கொய்யா இலை தேநீர்.



கொய்யாப்பழம் நமது நாட்டின் பாரம்பரிய கனி வகைகளில் குறிப்பிடத்தக்கது. 
 நமது நாட்டின் உணவு பழக்க வழக்கங்கள் என்பது ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற  அடிப்படையில் ஆனதுதான். 
அதை விட்டு விலகி நாம் மேல்நாட்டு உணவு வகைகளின் மீதும், ஆயத்த உணவுகளின் மீதும் கொண்ட நாட்டம்தான்  இன்று உலகளவில் சர்க்கரை நோயாளிகளை அதிகளவில் கொண்ட தேசமாக நாம் விளங்குகிறோம்.

அந்த வகையில் கனி வகைகளில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் கொய்யாப்பழம், பழம் மட்டும் இன்றி அதன் இலைகளும் மருத்துவ குணம்  வாய்ந்தவையே.
 இந்த மரத்தின் இளம் இலைகள் வெப்பமண்டல நாடுகளில் பராம்பரிய மருத்துவத்திற்கு பயன்படுத்தபடுகிறது. 
இந்த இலையின்  மருத்துவ பலன்களான ஆக்ஸிஜனேற்ற எதிர்பொருட்களான வைட்டமின் சி, மற்றும் க்யூயர்சிடின், ஃபிளாவனாய்டுகள் ஆகியவற்றை கொண்டுள்ளது.  
கொய்யா இலைகளை நன்கு கழுகி சுடுதண்ணீரில் கொதிக்கவிட்டு தேநீர் போன்று அருந்தினால் கொழுப்பைக் குறைக்கும், நீரிழிவை தடுக்கும், மேலும்  வயிற்றுப்போக்கினால் அவதிபடுபவர்களுக்கு சிறந்த சிகிச்சையளிக்கும்.
பாக்டீரியா காரணமாக வயிற்றுபோக்கு ஏற்பட்டால் கொய்யா இலையில் தேநீர் செய்து சாப்பிடவேண்டும். 
இந்த தேநீர் பருகினால் எந்த காரணத்தினால்  வயிற்றுபோக்கு ஏற்பட்டிருந்தாலும் குணப்படுத்திவிடும். 
கொய்யா இலையில் செய்யப்பட்ட தேநீரை பருகுவதால் குறைவான வயிற்றுவலி, குறைவான  தண்ணீரால் வெளியேற்றப்படும் மலம், அதிலிருந்து எளிதில் தீர்வு காண முடியும். 
கொய்யா இலை வயிற்று போக்கிற்கு சிறந்த தீர்வாக இருக்கும்  என்று ரிவிஸ்டா இண்ஸ்ட்டியூட்டோ நிறுவனம் 2008 ஆய்வு செய்தனர். 
அதில் கொய்யா இலைச்சாறில் வயிற்றுப்போக்குக்கு பொதுவான காரணமாக  இருக்கக்கூடிய ஏரொஸ் பாக்டீரியா வளர்ச்சி தடுக்கப்படுவதாக கண்டறியப்பட்டது.

அதேபோல், இளம் கொய்யா இலையில் தயாரிக்கப்படும் தேநீரை பருகுவதால் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடின் அளவுகளில் பல மாற்றங்களை  ஏற்படுத்துகிறது. 
ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்ற நிறுவனம் 2010ல் மேற்கொண்ட ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு கொய்யா இலையில்  தயாரிக்கப்பட்ட தேநீரை பருக கொடுத்தனர். 
இதில் அதை பருகியவர்களுக்கு குறைந்த மொத்த கொழுப்பு, குறைந்த அடர்த்தியுள்ள கொழுப்புப்புரத  நிலைகள் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் இருந்தது தெரியவந்தது. 
அடுத்த எட்டு வாரங்களுக்கு பிறகு கொழுப்பு அளவுகளில் பல மாற்றங்கள்  ஏற்பட்டிருந்தது எனவும் தெரிவித்துள்ளது.

கொய்யா இலையின் குடும்பம் ஆரோக்கியம் தரும் உணவுகளில் ஒன்றாக உள்ளது. நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் நீரிழிவை தடுக்க கொய்யா  இலையை மருந்தாக பயன்படுத்தலாம். 
இரண்டாவது வகை நீரிழிவு நோயாளிகள் 12 வாரங்கள் தொடர்ந்து இந்த தேநீரை பருகினால் சர்க்கரையின்  அளவில் மாறுதல்கள் ஏற்படும். கொய்யா இலையை இளம் தளிர் இலைகளாக பார்த்து ஒரு கப் இலை எடுத்துக்கொள்ளுங்கள். 
இலைகளை நன்கு  கழுகி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம்.
                                                                               நன்றி:தினகரன்.
One 
===============================================================================================================================
அமெரிக்க சி.ஐ.ஏ.படுகொலை செய்த
புரட்சித்தலைவர் சே குவரா
படுகொலை படங்கள் வெளியானது.
அமெரிக்காவின் மியாமி மாநிலத்தில் வசிக்கும் பிலிக்ஸ் ரொட்ரிகேஸ் முன்னை நாள் சி.ஐ.ஏ உளவாளி. இவன் கியூபாவில் பிறந்தவரானாலும் சி.ஐ.ஏ க்கு உளவு பார்ப்பவராக தனது 20 வது வயதிலேயே இணைந்துகொண்டவர். 
பொலீவியாவில் மக்கள் மத்தியில் புரட்சிக்கான தயாரிப்புக்களை மேற்கொண்டிருந்த சே குவேராவைப் பிடித்துக் கொலை செய்வதற்காக சி.ஐ.ஏ வினால் அனுப்பப்பட்ட முகவர்களில் இவர் முக்கியமானவர். ஆர்ஜன்டீனாவின் இராணுவ அரசிற்கு ஆலோசகரகக்கூட ரொட்ரிகேஸ் வேலை பார்த்திருக்கிறார்.
2007 ஆம் ஆண்டு பிபிசி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் தனது நடவடிக்கைகளை பெருமையுடன் பகிர்ந்துகொள்கிறார்.
இன்று சே குவேரா கொலை செய்யப்பட்ட பின்னர் புகைப்படம் பிடிக்கப்பட்ட உடல் வெளியாகியுள்ளது. இன்னும் உயிர்வாழும் ரொட்ரிகேஸ் போன்ற சே இன் கொலையாளிகள் அவற்றை ஊடகங்களில் பார்த்துக்கொண்ட்ருப்பார்கள்.
சே கொல்லப்படுவதற்கு சற்று முன்னபதாக பிலீக்ஸ் ரொட்ரிகேஸ் உடன்
சே கொல்லப்படுவதற்கு சற்று முன்னபதாக பிலீக்ஸ் ரொட்ரிகேஸ் உடன்
அக்டோபர் மாதம் 9 ம்தேதி 1967 ஆம் ஆன்டு சே சி.ஐ.ஏ இன் உதவியுடன் பொலீவியன் இராணுவத்தால் கொலை செய்யப்பட்டார். 
கொலை செய்யப்பட்ட பின்னர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பிரஞ்சு ஊடகவியலாளர் ஒருவர் சே குவேராவின் கொல்லப்பட்ட உடலைப் புகைப்படம் பிடித்துள்ளார். 
அப் புகைப்படங்கள் பொலீவியாவில் கிறீஸ்தவ மிஷனரி ஒன்றில் வேலைபார்த்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த லூயி குவேட்டேரோ என்பவரின் கைகளுக்கு இடம்மாறியுள்ளது. 
பின்னர் 1967 ஆம் ஆண்டி நவம்பர் மாதம் ஸ்பெயின் உள்ளூராட்சிச் சபை ஒன்றின் உறுப்பினராகவிருந்த இமானோல் ஆர்டியாகா என்பவர் குவாட்டேரோவின் மரணத்தின் பின்னர் அவரது உடமைகளுக்கு மத்தியிலிருந்து கண்டெடுத்துள்ளார்.
ஆர்ஜன்டீனாவில் பிறந்த மருத்துவரான சே குவேரா பிடல் கஸ்ரோவுடன் இணைந்து கியூபாவில் புரட்சியை நடத்தியவர். 
தனக்கு வழங்கப்பட்ட அமைச்சர் பதவியைத் துறந்து ஏனைய நாடுகளில் புரட்சியை நடத்துவதற்காகப் பயணித்தவர். 
பொலீவியாவில் புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வேளையில் சி.ஐ.ஏ  வின் கொலையாளிகளால் கைது செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.
சே குவேராவைக் கைது செய்து அதன் பின்னர் கொலை செய்த ஆதாரங்கள் இப்போது வெளியாகியுள்ளன. இதுவரை கியூபாவில் உள்ள சில துரோகிகள்தான் சே வை கொலை செய்து விட்டதாக அமெரிக்கா உலகிற்கு கதை  பரப்பி விட்டது.
இக் கொலைகளை பொலீவியன் இராணுவமும், அமெரிக்க உளவுத்துறையும் இணைந்து நடத்தியதாக இன்று உலகம் முழுவதும் ஏற்றுக்கொண்டுள்ளன. 
ஆனாலும் அமெரிக்க கொலை கழுகு சி.ஐ.ஏ மீது பழி விழாமால் இருக்க தனது அடிமை ஊடகங்கள் மூலம் இன்னமும் கியூபா மீது குற்றம் சுமத்தி வருகிறது.

che2


che3

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?