டெல்லி ....பில்லி ...?

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜ ஆட்சி அமைந்த பிறகு நடைபெற்ற மகாராஷ்டிரா, அரியானா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் அடுத்தடுத்து பாஜ வெற்றி பெற்றது.

இந்த சூழலில் டெல்லியில் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தலைநகரமான டெல்லியில் எப்படியும் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்று பாஜ தீவிரம் காட்டியது.

அதே நேரத்தில் கடந்த முறை பெரும்பான்மை பலம் இல்லாமல் தவற விட்ட ஆட்சியை தற்போது எப்படியும் பிடித்து விடுவது என்ற நோக்கத்துடன் ஆம் ஆத்மியும் களம் இறங்கியது.

இம்முறை வெளிப்படையாக பாஜவுக்கும் ஆம் ஆத்மிக்கு இடையே தான் கடும் போட்டி நிலவியது. டெல்லியில் ஏற்படும் தோல்வி பாஜவுக்கு மிகவும் கசப்பான மருந்து. மோடி தனது ஆட்சியினால் மக்களிடம் பெற்றிருக்கும் வரவேற்பை உண்மையிலே காட்டி விட்டடது.இதுவரை பாஜக வென்ற இடங்கள்  அதற்கு முந்தைய ஆட்சியாளர்களை மக்கள் வெறுத்ததினால் கிடைத்த வெற்றிதான்.
 மோடியின் மாயையும்,அமித் ஷாவின் களப்பணியும் சாயம் போய்விட்டன.

அது மோடி அரசு மீதான விமர்சனமாக எதிர்கட்சிகளால் திசை திருப்பி விட வாய்ப்புள்ளது என்று பாஜ மிகவும் கலக்கத்துடனேயே தேர்தலை எதிர்கொண்டது.

வெற்றி நாயகன் என்று கடந்த லோக்சபா தேர்தல் முதல் கடந்த 3 மாநில சட்டமன்ற தேர்தல் வரை பேசப்பட்ட அமித்ஷா தலைமையிலும், பாஜவின் அலையை நாடு முழுவதும் வீச செய்த அக்கட்சியின் நட்சத்திர தலைவர் பிரதமர் மோடியின் பிரசாரத்தின் மீது உறுதியான நம்பிக்கை வைத்து பாஜ தேர்தல் வியூகங்களை வகுத்தது.
இதற்காக ஆம் ஆத்மியின் பக்கம் இருந்த அதிருப்தி தலைவர்கள் பாஜ பக்கம் ஈர்க்கப்பட்டனர்.

 குறிப்பாக அதிருப்தி எம்எல்ஏ வினோத் குமார் பின்னி, முன்னாள் தலைவர் ஷாஜியா இல்மி, கெஜ்ரிவால் மற்றும் அன்னா ஹசாரேயுடன் இணைந்து ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் பணியாற்றிய கிரண்பேடி பாஜ பக்கம் சாய்ந்தனர். மேலும் இரும்பு நங்கை, சுத்தமான கைகளுக்கு சொந்தக்காரர் என்ற இமேஜூடன் கெஜ்ரிவாலுக்கு போட்டியாக கிரண் பேடி பாஜவின் முதல்வர் வேட்பாளராகவும் களம் இறக்கப்பட்டார்.
 பாஜவின் வெற்றிக்காக மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், டெல்லியின் முன்னாள் எம்எல்ஏக்கள் ஆகியோர் தேர்தல் தொடங்குவதற்கு முன்பிருந்தே அல்லும் பகலும் அயராது பாடுபட்டனர்.
மேலும் பாஜ ஆளும் மாநில முதல்வர்களும் பிரசாரத்தில் களம் இறக்கப்பட்டனர்.
ஆனால் ஆம் ஆத்மி எத்தகைய விமர்சனத்திற்கும் களங்காமல் தெளிவாக பாஜவின் அத்தனை வியூகங்களையும் உடைத்து நொறுக்கியபடி மக்கள் முன்பாக தன்னை காட்டியபடி முன்னேறியது. மேலும் ஆம் ஆத்மி வெளிப்படையான கோஷங்களையோ,  மக்களுக்கு புரியாத கொள்கைகளையோ அறிவிக்காமல் நேரடியாக டெல்லி வாசிகளின் பிரச்னைகளின் மீது கவனம் செலுத்தியது. குறிப்பாக மின் கட்டண மானியம், குடிநீர் பிரச்னை, முறைப்படுத்தப்படாத குடிசை பகுதிகள், மற்றும் காலனிகள் விவகாரம், வெளிப்படையான நிர்வாகம் ஆகியவற்றை முன்வைத்து மக்கள் மத்தியில் பேசியது.
தலை நகரில் அரசியல் வாதிகளின் விஐபி கலாச்சாராத்தால் வெறுத்து போயிருந்த டெல்லி வாசிகளுக்கு ஆம் ஆத்மி வருகை மிகவும் பெரிய நம்பிக்கையை கொடுத்தது. எனவே ஆம் ஆத்மி மீதான நம்பிக்கை மேலும் அதிகரித்தது.

அதே நேரத்தில் ஆள் பலம், படை பலம்,  பண பலம் என பிரமாண்டமாக பாஜ களம் இறங்கியது. பிரதமர் மோடி 4 இடங்களில் தனது வழக்கமான பாணியில் வளர்ச்சி மற்றும் நிலையான ஆட்சி என்று பிரசாரம் செய்தார். கெஜ்ரிவால் அரசியல் முதிர்ச்சியற்றவர் என்றும், டெல்லியை ஆட்சி செய்ய அரசியலில் அனுபவம் வாய்ந்தவர் என்றும் பேசினார்.
ஆனால் கடந்த 100 நாட்களாக மத்தியில் ஆட்சியில் இருந்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு லோக்சபா தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்பதை டெல்லிவாசிகள் அருகில் இருந்த கவனித்து வருகின்றனர்.
கருப்பு பணத்தை மீட்பது, விஐபி கலாச்சாரம், மதவாத சக்திகளை கட்டுக்குள் வைப்பது உள்ளிட்டவை குறித்து மத்திய அரசின் மீது அதிருப்தி காணப்பட்டது. மேலும் மாநில அரசுகளின் மீது தனது அதிகாரத்தை காண்பித்தற்காக சிபிஐயை தவறாக கையாண்டது,
இதனால் மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பாஜவின் அதிகாரத்தை டெல்லி மக்கள் ரசிக்கவில்லை.
குடியரசு தின விழாவிற்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவை சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.
இது மிகப் பெரிய கவனத்தை ஈர்த்தது. ஆனால் இறுதியில் மோடி அணிந்திருந்த ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புடைய கோட், அதில் அவரது பெயர் பொறிக்கப்பட்டிருந்தது போன்றவை டெல்லி வாக்காளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் டெல்லியில் உள்ள மக்களின் பிரச்னைகளுக்கு முகம் கொடுக்காமல் பிரதமர் மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மத்திய அமைச்சர் பிரக்யா சாத்வி நிரஞ்சன் ஜோதி உள்ளிட்டவர்கள் மக்களை பிளவுபடுத்தும் வகையில் பேசியது, தேர்தல் நேரத்தில் தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உள்ளிட்டவையும் பாஜவின் தோல்விக்கு வழி வகுத்தது.
மேலும் கடந்த ஆட்சியில் வட மாநிலத்தவர் மீது தாக்குதல், பெண்கள் மீதான பலாத்காரம் உள்ளிட்டவற்றால் டில்லி மக்கள் அவதிப்பட்ட போது, அதற்கு புதிய பாஜ அரசு எதுவும் செய்யாமல் ஒபாமா வருகைக்காக 15 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியது டெல்லி வாசிகளை அதிர்ச்சி அடைய செய்தது. இந்த உணர்வுகளை ஆம் ஆத்மி மிகவும் சாதுர்யமாக தன்வசம் ஈர்த்தது.
 மேலும் ஆம் ஆத்மி தலைவர்கள் மீது நேரடியாக பெரிய அளவில் புகார்களோ, குற்றச்சாட்டுகளோ கிடையாது என்பதும் ஆம் ஆத்மியின் வெற்றிக்கு கூடுதல் பலமாக அமைந்தது.
மேலும் பாஜ தலைவர்கள் ஒவ்வொரு முறையும் மாறி மாறி அறிவிக்கும் அறிவிப்புகளை நம்ப டெல்லி வாசிகள் தயாராக இல்லை என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது என்று உறுதியாக கூறலாம்.

தேர்தல் முடிவுகள்

டெல்லி தேர்தல் முடிவுகள் (70)

கட்சி/வெற்றிதோல்வி
பாஜக367
ஆம் ஆத்மி673
காங்கிரஸ்070
மற்றவை070 
 பூஜ்யம்

டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத வகையில் தோல்வியை சந்தித்துள்ளது. அன்னா ஹசாரேயிடம் இருந்து பிரிந்து கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கிய பிறகு டெல்லியின் அரசியல் முகம் மாற்றம் அடைந்தது.

15 ஆண்டுகளாக முதல்வராக இருந்த காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித்தை முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்ட கெஜ்ரிவால் தோற்கடித்தார். கடந்த முறை அங்கு காமன்வெல்த் ஊழல் உள்ளிட்ட காரணங்களால் காங்கிரஸ் பெரும் சரிவை சந்தித்தது.












இதில் காங்கிரஸ் கட்சிக்கு 8 இடங்களும், ஆம் ஆத்மிக்கு 28 இடங்களும் கிடைத்தன.

பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி ஓட்டுகளே ஆம் ஆத்மிக்கு கிடைத்தன.


இந்த தேர்தலில் நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் ஆரம்பத்தில் இருந்தே 5 தொகுதிகளுக்கு அதிகமாக காங்கிரஸ் பெறாது என்றே கூறப்பட்டது.


இந்த சூழலில் டெல்லியில் இம்முறை ஒரு இடத்தை கூட காங்கிரஸ் கைப்பற்றாத நிலை ஏற்பட்டது.


இதனால் காங்கிரஸ் கட்சி கடும் அதிர்ச்சியில் உள்ளது.
=======================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?