மோடியின் முகமூடி

பீகாரில் நடந்த இடைத்தேர்தலில் லாலு பிரசாரத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை கொண்ட கூட்டணி  பத்து தொகுதிகளில் 6 இடங்களை கைப்பற்றியுள்ளது. பா. ஜனதா 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
பீகார் சட்டப்பேரவையில் காலியாக உள்ள 10 இடங்களுக்கு, கடந்த 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக ஆளும் ஐக்கிய ஜனதாதளம், லாலு பிரசாரத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் இணைந்து மகா கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

அடுத்ததாக நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலுக்கு, இது அரையிறுதி தேர்தலாக கருதப்பட்டது. இந்நிலையில் மேற்கூறிய இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,  ராஷ்ட்ரீய ஜனதாதளம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி  6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜனதா கட்சி 4 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.
சுரன்26082014
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடியை முன்னிறுத்தி பா.ஜனதா மேற்கொண்ட பிரசாரமே, அக்கட்சிக்கு வெற்றியை தேடித்தந்ததாக கூறப்பட்ட நிலையில், பீகாரில் பா.ஜனதாவின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தும் நோக்கில் கருத்துவேறுபாடுகளை மறந்து சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் எதிரிகளாக வலம் வந்த லாலு பிரசாத் யாதவும், நிதிஷ் குமாரும் கூட்டணி அமைக்க முடிவு செய்தனர். மேலும் அவர்கள் தங்கள் கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் கட்சியையும் சேர்த்துக்கொண்ட நிலையில், எதிர்பார்த்த வெற்றியை லாலு - நிதிஷ் கூட்டணி கைப்பற்றியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, மத்தியில் பா.ஜனதா ஆட்சியமைத்து மூன்று மாதங்கள் மட்டுமே ஆகி உள்ள நிலையில், குறுகிய கால இடைவெளிக்குள் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி, அக்கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதப்படுகிறது. இதனால் பா.ஜனதா வட்டாரங்கள் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், மோடி அலை முடிவுக்கு வருகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதனிடையே பீகாரை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும்,பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 
தேர்தல் நடைபெற்ற 3 தொகுதிகளில் 2 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பா.ஜனதா ஒரு தொகுதியில் மட்டுமே, அதுவும் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
100 நாள் கடப்பதற்குள்ளாகவே மோடியின் முகமூடி கிழிய ஆரம்பித்து விட்டது.நரசிம்ம ராவ்,மன்மோகன் சிங் வரிசையில் வாயை திறக்காத பிரதமராக மோடி இருக்க ஆரம்பித்துள்ளார்,
இப்போதுதான் மோடி மந்திரம் ஊடகங்களின் சிங்கி சப்தத்தையும் மீறி மக்களிடம் வேலை செய்யும் சக்தியை இழக்க ஆரம்பித்துள்ளது.இன்னும் 100 நாட்களில் மோடியின் திறமையான நிர்வாகி முகமூடி கிழிந்தே தொங்கி விடும்.
சுரன்26082014
அன்னியமயமாக்கள்,பொதுத் துறைகளை தனியாரிடம் விற்பது போன்றவைகளில் காங்கிரசை மிஞ்சி விட்டார்கள் பாஜக அமெரிக்க அடிவருடிகள்.ரெயில்வே முற்றிலும் தனியார் மயம்,இரண்டாம் வகுப்பே ஒழிப்பு,பாதுகாப்புத்துறையில் அன்னியமுதலீடு,காப்பீடு துறையில் 50 சதவிகிதம் தனியார்-அன்னியர் நாட்டின் செல்வங்கள் அனைத்தையும் தாரை வார்க்கும் பாஜக ஆட்சியில் அதன் ஐந்தாண்டு முடிவுக்குள் இந்தியா காணாமல் போய்விடும்.அனைத்தையும் தனியார்,அன்னிய மயமாக்கி விட்டு இவர்கள் பிரதமராகவும்,அமைச்சர்களாகவும் இருந்து என்ன புடுங்கப்பொகிறார்கள்.இவர்களுக்கு அங்கு என்னதான் வேலை இருக்கிறது.பேசாமல் இந்தியாவை ஆளும் பொறுப்பையும் தனியாரிடம்,அல்லது அன்னியர்களிடம் ஒரு தொகைக்கு ஏலம் விட்டு விடலாமே?
1947க்கு முந்தைய இந்தியாவாக நாம் இப்போது மாறிக்கொண்டிருக்கிறோம்.
மக்கள் மோடியின் வாய்ச்சொல் வீரத்தையும்,பதவி கிடைத்தப்பின் அவரின் கையாலாக்த்தனத்தையும்
கண்டுகொண்டார்கள்.இனி வரும் தேர்தல்கள் அதை உணர்த்தும் 
சுரன்26082014
.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?