இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

புதன், 31 டிசம்பர், 2014

2014 முக்கிய நிகழ்வுகள்.

ஜனவரி
1 - ஊழலை ஒழிப்பதற்கான லோக்பால் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் ஒப்புதல் அளித்தார்.
5 - இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோ ஜெனிக் இன்ஜின் பொருத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. - டி5 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 17 நிமிடம் 8 விநாடியில் ராக்கெட்டிலிருந்து செயற்கைக் கோள் பிரிந்து வட்டப்பாதைக்கு கொண்டு செல்லப்பட்டது.
20 - ஒடிசா வீலர் தீவில் நடத்தப்பட்ட அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி.
தேசிய காவல் அகாடமியின் முதல் பெண் இயக்குநராக அருணா பகுகுணா நியமனம்.
21 - கருணை மனு தாமதமாக நிராகரிக்கப்பட்டதால், வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் உட்பட 15 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுளாக குறைத்து உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பளித்தது.
22 - கடந்த 2005ஆம் ஆண்டுக்கு முன் வெளியிடப் பட்ட ரூபாய் நோட்டுகள் எதுவும் செல்லாது என ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு.
27 - தமிழக - இலங்கை மீனவர்கள் இடையே சென் னையில் 6 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதாக இரு நாட்டு மீனவர்களின் கூட்டமைப்பு அறிவித்தது.
30 - வீடுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு 12 ஆக உயர்த்தியது.
31 - மாநிலங்களவை எம்.பி.தேர்தலில் அதிமுக சார்பில் எஸ்.முத்துக்கருப்பன், ஏ.கே.செல்வராஜ், எல்.சசிகலா, புஷ்பா, விஜிலா சத்தியானந்த், திமுக சார்பில் திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் சார்பில் டி.கே.ரங்கராஜன் ஆகிய 6 பேர் போட்டியின்றி தேர்வு.
பிப்ரவரி
1 - நாட்டின் முதலாவது மோனோ ரயில் சேவை மும்பையில் தொடக்கம், வடாலா முதல் செம்பூர் வரை 8.8 கி.மீ.தூரம் உள்ள வழித்தடத்தில் மோனோ ரயில் சென்றது.
11 - நேபாள பிரதமராக சுஷில் கொய்ராலா பதவியேற்பு.
12 - ரயில்வே இடைக்கால பட்ஜெட் தாக்கலானது. பயணிகள் மற்றும் சரக்கு கட்டணங்கள் உயர்த்தப்பட வில்லை. புதிதாக தமிழகத்துக்கு 9 ரயில்கள் உட்பட 73 புதிய ரயில்கள் அறிவிப்பு.
14 - டில்லி சட்டப்பேரவையில் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற விடாமல் காங்கிரஸ், பாஜ கட்சிகள் எதிர்த்து வாக்களித்ததால், முதல்வர் கெஜ்ரிவால் ராஜினாமா. இதனால் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி 49 நாளில் முடிவுக்கு வந்தது.
15 - திருச்சியில் திமுக 10ஆவது மாநில மாநாடு தொடங்கியது.
17 - இடைக்கால மத்திய பட்ஜெட் தாக்கல், வாகனங்கள், உள்நாட்டு செல்போன்கள், டி.வி, ஃபிரிட்ஜ் உள்பட வீட்டு உபயோகப் பொருள்கள், சோப்புகள் ஆகியவற்றுக்கு வரிச்சலுகை அறிவிப்பு, அரிசி மற்றும் ரத்த வங்கிக்கு சேவை வரி ரத்து.
18 - முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் முருகன், பேரறிவாளன், சாந்தனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. ஆயுள் தண்டனையாக குறைத்து அதிரடி தீர்ப்பும் வழங்கியது.
18 -மக்களவையில் தெலங்கானா மசோதா நிறைவேற்றம்.
19 - தஞ்சை, திண்டுக்கல் மாநகராட்சிகள் உதயம்.
20 - ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை குறைக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் மேலும் 4 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த முடிவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
20 - மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்துக்கு தமிழக அரசு விதித்த தடை உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
27 - நாட்டின் முதல் அஞ்சலக ஏடிஎம் சேவை சென்னையில் தொடக்கம்.
மார்ச்
1 - தெலுங்கானா மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் ஒப்புதல்.
8 - மலேசியாவில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு சென்ற போயிங் 777 ரக பயணிகள் விமானம், நடுக்கடலில் விழுந்து நொறுங்கியதில்
5 இந்தியர்கள் உட்பட 239 பேர் கடலில் மூழ்கி பலியாகினர்.
20 - பழம்பெரும் எழுத்தாளர் குஷ்வந்த் சிங் மரணம்.
22 - தமிழகம் முழுவதும் மீண்டும் 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை மின்வெட்டு அமலாகியது.
24 - கெய்ரோவில் வன்முறையில் ஈடுபட்டு நூற்றுக்கணக்கானோர் பலியாக காரணமாக இருந்த எகிப்தின் முன்னாள் அதிபர் முகமது மோர்சி ஆதர வாளர்கள் 529 பேருக்கு மரண தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
27 - இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தக் கோரிய, அமெரிக்காவின் தீர்மானம் அய்.நா.சபையில் நிறை வேறியது. இதற்காக நடந்த ஓட்டெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது.
ஏப்ரல்
9 - குஜராத் மாநிலம் வதோதரா மக்களவைத் தொகுதியில், பாஜ பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி வேட்புமனு தாக்கல் செய்தார். தனது மனைவி பெயர் ஜசோதா பென் என்றும், ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று விட்டார் என்றும் வேட்பு மனுவில் தெரிவித்தார்.
15 - திருநங்கைகள் அனைவரையும் மூன்றாம் பாலினமாக பட்டியலில் சேர்த்து அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
27 - உச்ச நீதிமன்றத்தின் 41 ஆவது தலைமை நீதிபதி யாக ஆர்.எம்.லோதா பதவியேற்பு.
மே
4 - நடுவானில் பறக்கும்போதே எதிரி நாட்டு விமானங்களை தகர்க்கும். ஆஸ்ட்ரா என்ற அதிநவீன ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.
5 - கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளில் 248 வழக்குகளை உடனடி யாக தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.
6 - ஊழல் வழக்குகளில் சிக்கும் அரசு உயர் அதிகாரிகளை சிபிஅய் விசாரிக்க, அரசிடம் முன் அனுமதிபெற தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.
7 - முல்லைப் பெரியாறு அணையில் நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடிக்கு உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பளித்தது.
16 - நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிப்பு. 337 இடங்களில் வெற்றி பெற்று அறுதி பெரும்பான்மையுடன் பாரதீய ஜனதா ஆட்சியை பிடித்தது. இக்கட்சி தனித்தே 283 இடங்களை பிடித்தது. தமிழகத்தில் நடந்த 5 முனைப்போட்டியில் அதிமுக 37 இடங்களை பிடித்தது. புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் ராதாகிருஷ்ணன் வெற்றி. ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெங்கட்ராமன் வெற்றி.
16-ஆந்திரா சட்டப்பேரவை தேர்தல் தெலங்கானாவில் டிஆர்எஸ்., சீமாந்திராவில் தெலுங்கு தேசம் ஆட்சியை பிடித்தன.
16 -  ஒடிசாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் 119 இடங்களில் வெற்றி பெற்று 4ஆவது முறையாக ஆட்சியைப் பிடித்தது.
25 - 70 ஆண்டு கால அம்பாசிடர் கார் தொழிற்சாலை மூடப்பட்டது.
25 - ஆந்திராவின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 13 வயதான பூர்ணா, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி, இளம் வயதில் எவரெஸ்டில் ஏறிய சிறுமி என்ற சாதனை படைத்தார்.
26 - இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பு. அவருடன் 23 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 22 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர். இந்த விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்கள் உட்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வி.அய்.பிக்கள் பங்கேற்றனர்.
ஜூன்
2 - நாட்டின் 29ஆவது மாநிலமாக தெலங்கானா உதயமானது. அம்மாநிலத்தின் முதல்வராக கே.சந்திர சேகரராவ் பதவியேற்பு.
3 - டில்லியில் நடந்த சாலை விபத்தில் மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கோபிநாத் முண்டே பலி.
6 - மக்களவை சபாநாயகராக பாஜ மூத்த பெண் எம்.பி.சுமித்ரா மகாஜன் பதவியேற்றார். இதன் மூலம் மக்களவையின் 2ஆவது பெண் சபாநாயகர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
7 - கூடங்குளம் அணுமின் நிலைய முதல் உலையில் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இந்திய அணுமின் நிலையங்களில் முதல் முறையாக உற்பத்தியில் சாதனை படைக்கப்பட்டது.
9 - அதிவேக புல்லட் ரயில்களை இயக்கும் வகையில் வைர நாற்கர ரயில் திட்டம் செயல் படுத்தப்படும் என்று நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடரில் குடியரசத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையில் தெரிவிக்கப்பட்டது.
13 - சுற்றுலா பயணப்படியை பெறுவதற்காக போலியாக பயணச்சீட்டு அளித்து மோசடியில் ஈடுபட்ட 6 எம்பிக்கள் மீது சி.பி.அய் வழக்குப் பதிவு செய்தது.
18 - உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி முல்லைப் பெரியாறு அணையை கண்காணிக்க 3 பேர் கொண்ட பராமரிப்பு குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
25 - ரயில் பயணிகள் மற்றும் சரக்கு கட்டணத்தை பட்ஜெட்டுக்கு முன்பாகவே மத்திய அரசு உயர்த்தியது. அனைத்து வகுப்புகளுக்குமான பயணிகள் கட்டணம் 14.2 சதவிகிதமும், சரக்கு கட்டணம் 6.5 சதவிகிதமும் உயர்த்தப்பட்டு அமலானது.
28 - சென்னை போரூர் அருகே மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டடம் திடீரென இடிந்து சரிந்து விழுந்ததில் 63 பேர் கட்டட இடுபாடுகளுக்குள் சிக்கி பலி.
ஜூலை
1 - கீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.
4 - ஈராக்கில் தீவிரவாதிகள் பிடியில் சிக்கி தவித்த தூத்துக்குடி செவிலியர் மோனிஷா உள்பட இந்தியாவை சேர்ந்த 46 செவிலியர்கள் விடுவிக்கப்பட்டனர்.
10 - பிரதமர் மோடி தலைமையிலான அரசின் முதல் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
15 - மத்திய அரசின் நிதியுதவியுடன் சென்னை மற்றும் இதர நகரங்களில் ரூ. 825 கோடி செலவில் புதிதாக 10,000 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
16 - தமிழகத்தில் வேட்டி அணிவதற்கு தடை விதித்தால் கிளப்களின் அனுமதி ரத்தாகும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
17 - ரஷ்யா - உக்ரைன் எல்லையில் நடுவானில் பறந்து கொண்டிருந்த மலேசிய பயணிகள் விமானம் ஏவு கணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் விமானத்தில் பயணம் செய்த 295 பேரும் உடல் சிதறி பலி.
24 - டில்லியில் நடந்த இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை 49 சதவிகிதமாக உயர்த்தும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
30- கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் கருகி பலியான வழக்கில் 10 ஆண்டுகளுக்குப்பின் தீர்ப்பளிக்கப்பட்டது. பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், தாளாளர் சரஸ்வதி உட்பட 8 பேருக்கு 5 ஆண்டு சிறையும், கட்டட பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இவ் வழக்கில் 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆகஸ்ட்
6 - வேட்டி மற்றும் இந்திய பாரம்பரிய உடை அணிந்து வருபவர்களை தடை செய்யும் கிளப், சங்கங்கள், மனமகிழ் மன்றங்களின் அனுமதி ரத்து செய்யப்படுவதுடன் அவற்றின் உரிமையாளர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று புதிய சட்ட மசோதா சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
6 - இந்திய ராணுவத்தில் அன்னிய நேரடி முதலீட்டை 49 சதவிகிதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
8 - மக்களவை வரலாற்றில் முதல் முறையாக, தமிழில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தமிழிலேயே பதில் அளித் தார் மத்திய வர்த்தக இணையமைச்சர் நிர்மலா சீதாராமன்.
13- தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி பானுமதி உச்சநீதிமன்ற நீதிபதியாக பதிவியேற்பு.
13- கனடா நாட்டின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மஞ்சள் பார்கவா என்ற பேராசிரியருக்கு கணித கண்டு பிடிப்புக்காக நோபல் பரிசு கிடைத்தது.
19 - பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணி யாளர்களுக்கு தமிழக அரசு மீண்டும் பணி வழங்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
25 - கடந்த 1993ஆம் ஆண்டு முதல் 2010 ஆண்டு வரை நடந்த நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தும் சட்டவிரோதமானவை என உச்ச நீதிமன்றம் உத்தரவு.
செப்டம்பர்
13 - திருமணம் செய்து கொள்வதற்கு முன் ஆண், பெண் இருவருக்கும் மருத்துவ சோதனை கட்டாயம் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.
22 - சமையல் எரிவாயு மானியம், முதியோர், விதவை, ஆதரவற்றோர் உதவித் தொகைகள், கல்வி உதவித் தொகை, தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் பொது விநியோக திட்டங்களின் பலன்கள் வங்கி கணக்கு மூலம் ஆதார் அட்டை விவரங்களுடன் இணைக்கப்பட்டு வழங்கப்பட மத்திய அரசு முடிவு.
24 - மங்கள்யான் செயற்கைக்கோளை வெற்றிகரமாக செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையில் இணைந்ததன் மூலம் உலக விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில், முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக் கோள் அனுப்பி மகத்தான சாதனையை இந்தியா படைத்தது.
24 - கடந்த 1993ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை தனியார் நிறுவனங்களுக்கு சட்ட விரோதமாக ஒதுக்கீடு செய்த 214 நிலக்கரி சுரங்கங்களின் உரிமங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
26.ஜெயலலிதா ஊழல் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உடனே சிறையில் அடைக்கப்பட்டார்.முதல்வராக இருக்கையில்  பதவி இழந்து சிறையில் அடைக்கப்பட்ட முதல் இந்திய  மாநில முதல்வர் என்ற பெருமையை ஜெயலலிதா பெற்றார்.
29 சென்னையில் தமிழ் நாட்டின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்பு, அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
அக்டோபர்
17 - வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது.
19 - அரியானாவில் நடந்த சட்டப் பேரவை தேர்தலில் பா.ஜ. 47 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான் மையுடன் முதல் முறையாக ஆட்சி அமைக்கிறது. மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளில் 122 தொகுதி களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உயர்ந்து அந்த மாநிலத்திலும் கூட்டணி ஆட்சி அமைக்கிறது.
21 - வழக்குரைஞர் அலுவலகங்கள், பார் அசோசி யேஷன் அறைகளில் நடத்தப்படும் திருமணங்கள் செல்லாது என்று  உயர்நீதிமன்றம் அறிவித்தது.
25 - ஆவின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 10 உயர்த்தப் பட்டுள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு.
27 - வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கிய, தொழில் அதிபர்கள் பிரதீப் பர்மன் (டாபர் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்) டிம்ளோ பிரைவேட் லிமிடெட் மற்றும் அதன் 5 இயக்குநர்கள் ராதா, சேத்தன், ரோகன், அன்னா, மல்லிகா பங்கஜ் சிமன்லால் லோதியா (தங்கம் வெள்ளி வியாபாரி) ஆகியோரின் பட்டியலை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்தது.
28 - தாது மணல், கிரானைட் கொள்ளை குறித்து விசா ரணை நடத்த அமைக்கப்பட்ட சகாயம் குழுவுக்கு அனுமதி அளிக்காத தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம், ரூ 10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. மேலும் 4 நாட்களில் குழுவை அமைக்க வேண்டும் என்றும் அரசுக்கு கெடு விதித்தது.
29 - வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருந்த 627 பேரின் பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்தது. அவர்கள் மீது சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.அய்.டி) விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.
நவம்பர்
6 - வெளிநாட்டு வங்கியில் கணக்கு வைத்துள்ளதாக மத்திய அரசு அளித்த 628 பேர் பட்டியலில் 289 பேர் கணக்குகளில் பணம் இல்லை எனவும், 122 பெயர்கள் இரு முறை இடம் பெற்றுள்ளதாகவும் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.அய்.டி) அதிகாரிகள் தெரிவித்தனர்.
7 - ஜாதிவாரி கணக்கெடுப்பு சட்ட விரோதமானது அதை நடத்த தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இக்கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவையும் ரத்து செய்தது.
14 - இலங்கையில் தூக்கு தண்டணை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரின் மரண தண்டனையை ரத்து செய்து இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவிப்பு.
16 - அய்எஸ் தீவிரவாதிகள் மீண்டும் ஒரு அமெரிக்க பிணைக் கைதியின் தலையை துண்டித்து படுகொலை செய்துள்ளனர். மேலும் 18 சிரியா நாட்டு ராணுவ அதிகாரிகளின் தலையை துண்டித்து கொலை செய்த பயங்கர வீடியோவையும் வெளியிட்டனர்.
21 - இந்தாண்டுக்கான சிறந்த கண்டுபிடிப்பாக இந்தியாவின் மங்கள்யான் விண்கலத்தை அமெரிக்காவின் டைம் இதழ் தேர்வு செய்தது.
டிசம்பர்
4 - திருவனந்தபுரம் கொச்சியில் பிரபல நீதிபதி கிருஷ்ணய்யர் மரணம்.
10 - திருமலையில் சாமி தரிசனம் செய்ய வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது செய்தி சேகரிக்கவும் படம் எடுக்கவும் வந்த தமிழக பத்திரிகையாளர்கள் மீது ஆந்திர காவல் துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.
10 - 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தானின் மலாலா யூசுப்சாய் ஆகியோருக்கு நார்வேயில் வழங்கப்பட்டது.
11 - தமிழகத்தில் மின் கட்டணம் 15 சதவிகிதம் உயர்த்தி தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு.
14 - ஓய்வூதிய விதிகளின் அடிப்படையில் ஓர் ஆண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும் ஓய்வூதியம் தர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு.
16 - பாகிஸ்தானில் ராணுவப் பள்ளிக்குள் தற்கொலைப் படை தீவிரவாதிகள் நுழைந்து வகுப்பறைகளில் இருந்து குழந்தைகள் மீது கண் மூடித்தனமாக சுட்டதில் 140 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 160 பேர் பலி.
23- ஜார்கண்ட், காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாயின. ஜார்க்கண்டில் பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்தது. காஷ்மீரில் எந்தக்கட்சியிலும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

தொகுப்பு-நன்றி:விடுதலை 

===========================================================================


“மாமா தமிழன்”?கடந்த 2 தினங்களுக்கு முன்னர் தமிழ் நாட்டில் புகழ்பெற்ற ஊடகங்களில் ஒன்றான “தந்தி” யில் மகிந்த ராஜபக்ஷவின் பேட்டி ஒன்று வெளியானது.
 இந்த தந்தி பத்திரிகைக்கு இனரர் நெட் TV ஒன்றும் உள்ளது. 
இதில் பல பரபரப்பான செய்திகளை இவர்கள் அவ்வப்போது போடுவது வழக்கம். 
ஆனால் அதுபோலத் தான் நாங்கள் ராஜபக்ஷவின் பேட்டியும் போட்டோம் என்று இவர்கள் கூறுவது முழு பூசனிக்காயை சோற்றில் புதைக்க நினைப்பது போல உள்ளது. 2009ம் ஆண்டு இக்கட்டான காலம், அதற்கு முன்னர் 2005 மகிந்தரின் வெற்றிக்காலம், பின்னர் காமன் வெலத் மாநாடு இலங்கையில் நடந்தவேளை, என்று பல சந்தர்பங்கள் இருக்கிறது. இந்த ஏதாவது ஒரு சந்தர்பத்தில் மகிந்தரை இவர்கள் பேட்டி எடுத்து முன்னரே போட்டு இருந்தால், அது “பத்திரிகை தர்மம்” என்று நாம் கூற வாய்ப்பு உள்ளது. ஆனால் இன்றைய தேதிக்கு தேர்தலில் தான் தோல்வியடைந்து விடுவோமோ என்று அவரே திண்ட்டி தெருப்பொறுக்கிக்கொண்டு உள்ள நேரம் தந்தி TV அவரின் நேர்காணலை போட்டு, மகிந்தருக்கு கை கொடுத்துள்ளது !
இலங்கையில் உள்ள வட கிழக்கு தமிழர்கள், யாழில் இயங்கிவரும் “டான் TV” ஐ பார்கிறார்களோ இல்லையோ, இணையம் (இன்ரர் நெட்) ஊடாக வரும் தந்தி TV ஐ பார்ப்பது அதிகம். 
இதனை மகிந்தர் நன்றாக அறிந்து வைத்திருந்துள்ளார். இதன் காரணமாகவே குறித்த அந்த TV ஐ அழைத்து மகிந்தர் சூட்கேஸ் ஒன்றையும் கொடுத்து பேட்டி ஒன்றையும் கொடுத்துள்ளார். சுமார் 12 C கை மாறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 
தந்தி TV இன் நிருபர் முதலில் ஏதோ தாறு மாறாக கேள்விகளை கேட்ப்பது போல நன்றாக நாடகமாடியுள்ளார். பின்னர் மகிந்தருக்கு சாதகமான கேள்விகளை கேட்டு, அந்த நேர்காணலை நல்லபடியாக முடித்துக்கொடுத்து, அனைவர் காதிலும் பூ சுத்தி இருக்கிறார்.
பணம் தந்தால் என்னவும் செய்யும் தந்தி.பொம்பளை பொறுக்கி நித்தியானந்தாவை வைத்து நிகழ்ச்சி நடத்தும்  "நீல " தொலை காட்சிதான் தந்தி தொகாட்சி.அது கவர்ச்சிப் படம் கள்ளக்காதல் செய்திகள் வெளியிடும் மஞ்சள் பத்திரிகைகளின் நிறுவனத்தின் அங்கம்தானே .
 இதனைத்தான் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல என்பார்கள்.
“நான் முதலில் அப்படி தான் கேள்விகளை கேட்ப்பேன்” பின்னர் நல்ல கேள்விகளை கேட்ப்பேன் என்று சொல்லிவைத்தால் போல தந்தி TV நிருபரும் மகிந்தரும், இணைந்து நாடகமாடியுள்ளமை சாதாரண மக்களுக்கு புரியாமல் இருக்கலாம். 
ஆனால் சக ஊடகங்களுக்கு புரியாமல் போய்விடுமா என்ன ? 
தந்தி TV இன் பேட்டி ஒளிபரப்பாகி முடிந்து மறு நாள் மகிந்த விட்ட அறிக்கை என்ன தெரியுமா ? 
மைத்திரியை விட நான் யாழ்ப்பாணத்தில் கூட வாக்குகளை பெறுவேன் என்பது தான். 
காலத்திற்கு காலம் டெல்லியில் உள்ளவர்கள் ஈழத் தமிழர்களின் காலை வாருகிறது என்றால், தமிழ் நாட்டிலும் சில ஈனப் பிறவிகள் இருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள் காலை வார என்று. 
ராஜபக்ஷ பேட்டியை ஒளிபரப்ப கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் மற்றும் ஈழ உணர்வாளர் அண்ணன் வைகோ அவர்கள் போராட்டம் நடத்தினார்.வேல்முருகன் .நெடுமாறன் போன்ற ஈழ வியாபாரிகள் ஒன்றுமே சொல்லவில்லை.தங்கள் பெயர்கள் தந்தி நாளிதழில் வராமல் போய் விடுமோ என்ற பயம்தான்.
ஆனால் காய்ந்த தமிழன் சீமான் தந்து காட்பாதர் தந்தி நிறுவன மாமா வேலையை கண்டித்து இதுவரை ஒரு முணங்க்களைக் கூட எழுப்பவில்லை. பக்சே இங்கு தந்தி க்கு பணம் கொடுத்து தனது புகழை பரப்பியது போல் ,இந்தி நடிகர் சல்மானுக்கும் பணம் கொடுத்து பிரசாரத்துக்கு அழைத்துள்ளார்.இதற்காகவே பல கோடிகளை ஒதுக்கியுள்ளார் பக்சே.
உடனே சென்னை பத்திரிகையாளர் சங்கம் அறிவித்தல் ஒன்றை விட்டார்கள். வைகோ அவர்கள் பத்திரிகை சுதந்திரத்தில் தலையிடக் கூடாது என்று. பத்திரிகை சுதந்திரம் என்று வாய் கிழிய பேசிவரும், நபர்களுக்கு ஈழத்தின் சுதந்திரத்துக்காக 44,000 ஆயிரம் போராளிகள், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்து போனார்கள் என்பது தெரியாத விடையமா ?
 இறந்து போனவர்கள் உங்கள் தொப்புள் கொடி உறவுகள் அல்லவா ? அவர்களையாவது ஒரு கணம் நினைத்துப் பார்த்தீர்களா ?
 ராஜபக்ஷவை பார்கும்போது செருப்பை களற்றி அடித்திருந்தால் நீங்கள் ஒரு மானமுள்ள தமிழன் வரலாற்றில் உங்கள் பெயர் பதிந்து இருக்கும்.
ஆனால் இன்று “மாமா தமிழன்” ஆகிவிட்டது தந்தி TV.
2009ஐ மறந்துவிட்ட தந்தி TV க்காக சில புகைப்படங்களை நாம் பிரசுரிக்கிறோம்.
நன்றி அதிர்வு                                                                                                                சரிதம் தளத்தில் இருந்து.

பத்மஸ்ரீ கமல் ஹாசன்

சில துளிகள்.

oசமீபத்தில் மும்பை டாடா மெமோரியல் மருத்துவமனையில் நடந்த ஒரு மாநாட்டில், 'புகையில்லா புகையிலையும் பொது சுகாதாரமும்: ஒரு உலகளாவிய பார்வை' என்ற ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. 
இதன்படி 70 நாடுகளில் 300 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பான் பீடா, குட்கா, கைனி என்று ஏதாவது ஒரு வடிவத்தில் வாயில் போட்டு அதக்கும் வழக்கமுடையவர்கள். 

oஇந்த புகையிலை அடிமைகளில் இந்தியர் மற்றும் வங்க தேசத்தினரின் பங்கு மட்டும் 80 சதவீதம். இதில் பெரும்பான்மையினர் 13 - 15 வயதினர். கிராமப்புற பெண்களின் பங்கு 1
8.4 சதவீதம் என்பது இன்னும் கொடுமை. பலவித புற்றுநோய்கள் முதல் இதய நோய்கள் வரை வரும் என்பதால் மத்திய அரசு புகையிலையிலிருந்து விடுதலை பெற விரும்புவோருக்கு உதவ, 'க்விட்லைன்' என்ற இலவச தொலைபேசி சேவையை துவங்கவுள்ளது. 
புகையிலைப் பழக்கத்தை நிறுத்த உதவும் தொலைபேசி சேவை, 
புகையிலை ஏக்கத்திலிருந்து விடுபட உளவியல் ஆதரவாக இருக்கும். 


oஉடலில் உள்ள கொழுப்பைக் கரைக்க மரபணுவில் 'பைபா' (பீட்டா அமினோஐசோப்யூடைரிக் ஆசிட்) என்ற“ஸ்விட்ச்” உள்ளது. இதை முடுக்கினால் கொழுப்பை உடல் தானாக கரைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். 
இந்த 'ஸ்விட்ச்' நாம் உடற்பயிற்சி செய்யும்போது முடுக்கிவிடப்படுகிறது. இதை பருமனாக இருப்பவர்களின் உடலில் முடுக்கிவிட வழி கண்டு பிடிக்க இப்போது ஆய்வு நடக்கிறது. '
இந்த பைபாவை மாத்திரை அல்லது டானிக் வடிவில் கொண்டுவர முடியுமா என்று இப்போது ஆய்வுகள் நடக்கின்றன. 
பைபா வந்துவிட்டால் உடல் பருமனுக்கு பை பைப்பா! 


oநியூயார்க்கிலுள்ள உளவியல் வல்லுனர் ஜூலியா ஹோம்ஸ், 18 வயதுக்கும் மேற்பட்ட 292 கல்லூரி மாணவ, மாணவியரிடையே ஆய்வு செய்தார். இவர்களில் 90 சதவீதத்தினர் ஆன்லைனில் இருக்கும் நேரத்தில் மூன்றில் ஒரு பங்கை பேஸ்புக்கிலேயே செலவழிப்
பவர்கள். 'ஒரு மது அடிமை மது இல்லா விட்டால் எப்படி எரிச்சலடைவாரோ அதே போல இதில் 10 சதவீதத்தினரால் பேஸ்புக் இல்லாமல் இருக்க முடியாது' என்கிறார் ஜூலியா. 
சுயகட்டுப்பாடு இல்லாத இவர்கள் போதைக்கு அடிமையாகும் வாய்ப்பும் அதிகம். 


oகுட்டீஸ் கூட கண் கண்ணாடி அணிவது கண்டு அங்கலாய்க்கிறீர்களா? 'ஆப்டோமெட்ரி அண்ட் விஷன் சயின்ஸ்' இதழின் ஆய்வுக் கட்டுரை மேலும் திகைக்க வைக்கும். 
இனி பிறந்து 36-72 மாதங்கள் உள்ள குழந்தைகளைக்கூட பெற்றோர், கண் மருத்துவரிடம் காண்பித்து சோதிக்கவேண்டும். 
அப்போதுதான் மாறுகண், சோம்பல் கண், கிட்டப் பார்வை, தூரப் பார்வை போன்றவற்றை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க முடியும் என்கிறது அந்த ஆய்வுக் கட்டுரை.
oஆக்ஸ்போர்ட் அகராதி தளத்தைக் கேட்டால் 2014ல் சூடுபிடித்த இ - சிகரெட் சந்தையில் புழங்கிய வேப் (Vape) என்ற சொல்தான் என்கிறது. ஆனால் டிக்சனரி.காம் தளமோ, எபோலா வைரஸ் பரவியதை ஒட்டி அதிகம் புழங்கிய எக்ஸ்போஷர் என்ற சொல்தான் என்கிறது. மெரியம்வெப்ஸ்டர் தளமோ, கல்ச்சர் என்ற சொல்தான் என்று புள்ளி விவரம் தருகிறது. 

 
oஇந்தியாவில் உள்ள ஆமை வேக இணையத்தை கருத்தில் வைத்து, 'ஆப்லைன்' வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது யூட்யூப். னால் ஒரு படம் அல்லது இசை வீடியோவை டவுண்லோடு செய்து, 48 மணிநேரத்திற்குள் பார்த்துவிடவேண்டும்.


oசோனி நிறுவனம் தயாரித்து டிசம்பர் 25ல் வெளிவரும், 'தி இன்டர்வியூ' படத்தில் வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் கொல்லப்படுவதுபோல காட்டப்படுகிறது.
'படத்தை நிறுத்து' என்று கார்டியன்ஸ் ஆப் பீஸ் என்ற வட கொரிய ஹேக்கர்கள் எச்சரித்துள்ளனர். 
விரும்பாத தியேட்டர்கள் படத்தை நிறுத்தலாம் என்கிறது சோனி.

oபேஸ்புக்கின் இந்திய பயனாளிகளின் எண்ணிக்கை 112 மில்லியனைத் தாண்டியிருக்கிறது. 
இதற்கு ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லட்டின் பரவலே காரணம். 
                                                                                  டிம் பெர்னெர்ஸ் லீ 
                                      
       o 1999ல் இன்டர்நெட்டை உருவாக்கிய கணிப்பொறி விஞ்ஞானி.
============================================================

செவ்வாய், 30 டிசம்பர், 2014

<> நிலவேம்பு மகத்துவம்<>

நிலவேம்பு என்பது 2 அடி வரை வளரும் ஒரு செடி வகை. மலை, மண் வளம் உள்ள இடங்களில் எளிதாக வளரும். 
தாவரவியலில் Andrographis  Paniculata  என்று இந்தச் செடியை அழைக்கிறார்கள். 
நாம் அடிக்கடி கேள்விப்படுகிற நிலவேம்பு கஷாயம் இந்த செடியிலிருந்தே தயாரிக்கப்படுகிறது.  இந்தக் கஷாயத்தை 9 கூட்டுமருந்துகள் கலந்து சித்த மருத்துவர்கள் கொடுப்பார்கள். 
இந்த கஷாயத்தைதான் நிலவேம்பு குடிநீர் என்று சொல்கிறோம். 
 கடந்த சில வருடங்களாக விதவிதமான காய்ச்சல்கள் நம் ஊரில் வந்துகொண்டிருப்பது எல்லோருக்கும் தெரியும். 
டெங்கு காய்ச்சல், பறவைக்  காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் என்று புதிய புதிய காய்ச்சல்கள் வரும்போது வழக்கமான மருத்துவ முறைகளால் சமாளிக்க முடியாத சூழ்நிலையை  நிலவேம்பு சாதித்திருக்கிறது.

‘‘திடீரென பன்றிக் காய்ச்சல் பரவிக் கொண்டிருந்த போது நவீன மருத்துவம் இருந்தும் என்ன செய்வது என தெரியாமல் அரசாங்கமே ஸ்தம்பித்துப்  போனது. 

ஒரு பக்கம் அதை பற்றிய பயம், மறுபக்கம் அது என்ன காய்ச்சல் என்று தெரியாத நிலை, போதுமான பரிசோதனை நிலையங்கள் இல்லாமல்  மாதிரிகளை எடுத்துக் கொண்டு அலைக்கழிந்த இக்கட்டான நேரத்தில் நிலவேம்பு பெரிய உதவி செய்தது. 
மற்ற மாநிலங்களில் காய்ச்சல் பாதிப்பு  அதிகமாக இருந்தபோதும், தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு குறைவாக இருந்ததற்கு காரணம் நிலவேம்பு குடிநீர் கொடுத்த பாதுகாப்புதான் என்று  உறுதியாக சொல்லலாம். 
டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதித்த இக்கட்டான சூழல்களில் நிலவேம்பின் மகத்துவத்தை உணர்ந்ததால்தான் அரசாங்கமே அதை விளம்பரப்படுத்தி, மருத்துவமனைகளில் நிலவேம்பு குடிநீருக்காக தனிப்பிரிவே தொடங்கியது.

எல்லா சித்த மருந்துக்கடைகளிலும் 9 கூட்டு மருந்துகளுடன் கலக்கப்பட்ட நிலவேம்பு கலவை கிடைக்கும். 

அரசு மருத்துவமனைகளில் சித்த  மருத்துவப் பிரிவு, தமிழ்நாடு அரசின் டாம்ப்கால், சென்னை அடையாறு பகுதியில் செயல்படும் சித்த மருத்துவர்களின் கூட்டுறவு சங்கம் ஆகிய  இடங்களில் கிடைக்கும். காதிபவன், சித்த மருந்துக் கடைகள், நாட்டு மருந்துக் கடைகள் போன்றவற்றிலும் நிலவேம்பு கிடைக்கிறது. 

நிலவேம்பு குடிநீர்  ?

கைப்பிடி அளவு நிலவேம்புப் பொடியை 500 மி.லி. தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். 

ஒரு மணி நேரம் ஊறிய பிறகு, 2 ஏலக்காய், 2 கிராம்பு  போன்றவற்றையும் வாசனைக்காக சேர்த்து மூடி வைத்து கொதிக்கவிட வேண்டும். இந்த தண்ணீர் மூன்றில் ஒரு பங்காக சுண்டிய பிறகு, வடிகட்டி  சாப்பிடலாம். காய்ச்சல் இருப்பவர்கள் காலை, இரவு என இரண்டு வேளை தலா 60 மி.லி. சாப்பிட்டால் போதும். 
நிலவேம்பு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் என்பதால், காய்ச்சல் இல்லாதவர்களும் தடுப்பு மருந்தாக இரண்டு ஸ்பூன் அளவு சாப்பிட்டுக் கொள்ளலாம். 
நிலவேம்பின்  கசப்பைப் போக்க கொஞ்சம் சர்க்கரை, வெல்லம், தேன் என ஏதாவது ஒன்றை கலந்து காய்ச்சி தேநீர் போலவும் பயன்படுத்தலாம். தேன் ஒரு சிறந்த  மருந்து என்பதால் தேனுக்கு முன்னுரிமை கொடுப்பது இன்னும் நல்லது. நீரிழிவு உள்ளவர்கள் இனிப்பு சேர்க்காமல் சாப்பிட்டுக் கொள்ளலாம்.

 மருத்துவ பயன்கள்? 


எந்த விஷக்காய்ச்சலாக (Viral Fever) இருந்தாலும் நிலவேம்பு குடிநீருக்குக் கட்டுப்பட்டுவிடும்.


 காய்ச்சலின் போது உடலில் இருக்கும் வைரஸையும்  முழுமையாக அழித்துவிடுவதால் காய்ச்சலுடன் மூட்டுவலியும் காணாமல் போய் விடும். காய்ச்சல் வந்தவுடன் பலரும் ஆங்கில மருத்துவத்தையே  தேடுவார்கள். உங்கள் திருப்திக்காக ஆங்கில மருத்துவம் எடுத்துக் கொள்ளும்போது நிலவேம்பு குடி நீரையும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
  நிலவேம்பு குடிநீரால் எந்த பக்க விளைவுகளும் கிடையாது. அதனால், 5 நாட்களில் ஆங்கில மருத்துவம் குணப்படுத்துகிறது என்றால், நிலவேம்பு  குடிநீர் சில நாட்களில் குணப்படுத்த உங்களுக்கு உதவி செய்யும். காய்ச்சலால் ஏற்படும் உடல் சோர்வும் சரியாகிவிடும். 

நம் வருமானத்தின் பெரும்பகுதி மருத்துவச் செலவுக்கே சரியாகிவிடுகிற இன்றைய சூழலில், மிகக்குறைந்த செலவில் குணப்படுத்தும் சித்த  மருத்துவத்தின் முக்கியத்துவத்தை நிலவேம்பு நமக்கு உணர்த்தியிருக்கிறது. இது சித்த மருத்துவம் என்கிற கடலில் ஒரு துளிதான்.

 இன்னும்  எத்தனையோ விஷயங்கள் வெளி உலகுக்குத் தெரியாமல் இருக்கின்றன.
 மக்களிடம் இப்போது இயற்கை பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் நெல்லிக்காய் கலந்த தைலம், மருதாணி கலந்த எண்ணெய், பழங்கள் கலந்த ஃபேஷியல் என்று விளம்பரப்படுத்தி வருகிறார்கள். 

நோய் எதிர்ப்பு சக்தி யாருக்கு அதிகமாக இருக்கிறதோ அவர்களுக்கு எபோலா வருவதில்லை . 

பனி,  மழைக்கு பயந்து வீட்டிலேயே நம்மால் உட்கார்ந்திருக்க முடியாது. ஆனால், இந்த பருவத்திலும் எங்கள் வீட்டில் யாருக்கும் உடல்நலக் குறைவு  இல்லை என்று சொல்லும் அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்க நிலவேம்பு நமக்கு உதவி செய்யும்!

===============================================
கடலை மாவு அல்லது பயத்தம்மாவு இதில் ஒரு மேசைக்கரண்டி எடுத்து சிறிது பால் ஒரு தேக்கரண்டி எலுமிச்சைசாறு கலந்து சிறிது நீர் விட்டு குழைத்து முகம் மற்றும் கழுத்தில் போட்டு ஒரு பத்து நிமிடம் ஊற வைத்து கழுவிவிடுங்கள் முகம் பளிச்சென்று இருக்கும்.
==============================================================

திங்கள், 29 டிசம்பர், 2014

இதயமே...இதயமே....,

நம் உடல் உறுப்புகளில் இதயம் மிகவும் முக்கியமானது. 
 இதயத்தின் வலது புறத்தில் 2, இடதுபுறத்தில் 2 என நான்கு அறைகள் உள்ளன. 
இடது பக்க அறைகளில் சுத்த இரத்தமும் வலதுபுற அறைகளில் அசுத்த இரத்தமும் உள்ளன. 
அசுத்த இரத்தம் வலது புற அறைகளில் இருந்து நுரையீரலுக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு சுத்தமாக்கப்பட்டு இதயத்தின் இடதுபுற அறைகளுக்கு கொண்டு வரப்படுகிறது. 
இங்கிருந்து உடலின் பல பாகங்களுக்கு இரத்தக்குழாய்கள் மூலம் இரத்தம் சென்றடைகிறது. 
இதயம் சுருங்கி விரிவதால் இந்நிகழ்ச்சி நடைக்கிறது. சுத்த இரத்தமும் அசுத்த இரத்தமும் ஒன்றோடு ஒன்று கலந்து விட்டால் அது ஆபத்தானது. மரணத்திற்கே காரணமாகிவிடும். 

தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும் போது நுரையீரல் வேலை செய்யாதிருப்பதால் இரத்தத்தை சுத்தமாக்கும் பணி குழந்தையின் இதயத்தில் நடைபெறுவதில்லை.

 எனவே இதயத்தின் இடப்பக்க, வலப்பக்க அறைகளுக்கிடையில் ஒரு இணைப்பு காணப்படும். 
இந்த இணைப்பு இருப்பதால் தாயின் உடலில் இருந்து சுத்த இரத்தம் குழந்தையின் இதயத்தை அடைந்து அங்கிருந்து குழந்தையின் உடலுக்கு சென்று அசுத்தமடைந்து மீண்டும் தாயின் உடலுக்குள் சென்றடையும். எனவே குழந்தையின் இதயத்தில் அசுத்த இரத்தம் இருப்பதில்லை. குழந்தையின் இதயம் இரத்தத்தை கடத்திவிடும் குழாயாகவே செயல்படுகிறது. 
குழந்தை பிறந்தவுடனேயே முதல் மூச்சு விடும்போது நுரையீரல் வேலை செய்ய ஆரம்பித்து விடும். இப்போது பிறந்த குழந்தையின் இதயத்தின் இடது அறைகளில் சுத்த இரத்தமும் வலது அறைகளில் அசுத்த இரத்தமும் வந்துவிடும். 
குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போது இருந்த வலது, அடது அறைகளை இணைக்கும் இணைப்பில் அசுத்த இரத்தமும், சுத்த இரத்தமும் கலந்துவிடும் அபாயம் குழந்தையின் இதயத்தில் உண்டு. 
ஆனால் அந்த  இணைப்பு துவாரத்தை ஒரு சவ்வு மூட ஆரம்பித்து விடுவதால் இந்த அபாயம் நிகழ்வதில்லை. 
இந்த சவ்வு எப்படி உடனே வளர ஆரம்பித்து சுத்த இரத்தமும், அசுத்த இரத்தமும் கலக்காமல் தடுக்கிறது என்பது விஞ்ஞானிகளுக்கு இன்று வரை புதிராவே உள்ளது. 
குழந்தை பிறந்த நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் சுமார் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 600 முறை இதயம் துடிக்கிறது. 
======================================================================

ஆண்களின் ஆயுட்காலம், பெண்களை விட 7 வருடங்கள் குறைவு.
ஆண்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் பெண்களை விட 4 மடங்கு அதிகம்.
உடல்நலக் கோளாறுகளுக்காக மருத்துவரை நாடும் ஆண்களின் எண்ணிக்கை, பெண்களைவிட 3 மடங்கு குறைவு.
புற்றுநோய்க்குப் பலியாவதில் ஆண்களின் பங்கு 2 மடங்கு அதிகம்.
விபத்துகளில் உயிரிழப்பதிலும் ஆண்களுக்கே முதலிடம்.

 ஆண்கள் அவசியம் ஏற்பட்டால் கூட, நேரமும் பணமும் வேஸ்ட்டுங்கிற மனப்பான்மையில, தங்களோட ஆரோக்கியத்தை அலட்சியம் பண்றாங்க. இந்த அலட்சியம் தொடர்கிற போதுதான், திடீர்னு ஒருநாள் யாருமே எதிர்பார்க்காத நேரத்துல அவங்க இறந்து போறாங்க.
 பொருளாதாரம் உள்பட, பல விஷயங்களுக்கும் ஆண்களை நம்பியிருக்கிற இந்தியச் சமூகத்துல, ஒரு ஆணோட இறப்புங்கிறது அவனைச் சார்ந்திருக்கிற பெண்களுக்கும் குடும்பத்துக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். 

ஆண்கள் தங்களோட ஆரோக்கியத்துல அக்கறை காட்டினா, அவங்களோட இறப்பு விகிதத்தை 80 சதவிகிதம் குறைக்கலாம்.

மார்பகப் புற்றுநோய் இருக்கானு சோதிக்கிற மார்பக சுய பரிசோதனையை பெண்களுக்கு வலியுறுத்தறோம். 
ஆண்களுக்கு ஏற்படற விதைப்பை புற்றுநோய்க்கும் அப்படியொரு சுய பரிசோதனை அவசியம். 15 வயசுலேருந்தே இதை ஆண் பிள்ளைகளுக்குக் கற்றுத் தரலாம். 
20 - 30 வயசுல விதைப்பை புற்றுநோய் தாக்கிற அபாயம் அதிகம். 30 பிளஸ்லயே ஆண்களுக்கு இன்னிக்கு நீரிழிவு வருது. 
பெற்றோருக்கு நீரிழிவு இருந்தா, பிள்ளைகள், இளவயசுலேருந்தே வாழ்க்கை முறையை மாத்திக்கப் பழகணும். முறையான உணவு, உடற்பயிற்சி, மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை மூலமா நீரிழிவை 10 வருஷங்களுக்குத் தள்ளிப் போடலாம். சிறுநீரகங்கள் செயலிழந்து போறதைத் தவிர்க்கலாம்.

40-50 வயசுல பிராஸ்டேட் சுரப்பியில உண்டாகிற புற்றுநோய், தைராய்டு புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் அபாயம் அதிகம்.
 கண்களோட வெளித்திரை சுருங்கி விரிவதில் பிரச்னை, கேட்டராக்ட்னு பலதும் 45 வயசுக்குப் பிறகுதான் தொடங்கும். 
40 வயசுக்குப் பிறகு ஒவ்வொரு ஆணும் கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்து ரத்தக்குழாய்கள்ல கொழுப்பு படிஞ்சிருக்கானு பார்க்கணும். 
இந்த வயசுல பலருக்கு ஆண்மைக்குறைவு வரும். 
அதை வயசானதோட அறிகுறியா அலட்சியப்படுத்தக் கூடாது. ஆண்மைக்குறைவால பாதிக்கப்படறவங்களுக்கு, அடுத்த ஒன்றரை வருஷத்துல மாரடைப்பு வரும் வாய்ப்புகள் மிக அதிகம். 
60 வயசுல ரத்த அழுத்தம், தைராய்டு, புற்றுநோய்க்கான பரிசோதனைகளை மேற்கொள்ளணும். 
70 பிளஸ்ல உள்ள ஆண்களுக்கு எலும்புகள் பலவீனமாகி, ஆஸ்டியோபொரோசிஸ் தாக்கலாம். சுலபமா கீழே விழுந்து, அடிபட்டு, எலும்புகள் முறிஞ்சு போய், படுத்த படுக்கையாகலாம். 
இதைத் தவிர்க்க அவங்க தங்களை எப்போதும் சுறுசுறுப்பா வச்சுக்கணும். உடற்பயிற்சியைத் தவிர்க்கக் கூடாது. 
பாத்ரூம் மற்றும் டாய்லெட்டை ஈரமில்லாம, வழுக்காத தரையுடன் கூடியதா மாத்தணும். அந்த வயசுல துணையை இழக்கறது, பிள்ளைகளோட உதாசீனம், பொருளாதார நலிவுனு பல காரணங்களால மனரீதியா ரொம்பவே உடைஞ்சு போயிடுவாங்க. 
அதுலேருந்து அவங்களை மீட்டெடுக்க, கவுன்சலிங்கும், ஆதரவு சிகிச்சையும் அவசியம்.

நம்மளோட மரபணுவுல உள்ள டெலோமேர் (telomere) கொஞ்சம் கொஞ்சமா குறையற போதுதான் வயோதிகம் தாக்குது. நோய்கள் வந்து, இறப்பு நெருங்குது. சிகரெட், குடி மாதிரியான பழக்க
ங்களைத் தவிர்த்து, சரியான உணவு, முறையான உடற்பயிற்சி, கூடவே இந்த டெலோமேரை அதிகப்படுத்தற ஊட்டச்சத்து மருந்துகளை எடுத்துக்கிட்டா, ஒவ்வொருத்தரும் 100 வயசு வரை வாழலாம். 
அதுவும் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வாழ முடியும்

ஒரு நாளைக்கு 1,440 நிமிடங்கள் உள்ளன.
 அதில் வெறும் 30 நிமிடங்களை உடற்பயிற்சிக்கு ஒதுக்குவதால் உண்டாகும் பலன்கள் தெரியுமா?

மாரடைப்பு அபாயம் குறையும். மூளையில் ஏற்படுகிற பக்கவாதம் தவிர்க்கப்படும்.
 கொலஸ்ட்ரால் கட்டுக்குள் வரும்.
 ரத்த அழுத்தம், நீரிழிவு, பெருங்குடல் புற்றுநோய் தாக்கும் வாய்ப்புகள் வெகுவாகக் குறையும். 
எலும்புகள் உறுதியாகும். 
இல்லற வாழ்வில் ஆரோக்கியம் நீடிக்கும். 
மன அழுத்தம் குறையும்.
                                                                                                 -மருத்துவர் காமராஜ்.
===========================================================================================