இந்தியாவை ஒழித்துக் கட்டுவதுதான்,

அந்நிய மூலதனத்தின் அடையாளம்!


அந்நிய மூலதனத்தை இந்தியாவின் புதிய பிரதமர் மோடி நாடு,நாடாகப்போய் பிச்சை எடுப்பதுபோல் கேட்டு வருகிறார்.
அதை தனது அரசின் சாதனையாக பிரமாதப் படுத்திக்கொண்டு இருக்கிறார்.ஆனால் அந்நிய மூலதனம் .அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் தொடங்கிய தொழில்களின் லட்சனம் முன்பு யூனியன் கார்பைட் மூலம் போபாலில் பார்த்தோம்.
இப்போது நோக்கியா,பொக்ஸ்கான் என்று பார்த்துக்கொண்டும் இருக்கிறோம். நோக்கியா தனக்கு வழங்கப்பட்ட சலுகைகள போதாது என்று இந்தியா அரசையே ஏமாற்றி ஏற்றுமதிக்கு என்று சலுகை பெற்று 170000கோடிக்கு வரி ஏய்ப்பு செய்தது.
தனது தாய் நிறுவனத்துக்கு ராயல்டி என்ற பெயரில் அனுப்பிய 21000 கோடிகளுக்கும் வரி கட்டவில்லை.தமிழக அரசுக்கும் 2100 கோடி வாட் வரியில் ஏமாற்று.
இதைத்தான் கோக-கோலா,பெப்சி நிறுவனங்களும் தொடர்ந்து செய்து வருகின்றன.
மாட்டிக்கொண்டால் நட்டம் என்று கூறி கடையை மூடிக்கொண்டு சொந்த நாட்டுக்கு இந்தியாவில் அடித்த கொள்ளையை மூட்டைக்கட்டிக்கொண்டு திரும்பி விடுகின்றனர்.
இந்த நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பை பெற்ற தொழிலாள்ர்கள் தெருவில் வாழக்கையை கேள்விக்குறியோடு பார்த்துக்கொண்டு நிற்கின்றனர்.
இதுதான் அந்நிய மூலதனத்தின் முடிவு.ஆப்ரிக்க நாடுகளில் அந்நிய மூலதனம் என்று இறக்கிய பணத்தை கொள்ளையடித்தவுடன் மூட்டைக்கட்டிக்கொண்டு இவர்கள் திரும்பியதால் இன்று அவை பசி,பட்டினியால் அலைக்கழிவதை பார்க்கிரோம்.ஆனால் இவை எதுவும் இந்திய ஆள்வோர் கண்ணில் படவில்லை.அவர்கள் கண்களை அந்நிய நிறுவனங்கள் தரும் பிச்சைக்காசுதான் மறைத்து விடுகிறதே?

உலகின் மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா 2005ம்ஆண்டு மிகப்பெரிய ஆரவாரத்தோடு தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் தனது தொழிற்சாலையை தொடங்கப்போவதாக அறிவித்தது.

 அப்போது தமிழகத்தை ஆட்சி செய்த முதல்வர் ஜெய லலிதா இந்த அறிவிப்பை மிகப்பெரிய சாதனையாக விளம்பரப்படுத்தினார்.

தமிழக இளைஞர்கள் 30,000 பேருக்கு உலகின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனமான நோக்கியாவில் வேலைகிடைக்கப்போவதாக பிரகடனப்படுத்தினார்.
தமிழக விவசாயிகளுக்கு சொந்தமான 210 ஏக்கர் (85 ஹெக்டேர்) நிலத்தை ஏக்கர் ரூபாய் எட்டு லட்சத்துக்கு வாங்கி நோக்கியா நிறுவனத்துக்கு நான்கு லட்சத்துக்கு கொடுத்தது தமிழக அரசு. 
தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு கட்டணம் தாறுமாறாக உயர்த்தப்பட்ட தால் சாமானிய மக்கள் நிலம் விற்க வாங்க சிரமப்பட்ட காலத்தில் நோக்கியாவிற்கு பத்திரப்பதிவு கட்டணம் தள்ளுபடி செய்யப்பட் டது.
இதனால் பல கோடி லாபமடைந்தது நோக்கியா.
மின் தட்டுப்பாடும் நிலவிய காலத்தில் நோக்கியாவுக்கு தடையில்லா மின்சாராமும், தண்ணீரும் சொற்ப கட்டணத்துக்கு வழங்கப்பட்டது. 
தமிழ்நாடு மின்சார வாரியம்தொழிற்சாலை வளாகத்திற்குள் தனி சப்ஸ்டேசன் ஒன்றை தன் செலவில் அமைத்துக் கொடுத்தது.
நோக்கியா அமைத்த இன்னொரு சப்ஸ்டேசனுக்கான செலவில் 50 சதவீதத்தை அரசு திரும்பக் கொடுத்தது.மத்திய அரசு தன் பங்கிற்கு கலால்வரி, சுங்கவரி, வருமான வரி விலக்கு கொடுத்து பத்தாண்டு காலத்திற்கு வரிவிடுமுறை அளித்தது.
இத்தனை வாய்ப்பையும் பயன்படுத்தி நோக்கியா கோடிக்கணக்கில் செல்போன் களை தயாரித்து குவித்தது. ஏற்றுமதி செய்வ தாகக் கூறி சலுகை பெற்றதை மறைத்து பெரும்பகுதி செல்போன்களை இந்திய சந்தையில் விற்றது. 
2010ல் இந்திய சந்தையை 53 சதவீதம் நோக்கியா செல்போன்களே ஆக் கிரமித்தன. 3310 என்ற ஒரு மாடல் மட்டுமே 12 கோடி இங்கு விற்கப்பட்டது என்றால் மொத்தவிற்பனையை கற்பனை செய்து கொள்ளுங்கள். 
கடந்த 8 ஆண்டுகளில் இந்திய சந்தையில் விற்கப்பட்ட செல்போன்கள் மூலம் ரூபாய் ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடியை அள் ளிச் சென்றது.
இந்நிலையில் புதிய ஆன்ட்ராய்ட் மற்றும் டச் ஸ்கிரீன் தொழில்நுட்பத்துடன் சந்தையில் நுழைந்த சாம்சங் நிறுவனம் உலக செல்போன் சந்தையை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. 
அது வேகமாக வளர்ந்து வந்த இந்திய செல்போன் சந்தையையும் உலுக்கியது. மலிவான சீன செல்போன்களும் ஏழை நடுத்தர வாடிக்கை யாளர்களை ஈர்த்தன. 
இதனால் 53 சதமாக இருந்த நோக்கியாவின் விற்பனை 2013ல் 23 சதவீதமாக சுருங்கியது.சந்தை சுருங்கி, வரி விடுமுறை காலம்முடியும் தருவாயில் ஆலையை வேறு மாநிலத்திற்கோ அல்லது வேறு நாட்டிற்கோ மாற்ற முடிவு செய்தது.
அதற்கான நடவடிக் கையில் ஈடுபடும் நிலையில் நோக்கியா சாப்ட்வேர் பயன்பாட்டிற்கான ராயல்டி என்ற பேரில்தனது தாய்நாடான பின்லாந்துக்கு அனுப்பிய தொகைக்கு ரூ. 21,000கோடி வரி ஏய்ப்பு செய்ததாக வழக்கு தொடர்ந்தது மத்திய அரசு. 
மறுபக்கம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதாக கூறி உள்நாட்டிலேயே செல்போன் விற்ற வகையில் ரூ. 2400 கோடி வாட்வரியை திரும்பக் கட்ட சொன்னது தமிழக அரசுஇந்நிலையில் செல்போன் தயாரிப்பை மைக்ரோசாப்ட்டுக்கு விற்பனை செய்தது நோக்கியா.
 ஸ்ரீபெரும்புதூர் ஆலை பெயரில் இருந்த இந்த கடப்பாடுகளால் மைக்ரோசாப்ட் ஆலையை ஏற்க மறுத்துவிட்டது.
நோக்கியா செல்போன் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கான உரிமை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுவிட்ட நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ஆலையை மூடிவிட முடிவு செய்தது.
தொழிலாளர் சட்டங்கள் வலுவாக இருக்கிறது என்று குற்றம்சாட்டப்படும் காலத்திலேயே இப்படி நடப்பதை தடுக்க முடியவில்லை.
இப்போதோ முதலீட்டாளர்கள் மனம் குளிரும் வகையில் அந்நிய முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்குகிறோம் என்று தொழிலாளர் சட்டங்கள் அவசரமாக திருத்தப்படு கிறது.
நெகிழ்வான தொழிலாளர் சந்தைஎன்ற பெயரில் தொழிலாளர் நலச்சட்டங் களின் அமலாக்கத்தை கண்காணிக்கும் இன்ஸ்பெக்டர் ராஜியம் பிரதமர் மோடியின்வாய்மொழி உத்தரவில் ஒழிக்கப்பட்டுவிட்டது. 
தொழிலாளர் சட்டங்களை சரியாக அமல்படுத்துகிறோம் என்று நிறுவன உரிமையாளர் கள் தங்களுக்கு தாங்களே சான்றளித்தால் போதும் என்று சட்ட மீறல்களுக்கு சட்ட பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. 
எனவே இன்னும் பல நோக்கியாக்களை தொடர்ந்து எதிர்பார்க்கலாம்.அந்நிய மூலதனம் வந்தால் தான் வளர்ச்சி ஏற்படும். 
வேலைவாய்ப்பு கிடைக்கும், நாடு முன்னேறும் என்று வாய்ப்பந்தல் போடும் அரசியல்வாதிகளுக்கு நோக்கியா கார்ப்பரேட் உலகின் உண்மை முகத்தை காட்டி இருக்கிறது.
 “மேக் இன் இந்தியா” “உழைப்பே வெல்லும்” என்று புதிய புதிய முழக்கங்களை எழுப்பி மக்களை மயக்குவதை அவர்கள் தொடர்கிறார்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
மருத்துவ சாதனங்களில் 100 விழுக்காடு அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அமைச்சரவை முடிவுசெய்துள்ளதாக மத்தியஅரசின் தொழிற்கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.

பாஜக அரசு பதவி ஏற்றதிலிருந்து பல துறைகளில் அந்நியநேரடி முதலீட்டை அனுமதித்து வருகிறது. 

காப்பீட்டுத்துறை, பாதுகாப்புத்துறை, விமானப்போக்குவரத்து ,ரயில்வேத்துறை,கட்டுமானத்துறை ,சுரங்கத்துறைஉள்ளிட்டஎண்ணற்ற துறைகளில் அந்நியநேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்தவரிசையில்அரசின் கட்டுப்பாட்டிலிருந்த மருந்து உற்பத்தி மற்றும் மருந்துகளின் விலைஆகியவையும் தனியாருக்கு திறந்து விடப்பட்டது. 

இதனைத் தொடர்ந்துமருத்துவ சாதனங்கள் தயாரிப்புத் துறையிலும் அந்நிய முதலீடு 100 விழுக்காடு வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதியை குறைக்கவும் உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்கவும் மருத்துவ சாதனங்கள் உற்பத்தியில் அந்நியநேரடி முதலீடு 100 விழுக்காடுவரை அனுமதிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டு இதற்காகசெய்திக்குறிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. 

இந்திய மருத்துவ தொழில்நுட்பத் துறையானது ஆண்டுக்கு 630 கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டியுள்ளது.

அடுத்த ஆண்டு மேலும்400 கோடி டாலர் அளவுக்கு வளரும்என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்துறையானது மருந்துமற்றும் அழகுச்சாதனங்கள்சட்டத்தின் கீழ் உள்ளது. 
இச்சட்டமும் இதற்கேற்ப திருத்தப்படும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.இதற்கிடையே மருந்துஆணையத்தின் கட்டுப்பாட்டிலிருந்த மருந்துகள் ஆணையத்தின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இது போல மருந்து விலைகட்டுப்பாட்டை நீக்கினால் உயிர்காக்கும் மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏழைமற்றும் நடுத்தர மக்கள் வாங்கமுடியாதபடி ஏறி விடும். 
அதனால்அவர்கள் தங்களது நோய்களிலிருந்து குணமாக முடியாமல் போகலாம். அவர்களின் உயிர்வாழும் உரிமையே கேள்விக்குள்ளாகி விடும் என்று சுகாதாரத் துறையில் செயல்படும் சமூகசெயல்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் .
இதனைத் தொடர்ந்து மருந்துகள் உற்பத்தித் துறையில் கடுமையான நிபந்தனைகள்அடிப்படையில் வெளிநாட்டுக் கம்பெனிகள் அனுமதிக்கப்படும் என்றுகூறியது. 

தற்போதுமருத்துவசாதனங்கள் உற்பத்தியில் எந்தநிபந்தனைகளுமின்றி அந்நியநேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
============================================================================================================
இல்லாத மின்சாரமும் அதிர்ச்சி[ஷாக்]தரும்.
தமிழகத்தில் அனைத்து நுகர்வோருக்குமான மின் கட்டணம் நாளை (12ஆம் தேதி) முதல் உயர்த்தப்படுகிறது.



 வீடுகளுக்கு முதல் 100 யூனிட் வரையிலான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 40 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. 
முதல் 200 யூனிட் வரை பயன்படுத்தினால் யூனிட்டிற்கு 45 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

 அதேபோல், 500 யூனிட் வரை பயன்படுத்தினால் முதல் 200 யூனிட்டிற்கு 50 காசுகளும், 201 முதல் 500 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு 60 காசுகளும், 500 யூனிட்டுக்கு மேல் யூனிட் ஒன்றிற்கு 85 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன.

 தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 85 காசுகளும், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.1ம், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு யூனிட்டிற்கு 85 காசுகளும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு யூனிட்டிற்கு ரூ.1.85 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன.
''2 மாதத்திற்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகள் கூடுதல் கடடணம் செலுத்த தேவையில்லை. 
 கைத்தறி நெசவாளர்களுக்கு முதல் 100 யூனிட் வரை வழக்கம் போல் மின் கட்டணம் கிடையாது. 
100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் வீட்டுக்கான மின்கட்டணம்  வசூலிக்கப்படும். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?