ஒல்லியாக இருக்க...




 பெரும்பாலானோர் தெரிந்துகொள்ள விரும்பும் ஒன்று ஒல்லியாக இருப்பவர்கள் எப்படி இப்படி மெலிவாக ,ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதுதான்.
 ஒல்லியாக இருப்பவர்கள் நன்கு சாப்பிடக் கூடியவர்களாக இருப்பார்கள். 
ஆனால் ஒரே சமயத்தில் வயிறு நிரம்ப சாப்பிடாமல் அவ்வப்போது ஏதேனும் சிறிது சிறிதாக சாப்பிடுவார்கள்.
 இப்படி போதிய இடைவெளி விட்டு சாப்பிடுவதால், செரிமான மண்டலம் சீராக இயங்கி, கொழுப்புகள் தங்குவதை தடுக்கிறது.
 அதே சமயம் தண்ணீரை அதிகம் குடிப்பதோடு உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றில் ஈடுபட்டு எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.
ஒல்லியாக இருக்க விரும்புபவர்கள் தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். 
இதனால் உடலில் தங்கியுள்ள நச்சுக்களானது உடலில் இருந்து வெளியேறி, உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ள உதவும்.

மேலும் டயட்டில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சேர்த்து வர வேண்டும். இதனால் அதில் உள்ள சிட்ரஸ் ஆசிட்டானது உடலில் தங்கியுள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைத்துவிடும்.

உணவில் அவ்வப்போது கசப்பான உணவுகளையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.
 இவ்வாறு சாப்பிட்டால் உடலில் கொழுப்புகள் தங்குவதில்லை. மேலும் எவ்வித நோயும் அவ்வளவு எளிதில் தாக்குவதில்லை.
நேரம் கிடைக்கும்போது ஏதேனும் ஒரு விளையாட்டு, நடனம் அல்லது உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபட வேண்டும்.
இரவில் சரியாக தூங்காமல் இருந்தால் உடல் பருமனடையும்.
 எனவே குறைந்தது தினமும் 7 மணி நேர தூக்கமானது மிகவும் அவசியம். ஒல்லியாக இருக்க நினைப்பவர்கள் அதிகம் இனிப்பு வகைகளை சாப்பிடக்கூடாது.

 முட்டை ஒரு சத்தான உணவு. 

ஆனால் உடற்பயிற்சிக்கு பின் முட்டை, தயிர், சாக்லெட், பீட்சா போன்றவற்றை சாப்பிடக்கூடாது. 
சாக்லெட்டுக்கு பதில், கொக்கோ பவுடர் சாப்பிடலாம்
அதில் கொழுப்பு குறைவாகத்தான் இருக்கும். 
சூடான ஓட்மீல் அல்லது  பாதாம் பால் நல்லது.
குளுட்டென், சர்க்கரை அதிகம் இருக்கும் பிரட் சாப்பிட்டால் உடலில் சர்க்கரை அளவு ஏறிவிடும் ஆபத்து உள்ளது. 
செரிமானத்திற்கும் நல்லதல்ல. 
எனவே, உடற்பயிற்சிக்குப் பின் டோஸ்ட் செய்த பிரட் சாப்பிடுவதை விட, பச்சையாகத் சாப்பிடுவது ஓரளவு நல்லது.
 உடற்பயிற்சிக்குப் பின், நம் உடலில் ரத்தமானது வயிற்றுக்குள் செல்லாமல் வெளியே பாய்ந்து கொண்டிருக்கும்.
 அப்போது ஒரே ஒரு சிறு கரண்டி  வெண்ணெய் மட்டும் சாப்பிட்டால் வயிற்றுக்கும் ரத்தவோட்டம் இருக்கும். 
ஒரு  சிறு கரண்டி போதுமானது. 
அதற்கு மேல் சாப்பிட்டால் செரிமானத்திற்கு நல்லதல்ல.
================================================= 
 பார்வையற்றவர்களுக்கு....,
 பார்வையற்றவர்களுக்குவிழியாக இருந்து வழி காட்டக்கூடிய செயலி அறிமுகமாகி இருக்கிறது.
இந்த செயலியின் மனிதநேய தன்மைக்கு ஏற்ப அறிமுகமான சில நாட்களிலேயே இந்த செயலி 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை ஈர்த்திருக்கிறது.

பி மை ஐஸ் ( Be My Eyes) எனும் அந்த செயலி ஐபோனில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
 ஒரு சில நிமிடங்களை மற்றவர்களுக்காக ஒதுக்கி சின்ன உதவிகளை செய்யத்தயாராக இருப்பவர்களை , பார்வையற்றவர்களுடன் இணைப்பது இதன் நோக்கமாக இருக்கிறது.
இப்படி முன்பின் தெரியாதவர்கள் செய்யும் சின்ன உதவிகள் பார்வையற்றோருக்கு மகத்தான உதவியாக அமைவதை இது சாத்தியமாக்க விரும்புகிறது.
சுருக்கமாக சொன்னால், பார்வையற்றவர்களுக்கு மற்றவர்கள் விழியாக இருந்து வழி காட்ட வைக்கிறது இந்த செயலி!
பார்வையற்றவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவ தயாராக இருப்பவர்கள் என இரு தரப்பினரும் இந்த செயலியை தங்கள் போனில் தரவிறக்கம் செய்து கொண்டு, உதவுபவர்களாக அல்லது உதவி கோருபவர்களாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
 அதன்பிறகு, பார்வையற்ற உறுப்பினர்களுக்கு மற்றவர் உதவி தேவைப்படும் நேரங்களில் இந்த செயலி மூலம் அவர்கள் உதவி கோரலாம்.

பார்வையற்றவர்கள் மற்றும் பார்வை குறைபாடு கொண்டவர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் தங்கள் பணியை மேற்கொள்ளக்கூடியவர்களாக இருந்தாலும் சில நேரங்களில் அவர்களும் மற்றவர்களின்
விழிப்பார்வை தேவைப்படலாம். உதாரணத்திற்கு பால் பாக்கெட் அல்லது உணவு பொருளின் மீதான காலாவதி தேதியை தெரிந்து கொள்ளும் தேவை ஏற்படலாம். அல்லது கையில் வைத்திருக்கும் பழரசம் மாம்பழமா? 
ஆப்பிளா என அறிய விரும்பலாம். அல்லது தெரு முனையில் இருக்கும் அறிவிப்பு பலகையின் வாசகத்தை படித்து பார்க்கும் தேவை ஏற்படலாம்.

இது போன்ற நேரங்களில் அவர்கள் அருகே இருப்பவரின் உதவியை நாட வேண்டியிருக்கும். அருகே யாரும் இல்லாவிட்டால் அல்லது அருகே இருப்பவர்கள் செவி சாய்க்க மறுத்தால் காத்திருக்க வேண்டும். 
இந்த இடத்தில் தான் பி மை ஐஸ் செயலி உதவிக்கு வருகிறது.
இத்தகைய நேரங்களில் பார்வையற்றவர்கள் செயலியை ஆன் செய்து உதவி தேவை என கோரிக்கை வைத்தால் போதும்.
 அந்த கோரிக்கை பங்கேற்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். 
அதை பார்த்தததும் உதவ தயாராக இருப்பவர்கள் சம்மதம் தெரிவித்தால் உடனே ஐபோனில் இருக்கும் வீடியோ உரையாடல் வசதி மூலம் இருவரும் இணைக்கப்படுவார்கள். 
அதன் பிறகு மறு முனையில் இருப்பவர் பார்வையற்றவர் தனது போனில் காட்டும் காட்சியை பார்த்து அவரது கேள்விகளுக்கு பதில் அளித்து வழிகாட்டலாம்.

உதவ தயாராக இருப்பவர்களுக்கு இது சாதாரண செயலாக இருந்தாலும் உதவி கோருபவருக்கு இது சரியான நேரத்தில் கிடைத்த வழிகாட்டுதலாக இருக்கும்.

இந்த கைகொடுத்தலை உலகின் எந்த மூளையில் இருப்பவரும் செய்யக்கூடிய வகையில் டிஜிட்டல் உறவுப்பாலம் அமைக்கும் வகையில் பி மை ஐஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

டென்மார்க் நாட்டை சேர்ந்த தெல்லி கிறிஸ்டன் என்பவர் தனது நிறுவனம் மூலம் இந்த செயலியை வடிவமைத்திருக்கிறார்.
 இவரும் பார்வை குறைபாடு கொண்டவர் தான்.
 இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்து இதை உருவாக்கி இருக்கிறார்.

இந்த மனிதநேய செயலியை இதுவரை 40 ஆயிரம் பேருக்கு மேல் தரவிறக்கம் செய்து ப்ங்கேற்பாளராக பதிவு செய்து கொண்டுள்ளனர். 1500 க்கும் மேற்பட்ட பார்வையற்றவர்களும் பயனாளிகளாக பதிவு செய்து கொண்டுள்ளனர். 
இதுவரை 3,000 உதவிகளுக்கு மேல் நிகழ்ந்துள்ளன.
உதவுபவர்கள் மற்றும் பயனாளிகள் இருவருமே மற்றவர்களை மதிப்பீடு செய்யலாம்.
ஏதேனும் தவறான பயன்பாடு தலைதூக்கினால் அதை தவிர்க்க இந்த மதிப்பீடு உதவும் என கருதப்படுகிறது.

அடுத்ததாக ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான செயலி வடிவமும் உருவாக்கப்பட்டு வருகிறது.

பி மை ஐஸ் செயலியின் இணைய பக்கம்: http://www.bemyeyes.org/
==================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?