இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

சனி, 31 ஜனவரி, 2015

"மதம் "பிடித்தவர்கள்?


இப்போது தூத்துக்குடியில் நடக்கும் கிருத்துவ-இந்து முன்னணி சண்டை மிக நன்றாக இருக்கிறது.
"மா.ஆ.தலைவர் அலுவலகம் முன் இந்து முன்னணியினர் நடத்திய  ஆர்ப்பாட்டத்தில் எங்களின் புனித நூல் பைபிள் தரையில் கொட்டப்பட்டு கோசங்கள் எழுப்பப் பட்டன.இது புனித நூலுக்கு அவமானம்.இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுங்கள்"
இதுதான் தற்போதைய சண்டை நிலவரம்.
நமக்கு இந்து முன்னணியினரின் மத வாதம் பிடிக்காது.இந்து முன்னணி மட்டுமல்ல எந்த மதத்தினரின் தீவிரவாதமும் பிடிப்பத்தில்லை.மதமும் பிடிப்பதில்லை.
காரணம் நாம் மதம்,கடவுள்,சாதி இவைகள் எல்லாம் மனிதனை பிரித்து அடிமைகளாக்கிட சில ஆதிக்கவாதிகளின் செயல் என்பது நம் கருத்து.
மதம் பிடிக்காத நாம் இந்த சண்டையை வேடிக்கை பார்க்க சென்ற போது கிடைத்தது சுவாரசியமானது .
ஒரு பள்ளியில் கிருத்துவ மத பரப்பிகள் சிலர் புத் தம் புதிய பைபிள்களை மாண்வர்களுக்கு துண்டறிக்கை போல் வசங்கி தங்கள் ஏசுவிடம் அடைக்கலமாக வேண்டிக் கொள்ள அது மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரிய அங்கேயே வாக்குவாதம் பெற்றோர்களுக்கும்,கிருத்துவ மதவாதிகளுக்கும் நடந்துள்ளது.
ஏற்கனவே இது போன்ற பைபிள்கள் பள்ளி மாண்வர்களுக்கு வழ ங்க தடை உள்ளது.
இது தெரிந்த இந்து மதவாதிகள் இந்து முன்னணி பேரில் மா.ஆ.தலைவர் அலுவலகத்தில் அந்த பைபிள்களை கொட்டி பிரச்னையை கோசங்களாக போட இப்போது அந்த பைபிள்கள் மா.ஆ.த.அலுவலகத்தில் வைக்கப் பட்டுள்ளது.
பைபிளை பள்ளி மாண்வர்களுக்கு மிட்டாய் போல் கொடுத்தது தவறா?அதை எதிர்த்து போராடியது தவறா?
இப்போது பைபிள் அவமதிக்கப்பட்டதாக புலம்புவது சரியா?
உண்மையில் பைபிளை அவமதித்தது யார்?
மாற்று மதத்தினரிடம்,இது போன்ற ஆட பிடிப்பு வேலை தடையில் இருக்கையில் லேகிய வியாபாரி விளம்பர துண்டறிக்கை போல் ,பேருந்தில் நாக்கை காட்டி பயணிகள் மடியில் "உதவுங்கள் " என்று நோட்டீஸ் போடு வோர் போட்டது புனித நூல் [?]பைபிளை அவமதிப்பது இல்லையா?
பைபிளை தரையில் போட்டது குற்றம் என்றால் பள்ளியில் வலுக்கட்டாயமாக மாற்று மதத்தின மாணவர்களிடம் தடையை மீறி பைபிளை கொடுத்து தங்கள் மதத்திற்கு ஆள் சேர்ப்பில் இறங்கியது குற்றம் தானே?
பெசாவரில் சிறார்களை காப்பாற்றாத அல்லா,
இமாலய பயணத்தில் பக்தர்களை காப்பாற்ற முடியாத சிவா,
நார்வேயில் 60 பேர்கள் ஆலயத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட போதும்.இப்போது பாகில் குரானை எரித்ததாக எரிக்கப்பட்ட கிருத்துவனை காப்பாற்ற முடியாத ஏசு இவர்களை நம்பாதீர்கள்என்று கூற உரிமை இல்லாதது குற்றமா?

நீங்கள் ஜெபித்துவிட்டீர்களா?....

 உலகத்தின் முடிவுநாள் வரை உங்களுடனே நான் இருக்கிறேன்,,, என்று உறுதிமொழி கொடுத்தார் இயேசுநாதர். யாரிடம் எப்போது இப்படிப்பட்டதொரு வாக்குறுதியை வழங்கினார்? யோவான் என்பவர் பத்மு என்கின்ற தீவில், தனிமையிலே இருந்தபோது, கனவிலே காட்சியளித்த இயேசு சொன்ன இந்த வார்த்தை களின்பேரில் நூற்றுக்குநூறு நம்பிக்கை வைத்து, அவரது அடியவர்கள் இன்றும் இயேசுவுடன் ஜெபம் என்ற பேரில் உரையாடுகின்றனர். இயேசு அப்பா என பாசம் கலந்த உரிமையுடன் உறவாடி வருகின்றார்கள்.
நேற்றும் இன்றும் மாறாதவர், ஆலோசனைக்கர்த்தா, ஜெபங்களைக் கேட்கின்ற தேவன் மற்றும் ஜெபங் களுக்கு பதிலளிப்பவர் என வாழ்த்தி வணங்கி மண்டியிட்டு தங்களது பிரச்சினைகளையும் தேவைகளையும் இயேசுநாதரிடம் தெரிவித்து ஆலோ சனைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். கேளுங்கள் - (மறுமொழி) கொடுக் கப்படும்! 
என்று கூறியவரிடம் தங்களது வேண்டுதல்களை உடன் நிறை வேற்றியே தீரவேண்டும் என ஒரு சிலர் அவருக்கு உத்தரவுபோடுவதும் உண்டு! ஒரு தடவை சொன்னால் இயேசுவுக்குப் புரியாது - பலர் பட்டினிகிடந்து இரவு முழுவதும் ஜெபம் என்னும்பேரில் இயேசுவோடு பேசிக்கொண்டி ருக்கிறார்கள்!...
பகுத்தறிவுக்கும் சுயமரியாதைக்கும் முற்றிலும் முரண்பாடான பைபிளின் போதனைகள், பின்பற்றுவோரின் தன்மானத்தையும் துணிச்சலையும் தகர்த்துவிடுகின்றன. ஒரு கன்னத்தில் அறைந்துவிட்டால் மறுகன்னத்தையும் காட்டு, பகைவர்களை நேசியுங்கள், உங்களைத் துன்பப்படுத்துவோருக் காகவும் நிந்திக்கிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்! இப்படிப்பட்ட உபதேசங்கள் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவராதவை! தினனவரும் புலி தனையும் அன்போடு சிந்தையில் போற்றிடுவாய்!... என்று பாடிய பாரதியார் போன்ற பிற்போக்குவாதிகள் மட்டுமே பைபிள் உபதேசங்களைப் பாராட்ட முடியும்; நம் போன்ற வர்களால் நினைத்துப் பார்க்கவும் முடியாது!
நானே உலகின் ஒளி என்று சொன்னாராம் இயேசு. இயேசுவின் மூலமாக உலகம் படைக்கப்பட்டது, என்று பைபிள் பிதற்றுகிறது. ஒளியின் வேகம் ஒரு விநாடிக்கு 1,86,000 மைல்கள் என்பதை அறியாத ஒருவர், நானே உலகின் ஒளி என்கிறார் - என்ன விபரீதம்! பகலும் இரவும் தோற்று விக்கப்பட்டபின், சூரியனும் சந்திரனும் படைக்கப்பட்டன என எழுதப் பட்டிருக்கும் ஒரு புத்தகத்தின் கதாநாயகருக்கு, விண்ணகத்தில் 10,000 கோடிக்கும் அதிகமான எண்ணிக் கையில் கதிரவன்கள் இருந்து வருகின்றன என்பதும் இந்தப்பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே வருகின்றது என்பதும் தெரியாது! ஏனென்றால் கதாசிரியர்களுக்குத் தெரிந்த உண்மைகள் மட்டுமே அவர்களாக உருவாக்கப்படும் கதாபாத்திரங்களுக்கும் தெரியும். பைபிள் ஆசிரியர்களைப் பொறுத்தவரை சூரியன்தான் பூமியைச் சுற்றிவருகின்றது; தட்டையானது பூமி என்று நினைத்துக் கொண்டிருந்தனர்.
நான் சொல்லவந்த ஆராய்ச்சி என்னவென்றால் - பகுத்தறிவற்ற பைபிள் பெரும்பாலான மொழிகளில் அச்சிடப்பட்டு இன்றும் விநியோ கிக்கப்பட்டு வருகின்றது. அந்தந்த மொழிகளைச் சார்ந்தவர்கள் தங்களது தாய்மொழியிலே இயேசுநாதரிடம் உரையாடுகிறார்கள். அதே மொழிகளில் பதில்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்கிறார்களாம். பைபிள் மதங்களைச் சேர்ந்தவர்கள் பெருமை பேசிவரும் இந்தத் தகவலின் அடிப் படையில் - இயேசு என்வர் அனைத்து மொழிகளும் தெரிந்தவர், புரிந்தவர்; பதில்களும் சொல்லக்கூடியவர் என்பது உண்மையானால் - பைபிளால் தங்களை மூளைச்சலவை செய்துகொண்ட பாஸ்டர்களும் பாதிரிமார்களும் இப்போது பதில் சொல்லவேண்டும்!
தமக்கு அறவே தெரியாததும், மற்றவர்கள் மூலமாக தெரிந்து கொண்டதுமான ஒரு வேற்று மொழியின் வாசகத்தை இயேசுநாதரிடம் தெரிவித்து; அதனை ஜெபிப்பவரின் தாய்மொழியில் மொழி மாற்றம் செய்து விளக்கவுரை சொல்லும்படி பிரார்த்தனை செய்தால் - இயேசுநாதர் பதில் அளிப்பாரா? மாட்டார் - இப்போது அவரால் எந்தபதிலும் சொல்லமுடியாது! ஜெபம் செய்துவரும் ஒருபக்தர் தமக்கு இந்நாள்வரை தெரிந்திராத இயற்பியல், அல்ஜீப்ரா தொடர்பான வினாக்களைக் கேட்டால் கேளுங்கள் - கொடுக்கப்படும் என்றவர் மறுமொழி கொடுப்பாரா - மாட்டார்!
ஏனென்றால், இயேசுவின் அடிமை களே! நீங்கள் உங்களது சொந்த மனஉருவகத்தைத் தான் (Imaginery) வணங்கிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்குத் தெரிந்த தகவல்கள் தான் நீங்கள் உருவாக்கிக் கொண்ட உருவங்களுக்குத் தெரியும்.  இயேசுநாதர் ஆலோசனை கூறினார், பேசினார், சிரித்தார், அழுதார் என்பதெல்லாம் உங்களது மனப் பிரேமைகள்! இயேசு என்பவர் பதில் சொன்னார் என்று நீங்கள் சொல்வதனைத்தும் உங்க ளுடைய சொந்த ஊகங்களே. (Auto Suggestions) என்பதில் அய்யமில்லை. எனவேதான் உங்களால் எல்லாமொழி களும் தெரிந்தவராக கருதப்பட்டுவரும் இயேசுநாதரால் உங்களுக்குத் தெரியாத வேறு ஒரு மொழியில் எதுவும் பேச முடிவதில்லை! கதை ஆசிரியர்களுக்கு (ஜெபம் செய்பவர்களுக்கு) தெரிந்த தகவல்கள் மட்டுமே கதாபாத்திரங் களுக்கு (நினைத்துக் கொண்டிருக்கும் தெய்வ உருவங்களுக்கு) தெரியும்!
உலகின் முடிவுநாள் வரை உங்களுடனே நான் இருந்துவருகிறேன். என்னும் இயேசுவின் வசனம் உண்மை யானால், அவர் பைபிள் மதங்களில் இத்தனை பிளவுகளை அனுமதித் திருக்கமாட்டார்! தமது பெயரால் சண்டை - சச்சரவுகள், போர்கள், வாதப்பிரதிவாதங்கள் வளர்ந்து; மூளைச்சலவை செய்துகொண்ட இலட்சக்கணக்கான பக்தர்கள் மேல்உலக சன்மானங்களை எதிர் பார்த்தும் நம்பியும் இரத்த சாட்சிகளாக சாவதற்கு சம்மதித்திருக்க மாட்டார்!... கணவரோடு பெற்றோர் பிள்ளைகளோடு வாழவேண்டிய பெண்கள், கன்னிமாடங்கள் என்னும் ஆயுட்கால சிறையிலே தள்ளப்பட்டு; அவர்களது மூளைகளும் பைபிள் என்னும் சிறையில் அடைக்கப்பட்டு, அவர்கள் கன்னிகையாகவே கல் லறையில் அடக்கம் செய்யப்படவும் ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்.
நீங்கள் ஜெபித்துவிட்டீர்களா!... என்று கேட்கும் பைபிள்காரர்கள், இந்தக்கட்டுரையை படித்துப்பார்த்து பகுத்தறிவுடன் சிந்திக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
                                                                                                                                                                                                   - குபேரன்இதய நோயை கட்டுபடுத்த...., உயிர்க்கொல்லியாக இருக்கும் இதய நோய் பற்றிய போதிய விழிப்புணர்வு
நம்மிடையே இல்லை.
ஆண்டுதோறும் 1.73 கோடி பேர், உலகம் முழுவதும் இதய நோயால் உயிர் இழக்கின்றனர்.
2030ம் ஆண்டில் இது 2.3 கோடியாக உயரும் .
இதய நோய் உயிர் இழப்புகளைத் தவிர்க்க முடியும்.
 இதயத்தில் ஏற்படும் பிரச்னைகள், காரணங்கள் அவற்றைத் தவிர்க்கும் வழிகள் பற்றி இதய நோய் சிகிச்சை நிபுணர்கள் தரும் இந்த இதய வழிகாட்டி நம் உயிர் காக்கும் தோழன்!

இதயம்

மனிதனின் நெஞ்சுக்கூட்டில் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் உறுப்பு, இதயம். இதை வலது மற்றும் இடது புறம் என இரண்டாகப் பிரிக்கலாம். இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன.
நம் உடல் இயக்கத்துக்குத் தேவையான ஊட்டச்சத்தும் ஆக்சிஜனும் ரத்தம் மூலமாக நமக்குக் கிடைக்கின்றன.
 இதயம் ஒரு பம்ப் போன்றது. தசையால் ஆன பம்ப் என்றும் சொல்லாம்.
கார்பன்டைஆக்ஸைடு நீக்கப்பட்டு, ஆக்சிஜன் நிரப்பப்பட்ட ரத்தம், நுரையீரலில் இருந்து இதயத்துக்கு வருகிறது. இதயம் துடிப்பதன் மூலம், நல்ல ரத்தம் உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் கொண்டுசெல்லப்படுகிறது. உடலின் ஒவ்வோர் உறுப்புக்கும் செல்லும் இந்த ஆக்சிஜன் நிரம்பிய ரத்தத்தைப் பயன்படுத்திவிட்டு, கார்பன்டைஆக்ஸைடை வெளியிடுகிறது. இந்த அசுத்தமான ரத்தம் மீண்டும் இதயத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து இதயம் துடிப்பதன் மூலம் நுரையீரலுக்குக் கொண்டுசெல்லப்படுகிறது.
இப்படித் தொடர்ச்சியாக இதயத்தின் வழியே ரத்தச் சுத்திகரிப்பு நடைபெறுகிறது.


இதயத்தில் நான்கு வால்வுகள் உள்ளன.
இவைதான், தேவையான நேரத்தில் ரத்தத்தை சரியான பாதையில் இதயத்துக்குக் கொண்டுசெல்ல உதவுகின்றன. இதயம் சரியாகச் செயல்பட, பிறவியிலேயே இந்த வால்வுகள் சரியான முறையில் உருவாகியிருக்க வேண்டியது அவசியம்.
அப்போதுதான் சரியான நேரத்தில் வால்வுகள் திறந்து ரத்தத்தை வெளியேற்ற முடியும். வால்வுகள் மூடிய பிறகு கசிவு இல்லாமலும் இருக்கும்.

துடிப்பு

தாயின் கருவறையில் ஆறாவது வாரத்தில் தொடங்குகிறது குழந்தையின் இதயத் துடிப்பு.

சராசரியாக இதயம் ஒரு நிமிடத்துக்கு 60 முதல் 100 வரை துடிக்கிறது.
வயது, பாலினத்துக்கு ஏற்ப இதயத் துடிப்பின் அளவில் மாற்றம் ஏற்படும். இதயம் சுருங்கி விரிவது ஒரு தொடர் செயல்முறை. இதயம் சுருங்கும்போது இதயத்தின் வென்ட்ரிக்கிள் சுருங்குகிறது.
இதனால் ரத்தமானது நுரையீரலுக்கு அனுப்பப்படுகிறது.
இதயம் விரிவடையும் போது இதய அறைகள்  மீண்டும் ரத்தத்தால் நிரம்புகின்றன.

 மின் பாதை

இதயம் தானாகத் துடிப்பது இல்லை.
அது இயங்கவும் ஓர் ஆற்றல் தேவை.
இதயத்தை இயங்கவைக்கும் அந்த மின் உற்பத்தி நிலையத்தின் பெயர் ‘சைனஸ் நோட்’.
 இங்கிருந்துதான் இயற்கையான மின் இணைப்புகள் வழியாக இதயத்தின் மற்ற அறைகளுக்கும் மின்சாரம் பாய்கிறது. மின் உற்பத்தி மற்றும் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டால், இதயத் துடிப்பில் மாறுபாடு ஏற்படும். ஒன்று அதிவேகமாகத் துடிக்கும்,
அல்லது தேவைக்கும் குறைவாகத் துடிக்கும். இதை சீரற்ற இதயத் துடிப்பு நோய் என்கிறார்கள்.

இதய நோய்கள்

1. பிறவியிலேயே ஏற்படுவது (congenital),

2. பிற்காலத்தில் ஏற்படும் நோய் (Acquired)

பெரும்பாலும் பிறவிக் குறைபாடு காரணமாகவே, குழந்தைகளுக்கு இதயக் கோளாறுகள் ஏற்படுகின்றன. பெரியவர்களுக்கு, ரத்தக் குழாய் அடைப்பு போன்ற பிரச்னைகள் வயதான காலத்தில் ஏற்படுகிறது.

இதய நோய்களை ரத்தக் குழாய் நோய்கள், இதய ரிதம் பிரச்னைகள் (அரித்மியா) மற்றும் பிறவிக் குறைபாடு என்று மூன்றாகப் பிரிக்கலாம். பொதுவாக, இதய ரத்தக் குழாய் (கார்டியோவாஸ்குலர்) பிரச்னையால் ஏற்படக்கூடிய பாதிப்பையே, இதய நோய்கள் என்று அழைக்கிறோம்.

ரத்தக் குழாய் குறுகி அல்லது அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு, நெஞ்சுவலி அல்லது பக்கவாதம் ஏற்படுவதையே கார்டியோவாஸ்குலர் நோய்கள் என்கிறார்கள்.
தவிர, இதயத் தசைகள் அல்லது வால்வு பாதிப்பு, சீரற்ற இதயத் துடிப்பு போன்றவற்றாலும் இதய நோய்கள் ஏற்படுகின்றன. பெரும்பான்மையான இதய நோய்களை வாழ்வியல் மாற்றங்கள் மூலம் தடுக்க முடியும்.

சிகிச்சை கள்


இதயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் அளவு, தன்மையைப் பொறுத்து சிகிச்சை முறைகளும் மாறுபடும்.
ஆரம்பநிலைப் பாதிப்பு என்றால், வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் செய்தாலே உங்கள் இதயம் கெட்டியாகிவிடும்.
 சிலருக்கு வாழ்க்கைமுறை மாற்றங்களைத் தாண்டி தகுந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
மருந்து மாத்திரைகள் மூலம் குணப்படுத்த முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படும்.
இதயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், அதன் தீவிரத்தைப் பொறுத்து எந்த மாதிரியான அறுவைசிகிச்சை என்பதை முடிவு செய்வார்கள்..

 தவிர்க்க எளிய வழிகள்:


ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப்பின்பற்றுவதன் மூலம் நாம் இதய நோயில் இருந்து மீளலாம். கெட்ட கொழுப்பு உடலில் சேரவிடாத அளவு பார்த்துக்கொண்டால் இதய நோய் வராமலேயே கூட நம்மால் தவிர்க்க முடியும்.


========================================================================
 நாகேஷ்
நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பல சாதனைகள் படைத்தவர். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரியவர்.

நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ் கன்னடப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர்.
தமிழ்நாடு, தாராபுரம் பகுதியில் கன்னட மாத்வர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். தந்தை பெயர் கிருஷ்ணாராவ், தாயார் ருக்மணி அம்மாள்.
தந்தை கர்நாடகாவில் அரிசிக்கரே என்ற ஊரில் தொடருந்து நிலைய அதிபராகத் தொழில் பார்த்தவர். நாகேசின் முழுப்பெயர் நாகேசுவரன். நாகேஷ் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் அழைக்கப்பட்டார்.

தாராபுரத்தில் தனது எஸ்.எஸ்.எல்.சி. படிப்பை முடித்துக் கொண்டு கோவை பிஎஸ்ஜி கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது அம்மை நோய் வந்து முகத்தில் தழும்புகள் உண்டாயின.

நாகேஷ் கல்லூரிப் படிப்பு முடிந்ததும், ரெயில்வேயில் பணிபுரிந்தார். சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார்.
மணியன் எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை தண்டபாணி' என்ற பாத்திரத்தில் "தை, தை" என்று நோயாளியாய்க் மேடையில் குதித்ததால், 'தை நாகேஷ்' என்றும் பின்னர் ஆங்கிலத்தில் Thai என்பதை 'தாய்' என்று மாற்றி படித்ததால் இவர் "தாய் நாகேஷ்" என அழைக்கப்பட்டார்.

1959-ம் ஆண்டில் திரைப்படத்துறையில் புகுந்தார்.
 தாமரைக்குளம் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். அதன்பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் தோன்றினார்.
இது மிகவும் வெற்றிப்படமாக அமைந்தது. அவருக்குப் பல படங்களில் ஜோடியாக நடித்தவர் மனோரமா ஆவார்.

கே. பாலசந்தர் கதை, வசனம் எழுதிய சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் மிகச்சிறப்பாக நடித்து குணச்சித்திர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார். திருவிளையாடல் படத்தில் தருமி என்ற கதாபாத்திரம், தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி என்ற பாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது.
சிவாஜி கணேசன், எம்ஜிஆர் போன்றோருடன் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

நீர்க்குமிழி என்ற படத்தில் நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர் கே. பாலச்சந்தர்.

அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சிறந்த நடிப்புத் திறமை கொண்டவர் நாகேஷ் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது.

தேன்கிண்ணம், நவக்கிரகம், எதிர் நீச்சல், நீர்க்குமிழி, யாருக்காக அழுதான், அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசன் மீது அதிக அன்பு வைத்திருந்தவர் நாகேஷ்.
தான் சந்திக்கும் பிரமுகர்களிடம் கமல்ஹாசனை பாராட்டி ஒரு வார்த்தையாவது பேசிவிடுவார்.
கமல்ஹாசனும் நாகேஷ் மீது அன்பும்,மரியாதையும் கொண்டிருந்தார்.
 ரொம்ப நாட்களுக்குப்பின்னர் கமலஹாசன் தயாரித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில்  வில்லனாகநாகேஷ்  தோன்றினார்.
அதற்குப் பின்  மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் போன்றபல கமலஹாசன் படங்களில் நாகேஷ் நடித்தார்.
கமல்ஹாசனுடன்" நம்மவர் "படத்தில் நடித்தார்.அவரின் நடிப்பு பார்த்தவர் கண்களில் கண்ணீரை வரவைக்கும் விதமாக இருந்தது.அப்படத்தில் அவருக்கு தேசிய விருது கிடைத்தது.
 நாகேஷ் நடித்த கடைசிப்படம் தசாவதாரம் ,
 இதுவும் கமலஹாசன் படம்தான் .
 நாகேஷ் உடல்நிலை சரியின்றி  2009-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி காலமானார்.
=========================================================================

 நாம் என்று சாவோம் ?

மனிதன் பிறக்கும் போதே இறக்கும் நாள் தெரியாது,ஆண்டவன் என்றைக்கு என்னை எடுத்துக்கொள்வான் என்றும்  இனி தத்துவம் பேச முடியாது.
நாம் எவ்வளவு காலம் வாழ்வோம், ஒரு மனிதன் எப்போது உயிரிழப்பான் என்பதற்கு விடையளிக்கும் புதிய உயிரி கடிகாரத்தை அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.
 எடின்பர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி நிபுணர்கள் ஆகியோர் 14 வருடங்களுக்கு மேலாக, வயதான மனிதர்கள் 5,000 பேரை கண்காணித்து நான்கு விதமான ஆய்வுகளை நடத்தினர்.
 டி.என்.ஏ.வில் நடைபெறும் மெத்தைலேஷன் என்ற வேதியியல் மாற்றங்களை வைத்து தனி மனிதனின் உயிரியல் வயதையும், தற்போது அந்த குறிப்பிட்ட மனிதரின் வயதையும் விஞ்ஞானிகள் கணக்கிட்டனர்.

அதில் உண்மையான வயதும், உயிரி வயதும் ஒரே மாதிரியாக இருப்பவர்களை காட்டிலும், உண்மையான வயதை விட உயிரி வயது அதிகமாக இருப்பவர்கள் மரணத்தை விரைவில் நெருங்குகிறார்கள் என்பதை கண்டுபிடித்தனர்.
ஒவ்வொரு நபரின் உயிரி ஆயுளும் அவர்களின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரியில் இருந்து கணக்கிடப்பட்டது.
பின்னர் அவர்கள் அனைவரும் ஆய்வின் போது தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டனர்.

இந்த ஆய்வு குறித்து  ரிக்கார்டோ மரியோனி கூறுகையில், நான்கு ஆய்வுகளின் படி உயிரி கடிகாரத்தின் வயதும், புகை பிடித்தல், டயாபட்டீஸ் மற்றும் இதய நோய் காரணமாக இறந்தவர்களின் வயதும் ஒத்திருந்தது என கூறினார்.

=====================================================================

வியாழன், 29 ஜனவரி, 2015

'தூங்கி' வழி யுங்கள்."நமக்கு நாமே புத்துணர்வு ஏற்படுத்திக் கொள்வதற்குத் தூக்கம் மிகமிக அவசியம் .'

நாட்டில் 93 சதவீதம் பேர் 8 மணி நேரத்துக்கும் குறைவாகவே தூங்குகிறார்கள். 
அதில் 58 சதவீதம் பேர், சரியான தூக்கம் இல்லாததால் தங்களுடைய வேலைகள் பாதிக்கப்படுகின்றன என்பதை ஒப்புக்கொள்கின்றனர். 

நாட்டில் சுமார் 5 லட்சம் மக்கள்தொகை கொண்ட 25 நகரங்களில் 35 முதல் 65 வயது வரையுள்ள 5,600 பேரைத் தேர்வு செய்து, அவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த ஆய்வைப் பிலிப்ஸ் இந்தியா ஹோம் கேர் நிறுவனம் ‘பிலிப்ஸ் ஸ்லீப் சர்வே' என்ற தலைப்பில் மேற்கொண்டது. 

இதில் சுமார் 11 சதவீதம் பேர் தூங்குவதற்காக அலுவலகங்களில் இருந்து விடுமுறை எடுத்துக்கொள்வதாகவும், அதே அளவுகொண்டோர் அலுவலகங்களில் பணியாற்றும்போது தூங்கிவிடுவதாகவும் கூறியிருக்கிறார்கள். 

மேலும், 72 சதவீதம் பேர் தங்களுடைய இரவுத் தூக்கத்தின்போது ஒன்றிலிருந்து மூன்று முறையாவது விழித்துக்கொள்வதாகவும், சரியான தூக்கம் இல்லாதது தங்களுடைய ஆரோக்கியத்தைப் பாதித்திருக்கிறது என்று 87 சதவீதம் பேர் கூறியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

"வளர்ந்த மனிதர்கள் அனைவருக்கும் 6 முதல் 8 மணி நேரத் தூக்கம் அவசியம். மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்குத் தூக்கத்தின் நேரம் கூடும். புதிதாகப் பிறந்த குழந்தைகள் 18 மணி நேரம் முதல் 20 மணி நேரம் தூங்குகின்றன. 

பள்ளி செல்லும் குழந்தைகள் (நான்கு வயது வரை) 10 மணி நேரம் தூங்குவார்கள். வளரிளம் பருவத்தினருக்கோ 8 மணி முதல் 9 மணி நேரத் தூக்கம் அவசியம். 

ஆனால், போட்டியை மையமாகக் கொண்ட கல்வியமைப்பு மற்றும் நண்பர்களின் அழுத்தம் போன்ற காரணங்களால் அவர்கள் சரியாகத் தூங்குவதில்லை. இப்போதெல்லாம் தூக்கமின்மை பிரச்சினை சிறு வயதிலேயே தொடங்கிவிடுகிறது. 
இவர்களைத் தவிர, தூக்கமின்மையால் அதிக அவதிக்குள்ளாகும் மற்றொரு பிரிவினர் முதுமையடைந்தவர்கள்.
 பகலில் தூங்குவது, முறையான உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது போன்றவற்றால் இவர்களுடைய இரவுத் தூக்கம் பாதிக்கப்படுகிறது.
"இதுபோன்ற பிரச்சினை உள்ள முதியவர்கள் சீக்கிரம் தூங்கி (இரவு 9 மணிக்குள்), சீக்கிரம் விழித்துக்கொள்வார்கள் (அதிகாலை 3 அல்லது 4 மணி). சிலருக்கு 6 மணி நேரத் தூக்கம் சரியாக வரும். 

இன்னும் சிலருக்கு 8 மணி நேரத்துக்கும் அதிகமாகத் தூக்கம் தேவைப்படும்.

முறையான தூக்கம் இல்லையென்றால் கவலை, மனஅழுத்தம், அதிகம் கோபப்படுதல், ஞாபக மறதி மற்றும் சக மனிதர்களுட னான தகவல் தொடர்புப் பரிமாற்றத்தில் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும்.
"மொத்தத்தில் உங்களுடைய செயல்பாட்டு திறன் பாதிக்கப்படும். அத்துடன் உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்றவையும் ஏற்பட வாய்ப்பு உண்டு.

குறட்டை விடுவது, இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செல்வது, காலை நேரத் தலைவலி, ஞாபகமறதி, கவனமின்மை, அதிகம் கோபப்படுதல், மனஅழுத்தம் மற்றும் அடிக்கடி மனநிலை மாறிக்கொண்டே இருப்பது போன்றவை சரியான தூக்கமின்மையின் அறிகுறிகள்.

 தங்களுக்குக் குறட்டைவிடும் பழக்கம் இருக்கிறது என்பதை, கூச்சம் காரணமாகப் பலரும் மருத்துவர்களிடம் தெரிவிப்பதில்லை.

1. தினமும் குறிப்பிட்ட நேரத்தில் படுக்கச் சென்று, குறிப்பிட்ட நேரத்தில் விழித்துக்கொள்ளப் பழக வேண்டும். 

2. தூங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு இரவு உணவை உட்கொள்ள வேண்டும். 

3. காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்ல தூக்கத்துக்குக் கைகொடுக்கும். 

4. ஒரு டம்ளர் பால் அல்லது ஒரு வாழைப்பழம் நல்ல தூக்கத்தைத் தரும். 

5. தூங்குவதற்கு முன்பு கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். \                                                                                                                                                                               நன்றி:      தி இந்து.

"அ[ம்மா] ணி வகுப்பு"?
குடியரசு தின விழாவில் மக்கள் பார்த்து மகிழ்வது அலங்கார ஊர்திகளின் அணி வகுப்புதான்.
ஆனால் அது இந்த ஆண்டு "அம்மா அணிவகுப்பு" ஊர்வலமாக மாறிப்போனது"
  குடியரசு தின விழாவை முன்னிட்டு, அரசின் சாதனைகளை விளக்கும் வாகனங்கள் அணிவகுப்பில் இடம்பெற்றிருந்த அரசுத் துறை வாகனங்கள் அனைத்திலும், ஜெயலலிதா படங்களே இடம் பெற்றிருந்தன.
ஜெயலலிதா படங்கள் இடம் பெற்றிருந்தது மாத்திரமல்ல; ஒரு வாகனத்தில் கூட தற்போதைய முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் படம் இடம் பெறவில்லை.

 அரசுத் துறை அதிகாரிகள் யாரும், அவரை முதல் அமைச்சராகக் கருதி ஏற்றுக்கொள்ளவில்லை.
 அந்த அளவுக்குத் தான் தமிழக அ.தி.மு.க. அரசு தள்ளாடிக் கொண்டிருக்கிறது. கடந்த 25-11-2014 அன்று தமிழக நாளேடுகளில் ஒரு செய்தி வந்தது. அதாவது அரசு அலுவலகங்கள், கட்டடங்கள், திட்டங்கள், பாடப் புத்தகங்கள், இணைய தளங்கள் என அனைத்திலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் படங்கள் வேண்டுமா என்ற கேள்வியுடன் கழகச் சட்டப்பேரவை உறுப்பினர் தம்பி டி.ஆர்.பி. ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை, தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய முதல் அமர்வு விசாரித்து அளித்த உத்தரவில், "அரசு அலுவலகங்கள், பொதுக் கட்டிடங்களில் யார் யாருடைய புகைப்படங்ளை வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதற்கான அரசாணைகள் 1978, 1981, 1990இல் வெளியிடப்பட்டுள்ளன.
 சமீபத்தில், சட்டசபைச் செயலகம் வெளியிட்ட அறிவிப்பாணையில், முன்னாள் முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபைத் தொகுதி, காலியாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
எனவே, மேற்கூறிய அரசாணைகளை மனதிலே கொண்டு, மனுதாரர் அனுப்பிய மனு மீது, ஒரு மாதத்துக்குள், அரசு உயர் அதிகாரிகள் முடிவு செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு இவ்வாறு ஒரு மாதத்துக்குள், அரசு உயர் அதிகாரிகள் முடிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, ஒரு மாதத்திற்குப் பதிலாக இரண்டு மாதங்கள் முடிவடைந்த போதிலும், அரசு உயர் அதிகாரிகள் இந்தத் தீர்ப்பு பற்றி என்ன முடிவெடுத்தார்கள் என்று வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.
ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு பதில் அளிப்பது போல, குடியரசு தின அணிவகுப்பில் வந்த வாகனங்களில், சொத்துக் குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனையும், நூறு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு, முதலமைச்சர் பதவியையும், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையும் இழந்து விட்ட ஜெயலலிதாவின் படங்களை இடம் பெறச் செய்திருக்கிறார்கள்.

 உச்ச நீதிமன்றத்தினால் ஜாமீனில் வெளியே வந்து, அவரது மேல் முறையீட்டு வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நேரத்தில் இப்படியெல்லாம் அரசு நிகழ்ச்சியில் தண்டனை பெற்ற ஒருவரின் படங்களைக் காட்சியாக்கி வெளியிட்டிருப்பது சட்டப்படி சரியானதுதானா?
 அரசின் பல்வேறு துறைகள் சார்பாக இடம் பெற்ற இந்த அலங்கார ஊர்திகள் அத்தனையிலும் ஜெயலலிதாவின் படங்கள்தான் பிரதானமாகக் காட்சி அளித்தன. கடந்த காலங்களில் ஜெயலலிதாவின் படங்கள் அதிகம் இடம் பெற்றிருந்தன.
ஆனால், இந்த முறை அதை விட அதிகம். நீதிமன்ற தண்டனைக் குள்ளாக்கப்பட்டது பற்றிய எந்தக் கவலையும் இல்லை. ஜெயலலிதாவின் படத்தை அப்பட்டமாக குடியரசு தினவிழா அலங்கார ஊர்திகளில் போட்டிருந்தார்கள்.
ஆனால் ஓர் ஊர்தியில் கூட கவர்னரால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்ட முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் படமே இல்லை. செய்தித் துறையும், காவல்துறையும் அடித்த சிங்கியும் அதிகம்.
ஒரு தண்டனை பெற்ற ,சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் பதவியை கூட பிடுங்கப்பட்டவரின் படம் வைப்பது எவ்வளவு பெரிய கேவலம் அதுவும் சட்டம்&ஒழுங்கை காக்க வேண்டிய காவல் துறைக்கு.
TASMAC நிறுவன விளம்பர ஊர்தியில் வைத்தால் கூட ஒரளவு அதன் வளர்ச்சிக்கு பாடு பட்டவர் என்ற அங்கலாய்ப்பில் சமாதானம் கொள்ளலாம்.
. அடுத்து வந்த அலங்கார ஊர்தியின் முகப்பில் "வாய்மையே வெல்லும்" என வார்த்தை பொறிக் கப்பட்டிருக்க.... பல அதிகாரிகளும் ,பார்வையிட வந்த மக்களும் சிரிப்பை அடக்கிக் கொண்டார்கள்.
பள்ளிக் கல்வித் துறை அலங்கார ஊர்தியின் முகப்பில், "மக்களுக்காக நான், மக்களால் நான்" என்ற ஜெயலலிதாவின் வாசகத்தை பெரியஅளவில் போட்டு, அதன் கீழ் ஜெயலலிதாவின் பெயரையும் எழுதியிருந்தார்கள்.
மின்சாரத் துறையின் அலங்கார ஊர்தியில் "மின் மிகை மாநிலம் இலக்கை நோக்கி தமிழகம்" என வாசகம் பொறிக்கப்பட்டிரு ந்தது.
 இப்படி வரிசையாக வந்த 24 அலங்கார ஊர்திகளிலும் ஜெயலலிதாவின் படங்கள் இடம் பெற்றிருக்க, கடைசியாக வந்த ஓர் ஊர்தியில் மட்டுமே ஜெயலலிதா படம் மிஸ்ஸிங்.
அது தேர்தல் துறையின் ஊர்தி.அவரகள் கூட விமர்சனம் அதிகம் வரும் என்ற பயத்தில்தான் தவிர்த்திருப்பார்கள்.
 இந்த அணி வகுப்பில் உச்சபட்ச விசுவாசத்தைக் காட்டியது செய்தித் துறை தான். அரசு நிகழ்ச்சி நிரல் புத்தகத்திலே ஜெயலலிதாவின் பெயரை அப்பட்டமாகச் சொல்லி, "மாண்புமிகு" என்ற அடைமொழியையும் சேர்த்திருந்தார்கள்.
 "மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மாவின் லட்சியம்" என்றும், "மக்களின் முதல்வர் மாண்புமிகு அம்மா" என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி நிரல் புத்தகத்திலும் ஓ. பன்னீர்செல்வத்தின் பெயர் இல்லை" என்றெல்லாம் அந்த கட்டுரை நீளுகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற இதே குடியரசு தின விழாவிற்கு முதலமைச்சர் ஜெயலலிதா வந்த போது, அவருடைய கார் மக்கள் காத்திருக்கும் தூரம் வரை சென்று மக்களைப் பார்த்து வாழ்த்து தெரிவித்து விட்டு, அதன் பிறகுதான் குறிப்பிட்ட இடத்திலே வந்து அமர்ந்தார்.
இது எல்லா ஆண்டுகளிலும் முதல்வராக இருப்பவர்கள் செய்வதுதான்.
 ஆனால் இந்த ஆண்டு முதல்வர் மக்களைப் பார்த்து வாழ்த்துச் சொல்லும் நிகழ்ச்சியையே ரத்து செய்ததோடு, நிகழ்ச்சி நிரலில் இருந்தே அதை எடுத்து விட்டார்கள்.
இந்தச் செய்தியை "நக்கீரன்" இதழும் உறுதி செய்திருப்பதோடு, அலங்கார ஊர்திகளில் யாருடைய படம் வைக்கலாம் என்று அரசின் ஆலோசகர் கார்டனில் கேட்க, அங்கிருந்து வந்த உத்தரவின்படியே ஜெயலலிதா படம் இடம் பெற்றது என்று அதிகாரிகள் தரப்பு கூறியதாகவும் தெரிவித்திருக்கிறது.அதுபோலவே நிகழ்ச்சி முடிந்து முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா புறப்படுவதற்கு முன்பு, அனைத்து அமைச்சர்களும் அவர் அருகே வந்து வழியனுப்புவார்கள்..
ஆனால் இந்த ஆண்டு முதலமைச்சர் பன்னீர்செல்வம் நிகழ்ச்சி முடிந்து புறப்பட்ட போது, எந்த அமைச்சரும் அவர் அருகிலே கூட வரவில்லை.  இன்றைய ஆட்சியில் நிர்வாகம் முதல் பாரம்பரிய நடை முறைகள் வரை எல்லாமே மனம் போன போக்கில் தாறுமாறாக என்னவெல்லாம் நடக்கிறது. அ தற்கு இவைகள்  உதாரணங்கள்.ஆனால் இதை கண்டு கொண்டு கண்டிக்க வே ண்டிய நிலையில் அதிகாரம் உள்ள நீதித்துறையும்,ஆளுனரும் மக்களின் முதல்வர் செயல்களுக்கு ஆதரவாக இருப்பதுதான் இன்றைய நிலை.எல்லா முக்கிய பொறுப்பும் உள்ள மத்திய அமைச்சரே ஊழல் வழக்கில் தண்டிக்கப் பட்ட ஒரு முன்னாள் முதல்வரை எந்த வித தேவையும் இல்லாத நிலையில் சந்தித்து பேசி செல்வது நீதி எவ்வாறு வரும் என்பதற்கு கட்டியம் கூறுகிறதே .
========================================================================.
Embedded image permalink

ஆண்டன் செகாவ் .

சிறுகதை என்றால் நீங்கள் செகாவை கண்டிப்பாக வாசிக்க வேண்டும் ;32 மொழிகளில் அவரின் சிறுகதைகள் வாசிக்கபட்டவண்ணம் உள்ளன .
ஆண்டன் செகாவ் எனும் மாபெரும் இலக்கிய மேதை பிறந்த தினம் இன்று [29-01-2015]உலகின் சிறுகதை சக்கரவர்த்தி என்று பெயர் எடுத்தவர்.செகாவ்.
மாஸ்கோ அருகில் உள்ள டாக்கின் ராக் என்ற கடற்கரை நகர்தான் செகாவ் பிறந்த ஊர்.
.எளிமையான குடும்பம்.
அப்பா பலசரக்கு கடை வைத்திருந்தார் ; இவரை அடித்து துவைத்துக்கொண்டே இருப்பார்;
கண்ணீர் விடுவார் இவர் .
 சர்ச்சுகளில் போய் பாடல் பாடுங்கள் என்று காலையில் மூன்று மணிக்கு எழுப்பி பயிற்சி தருவார் தந்தை. அடியும்,அழுத்தி திணிக்கப்பட்ட சங்கீதமும் செகாவ் மற்றும் அவரின் சகோதரர்களை திசைமாற்றிப்போட்டது. 
அண்ணன்கள் குடிகாரர்களாக, பெண் பித்தர்களாக போனார்கள். செகாவுக்கு வேறொரு வாழ்க்கை காத்திருந்தது.
கூடுதலாக வகுப்பில் ஆசிரியர்கள் தொல்லை வேறு .
 ஆசிரியர்களை வருங்காலத்தில் கண்டால் வெறுப்போடு முகத்தை திருப்பிக்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார் அவர். ஆனால்,செகாவ் உலகை நேசித்தார் ; அவரை ஊர்முழுக்க வாங்கியிருந்த கடனுக்காக கடன்காரர்களிடம் அடமானம் வைத்துவிட்டு அவரின் குடும்பம் எங்கேயோ கிளம்பி விட்டது. கடனடைத்து மீண்டார் அவர் 
 ;அதற்கு பின் அரசாங்க செயல்களால் மருத்துவ கல்வி கிட்டியது அவருக்கு ; வெறும்
மூன்று ரூபிள் வாங்கிக்கொண்டு மருத்துவம் பார்த்தார் . கிராமம் கிராமமாக போய் எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை வழங்கினார் .
சிறுகதைகள் எழுதிய அவர் முதலில் வறுமையை போக்கிக்கொள்ள தான் எழுத ஆரம்பித்தார் . காலப்போக்கில் அது மாறிப்போய் சமூகத்தின் வலிகளை மக்களின் தனிமையை பதிவு செய்தார்  
:வாழ்க்கை தான் எல்லாவற்றை விடப்பெரியது ; தனிமையில் இருப்பதை விட வாழ்ந்து மடிவது மேலானது .இணைந்து வாழ்தலே பெரிது "என்றார்
அவரின் வாழ்க்கை குற்றவாளிகளின் மெல்லிய பக்கங்களை பற்றிகவலைபட்டதாகவும் அமைந்தது ;கொடிய காச நோயோடும் குற்றவாளிகள் இருக்கும் சைபீரியா போய் அவர்களை சந்தித்து அவர்களின் உள்ளே உள்ள மனிதத்தை வியந்தவர் அவர். 
ஆனால்,சைபீரியாவில் அவர் கண்டவற்றை கதையாக எழுதப்போவதாக சொன்னாலும் அவர் அதைக்கொண்டு எழுதியது ஒரே ஒரு சிறுகதை மட்டுமே !
பின்னர் எதற்கு அங்கே அவர் போனார் ? 
லிடியா என்கிற பெண்ணின் மீதான காதலை மறக்க மேற்கொண்ட பயணம் அது. ஓல்கா என்கிற பெண்ணை முதலில் திருமணம் செய்து கொண்டிருந்தார் அவர். கருச்சிதைவு ஏற்பட்டதும் இவரைவிட்டு நீங்கினாள் அவள். அதற்குப்பின்னர் லிடியா என்கிற பெண்ணிடம் காதல் பூண்டார். அந்த பெண்ணுக்கு இவர் மீது ஈர்ப்பு இருந்த பொழுதும் இவரின் நண்பரோடு காதல் பூண்டு விலகிவிட்டாள். 
திருமணமும் நடந்து முடிந்திருந்தது அவளுக்கு ! லிடியாவை நான்கைந்து முறை மட்டுமே சந்தித்திருந்தார் செகாவ். 
இறுதிமுறை சந்தித்த பொழுது காசநோய் முற்றியிருந்தது அவருக்கு. பேச முடியாத சூழலில் ,
"உனக்கு என் நன்றி ! நாளைக்கும் வா !" 
என்று எழுதி அனுப்பினார் அவர். 
அப்பொழுது போனவள் மீண்டும் வரவே இல்லை. காரணம் அவளின் கணவன் தந்தி அனுப்பிக்கொண்டே இருந்தான்.  
கார்க்கியிடம் மலர்கள் பூத்திருந்ததை காண்பித்து ,"இது ஓன்றுமில்லாத களர்நிலமாக இருந்தது ;இப்போழுது மலர்கள் பூத்து குலுங்குகின்றன .இந்த மாதிரி ஒவ்வொரு மனிதரும் மாறினால் உலகமே பூக்களால் நிரம்பி விடாதா ?'என ஆதங்கத்தோடு கேட்டார் . 
அவர் சாகிற வரை ரத்த வாந்தி எடுத்த பொழுதும் எளியவர்களுக்கு மருத்துவம் பார்த்தார் .கொஞ்சமாக ஷாம்பெயின் சாப்பிட்டு இறந்து போனார் அவர் .
அவரின் மரணமும் அவரின் கதைகளை போலவே சுவாரசியமாக அமைந்தது. இவர் வெளியூரில் மரணமடைய அவரை மாஸ்கோவுக்கு தொடர்வண்டியில் அழைத்து வருவதாக செய்தி வந்தது.
 மக்கள் திரளாக கூடியிருந்தார்கள். 
ஜப்பானுடன் நடந்த போரில் ஈடுபட்டிருந்த ராணுவ ஜெனரல் கெல்லரின் உடலும் அதே தொடர்வண்டியில் வந்தது. கெல்லரின் சவப்பெட்டிக்கு  பின்னர் செகாவுக்கு அரசு செய்கிற மரியாதை என்று எண்ணிக்கொண்டு மக்கள் பயணித்தார்கள். 
செகாவின் உடல் மீன் பெட்டியில் வந்து சேர்ந்தது.
 வெறும் எண்பது பேர் அவருக்கு அஞ்சலி செலுத்த வந்தார்கள்.
 ராணுவ ஜெனரலுக்கு அஞ்சலி செலுத்த வேண்டிய வீரர் ஒருவர் தாமதமாக வந்து இவரின் இறுதி அஞ்சலியில் பங்குபெற்றார்.
 மக்களின் நாடகத்தன்மையை சாடிய அவரின் வாழ்க்கையும் நாடகமயமாக முடிந்து போனது
அவர்  கதைகள் ஒன்றுமே சொல்லாதவை என அவர் காலத்தில் சிலரால் தூக்கி எறியப்பட்டாலும் காலம் அவரை கண்டுகொண்டது . 
'ஒரு தீவு என்பது,தூக்கச் சடவு.,அவலம்,வான்கா என்பது புகழ் பெற்ற கதைகள்.டால்ஸ்டாய் செகாவ் சிறுகதைகளை நவரத்தின கற்கள்,அவைகளுக்கு விலை மதிக்க இயலாது என்று பாராட்டியுள்ளார்.
அவர் எப்படி இருந்தார் என்பதை அவரின் கதையின் மூலமே சொல்லலாம் '.ஒரு குதிரைக்காரன் காலை தன் வண்டியில் ஏறும் எல்லாரிடமும்  தான் ஒன்றை சொல்வேன் கேளுங்கள் என சொல்லிக்கொண்டே இருக்கிறான் யாருமே கேட்கவில்லை ;
இறுதியில் மாலை  வேலை முடிந்து குதிரையிடம் கண்ணீர் விட்டு அழுது என் மகன் இறந்துவிட்டான் நேற்று ,யாருமே கேட்கவில்லையே என் கவலை'
 என அவன் சொல்கிறான் .
-குதிரை தலையாட்டி கேட்கிறது .
 "ஒரு சில பக்கங்களில் ஒரு மனிதனின் வாழ்வை அற்புத ஓவியமாக வடிக்க செகாவ் ஒருவரால் மட்டுமே முடியும்"
      டால்ஸ்டாய் வார்த்தைகள் இவை.
                                                                                                                             - பூ.கொ.சரவணன்
========================================================================
ஜேம்ஸ் பாண்ட் சீரிஸின் 24வது படம், ‘ஸ்பெக்டர்’ அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வரவிருக்கிறது. பாண்ட் படம் வருகிறதென்றால் சும்மாவா? அதன் பரபரப்பு அப்டேட்ஸ் இதோ...

* 1960களில் ஷான் கானரி தொடங்கி ரோஜர் மூர், திமோதி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன் போன்றவர்கள் ஜேம்ஸ்பாண்டுகளாக கலக்கினாலும் தற்போதைய பாண்டான டேனியல் க்ரேக்தான், அத்தனை பேரையும் ஓவர்டேக் செய்து சாதனை படைத்திருக்கிறார்.

‘கேஸினோ ராயல்’, ‘குவாண்டம் ஆஃப் சொலஸ்’, ‘ஸ்கை ஃபால்’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் அவருக்கு இது நான்காவது ஜேம்ஸ் பாண்ட் படம். ‘‘21ம் நூற்றாண்டின் சிறந்த ஜேம்ஸ்பாண்ட்’’ என்று ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கே பாராட்டு பொக்கே கொடுத்திருக்கிறார் க்ரேக்கிற்கு!

* 2013ம் ஆண்டு ஜூலை மாதத்தின் தொடக்கத்திலேயே புதிய ஜேம்ஸ் பாண்ட் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. திரைக்கதை வேலை நடப்பதாகவும் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதாகவும் பல செய்திகள் கசிந்தன. அப்போது ‘பாண்ட் 24’ என்று தான் புதிய படத்தின் பெயரைக் குறிப்பிட்டார்கள். இப்போதுதான் அது ‘ஸ்பெக்டர்’ என்பது உறுதியாகியிருக்கிறது.

* ‘இதாண்டா கதை. இதை முடிஞ்சா எங்களை மாதிரி எடுத்துக் காட்டுங்கடா’ எனச் சொல்லி விடுவதே ஹாலிவுட் ஸ்டைல். அந்த வகையில் இயான் பிளமிங் எழுதிய ‘தண்டர்பால்’ நாவலின் தாக்கம்தான் ‘ஸ்பெக்டர்’. ஸ்பெக்டர் எனும் சர்வதேச பயங்கரவாத கும்பல் பற்றிய ரகசிய தகவல் ஜேம்ஸ் பாண்டுக்குக் கிடைக்கிறது.

அந்த கும்பலை அவர் தேடிக்கொண்டிருக்கும்போதே அவர் பணியாற்றி வரும் பிரிட்டிஷ் உளவு அமைப்பான எம்.ஐ.16 அமைப்புக்கு அரசியல் ரீதியிலான பிரச்னைகள் அதிகரிக்கின்றன. இந்நிலையில், ஸ்பெக்டர் கும்பல், எம்.ஐ.16 அமைப்பையே அழிக்கத் திட்டமிடுகிறது. அதை முறியடித்து, அந்த கும்பலை ஜேம்ஸ் பாண்ட் ஒழித்துக் கட்டுவதுதான் இந்தக் கதையின் சாரம்!

* முதல் ஜேம்ஸ் பாண்ட் சினிமாவாக 1961ம் ஆண்டில் வெளிவந்த ‘டாக்டர் நோ’ படத்திலும் இதே குளோபல் டெரரிஸ்ட் கான்செப்ட் வரும். அந்தக் கூட்டத்தின் தலைவன் எப்போதும் ஒரு பூனையோடுதான் வருவான். ஆக, இதிலும் பூனை சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள். இது மிகவும் சக்தி படைத்த கும்பல் என்பதால்தான், படத்தின் பெயரே ‘ஸ்பெக்டர்’ ஆகிவிட்டது!

* பல மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்படவிருக்கும் இந்தப் படத்தை, ‘ஸ்கை ஃபால்’ இயக்குநர் சாம் மென்டிஸ்தான் மீண்டும் இயக்குகிறார். கதாநாயகிகளுக்கும் கிளுகிளுப்புக்கும் வழக்கம்போல பஞ்சமில்லை. இப்படத்தில் டேனியல் க்ரேக்கிற்கு மற்றொரு ஜோடியாக நடிக்கும் மோனிகா பெலூச்சிக்கு வயது 50!

டேனியல் க்ரேக்கிற்கு வயது 46! ஜேம்ஸ் பாண்ட் படங்களில் மிகவும் வயதான ஜோடி இதுதான். ‘ஸ்கை ஃபால்’ படத்திற்கு டேனியல் க்ரேக் 17 மில்லியன் டாலர் சம்பளம் வாங்கினார். ‘ஸ்பெக்டர்’ படத்திற்கு இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறதாம் அவர் சம்பளம்! லண்டன், மெக்ஸிகோ சிட்டி, ரோம், ஆல்ப்ஸ், மொராக்கோ ஆகிய இடங்களில் இதன் ஷூட்டிங் நடக்கிறது.

* பாண்ட் படம் என்றாலே அவரின் ஸ்பெஷல் கார் பற்றித்தான் முதல் தகவல் வரும். ரிமோட் கன்ட்ரோல், துப்பாக்கி எனப் புதுப்புது வசதிகளால் சாகசம் செய்யும் ஜேம்ஸ்பாண்ட் கார் இதிலும் உண்டு. ஆஸ்டான் மார்ட்டின் கார் நிறுவனம் இப்படத்திற்கென டி.பி 10 என்ற பெயரில் பிரத்யேகக் காரை தயாரித்திருக்கிறது. இந்தப் படத்துக்காக இந்த மாடலில் 10 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=14738&id1=5#sthash.QOhqH2ro.dpuf
ஜேம்ஸ் பாண்ட் சீரிஸின் 24வது படம், ‘ஸ்பெக்டர்’ அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வரவிருக்கிறது. பாண்ட் படம் வருகிறதென்றால் சும்மாவா? அதன் பரபரப்பு அப்டேட்ஸ் இதோ...

* 1960களில் ஷான் கானரி தொடங்கி ரோஜர் மூர், திமோதி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன் போன்றவர்கள் ஜேம்ஸ்பாண்டுகளாக கலக்கினாலும் தற்போதைய பாண்டான டேனியல் க்ரேக்தான், அத்தனை பேரையும் ஓவர்டேக் செய்து சாதனை படைத்திருக்கிறார்.

‘கேஸினோ ராயல்’, ‘குவாண்டம் ஆஃப் சொலஸ்’, ‘ஸ்கை ஃபால்’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் அவருக்கு இது நான்காவது ஜேம்ஸ் பாண்ட் படம். ‘‘21ம் நூற்றாண்டின் சிறந்த ஜேம்ஸ்பாண்ட்’’ என்று ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கே பாராட்டு பொக்கே கொடுத்திருக்கிறார் க்ரேக்கிற்கு!

* 2013ம் ஆண்டு ஜூலை மாதத்தின் தொடக்கத்திலேயே புதிய ஜேம்ஸ் பாண்ட் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. திரைக்கதை வேலை நடப்பதாகவும் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதாகவும் பல செய்திகள் கசிந்தன. அப்போது ‘பாண்ட் 24’ என்று தான் புதிய படத்தின் பெயரைக் குறிப்பிட்டார்கள். இப்போதுதான் அது ‘ஸ்பெக்டர்’ என்பது உறுதியாகியிருக்கிறது.

* ‘இதாண்டா கதை. இதை முடிஞ்சா எங்களை மாதிரி எடுத்துக் காட்டுங்கடா’ எனச் சொல்லி விடுவதே ஹாலிவுட் ஸ்டைல். அந்த வகையில் இயான் பிளமிங் எழுதிய ‘தண்டர்பால்’ நாவலின் தாக்கம்தான் ‘ஸ்பெக்டர்’. ஸ்பெக்டர் எனும் சர்வதேச பயங்கரவாத கும்பல் பற்றிய ரகசிய தகவல் ஜேம்ஸ் பாண்டுக்குக் கிடைக்கிறது.

அந்த கும்பலை அவர் தேடிக்கொண்டிருக்கும்போதே அவர் பணியாற்றி வரும் பிரிட்டிஷ் உளவு அமைப்பான எம்.ஐ.16 அமைப்புக்கு அரசியல் ரீதியிலான பிரச்னைகள் அதிகரிக்கின்றன. இந்நிலையில், ஸ்பெக்டர் கும்பல், எம்.ஐ.16 அமைப்பையே அழிக்கத் திட்டமிடுகிறது. அதை முறியடித்து, அந்த கும்பலை ஜேம்ஸ் பாண்ட் ஒழித்துக் கட்டுவதுதான் இந்தக் கதையின் சாரம்!

* முதல் ஜேம்ஸ் பாண்ட் சினிமாவாக 1961ம் ஆண்டில் வெளிவந்த ‘டாக்டர் நோ’ படத்திலும் இதே குளோபல் டெரரிஸ்ட் கான்செப்ட் வரும். அந்தக் கூட்டத்தின் தலைவன் எப்போதும் ஒரு பூனையோடுதான் வருவான். ஆக, இதிலும் பூனை சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள். இது மிகவும் சக்தி படைத்த கும்பல் என்பதால்தான், படத்தின் பெயரே ‘ஸ்பெக்டர்’ ஆகிவிட்டது!

* பல மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்படவிருக்கும் இந்தப் படத்தை, ‘ஸ்கை ஃபால்’ இயக்குநர் சாம் மென்டிஸ்தான் மீண்டும் இயக்குகிறார். கதாநாயகிகளுக்கும் கிளுகிளுப்புக்கும் வழக்கம்போல பஞ்சமில்லை. இப்படத்தில் டேனியல் க்ரேக்கிற்கு மற்றொரு ஜோடியாக நடிக்கும் மோனிகா பெலூச்சிக்கு வயது 50!

டேனியல் க்ரேக்கிற்கு வயது 46! ஜேம்ஸ் பாண்ட் படங்களில் மிகவும் வயதான ஜோடி இதுதான். ‘ஸ்கை ஃபால்’ படத்திற்கு டேனியல் க்ரேக் 17 மில்லியன் டாலர் சம்பளம் வாங்கினார். ‘ஸ்பெக்டர்’ படத்திற்கு இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறதாம் அவர் சம்பளம்! லண்டன், மெக்ஸிகோ சிட்டி, ரோம், ஆல்ப்ஸ், மொராக்கோ ஆகிய இடங்களில் இதன் ஷூட்டிங் நடக்கிறது.

* பாண்ட் படம் என்றாலே அவரின் ஸ்பெஷல் கார் பற்றித்தான் முதல் தகவல் வரும். ரிமோட் கன்ட்ரோல், துப்பாக்கி எனப் புதுப்புது வசதிகளால் சாகசம் செய்யும் ஜேம்ஸ்பாண்ட் கார் இதிலும் உண்டு. ஆஸ்டான் மார்ட்டின் கார் நிறுவனம் இப்படத்திற்கென டி.பி 10 என்ற பெயரில் பிரத்யேகக் காரை தயாரித்திருக்கிறது. இந்தப் படத்துக்காக இந்த மாடலில் 10 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=14738&id1=5#sthash.QOhqH2ro.dpuf
ஜேம்ஸ் பாண்ட் சீரிஸின் 24வது படம், ‘ஸ்பெக்டர்’ அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வரவிருக்கிறது. பாண்ட் படம் வருகிறதென்றால் சும்மாவா? அதன் பரபரப்பு அப்டேட்ஸ் இதோ...

* 1960களில் ஷான் கானரி தொடங்கி ரோஜர் மூர், திமோதி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன் போன்றவர்கள் ஜேம்ஸ்பாண்டுகளாக கலக்கினாலும் தற்போதைய பாண்டான டேனியல் க்ரேக்தான், அத்தனை பேரையும் ஓவர்டேக் செய்து சாதனை படைத்திருக்கிறார்.

‘கேஸினோ ராயல்’, ‘குவாண்டம் ஆஃப் சொலஸ்’, ‘ஸ்கை ஃபால்’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் அவருக்கு இது நான்காவது ஜேம்ஸ் பாண்ட் படம். ‘‘21ம் நூற்றாண்டின் சிறந்த ஜேம்ஸ்பாண்ட்’’ என்று ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கே பாராட்டு பொக்கே கொடுத்திருக்கிறார் க்ரேக்கிற்கு!

* 2013ம் ஆண்டு ஜூலை மாதத்தின் தொடக்கத்திலேயே புதிய ஜேம்ஸ் பாண்ட் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. திரைக்கதை வேலை நடப்பதாகவும் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதாகவும் பல செய்திகள் கசிந்தன. அப்போது ‘பாண்ட் 24’ என்று தான் புதிய படத்தின் பெயரைக் குறிப்பிட்டார்கள். இப்போதுதான் அது ‘ஸ்பெக்டர்’ என்பது உறுதியாகியிருக்கிறது.

* ‘இதாண்டா கதை. இதை முடிஞ்சா எங்களை மாதிரி எடுத்துக் காட்டுங்கடா’ எனச் சொல்லி விடுவதே ஹாலிவுட் ஸ்டைல். அந்த வகையில் இயான் பிளமிங் எழுதிய ‘தண்டர்பால்’ நாவலின் தாக்கம்தான் ‘ஸ்பெக்டர்’. ஸ்பெக்டர் எனும் சர்வதேச பயங்கரவாத கும்பல் பற்றிய ரகசிய தகவல் ஜேம்ஸ் பாண்டுக்குக் கிடைக்கிறது.

அந்த கும்பலை அவர் தேடிக்கொண்டிருக்கும்போதே அவர் பணியாற்றி வரும் பிரிட்டிஷ் உளவு அமைப்பான எம்.ஐ.16 அமைப்புக்கு அரசியல் ரீதியிலான பிரச்னைகள் அதிகரிக்கின்றன. இந்நிலையில், ஸ்பெக்டர் கும்பல், எம்.ஐ.16 அமைப்பையே அழிக்கத் திட்டமிடுகிறது. அதை முறியடித்து, அந்த கும்பலை ஜேம்ஸ் பாண்ட் ஒழித்துக் கட்டுவதுதான் இந்தக் கதையின் சாரம்!

* முதல் ஜேம்ஸ் பாண்ட் சினிமாவாக 1961ம் ஆண்டில் வெளிவந்த ‘டாக்டர் நோ’ படத்திலும் இதே குளோபல் டெரரிஸ்ட் கான்செப்ட் வரும். அந்தக் கூட்டத்தின் தலைவன் எப்போதும் ஒரு பூனையோடுதான் வருவான். ஆக, இதிலும் பூனை சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள். இது மிகவும் சக்தி படைத்த கும்பல் என்பதால்தான், படத்தின் பெயரே ‘ஸ்பெக்டர்’ ஆகிவிட்டது!

* பல மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்படவிருக்கும் இந்தப் படத்தை, ‘ஸ்கை ஃபால்’ இயக்குநர் சாம் மென்டிஸ்தான் மீண்டும் இயக்குகிறார். கதாநாயகிகளுக்கும் கிளுகிளுப்புக்கும் வழக்கம்போல பஞ்சமில்லை. இப்படத்தில் டேனியல் க்ரேக்கிற்கு மற்றொரு ஜோடியாக நடிக்கும் மோனிகா பெலூச்சிக்கு வயது 50!

டேனியல் க்ரேக்கிற்கு வயது 46! ஜேம்ஸ் பாண்ட் படங்களில் மிகவும் வயதான ஜோடி இதுதான். ‘ஸ்கை ஃபால்’ படத்திற்கு டேனியல் க்ரேக் 17 மில்லியன் டாலர் சம்பளம் வாங்கினார். ‘ஸ்பெக்டர்’ படத்திற்கு இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறதாம் அவர் சம்பளம்! லண்டன், மெக்ஸிகோ சிட்டி, ரோம், ஆல்ப்ஸ், மொராக்கோ ஆகிய இடங்களில் இதன் ஷூட்டிங் நடக்கிறது.

* பாண்ட் படம் என்றாலே அவரின் ஸ்பெஷல் கார் பற்றித்தான் முதல் தகவல் வரும். ரிமோட் கன்ட்ரோல், துப்பாக்கி எனப் புதுப்புது வசதிகளால் சாகசம் செய்யும் ஜேம்ஸ்பாண்ட் கார் இதிலும் உண்டு. ஆஸ்டான் மார்ட்டின் கார் நிறுவனம் இப்படத்திற்கென டி.பி 10 என்ற பெயரில் பிரத்யேகக் காரை தயாரித்திருக்கிறது. இந்தப் படத்துக்காக இந்த மாடலில் 10 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=14738&id1=5#sthash.QOhqH2ro.dpuf
ஜேம்ஸ் பாண்ட் சீரிஸின் 24வது படம், ‘ஸ்பெக்டர்’ அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வரவிருக்கிறது. பாண்ட் படம் வருகிறதென்றால் சும்மாவா? அதன் பரபரப்பு அப்டேட்ஸ் இதோ...

* 1960களில் ஷான் கானரி தொடங்கி ரோஜர் மூர், திமோதி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன் போன்றவர்கள் ஜேம்ஸ்பாண்டுகளாக கலக்கினாலும் தற்போதைய பாண்டான டேனியல் க்ரேக்தான், அத்தனை பேரையும் ஓவர்டேக் செய்து சாதனை படைத்திருக்கிறார்.

‘கேஸினோ ராயல்’, ‘குவாண்டம் ஆஃப் சொலஸ்’, ‘ஸ்கை ஃபால்’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் அவருக்கு இது நான்காவது ஜேம்ஸ் பாண்ட் படம். ‘‘21ம் நூற்றாண்டின் சிறந்த ஜேம்ஸ்பாண்ட்’’ என்று ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கே பாராட்டு பொக்கே கொடுத்திருக்கிறார் க்ரேக்கிற்கு!

* 2013ம் ஆண்டு ஜூலை மாதத்தின் தொடக்கத்திலேயே புதிய ஜேம்ஸ் பாண்ட் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. திரைக்கதை வேலை நடப்பதாகவும் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதாகவும் பல செய்திகள் கசிந்தன. அப்போது ‘பாண்ட் 24’ என்று தான் புதிய படத்தின் பெயரைக் குறிப்பிட்டார்கள். இப்போதுதான் அது ‘ஸ்பெக்டர்’ என்பது உறுதியாகியிருக்கிறது.

* ‘இதாண்டா கதை. இதை முடிஞ்சா எங்களை மாதிரி எடுத்துக் காட்டுங்கடா’ எனச் சொல்லி விடுவதே ஹாலிவுட் ஸ்டைல். அந்த வகையில் இயான் பிளமிங் எழுதிய ‘தண்டர்பால்’ நாவலின் தாக்கம்தான் ‘ஸ்பெக்டர்’. ஸ்பெக்டர் எனும் சர்வதேச பயங்கரவாத கும்பல் பற்றிய ரகசிய தகவல் ஜேம்ஸ் பாண்டுக்குக் கிடைக்கிறது.

அந்த கும்பலை அவர் தேடிக்கொண்டிருக்கும்போதே அவர் பணியாற்றி வரும் பிரிட்டிஷ் உளவு அமைப்பான எம்.ஐ.16 அமைப்புக்கு அரசியல் ரீதியிலான பிரச்னைகள் அதிகரிக்கின்றன. இந்நிலையில், ஸ்பெக்டர் கும்பல், எம்.ஐ.16 அமைப்பையே அழிக்கத் திட்டமிடுகிறது. அதை முறியடித்து, அந்த கும்பலை ஜேம்ஸ் பாண்ட் ஒழித்துக் கட்டுவதுதான் இந்தக் கதையின் சாரம்!

* முதல் ஜேம்ஸ் பாண்ட் சினிமாவாக 1961ம் ஆண்டில் வெளிவந்த ‘டாக்டர் நோ’ படத்திலும் இதே குளோபல் டெரரிஸ்ட் கான்செப்ட் வரும். அந்தக் கூட்டத்தின் தலைவன் எப்போதும் ஒரு பூனையோடுதான் வருவான். ஆக, இதிலும் பூனை சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள். இது மிகவும் சக்தி படைத்த கும்பல் என்பதால்தான், படத்தின் பெயரே ‘ஸ்பெக்டர்’ ஆகிவிட்டது!

* பல மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்படவிருக்கும் இந்தப் படத்தை, ‘ஸ்கை ஃபால்’ இயக்குநர் சாம் மென்டிஸ்தான் மீண்டும் இயக்குகிறார். கதாநாயகிகளுக்கும் கிளுகிளுப்புக்கும் வழக்கம்போல பஞ்சமில்லை. இப்படத்தில் டேனியல் க்ரேக்கிற்கு மற்றொரு ஜோடியாக நடிக்கும் மோனிகா பெலூச்சிக்கு வயது 50!

டேனியல் க்ரேக்கிற்கு வயது 46! ஜேம்ஸ் பாண்ட் படங்களில் மிகவும் வயதான ஜோடி இதுதான். ‘ஸ்கை ஃபால்’ படத்திற்கு டேனியல் க்ரேக் 17 மில்லியன் டாலர் சம்பளம் வாங்கினார். ‘ஸ்பெக்டர்’ படத்திற்கு இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறதாம் அவர் சம்பளம்! லண்டன், மெக்ஸிகோ சிட்டி, ரோம், ஆல்ப்ஸ், மொராக்கோ ஆகிய இடங்களில் இதன் ஷூட்டிங் நடக்கிறது.

* பாண்ட் படம் என்றாலே அவரின் ஸ்பெஷல் கார் பற்றித்தான் முதல் தகவல் வரும். ரிமோட் கன்ட்ரோல், துப்பாக்கி எனப் புதுப்புது வசதிகளால் சாகசம் செய்யும் ஜேம்ஸ்பாண்ட் கார் இதிலும் உண்டு. ஆஸ்டான் மார்ட்டின் கார் நிறுவனம் இப்படத்திற்கென டி.பி 10 என்ற பெயரில் பிரத்யேகக் காரை தயாரித்திருக்கிறது. இந்தப் படத்துக்காக இந்த மாடலில் 10 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=14738&id1=5#sthash.QOhqH2ro.dpuf


புதன், 28 ஜனவரி, 2015

கெட்ட [இறைச்சி ] வியாபாரிகள்
சென்னையில் உள்ள ஓட்டல்கள்,துரித உணவு கடைகளில் சென்னை மாநகர மக்களுக்கு உணவாகின்றன.http://img.dinamalar.com/business/admin/news/large_1378062240.jpg
 சென்னையில் அடிக்கடி ரெயில் நிலையத்தில் தன் கணக்கில் கெட்டுப்போன மாட்டு இறைச்சிகள் கண்டு பிடிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன.
மற்ற நாள்களில் இந்த இறைச்சிகள் என்னவாகின்றன?இவை தற்போது சென்னையின் புற நகர்களுக்கும் உணவாக செல்கின்றன.
சென்னையில் இவை கண்டு பிடிக்கப் பட்டது தெரிந்தாலும் தமிழக மற்ற நகரங்களிலும் கெட்டுப்போன இறைச்சி விற்பனை பரவி வருகிறது.அதாவது இந்த கெட்ட [இறைச்சி]வியாபாரிகள் தங்கள் தொழிலை பரவலாக்கி வருகிறார்கள்.
இதை தடுக்க வேண்டிய தமிழக சுகாதார துறையினரோ கெட்ட இறைச்சி தொழிலதிபர்கள் தரும் பணத்தில் நல்ல இறைச்சி வாங்கி தின்று கொழுத்துக்கொண்டிருக்கின்றனர்.
எங்கிருந்து இந்த கெட்ட இறைச்சி வருகிறது?


ஆந்திர மாநிலம் நெல்லூர், விஜயவாடா ஆகிய பகுதிகளில் இருந்துதான் தமிழகத்துக்கு டன் கணக்கில் மாட்டு இறைச்சி சப்ளை செய்யப்படுகிறது. இதற்கென ஆந்திராவில் சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் மிகப்பெரிய கும்பல் உள்ளது. 
நோய்வாய்ப்பட்டு இறந்த மாடுகள், விபத்தில் அடிபட்ட மாடு களை இந்த கும்பலைச் சேர்ந்தவர் கள் சேகரித்து ஒரே இடத்துக்கு கொண்டுவருவார்கள். பல விவசாயி களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு நோய்வாய்ப்படும் மாடு களை குறைந்த விலைக்கு வாங்கி யும் வெட்டுவார்கள். 
மாடுகளை வெட்டி பெரிய பெரிய துண்டுகளாக, தெர்மாக்கோல் ஐஸ் பெட்டியில் அடைத்து, ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு வரும் ரயில்களில் அனுப்பிவிடுவார்கள்.

சென்னையைச் சேர்ந்த சகோதரர் கள் 2 பேர், 
அவர்களின் தொழில் கூட்டாளிகள் 2 பேர் ஆகியோர்தான் சென்னையில் விற்பனை செய் கின்றனர். 
இவர்கள் 4 பேரிடம் 30-க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கின்றனர். வாரத்துக்கு 2 அல்லது 3 முறை இறைச்சி லோடு வரும். 
ஆயிரம்விளக்கு மற்றும் சிந்தா திரிப்பேட்டை கூவம் ஆற்றின் அருகே இந்த இறைச்சி பெட்டிகளை கொண்டுவந்து பிரித்து, டன் கணக்கில் குவித்து வைத்திருப்பார்கள். 
அவற்றை பல வியாபாரிகள் வந்து கிலோ கணக்கில் வாங்கிச் செல்வார்கள்.
இறைச்சியை 10-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் எடுத்துச் சென்று இறைச்சிக் கடைக்காரர்கள் மற்றும் ஓட்டல்களுக்கு சப்ளை செய்கின்றனர். பின்னர் சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி, 400-க் கும் மேற்பட்ட பாஸ்ட் ஃபுட் கடைகளுக்கும் சப்ளை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கடைகளில் ஒரு கிலோ மாட்டு இறைச்சி ரூ.180 முதல் 200 வரையும், ஆடு ரூ.400 முதல் ரூ.450 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இவர்கள் ஆந்திராவில் இருந்து ரூ.30-க்கு மாட்டு இறைச்சியையும், வேறு மாநிலங்களில் இருந்து ரூ.50-க்கு ஆட்டிறைச்சியையும் வாங்குகின் றனர். 
பின்னர் மாட்டிறைச்சியை ரூ.90-க்கும், ஆட்டிறைச்சியை ரூ.150-க்கும் விற்கின்றனர் என்றார். சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையினரால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மாட்டிறைச்சி பார்சல்கள். (கோப்புப் படம்)

விதிப்படி மாட்டு இறைச்சிக் கடை நடத்தி வரும் வியாபாரிகள்;
'அரசு விதிமுறைப்படி வியாசர் பாடி அருகே ஆட்டுத்தொட்டியில் டாக்டர்களின் மேற்பார்வையில் மாடுகளை வெட்டி, சீல் வைத்து கொண்டு வந்து வியாபாரம் செய்கிறோம். 
ஆனால், சிலர் அதிக லாபம் சம்பாதிக்க இதுபோன்று செய்கின்றனர். அவர்களால் நேர்மையாக தொழில் நடத்தும் பலர் பாதிக்கப்படுகின்றனர். மக்களை நேரடியாக பாதிக்கும் இதுபோன்ற செயல்களை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.'என்று கூ றினர்.

கெட்டுப்போன இறைச்சியை யார் வாங்குகிறார்கள் என்பதை அரசு சுகாதார துறை அதிகாரிகள் கண்டுபிடித்து அவர் கள் மீது நடவடிக்கை எடுப்ப தில்லை. இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “கெட்டுப்போன பொருட்கள் விற்பனை செய்யப் படாமல் தடுப்பது மட்டும்தான் எங்கள் பொறுப்பு. கெட்டுப்போன இறைச்சியை அனுப்பிய மற்றும் சென்னையில் வாங்கும் நபர்கள் யார்? 
என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பது உணவு பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள்தான்” என்றனர். 
 
உணவு பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, “கெட்டுப்போன பொருட்கள் அனுப்புவதை தடுப்பதற் காக ரயில்வே துறையிலேயே தனிப்பிரிவு உள்ளது. இதை அவர்கள்தான் கவனிக்க வேண்டும்” என்றனர்.
இது குறித்து ரயில்வே சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “பார்சல் சர்வீஸ் மூலம் அனுப்பப்படும் பொருட்கள் கெட்டுப் போனது தெரிந்தால் அவற்றை கைப்பற்றி அழிப்பது மட்டும்தான் எங்கள் பணி” என்று கூறி முடித்துக் கொண்டனர். http://ekuruvi.com/wp-content/uploads/2013/12/beef.jpg

இவர்கள் இப்படியான  பேச்சுக்கு காரணம் அழுகிப்போன இறைச்சி வியாபாரிகள் கொடுக்கும் கையுட்டுதான் காரணம் என்பதை சின்ன குழந்தை கூட சொல்லி விடும்.
பொதுமக்களின் உடல் நலனை பாதிக்கும் இந்த கொடூர சுகாதார கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்பது யார்தான் .
தவறு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார் என்பது மட்டும் கடைசி வரை தெரியவில்லை. 

இந்த அரசு அதிகாரிகளால்தான் அரசு விதியின்படி தொழில் செய்யும் நல்ல வியாபாரிகள் தங்கள் தொழிலை பாதுகாக்க இந்த கெட்ட [இறைச்சி ]வியாபாரிகள் வலையில் விழுந்து விடக் கூடாது.
எல்லாம் அந்த லஞ்சப் ப [ண ]ன க் கு[த்தான்]  வெளிச்சம். 
------------------------------------------------------------------------------------------------------------- 
ஆப்பிள் நிறுவனத்தின் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் விற்பனையில் கடந்த காலாண்டில் அதிகளவு  லாபத்தை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, கடந்த காலாண்டில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு லாபம்  ஈட்டியுள்ளது அந்த நிறுவனம். இது உலகளவில் பெரிய சாதனை.
ஆனால் கொள்ளை லாபத்தில் குளிக்கும் இது போன்ற நிறுவனங்கள் தங்கள் வெற்றிக்கு காரணமான தொழிலாளர்களை இன்னமும் அதிக லாபத்தை குவிக்க வெளியே அனுப்பி பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளுவதுதான் சரியல்ல.வெளி தள்ளப்பட்ட தொழிலாளர் களால்தான் இந்த பணக்குவியல் சாத்தியமானது என்பதை மறந்து அவர்கள் வாழ்க்கையை இருளாக்குவது என்ன வணிக முறையோ?இதை கண்டு கொள்ளாத அரசை என்ன செய்யலாம்.?

கருப்பா,,,,,,? வெள்ளையா,,,?

நீங்கள் குண்டாக இருக்கிறீர்களா?
ஒல்லியாக மாற்ற முடியும்.
நீங்கள் ஒல்லியாக இருக்கிறீர்களா?
குண்டாக மாற்ற முடியும்.
நீங்கள் கருப்பாக இருக்கிறீர்களா?
வெள்ளையாக மாற்ற முடியாது.
இதை முதலில்பெண்கள்  புரிந்து கொள்ளணும். 
இது தான் நம் நிறம். இதை எப்படி அழகாக, ஆரோக்கியமாக தக்க வைத்துக் கொள்வது என்பதில் மட்டுமே, நம் கவனம் இருக்கணும். மற்றவர்கள், நம் நிறத்தைப் பற்றி, குறையாகப் பேசுவதற்கு இடம் தரக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒரு நிறம் என்பது இயற்கை. அதை, அப்படியே ஏற்பது தான் நியாயம். அதை விட்டு விட்டு கருப்பு நிறமாக இருந்தால் தவறு, அசிங்கம், அவலட்சணம் என்று பேசுவது, நடத்துவது முட்டாள்தனம்.
கருப்பு என்பது, ஒரு நிறமே.
http://mmimages.maalaimalar.com/Articles/2011/Aug/093ff800-49fb-4dbb-9879-2c2806b4822e_S_secvpf.gif
அதை வெளுப்பாக்குகிறேன் பேர்வழி என்று கூறிக் கொண்டு, இயல்பாக இருக்கும் இயற்கை அழகைக் கெடுக்கும் விதத்தில் தங்கள் தோற்றத்திற்கும், உருவத்திற்கும் பொருந்தாத விதத்தில், கருப்பான பெண்கள் ஒப்பனை செய்து கொள்வதும் சரியில்லை.
விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்
அழகின் நிறம் சிவப்பு தான் என்று, எந்த விஞ்ஞானமும் சொன்னதில்லை. ஆனால், ஆரோக்கியமான நிறம் கருப்பு என்று, பல விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிறந்ததே பாவம் என, நினைக்கும் படி சூழ்நிலையை உருவாக்கி விட்டதும் நாம் தான்.

 நம் தோலின் நிறம் எதன் அடிப்படையில் அமைகிறது, அதன் தன்மை, குணம் இவையெல்லாவற்றையும், நம் பெண் பிள்ளைகளுக்கு, நாம் சொல்லி புரிய வைக்கணும். 
அதற்கு முதலில், நாம் தெரிந்து கொள்ளணும்.
நம் தோலின் நிறத்தை நிர்ணயிப்பது தோலில் இருக்கும், 'மெலனின்' என்ற நிறமிகள் தான். இது அதிகமாக சுரந்தால் கருப்பாகவும், குறைவாக இருந்தால் வெளுப்பாகவும், தோலின் நிறம் அமையும்.தோலின் கீழ் அடுக்கில் உள்ள, 'மெலனோஸைட்' என்னும் வகையைச் சார்ந்த செல்கள் தான் மெலனினை உற்பத்தி செய்கின்றன. 

இது தான் சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் தோலுக்குள் ஊடுருவும் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. மெலனின் உற்பத்தி குறைவானவர்களுக்கு, http://3.bp.blogspot.com/-WAQdn0yoIuM/Uoh80Gfw_XI/AAAAAAAAH1A/Log3BkFlUKM/s320/bridal%2Bmake%2Bup-759564.jpgதோல் நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம். 

ரொம்பவும் வெளுப்பாக தோல் உள்ளவர்களுக்கு, மெலனின் உற்பத்தி குறைந்து புற்றுநோய் வரக்கூட வாய்ப்புகள் உண்டு. கருப்பு தோல், இயற்கையிலேயே கூடுதல் பாதுகாப்பை அளிக்கிறது. இந்தியாவில் மட்டும் தான், இந்த கருப்பு நிறம், ஒரு பெரிய பிரச்னையாகப் பேசப்படுகிறது. ஒரு வீட்டில் இரண்டு பிள்ளைகளில், ஒரு பிள்ளை கருப்பாகவும்,
மற்றொரு பிள்ளை வெளுப்பாகவும் இருந்து விட்டால், நம் பெரியவர்கள் சொல்லும் அறிவுரைகள்,
விமர்சனங்கள் காது கொடுத்து கேட்க முடியாது.கருப்பு நிறம், உழைப்பாளிகளின் அடையாளம். அப்போதெல்லாம், உழைப்பாளிகள் என்றாலே வெயிலில் கடுமையாக வேலை செய்பவர்களைத் தான் குறிப்பிடுவர். நாம் கருப்பாக பிறந்து விட்டோம்; 

எதற்குமே நாம் லாயக்கு இல்லையோ என்ற தாழ்வு மனப்பான்மை கூடாது. ஆனால், நம்மைச் சுற்றியுள்ள வெளிக்காரணிகள் நம்மை அப்படித்தான் நினைக்க வைக்கின்றன.
கருப்புக்கு என்றுமே மதிப்புதான்ஒரு சாதாரண பிளேடு விளம்பரத்திலிருந்து நகை, உடை என எந்த விளம்பரமானாலும், வெள்ளையான பெண்கள் தான் ஜெயித்து வருவர். கருப்பு நிறப் பெண்கள், மற்றவர்களால் புறக்கணிக்கப்படுவர். வெள்ளை ஆனவுடன், முதல் ஆளாக வெற்றிக்கொடி பறக்க விடுவர். இப்படியாகத்தான், நம் மனதிற்குள் கருப்பு - வெள்ளை புகுத்தப்பட்டுள்ளது. நம் பண்பாட்டிலேயே ஊறிவிட்டது. 

ஆனால், இதெல்லாம், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறத் துவங்கிவிட்டன.
கருப்பு நிறப் பெண்கள் கலக்க துவங்கிவிட்டனர். திரும்ப திரும்ப கருப்பு கலர் தான், 'சூப்பர்'ன்னு இப்போது சொல்லத் தேவையில்லை. கருப்பில் என்றுமே, ஒரு கிறக்கம் உண்டு. கருப்பு கதாநாயகனை ஏற்றுக் கொண்ட நாம், வெள்ளை நாயகிகளையே வரவேற்றோம். 

அதுவும் இப்போது மாறிவிட்டது. 
பல துறைகளில், பல கட்டத்திலும் கருப்பு நிறப் பெண்கள் வெற்றியுடன் வலம் வர ஆரம்பித்து விட்டனர்.
சிவப்பு பெண்கள் தான் அழகு, கருப்பு அழகல்ல என்ற கருத்தை பரப்பும் எந்த செய்தியையும், விளம்பரப் படத்தையும், மேற்கோளையும் எதிர்ப்பதே தங்களின் நோக்கம் என்று வாவ் (women of worth) Dark is Beautiful போன்ற அமைப்புகள் இதற்காகவே உருவாகி உள்ளதே சான்று.
கிடைத்ததை வைத்து சந்தோஷப்படுங்கள்.


http://thinakkural.lk/uploads/nalandana/74_content_p2-6.jpgவியாபாரத்திற்காக எங்களின் தயாரிப்பை பயன்படுத்தினால், நாயகிகள் வெறுப்பாகி விட முடியும். மறுநாளே உலக அரங்கில் வலம் வர ஆரம்பித்து விடுவீர்கள் என்று விளம்பரங்கள் பார்க்க நேரிட்டால் சிரித்து விட்டு கடந்து போய்விடுங்கள். 
அந்த தயாரிப்புகளை பயன்படுத்த ஆரம்பித்த உடனேயே ஒரு பலனும் கிட்டாது. ஆனால் ஒவ்வாமை ஏற்படுத்தி விடக் கூடும். மெலனின் உற்பத்தியைக் குறைக்கும் அல்லது நிறுத்தி விடும்.
பிறகு குணப்படுத்தவே முடியாது போய்விடும். நன்கு யோசித்து முடிவெடுங்கள். உங்களை சிவப்பாக, வெறுப்பாக மாற்றிவிட முடியும் என்ற விளம்பரங்களை நம்புவதற்கு பதில் நம் நிறம் இதுதான், இதை
எப்படி மேம்படுத்திக் கொள்வது, மேலும் அதிகமாகாமல் காப்பது எப்படி என, புத்திசாலித்தனமாக யோசித்து முடிவெடுங்கள்.
நாயகிகளுக்கு மட்டுமல்ல, நாயகர்களும் இப்போது உத்தியோகம் புருஷ லட்சணம் என்பது போய் சிவப்பாக இருப்பது தான் ஆணழகு என்ற மாயைக்குள் மாட்ட ஆரம்பித்து விட்டனர். 

நம் முகத்தை வெள்ளையாக்கிறோம் என கிளம்பியுள்ள க்ரீம்களின் உண்மையான முகம் நமக்கு தெரிவதில்லை.உடலை, முகத்தை சுத்தம் செய்வதற்கு அல்லது அதன் தோற்றத்தைப் பொலிவாக்குவதற்கு பயன்படுத்தும் பொருட்களே அழகு சாதனப் பொருட்கள். 
இவை நன்மை ஏற்படுத்தணுமே தவிர தீங்கு விளைவிக்கக் கூடாது. கருப்பு நிற பெண்கள் எந்தவித
குழப்பத்துக்கும் ஆளாகாமல் தாழ்வு மனப்பான்மையை விட்டொழித்து, உண்மையாக முன்னேற்றப் பாதையில் கவனம் செலுத்த வேண்டும். அழகா, ஆரோக்கியமா என்ற முடிவு பெண்கள் கையில்.

http://nadunadapu.com/wp-content/uploads/2013/05/ht1971.jpg

                                                                                                                                                  வைத்தீஸ்வரி

ஜெயா வழக்கு .!சில உச்ச [நீதிமன்ற]சந்தேகங்கள்.!

ஜெயலலிதா-சசிகலா கும்பலுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் போக்கும் முடிவும் எத்தகையதாக இருக்கும் என்பதை, அக்கும்பலின் பிணை கோரும் மனுவைப்  பல சட்ட விதிகளுக்கும் மரபுகளுக்கும் இயற்கை நீதிக்கும் எதிராக, மாறாகக் கையாண்டு, உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் ஆணைகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. 
சொத்துக் குவிப்புக்காக ஜெயலலிதா- சசிகலா கும்பல் புரிந்துள்ள  குற்றங்களுக்கு இணையான  அதிகார முறைகேடு குற்றங்களை உச்ச நீதிமன்றம் புரிந்துள்ளது. 
இந்தக் குற்றங்களே தனியே விசாரித்துத் தண்டிக்கத்தக்கன.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து
இயற்கை நீதிக்கு முரணாக ஜெயா-சசி கும்பலுக்குப் பிணை வழங்கியிருப்பதோடு அவ்வழக்கை விரைந்து முடிப்பதற்குமான ஏற்பாடுகளை செய்து கொடுத்திருக்கும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து
ஆனால், உச்ச நீதி, உயர் நீதி மன்ற நீதிபதிகள் அவ்வாறான  தான்தோன்றித்தனமான தீர்ப்புகள் வழங்குவதைத் தடுப்பதற்கோ, வளையும் செங்கோலை நேராக்குவதற்கோ நீதியான வழி – நேரான வழியேதும் கிடையாது. மீண்டும்  அவர்களிடமே மறு சீராய்வு மனுப்போட்டு ஒருமுறை மன்றாடலாம்! மற்றபடி, அவ்வாறான தவறு செய்யும் “நீதியரசர்களை”க் கேள்விக் குள்ளாக்குவதற்கோ, விசாரிப்பதற்கோ, தவறு செய்தார்கள் என்று நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை மேற்கொள்வதற்கோ வழியேதும் கிடையாது!
“நீதியரசர்கள்” விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் வழக்குகளின் தீர்ப்புகளில் மட்டுமல்ல, தாங்களே இலஞ்ச – ஊழல், அதிகார முறைகேடுகள், பாலியல் குற்றங்களில் சிக்கினால்கூட இரகசிய விசாரணை மற்றும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவிருந்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், நீதிபதிகளோ சட்டப் பாதுகாப்பு வளையத்துக்குள் ஒளிந்து கொண்டும் அவர்களுக்குள் கூட்டுச்சேர்ந்து கொண்டும் தப்பித்துக் கொள்கிறார்கள். செல்வாக்கு மிக்கவர்களின் தாக்குதல்களில் இருந்து “நீதியரசர்களை”க் காப்பதன் மூலம் நீதிவழுவாது அவர்கள் செயல்படவேண்டும்; அதனால்,  நடுநிலையான தீர்ப்புகள் வரவேண்டும்; ஒருபக்க சார்பாக தீர்ப்புகள் வந்துவிடக்கூடாது என்பதற்கான ஏற்பாடுதான் இந்த அரசியல் சட்டரீதியான பாதுகாப்பு என்று சொல்லப்படுகிறது.
ஆனால், இந்த தனிச் சிறப்பான, அரசியல் சட்ட ரீதியான பாதுகாப்பிருக்கும் துணிச்சலில்தான் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் ஜெயலலிதா – சசிகலா கும்பலின் பிணை கோரும் வழக்கில் பல சட்ட விதிகளுக்கும் மரபுகளுக்கும் இயற்கை நீதிக்கும் எதிராக, மாறாகக் கையாண்டு நடந்துகொண்டுள்ளார்கள். இவை கண்டு நாட்டின் சட்ட-நீதி வல்லுநர்கள் திக்பிரமை பிடித்தவர்களைப் போல் வாயடைத்துக் கிடக்கிறார்கள். உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களில் சிலர்  சொல்லியிருக்கிறார்கள்: “என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. பிணை கோரும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் மட்டுமே வாதங்களை வைத்தார்கள். எதிர்த்தரப்பின் வாதங்கள் கேட்கப்படவே இல்லை.”
எதிர்த்தரப்பு வாதங்கள் எதையுமே கேட்காமல், குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயா-சசி தரப்பு வழக்கறிஞர்களோடு வியாபார பேரக் கலந்தாலோசனையைப் போல பேசி முடித்து உச்ச நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் தீர்ப்புகளை அறிவித்து விட்டார்கள்.
நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை நிராகரிப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளைக் கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் பிணை கோரிய மனுவில் முன்வைத்திருந்தது, ஜெயா-சசி கும்பல். அதனாலேயே பிணை கிடைக்கவில்லை என்று அக்கும்பல் தனது தரப்பு வழக்கறிஞர்கள் மீது சீறிக்கொண்டிருந்த நிலையில், பிணை தவிர வேறு கோரிக்கைகளை முன்வைக்க அஞ்சிக்கொண்டிருந்தது. அதனாலேயே உச்ச நீதிமன்றத்திலேயே மிக அதிக கட்டணம் வசூலிக்கும் வழக்கறிஞர் ஃபாலி நாரிமனை அமர்த்திக்கொண்டது. அவரோ தன் தரப்பினர், “வீட்டுக் காவலில் (வீட்டுச் சிறையில்) இருக்கக் கூடவும்  தயார்; பிணை கிடைத்தால் போதும்” என்று  தாழ்பணிந்து மன்றாடினார்.

ஆனால், அவரே எதிர்பாராமல் “ஐயய்யோ! அதெல்லாம் வேண்டாம்” என்று பதறிய தலைமை நீதிபதி எச்.எல். தத்துவோ பிணை மனுவில் குற்றவாளிகள் தரப்பில் முன்வைக்காத கோரிக்கைகளையும் வாரிவழங்க தயாராகவிருக்கக் கண்டார். அதேசமயம், இவ்வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற அமர்வு கறாராக  இருப்பதைப்போலவும், குற்றவாளிகள் தரப்பு பணிவுடன் மன்றாடுவதைப் போலவும் வழமையான நீதிமன்ற நாடகங்களில் ஒன்றை அரங்கேற்றினார்கள்.
“ஏற்கெனவே, இந்த சொத்துக் குவிப்பு வழக்கு 18 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டுவிட்டது. இனிமேலும்  சகித்துக்கொள்ள முடியாது. இனியும் தாமதிக்காமல் மேல்முறையீடு செய்துவிடவேண்டும். அதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும்” எனக் குரலில் மட்டும் “கறார்” காட்டிவிட்டு, குற்றவாளிகள் தரப்புக் கோரியதைவிட அதிகமாகவே அவகாசம் கொடுத்தார், தலைமை நீதிபதி. அதைப் பார்த்தவர்கள் ஏதோ சலுகை காட்டிவிட்டதாக எண்ணக் கூடாது என்பதற்காகவே, திடீரென்று குரலை உயர்த்தி, மேலும் “கறார்” காட்டி, “மேல்முறையீடு செய்வதில் மேலும் ஒருநாள்கூடத் தாமதம் செய்யக் கூடாது. தாமதம் செய்தால் பிணை உத்திரவை ரத்து செய்துவிடுவோம்” என்று எச்சரிப்பதுபோல நாடகமாடினார்.

வழக்குரைஞர் ஃபாலி நாரிமன்
நீதிமன்ற நடத்தை நெறிமுறைகளுக்கு எதிராக ஜெயாவின் சார்பாக உச்சநீதி மன்றத்தில் வாதாடிய வழக்குரைஞர் ஃபாலி நாரிமன்
உண்மையில், சிவாஜி கணேசன் “படவா ராஸ்கல்” என்று செல்லமாகத் திட்டிக் கொஞ்சுவதை எத்தனை சினிமாக்களில் பார்த்திருக்கிறோம்! அதைப்போலத் தான் இதுவும்! 
தண்டிக்கப்படுவோம் என்றஞ்சும் குற்றவாளிகள் வழக்கு விசாரணையும் தீர்ப்பும் வருவதைத் தள்ளிப்போடும், தாமதப்படுத்தும் உள்நோக்கத்தோடு வழக்கை இழுத்தடிப்பார்கள். 
அந்த வகையில் குற்றவாளி ஜெயா 185 வாய்தாக்கள் வாங்கி, வாய்தா ராணி என்று பெயர் வாங்கியவர். 
ஜெயா போன்ற கடுங்குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட பிறகு முடிந்தவரை சிறைத் தண்டணையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக மேல்முறையீட்டை விரைந்து முடித்து வெளியில் வர எத்தணிப்பார்கள். அத்தகைய எத்தணிப்பில் உள்ள ஜெயா-சசி கும்பலுக்குச் சாதகமாக நடந்து கொண்டே, கண்டிப்பு – கறார் வேசங்கட்டிக் கொண்டு உச்ச நீதிமன்றம் ஆடிய அவசர அப்பட்டமான அநீதி ஆட்டம்  கேலிக்கூத்தாகவே அமைந்தது.
ஜெயலலிதா-சசிகலா கும்பல் சிறையிலடைக்கப்பட்ட  மறுநிமிடத்திலிருந்து அக்கும்பலின் அடிமை விசுவாசிகள் போட்டிபோட்டுக் கொண்டு கட்டவிழ்த்துவிட்ட அராஜகம்;
 தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு ஏற்பட்டுவிட்ட “அவப்பெயரையும் களங்கத்தையும்” மூடிமறைத்து, நீதியான – சட்டப்படியான தீர்ப்பு வழங்கிய நீதிபதியை இழிவுபடுத்தும் செயலுக்கு அரசமைப்பு முழுவதையும் கேடாகப் பயன்படுத்தியது; பொதுச் சொத்துக்களைச் சூறையாடி பொதுமக்களிடையே பயபீதியையும் பாதுகாப்பற்ற சூழலையும் ஏற்படுத்தியது;
 இவற்றுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட எல்லா பொதுநல முறையீடுகளையும் தட்டிக்கழிப்பது, ஒத்திவைப்பதன் மூலம் மேற்படிக் குற்றங்களுக்கு நீதித்துறையே உடந்தையாக மாறிப்போனது. இவற்றுக்காக தானே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய உச்ச நீதிமன்றம், கண்டுகொள்ளாது கண்மூடிக்கொண்டது.
 மாறாக, தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளைப் பிணையில் விடுவதில்தான் அவசரமும் அக்கறையும் காட்டியது.
ஜெயா-சசி கும்பலுக்கு எதிராக  டிராஃபிக் ராமசாமி தொடுத்த பல பொதுநல வழக்குகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்கு மாறாக,  தட்டிக் கழிப்பது, தள்ளிப்போடுவது, தகுந்த பதிலளிக்காமல் மழுப்புவது போன்ற உத்திகளைக் கடைப்பிடித்து குற்றவாளிகளைக் காப்பதிலேயே உயர் நீதிமன்றம் குறியாகச் செயல்பட்டது. 
இந்த வகையில் ஜெயா-சசி கும்பலின் பிணைகோரும் வழக்கில் பெயருக்குத் தகுந்தாற் போன்று உச்சத்துக்கே போயிருக்கிறது, உச்ச நீதி மன்றம்.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு விசாரணையில் இருக்கும் ஜெயலலிதா முதல்வராகவே இருக்கக்கூடாது;
 தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் தலைமையிலான கட்சி ஆட்சி நடத்தக் கூடாது; 
தன் மகன் ரோஹிண்டன் நாரிமன் நீதிபதியாக இருக்கும் நிலையில், தந்தையாகிய  ஃபாலி நாரிமன் ஜெயா-சசி கும்பலின் சார்பாக உச்சநீதி மன்றத்தில் பிணை கோரும் வழக்கில் வாதாடக்கூடாது (அலகாபாத் நீதிமன்றத்தில் உறவினர்களே நீதிபதிகளாகவும் வழக்கறிஞர்களாவும் பணியாற்றுவது தர்மம் ஆகாதென்று இதே உச்ச நீதிமன்றம் கண்டித்திருக்கிறது!)
 தகுந்த விளக்கமில்லாமல் ஜெயா-சசி கும்பலுக்கு பிணை வழங்கியது தவறு, அதை ரத்துசெய்யவேண்டும்;
 ஜெயா-சசி கும்பலுக்குப் பிணை வழங்கியதில் ஆயிரம் கோடி ஊழல் பேரம் பேசி இருநூறு கோடி ரூபாய் கைமாறி இருப்பதாகப் புகார் கூறப்படுகிறது, அதை விசாரிக்கவேண்டும்;
 இக்குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள தலைமை நீதிபதி எச்.எல்.தத்து பிணை மனுவை விசாரிக்கக் கூடாது – என்பன போன்று எழுப்பப்பட்ட கேள்விகள் அனைத்தும் சதித்தனமாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
டிராபிக் ராமசாமி
ஜெயா-சசி கும்பலுக்கு வழங்கப்பட்டுள்ள பிணையை எதிர்த்து உச்சநீதி மன்றம் மற்றும் அரசுத் தலைவரிடம் முறையீடு செய்துள்ள டிராபிக் ராமசாமி.
நீதிபதி எச்.எல்.தத்து முகத்துக்கு நேராகவே ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை கோரியபோதும் “அந்த ஆயிரம் கோடி ரூபாய் விவகாரம் தானே, கோர்ட் அதைப் பார்த்துக்கொள்ளும்” என அலட்சியமாகவும், திமிராகவும் கூறித் தள்ளுபடி செய்துவிட்டார். 
ஆனால், நீதிபதி எச்.எல்.தத்து மீதான ஊழல் குற்றச்சாட்டு வெறும் ஆதாரமற்ற பழியோ, அவதூறோ, வதந்தியோ அல்ல; அடிப்படை முகாந்திரம் உள்ள உண்மைதான்  என்பதை அவரது அன்றைய நடவடிக்கைகளே காட்டிக்கொடுத்து விட்டன.
 ஜெயா-சசி கும்பலின் பிணைகோரும் மனு மட்டுதான் நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன்பு வந்திருக்கிறது. பிணை வழங்கியதோடு அதன் பணி முடிந்துவிட்டது.
 வழக்கை கர்நாடகா உயர்நீதி மன்றத்திடம் ஒப்படைத்து விடவேண்டும். அங்கு அதன் அதிகாரத்தின்படியும் அணுகுமுறை – முன்னுரிமைப்படியும்தான் மேற்கொண்டு நடத்தப்பட வேண்டும்.  தண்டனை உறுதிசெய்யப்படுமானால், ஜெயா-சசி கும்பல் மேல்முறையீட்டுக்குத் தன்னிடம் வந்தால்மட்டும், அதன் பிறகுதான் உச்ச நீதிமன்றம் மீண்டும் தலையிட முடியும்.
 ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் முறைப்படியும் வரிசைக் கிரமப்படியும் அவ்வழக்குகள் நடந்தால், ஜெயா-சசி கும்பலின் மேல்முறையீடு உச்ச நீதிமன்றம் வருவதற்குள் இந்த எச்.எல்.தத்து ஓய்வுபெற்றுவிடுவார்.
இதைக் கணக்கிட்டுதான் தான் ஓய்வுபெறும் அடுத்த ஆண்டுக்குள் இந்த வழக்கின் மேல்முறையீட்டை தானே முடித்துவைக்க வேண்டும் என்று எச்.எல்.தத்து துடிப்பதாகத் தெரிகிறது. 
அதனால், இந்த அமர்வு பிணை கோரும் வழக்கை முடிக்காமல் தன்னிடமே வைத்துக் கொண்டுள்ளது. வழக்கை நடத்த வேண்டிய கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் வசதி-வாய்ப்புகளைக் கலந்தாலோசிக்காமலேயே, தன்னிச்சையாகக் கால அட்டவணையை குற்றவாளிகளுக்கு சாதகமாகத் தானே அவசர அவசரமாக வரையறுக்கிறது
. எதிர்த் தரப்புக்கு ஒரு மாதம், அரசுத் தரப்புக்கு ஒரு மாதம், நீதிபதிக்கு ஒரு மாதம் -ஆக மூன்று மாதங்கள், அதிகம் போனால் மேலும் ஒரு 15 நாட்கள் என்று மனக்கணக்குப்போட்டு, ஏப்ரல் 18-க்குள், விடுமுறை நாட்கள் தவிர நாள்தோறும் வழக்கை நடத்தி, மேல்முறையீட்டு மனுவைக் கர்நாடகா உயர் நீதிமன்றம் முடித்துவிட வேண்டும் என்று தனது வரம்பு மீறி எச்.எல்.தத்து உத்திரவு போட்டுள்ளார்.
இந்த நாட்டு சட்ட-நீதி வரலாறு இதுவரை காணாததொரு  தீர்ப்பு!  இதே வழக்கின் 100 பக்க ஆவணத்தைப் படிப்பதற்கு ஜெயா-சசி கும்பல், அது வழக்கை இழுத்தடித்தபோது மாதக் கணக்கில் அவகாசம் கேட்டுப் பெற்றது. இப்போது அக்கும்பலின் 2.5 இலட்சம் பக்கங்களைக் கொண்ட மேல்முறையீட்டு மனுவை ஒரு மாதத்திற்குள் படித்து, இருதரப்பு வாதங்களையும் கேட்டு தீர்ப்புச் சொல்ல வேண்டுமாம்!
 இந்த வழக்கை பெங்களூருவுக்கு மாற்றியபோது ஒரு ஆண்டுக்குள் முடிக்க வேண்டுமென்று உத்திரவு போட்டதும் இதே உச்ச நீதிமன்றம்தான்! 
ஆனால், அப்போதிருந்து வழக்கைப் பத்தாண்டுகள் ஜெயா-சசி தரப்பு இழுத்தடித்தது. 
அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததும் இதே உச்ச நீதிமன்றம்தான்! அது மட்டுமல்ல;
 இவ்வாறு அக்கும்பல் கோரியதற்கு மேல் கால அவகாசம் கொடுத்து, வழக்கை இழுத்தடிப்பதற்குக் காரணமாகக் இருந்ததும் இதே உச்ச நீதிமன்றம்தான்! 
என்ன ஒரு நீதி!
ஜெயாவின் காலடியில் நீதித்துறை
ஜெ.சசி கும்பலுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை பெங்களூருவுக்கு மாற்றியபோது ஒரு ஆண்டுக்குள் முடிக்க வேண்டுமென்று உத்தரவு போட்டதும் இதே உச்ச நீதிமன்றம்தான்! 
ஆனால், அப்போதிருந்து வழக்கை பத்தாண்டுகள் ஜெயா-சசி தரப்பு இழுத்தடித்தது. அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததும் இதே உச்ச நீதிமன்றம்தான்! 
அது மட்டுமல்ல;
 இவ்வாறு அக்கும்பல் கோரியதற்கு மேல் கால அவகாசம் கொடுத்து வழக்கை இழுத்தடிப்பதற்குக் காரணமாக இருந்ததும் இதே உச்ச நீதிமன்றம்தான்! 
என்ன ஒரு நீதி!
2009-ம் ஆண்டு அலைக்கற்றை ஊழல் வழக்கில் தொடங்கி கடந்த ஐந்தாண்டுகளாக அண்ணா ஹசாரே, கேஜரிவால் முதற்கொண்டு மோடி வரை நாட்டின் முதன்மையான ஊழல் எதிர்ப்புப் போராளிகளாக அவதாரம் எடுத்து ஆட்டம் போட்டார்கள்.
 இதிலும் சந்தர்ப்பவாதமாக நடித்து அவர்கள் நாடகமாடினார்கள்தான். என்றாலும், மக்களை ஏய்ப்பதற்காகவும் சவடாலுக்காவும் நீதித்துறையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சியாக அதை முன்நிறுத்தி நாடு முழுவதும் ஊழல் எதிர்ப்புச் சூழலை உருவாக்கி மக்களிடையே பிரமையை விதைத்திருக்கிறார்கள். 
அந்த நிலைமையிலும் உயர், உச்ச நீதிமன்றங்களும் அவற்றி லுள்ள பார்ப்பன -பிழைப்புவாத நீதிபதிகளும், ஜெயா-சசி போன்ற கிரிமினல் குற்றக் கும்பல்களும் அத்தகைய பிரமைகளைத் தகர்ப்பதையும் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
நாடு முழுவதுமுள்ள நீதிமன்றங்களில் இலட்சக்கணக்கான  வழக்குகள்  தீர்க்கப்படாமல்இருக்கும்போது, ஜெயா-சசி  கும்பலின் மேல் முறையீட்டு வழக்கில் மட்டும் உச்ச நீதிமன்றம் இத்தனை வேகம் காட்டுவது ஏன்?

நீதிபதி எச்.எல்.தத்துவே இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லியிருக்கிறார். “இது விதிவிலக்கான வழக்கு; 
பிரத்யேகமான வழக்கு என்பதால் இந்தக் கால வரையறைக்குள் முடித்துத் தரவேண்டுமென்று” உத்திரவு போட்டிருக்கிறார்.
 உண்மைதான்! 
பிரம்மஸ்ரீ  கிரிமினல் குற்றவாளி மீதான வழக்கு என்பதால்  விதிவிலக்கானதுதான் !,  
பிரத்யேகமானதுதான்!!
                                                                                                                                           - ஆர்.கே.
________________________________________
நன்றி:  "புதியஜனநாயகம்"                                                                                                         
                                                                                                                                                                                 ஜனவரி 2015
 ஏழை நாட்டு பிரதமரின் 10 லட்ச ரூபாய் மதிப்பில் தங்க இழையில் நரேந்திர மோடி பெயர் பதித்த லண்டனில் தயாரான கோட்டு -சூட்டு.
இதுதான் 'மேக் இந்தியா "தாரக மந்திரத்தின் லட்சணம்.