத் தேர்தல்களுக்கான தேதி நிர்ணயிக்கப்பட்டு, ஏடுகளிலும் அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென்று அந்த அறிவிப்பினைத் திரும்பப் பெற்ற விநோதமும் அ.தி.மு.க. ஆட்சியிலே நடைபெற்றது. 

 சட்டப் பேரவைக் கூட்டம் முடிந்த பிறகுகூட, கடந்த ஒரு வார காலமாக அன்றாடம் முதல் அமைச்சர் உள்ளாட்சிகளுக்கு பல கோடி ரூபாயில் பல திட்டங்களை நிறைவேற்றப் போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். உதாரணமாக, தற்போது தேர்தல் நடைபெறவுள்ள கோவை மாநகராட்சிக்கு 2,377 கோடி ரூபாய்க் கான திட்டங்களும்,  தூத்துக்குடி, நெல்லை மாநகராட்சிகளுக்கு 800 கோடிரூபாயில் பாதாள சாக்கடைத் திட்டங்களும் நிறைவேற்றப்படுமென்று முதல் அமைச்சர் அறிவித்துள்ளார். இதே மாதத்தில் பேரவையில் பல்வேறு மானியக் கோரிக்கைகளும் விவாதித்து நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த உள்ளாட்சித் துறைக்கான மானியங்கள் நிறைவேற்றப்பட்ட போது, அந்தத் துறையின் அமைச்சரோ, அல்லது முதல் அமைச்சரோ இந்த அறிவிப்புகளை ஏன் செய்ய வில்லை? மாறாக தற்போது அவசர அவசரமாக இத்தனை கோடி ரூபாய்க்கு தேர்தல் நடைபெறவிருக்கின்ற மாநகராட்சிகளுக்கு திட்டங்களை முதல் அமைச்சர் அறிவிப்பது முறை தானா? இது தேர்தல் விதிகளுக்கு உட்பட்டது தானா என்பதை மாநிலத் தேர்தல் ஆணையம் தான் விளக்க வேண்டும். 

 அது மாத்திரமல்ல; இந்த மாதம் 6ஆம் தேதியன்று தான் இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்து, அந்த அறிவிப்பு ஏடுகளிலும் வெளிவந்து, பின்னர் அதே நாள் மாலையில் அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பில், செப்டம்பர் 18ஆம் தேதியன்று தான் இந்த இடைத் தேர்தல்கள் நடைபெறும் என்று தான் சொல்லப்பட்டது. அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு, தற்போது மீண்டும் இடைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றால்,அதே செப்டம்பர் 18ஆம் தேதி அன்று தான் இடைத் தேர்தல்கள் நடைபெறும் என்று, எதிர்க்கட்சிகளுக்கு எந்தவிதமான முன்னறிவிப்பும் கொடுக்காமல் மாநிலத் தேர்தல்ஆணையம் அறிவித்துள்ளது. 

 இந்த உள்ளாட்சித் தேர்தலில் மற்றும் ஒரு கூத்தைக் கூற வேண்டுமென்றால், அ.தி.மு.க. அமைச்சர் மற்றும் நகராட்சி ஆணையரோடு ஏற்பட்ட பிச்சினைகளைத் தொடர்ந்து, நேற்று முன் தினம்  கடலூர் நகராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அந்தக் கடலூர் நகராட்சிக்கு 
 இடைத்தேர்தல் என்று அவர் ராஜினாமா செய்த மறுநாளே அறிவிக்கப்படுகிறது என்றால், இதைவிட வேறொரு கோமாளிக் கூத்து நடைபெற முடியுமா? தமிழக உள்ளாட்சி தேர்தல் வரலாற்றில் இது போல, பதவி காலியான மறு நாளில்
 இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதே இல்லை என்று "தினமலர்"நாளேடே குறிப்பிட்டுள்ளது. மேலும் அதே நாளேட்டில்,"மேயர் பதவிக்கான வேட்பாளர் தேர்வை அ.தி.மு.க. முடிவு செய்து விட்டது. கோவை மேயர் பதவிக்கு கணபதி ராஜ்குமார்,  தூத்துக்குடி  மேயர் பதவிக்கு அந்தோணி கிரேஸி, திருநெல்வேலி மேயர் பதவிக்கு மேகலா கென்னடி ஆகியோர் பெயர் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே போல், நகராட்சித் தலைவர் பதவிக்கு, அமைச்சர்கள் பரிந்துரை செய்தவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி தினமான இன்று, வேட்பாளர் பட்டியலை, முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார் என கட்சி வட்டாரங்களில் எதிர் பார்க்கப்படுகிறது"" என்று இன்று செய்தி வெளி வந்துள்ளது. 

 எனவே அ.தி.மு.க. வேட்பாளர்களை யெல்லாம் தயார் செய்து வைத்துக் கொண்ட பிறகு மற்ற எதிர்க் கட்சிகளுக்கெல்லாம் நேரம் கொடுக்காமல் தேர்தல் தேதி மாநிலத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருப்பதில் இருந்தே, இந்த அரசின் விருப்பத்திற்கு ஏற்பத் தான் மாநிலத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறதே தவிர, நடுநிலை தவறி நடந்து கொள்கிறது என்பது ஊர்ஜிதமாகி விட்டது.

 இன்னும் சொல்லப் போனால், 2011ஆம் அக்டோபர் மாதத்தில் உள்ளாட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடைபெற்ற போது, தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க. எப்படியெல்லாம் நடந்து கொண்டது என்பதை பல உதாரணங்களின் மூலமாக அப்போதே நான் எடுத்துக் காட்டியிருக்கிறேன். இந்த நிலையில் ஆளுங் கட்சியின் அராஜகங்கள், பல கோடி ரூபாய்க்கு பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிற விதிமுறை மீறல்கள், தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை குறிப்பிட்ட சில இடங்களுக்கு மாறுதல், வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு போதிய நேரம் எதிர்க் கட்சிகளுக்கு வழங்காமல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள கொடுமை ஆகியவற்றைக் கண்டிக்கின்ற வகையில், நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்ற இடைத் தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகம் கலந்து கொள்வதில்லை என்றும், புறக்கணிப்பது என்றும் முடிவு செய்து அறிவிக்கின்றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?