என்னமா... இப்படிப் பண்றீங்களேம்மா..!

பாலியல் தொல்லைகளுக்கு எதிராக பொது மக்களும் பொங்கி எழுவது நல்ல ஒரு விடயமாக உள்ளது.அதற்கு மக்களைப்பாராட்டலாம்.
ஆனால் இந்த பாலியல் சீண்டல்கள் என்ற பெயரில் இப்போது நடந்துள்ள சில ச்ம்பவங்களைப்பார்க்கையில் நமக்கு அதிர்ச்சியாக உள்ளது.ஆற அமர யோசிக்காமல் ,அது உண்மையா என்று தெரியாமல் இப்படிபட்ட பாலியல் சீண்டல் குற்றவாளிகளை பொது மக்கள் தண்டிப்பது சரியா என்ற கேள்வி இப்போது நம் முன் உள்ளது.
அதற்கு அருகாமையில் நடந்த இரு சம்பவங்களே காரணம்.
1.அரியானாவில் சகோதரிகள் ஒருவரை பேருந்தில் பெல்டால் தாக்கி அவரையும் அவருடன் வந்த மூவரையும் உள்ளே தள்ளியது.
2. பெங்களூரில் பெண்ணை பலாத்காரம் செய்ததாக வாலிபர் ஒருவரை பொது மக்கள் அடித்து ,உதைத்ததில் அந்த வாலிபர் மரணத்தை எதிர் நோக்கி மருத்துவமனையில் இருப்பது.

இதில் இரண்டாவது நிகழ்வில் வாலிபரை பலர் தாக்கியுள்ள போதும் காவல்துறை விசாரணையில் பாலியல் பலாத்காரத்திற்குட்பட்டவர் யார் என்றே தாக்கியவர்கள் உட்பட யாருக்கும் தெரியவில்லை.யாரும் நேரடியாக எதையும் பார்க்கவில்லை.என்ன நடந்தது என்று கூட தெரியவில்லை.
எல்லாம் அவர் சொன்னார்,இவர் சொன்னார்தான்.
பாவம் அடி பட்ட வாலிபர் பேச இயலாத மரணப்படுக்கையில்.இதில் குற்றவாளி யார்? என்ன வென்றே தெரியாமல் தாக்கியவர்கள்தான்.யாரோ அந்த வாலிபரின் விரோதி தான் இந்த பாலியல் கதையை கட்டி விட்டு தன் வஞ்சத்தை தீர்த்திருக்க வேண்டும்.
முதல் நிகழ்வில் பெரிய வீராங்கணைகள் அளவுக்கு பாராட்டப்பட்டு இந்தியா முழுக்க ஊடகங்களால் புகழ் பரப்பப் பட்ட இரு சகோதரிகளின் குட்டு இப்போது வெளி வந்துள்ளது.அ ரியானா மாநிலம் ரோதக் நகரில் ஓடும் பேருந்தில், 2 சகோதரிகளிடம் 3 இளைஞர்கள் தவறாக நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில் திடீர் திருப்பமாக, அந்த இளைஞர்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்று அதே பேருந்தில் பயணம் செய்த 6 பெண் பயணிகள் போலீஸில் தெரிவித்துள்ளனர்.

 ரோதக்கைச் சேர்ந்த சகோதரிகளான ஆர்த்தி மற்றும் பூஜா ஆகியோர் அந்த மூன்று இளைஞர்களையும் பெல்ட்டால் சரமாரியாக அடித்தனர். 
இதுதொடர்பான காட்சி வீடியோவில் படமாக்கப்பட்டு வெளிவந்தது. இதையடுத்து குல்தீப், மோஹித், தீபக் ஆகிய மூன்று இளைஞர்களையும் போலீஸார் கைது செய்தனர்.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்று அந்தப் பேருந்தில் பயணம் செய்த 6 பெண்களில் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். 
இதுதொடர்பாக தங்களது சாட்சியத்தையும் அவர்கள் பதிவு செய்துள்ளனர்.
 மேலும் ரோதக் டிஎஸ்பி யாஷ்பால் கத்னா உறுதிப்படுத்தியுள்ளார். 

சோனிப்பட்டைச் சேர்ந்த விமலா என்ற பெண் கொடுத்துள்ள சாட்சியத்தில்,
 ”ரோதக் பஸ் நிலையத்தில் பஸ் நின்றிருந்தபோது உடல் நலம் இல்லாத ஒரு பெண்ணுக்காக டிக்கெட் வாங்கித் தருமாறு நான்தான் குல்தீப்பிடம் [தாக்கப்பட்டவர்]பணம் கொடுத்து கேட்டேன். 
அப்போது அந்த உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் உட்கார வேண்டிய சீ்ட்டில் இந்த இரு சகோதரிகளும் உட்கார்ந்திருந்தனர். 
இதைப் பார்த்த குல்தீப், அவர்களிடம் வயதான அவரை உட்கார இடம் கொடுக்குமாறு கூறினார். 
மேலும் டிக்கெட்டையும் காட்டினார். ஆனால் அவர்கள் எழுந்திருக்கவில்லை. 


மாறாக சகோதரிகள் இருவரும் குல்தீப்பிடம் சண்டைக்குப் போய், திடீரென பெல்ட்டை எடுத்து குல்தீப்பை சரமாரியாக அடிக்க ஆரம்பித்து விட்டனர். 
இதைத்தான் ஒரு பெண், தான் வைத்திருந்த மொபைல் போனில் பதிவு செய்தார். 
அடிபட்டு அவமானப்பட்ட நிலையில் குல்தீப் பஸ்சிலிருந்து இறங்கி விட்டார். 
போலீஸார் வந்த பின் குல்தீப்பையும், அவருடன் வந்த மற்ற இருவரையும் சேர்த்து சகோதரிகள்  பொய்யான பாலியல் சீண்டல் புகார் கூறினர். நான் தான் இந்த பிரச்னைக்கு ஆரம்பமாக குல்தீப்பிடம் டிக்கட் வாங்க சொன்னேன்.எனக்கு இந்த சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.உதவி செய்த வாலிபர்கள் அடிவாங்கி அவமானப்பட்டதோடு அசிங்கமான காரணத்தால் கைதும் ஆவது வேதனையை தருகிறது.
அந்த மூன்று இளைஞர்களுமே தவறு செய்யவில்லை.தவறு செய்தவர்கள் சகோதரிகளான ஆர்த்தி மற்றும் பூஜா ஆகியோர்தான்”என்று விமலா கூறியுள்ளார். 
இதேபோல அந்த பேருந்தில் வந்த மேலும் 5 பெண்களும் காவல்துறையிடம் கூறியுள்ளனர். 

இதில் 4 பேர் அந்த சகோதரிகளின் சொந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள், உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்சகோதரிகள் இருவரிடம் மூன்று வாலிபர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. 
ஆனால் போலீஸ் விசாரணையின் போது இளைஞர்கள் மூவரும்அப்பாவிகள் என்றும், இரு சகோதரிகளிடம் எவ்வித அத்துமீறலிலும் ஈடுபடவில்லை என்றும் தெரியவந்தது. மேலும் அப்பெண்கள் மூன்று வாலிபர்களை அடிக்கும் போது, கர்ப்பிணி பெண் ஒருவர் அக்காட்சிகளை படமெடுத்தாகக்  கூறப்பட்டது. ஆனால் அந்த பெண்ணை இது வரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் சகோதரிகள் இருவரும் பூங்கா ஒன்றில் வாலிபரை அடிக்கும் மற்றொரு வீடியோ காட்சி வெளியானது. 
இது பற்றி தனியார் தொலைக்கட்சியில் பேசிய  அப்பெண்கள், தங்களை அநாகரிகமாக பேசிய வாலிபரை தாக்கியதாக  தெரிவித்தனர். அப்போதும் இதை முதலில் இருந்தே திட்டமிட்டு  யாரோ ஒருவர் படம் பிடித்ததாக தரிகிறது. அதைப்போலவே பேருந்து சம்பவமும் முதலில் அடி விழுவதில் இருந்து படம் சரியாக பிடிக்கப்பட்டுள்ளது.அதையும் ஒரு பெண் தான் எடுத்ததாக தெர்யவந்துள்ளது.இந்த வீடியோவையும் யார் எடுத்தார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
சகோதரிகள் இருவர் மட்டும் சம்பந்தப்படும்  வீடியோக்களை யார்தான் எடுத்தார்கள் என்பதற்கு சரியான விடையும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் அம்மாநில முதல்வர் கத்தாரை சந்தித்த மூன்று வாலிபர்களின் குடும்பத்தினர், இரு தரப்பையும் தீர விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.மேலும் அப்பெண்கள் வந்த பேருந்தில் வந்த பெண்கள் ஆறு பேர்களும் வாலிபர்கள் தவ்று செய்யவில்லை என்று சொல்லியுள்ளனர்.அதில் நான்கு பேர்கள் அந்த பெண்களின் உறவினர்கள்,கிராமத்தைச்சேர்ந்தவர்கள்.
 இதனால் வீராங்கனைகள் சகோதரிகள் இருவருக்கும் வழங்கப்படுவதாக இருந்த பரிசுத்தொகையை  நிறுத்தப் பட்டது.. 
இது போன்ற பொய்யான குற்ற சாட்டுகளால் உண்மையாக பாதிக்கப்பட்டவர்களை கூட தவறாக எண்ணக்கூடிய நிலைதான் உண்டாகும்.
இப்படி எல்லாம் பண்ணாதீங்கமா!


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அசரவைக்கும் அ.தி.மு.க-வின் தேர்தல் செலவுகள்
                                                                                                                                 
     மக்கள் சேவை அல்லது தொண்டு செய்வதற்காக அரசியல்வாதிகள் ரொம்ப ஆர்வமாக இருக்கிறார்கள்.அதற்காக தங்கள் சொந்தப்பணத்தை தண்ணீராக செலவழிக்க அவர்கள் தயங்குவதில்லை.அவ்வளவு பொது நல பாசம்.
இதோ கடந்த மக்களவைத்தேர்தலில் அதிமுக செலவிட்ட தேர்தல் செலவினம்.இது தேர்தல் ஆனையத்திடம் கொடுக்கப்பட்ட பட்டியல்.இதற்கு மேலாகவே அவர்கள் மக்களுக்கு செலவிட்டிருக்கலாம்.இதில் அந்தந்த தொகுதியில் வேட்பாளர்கள் செலவிட்ட கணக்கு சேர்க்கப்படவில்லை.அந்த கணக்கை தேதல் ஆணையத்திடம் தனியெ கொடுத்துள்ளார்கள்.
மேலும் 144 தடை உத்திரவு அன்று மக்களுக்கு வாக்குச்சாவடி வந்து போகும் போக்குவரத்துப்படியாக அதிமுக தலைமை வழங்கிய ஒருவருக்கு குறைந்தது 200ரூபாய் என்று கொடுத்தது தடை உத்திரவு இருந்த காரணத்தால் இக்கணக்கில் சேர்க்க வில்லையாம்.
காலியான முதல்வர் இருக்கை.
டந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் ஹைலைட் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் பிரசாரம்தான். ''செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?'' என்ற ஜெயலலிதாவின் முழக்கத்துக்கு நிகராக பேசப்பட்டது, ஜெயலலிதாவின் ஏரியல் வியூ பிரசாரம். ஹெலிகாப்டரும் பிரசார பொதுக்கூட்டங்களும் ஷங்கர் பட பிரமாண்டம்.
 இதற்காகக் கொட்டப்பட்ட கரன்ஸிகள் பற்றிய ரிப்போர்ட் இது.
ஜெயலலிதா தவிர நாஞ்சில் சம்பத், பரிதி இளம்வழுதி, நடிகர்கள் ராமராஜன், சிங்கமுத்து, ஆனந்தராஜ், குண்டு கல்யாணம், வையாபுரி, ஆர்த்தி, விந்தியா, டி.கே.கலா, சி.ஆர்.சரஸ்வதி, குயிலி, 'வெண்ணிற ஆடை’  நிர்மலா, நிர்மலா பெரியசாமி, ஃபாத்திமா பாபு என 33 பேர் அடங்கிய ஒரு நட்சத்திர பட்டாளமே நாடாளுமன்றத் தேர்தலில் பிரசாரம் மேற்கொண்டது. இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சத்து 41 ரூபாய் செலவழிக்கப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக லியாகத் அலிகான், 'வெண்ணிற ஆடை’ நிர்மலா, தியாகு, வையாபுரி, பாலு ஆனந்த், ஏ.கே.ராஜேந்திரன் ஆகியோருக்கு மட்டும் தலா ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலவழித்து இருக்கிறார்கள். இதில் நடிகை ஆர்த்திக்குத்தான் மிகக் குறைவாக 83 ஆயிரம் ரூபாய் செலவழிக்கப்பட்டு இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த 33 ஸ்டார் பேச்சாளர்களுக்கு மட்டும் ரூ.45.91 லட்சம் ஒதுக்கப்பட்டது.
அடுத்து, ஜெயலலிதாவின் ஆகாய செலவுகள். 
ஜெர்ரி ஜான் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்தில் இருந்துதான் ஹெலிகாப்டரை ஜெயலலிதாவுக்காக வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள். ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்த வகையில் ஹெலிகாப்டர் நிறுவனத்துக்கு ரூ.5.50 கோடி வழங்கப்பட்டிருக்கிறது.  
ஏரோ ஏர்கிராஃப்ட், நவயுகா இன்ஜினீயரிங் ஆகிய நிறுவனங்களில் இருந்து விமானங்கள் ரூ.2.08 கோடிக்கு வாடகைக்கு எடுக்கப்பட்டு இருக்கிறது. 
34 இடங்களில் ஹெலிகாப்டர் இறங்குதளம் (ஹெலிபேடு) அமைக்கப்பட்ட வகையில் ரூ.5.80 கோடி ரூபாய் செலவானது. 
அதாவது, ஹெலிகாப்டர் விமானம் மற்றும் ஹெலிபேடு செலவுக்கு மட்டும் மொத்தமாக ரூ.13.39 கோடி செலவழித்து இருக்கிறது அ.தி.மு.க. 
இதுதவிர, ஹெலிபேடில் இருந்து பொதுக்கூட்ட மேடைக்கு வருவதற்காக ஜெயலலிதா பயன்படுத்திய டெம்போ வேனுக்கு ரூ.2.46 லட்சம் செலவு.    
தேர்தல் பிரசாரத்தை ஊடகங்கள் வழியாகவும் அ.தி.மு.க மேற்கொண்டது. டி.வி சேனல்களில் மேற்கொண்ட பிரசாரத்துக்கு ரூ.12.57 கோடியும் எஸ்.எம்.எஸ் மூலம் நடந்த பிரசாரத்துக்கு ரூ.1.26 கோடியும் மொபைல் வேன், ரேடியோ, இணையதளம் மற்றும் மின்னணு விளம்பரம் ஆகியவற்றுக்காக ரூபாய் ஒரு கோடியும் செலவழித்தார்கள்.
 ஊடகங்கள் வழியாகப் பிரசாரம் மேற்கொண்ட வகையில் மட்டும் மொத்தமாக 14.97 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு உள்ளது. 
போஸ்டர்கள் 2.42 கோடி ரூபாய்க்கு அச்சடிக்கப்பட்டன.
40 தொகுதிகளிலும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் செய்தார் ஜெயலலிதா. இதற்காக பந்தல், மேடை, மைக்செட் ஆகியவை அமைக்கப்பட்டன. இதற்கான செலவுகளையும் பார்ப்போம். மொத்தமாக 35 இடங்களில் ஜெயலலிதா பேசினார். இந்த பொதுக் கூட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் சராசரியாக ஒரு லட்சம் வரை ஆடியோ சிஸ்டத்துக்கு செலவழித்து இருக்கிறார்கள். மொத்தமாக 35 கூட்டங்களுக்கும் ஆடியோ சிஸ்டத்துக்கு ரூ.36.30 லட்சம் செலவானது. மேடை அமைத்த வகையில் ரூ.47.14 லட்சமும் மேடையில் ஜெயலலிதாவுக்கு தற்காலிக ஏஸி வசதி செய்து கொடுப்பதற்காக ரூ.6.30 லட்சமும் செலவழிக்கப்பட்டன. ஒரு மேடை அமைக்க ஆன சராசரி செலவு ஒரு லட்சத்து 39 ஆயிரம் ரூபாய்.
வேட்பாளர்கள் செய்த செலவுகள் சேர்க்காமல் அ.தி.மு.க தலைமை ஒட்டுமொத்தமாக செலவழித்த தொகை மொத்தம் ரூ.32,19,48,396.
இதுக்கே தலைசுத்துதா?  
இது கணக்கில் வந்தது மட்டும்தான்.தலா 200 முதல் 500 வரை சேர்க்கப்படவில்லை.அதையும் சேர்த்து பார்த்தால் ?வேண்டாம் உங்கள் ரத்த அழுத்தம் அதிகமாகிவிடும்.

தேர்தல் செலவுகள் என்னென்ன?
ஸ்டார் பேச்சாளர்கள் - 45,91,000
ஹெலிகாப்டர் வாடகை - 5,50,01,344
விமானங்கள் வாடகை -  2,08,31,034
டெம்போ டிராவலர் - 2,46,088
டி.வி பிரசார விளம்பரங்கள் -  12,57,13,140
மொபைல் வேன் பிரசாரம் - 33,70,800
ரேடியோ விளம்பரம் -  46,26,929
இணையதள விளம்பரம் - 19,21,630
மின்னணு விளம்பரம் - 15,16,860
எஸ்.எம்.எஸ் விளம்பரம் - 1,26,34,880
தேர்தல் அறிக்கை - 2,26,800
போஸ்டர்கள் - 2,42,23,100
ஹெலிபேடு - 5,80,70,223
ஆடியோ சிஸ்டம் - 36,30,000
மேடை அமைத்தல் - 47,14,046
தற்காலிக ஏஸி வசதி - 6,30,522
மொத்தம் - ரூ. 32,19,48,396
                                                                                                 நன்றி:-எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

சகாயம் குழுவில் கனிம முறைகேடுகள் மனு கொடுத்த காவல்துறையினர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கேரளாவில் பறவைக்காய்ச்சல் தொடர்ந்து பரவி வருவது ஏன்?


 கேரளாவில் இரண்டு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்தில் வாத்துக்கள் பல பறவைக்காய்ச்சலுக்கு பலியானதைத் தொடர்ந்து, இந்த பகுதியில் சுமார் 20,000 வாத்துக்களை அழிக்கும் நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டிருக்கிறது.
இந்த பகுதியில் இறந்து போன வாத்துக்களின் ரத்தமாதிரிகளை சேகரித்த கேரள கால்நடைத்துறை அதிகாரிகள் அதை போபாலுக்கு சோதனைக்கு அனுப்பினார்கள். 
அந்த சோதனை முடிவுகளில் வாத்துக்கள் அனைத்தும் பறவை காய்ச்சல் பாதிப்பு காரணமாக இறந்து போனது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
 “எச் 5” ரக பறவைக் காய்ச்சல் அந்த பகுதியில் பரவியிருப்பதை இந்த பரிசோதனை முடிவுகள் தெரிவித்திருக்கின்றன.
இந்த எச் 5 ரக பறவைக்காய்ச்சல் கேரளாவின் மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கவும், இந்த பறவைக்காய்ச்சல் வைரஸ் மனிதர்களுக்கு தொற்றாமல் இருக்கவும் பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் அனைத்து வாத்துக்களையும் அழிக்கும் பணியை கேரள மாநில அரசும் அந்த பகுதி விவசாயிகளும் செய்து வருகின்றனர்.
கேரளாவின் இந்த குறிப்பிட்ட பகுதியில் கடந்த ஆண்டும் பறவைக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருந்தது. மீண்டும் அதே பகுதியில் பறவைக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருப்பதற்கு பறவைக்காய்ச்சலை தோற்றுவிக்கும் வைரஸ் அந்த பிராந்தியத்தில் இருந்து முழுமையாக அழிக்கப்படவில்லை எனபதே காரணம் .
பறவைக்காய்ச்சலைத் தோற்றுவிக்கும் வைரஸ் பன்றிகளின் உடலை பாதுகாப்பாக பதுங்கியிருப்பதற்கான இடமாக பயன்படுத்துகிறது.
 இந்த குறிப்பிட்ட பறவைக்காய்ச்சல் வைரஸை தன் உடலில் சுமக்கும் பன்றிகள் அடையாளம் கண்டு அழிக்கப்படாமல் இருப்பது தான் இந்த ஆண்டும் அதே பகுதியில் பறவைக்காய்ச்சல் தொற்று ஏற்பட முக்கியக் காரணம் .
இந்த பறவைக்காய்ச்சல் வைரஸானது, தான் பதுங்கியிருக்கும் பன்றிகளை பாதிப்பதில்லை என்பதாலும், அவை மனிதர்களுக்கு உடனடியாக தொற்றுவதில்லை .
, இந்த வைரஸ் வெகு விரைவில் மரபணு மாற்றம் செய்து மனிதர்களைத் தாக்கும் தன்மை கொண்டது என்பதால், இதை உடனடியாக முற்றிலும் இல்லாமல் ஒழிக்க வேண்டியது மிகவும் அவசியம்.அவசரம்.









பறவைக் காய்ச்சலைத் தோற்றுவிக்கும் வைரஸ்
பறவைக் காய்ச்சலைத் தோற்றுவிக்கும் வைரஸ்









இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?