முடிவுகள் உணர்த்துவது....!



ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் 1,51,461 வாக்குகள் பெற்று, அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதி வெற்றி பெற்றுள்ளார். 
தி.மு.க. வேட்பாளர் ஆனந்த் 55,045 வாக்குகள்  பெற்று தோல்வி அடைந்துள்ளார்.
96,516 வாக்குகள் வித்தியாசம் .
இத்தேர்தலில் போட்டியிட்ட மற்ற கட்சிகளான, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் டிராபிக் ராமசாமி பா.ஜ.க.,உள்ளிட்ட 28 வேட்பாளர்கள் காப்புத்தொகையை இழந்துள்ளனர்.

பா.ஜ.க. 5,015 வாக்குகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1,552 வாக்குகளும், டிராபிக் ராமசாமி 1,167 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
 நோட்டாவுக்கு 1,919 வாக்குகளும் கிடைத்துள்ளன.
இதற்காக அதிமுக தொண்டர்கள் தெருத்தெருவாக இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர்.ஊடகங்கள் ஜெயா புகழை பாடி உட்கார்ந்து பேசி மகிழ்ந்துள்ளன.
அப்படி கொண்டாட கூடிய வெற்றியா இது.
வளர் மதி பெற்ற வாக்கு வித்தியாசமே காட்டி கொடுக்கிறதே .
சென்ற முறை ஜெயலலிதா பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட இருமடங்கு.[96516]ஜெயாவை விட அவ்வளவு பிரபலமா வளர்மதி .ஸ்ரீரங்கம் தொகுதியில் அவை தெரிந்த மக்கள் கிடையாது.வேறு தொகுதியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்.
வெற்றி க்கு காரணத்தை விட அந்த காரணிகள் தொடர்ந்தால் தமிழக நிலை குறித்தே பயம் நமக்கு.
திருமங்கலம் இடைத்தேர்தலில் இருந்தே ஆளுங்கட்சி கண்டிப்பாக இடைத்தேர்தல்களி வெற்றி பெறும் என்ற எழுதப்படாத விதி வந்து விட்டது தமிழகத்தில்.திமுக ஆரம்பித்த ஒளிவு மறைவு வேலைகளை தேர்தல் ஆணையத்துக்கு பயந்தே செய்தனர்.
ஆனால் அந்த விதி அதிமுக கட்சியினர் கட்டாயமாக்கி விட்டனர்.தேர்தல் ஆணையமும் அதிமுகவுக்கு மாநில தேர்தல் ஆணையத்தை விட அதிகமாகவே அடங்கி துணை புக ஆரம்பித்து விட்டது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் சட்டதிட்டங்கள் முழுக்க அதிமுகவை தவிர மற்ற கட்சிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்ற விதியை பிரவின் குமார் கொண்டுவந்தார்.பணம் கொடுக்க 144 கொண்டுவந்த தீரர் அவர்.அதை இப்போது சக்செனாவும் தொடர்கிறார்.
தேர்தல் ஆணையம் மாநில தேர்தல் அதிகாரிகளை நியமிக்கும் போது முதல்வர் பன்னீர் செல்வம் பரிந்துரை பட்டியலில் இருந்தே சக்செனாவை நியமித்துள்ளனர்.
 சோ.அய்யர் போன்றவர்களை விட்டு விட்டு சகாயம்,அன்சுல் மிஸ்ரா போன்றவ்ர்களையா முதல்வர் பரிந்துரைத்து விடுவார்?
ஸ்ரீரங்கத்தில் 72 ஆயிரம் போலியாக வாக்களர்களை சேர்த்துள்ளனர் என்ற ஆதாரத்துடன் குற்ற சாட்டுகள் தேர்தல் ஆணையத்துக்கு திமுக கொடுத்த போது தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளாமல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டது.நீதிமன்றம் சென்றும் வழ,வழ தீர்ப்பினால் ஒன்றும் செய்ய இயலவில்லை.இந்திய தேர்தல் ஆணையமும் கண்டு கொள்ளவில்லை.
அமைச்சர் பெருமக்கள் கூட்டமே தொகுதி தெருக்களில் அலைந்து பணம்,பிரியாணி,குத்தாட்டம் போட்டது.அதை தேர்தல் ஆணையம் ரசித்தது.
தேர்தல் பார்வையாளராக வந்தவர் தொகுதி முறைகெடுகளைப்பற்றி சொன்னால் இங்குள்ள அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.எனக்கு ஒரு உதவி செய்யவில்லை.ஒத்துழைக்க வில்லை .என்று சக்செனாவிடமே புலம்பியுள்ளார்.
தேர்தல் கட்டுப்பாடு அறை தொலை பேசிக்கு புகார் கொடுப்பது போல் சக்சேனா செய்த அழைப்பையே அங்குள்ளவர்கள் கண்டுகொள்ளவில்லை.
திமுகவினர் அதிமுகவினர் மோதலில் காவல்துறையினர் வந்தவுடனே திமுகவினரை மட்டும் கைது செய்து பணம் கொடுக்க முயன்றதாக வ்ழக்கு பதிவு செய்துள்ளனர்.திமுகவினரும் சில இடங்களில் பணம் கொடுத்தாலும் கைது செய்யப்பட இடத்தில் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை.அத பின்னர் செல்போன் வீடியோ மூலம் நிருபிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவையும் விட மாவட்ட ஆட்சியர் தொகுதி தேர்தல் அலுவலராக இருக்க வேண்டிய இடத்தில் கோட்டாட்சியர் மனோகரனை நியமித்துள்ளனர்.
இந்த மனோகரன் அதிமுக கட்சிக்காரர்.தம்பி இளைஞர் அணி செயலாளர்.
இந்த மனோகரன் சென்ற பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் சீட்டு கேட்டு கிடைக்காததால் அரசுப் பணியில் தொடர் பவர்.
அமைச்சர் நத்தம் விசுவநாதனின் அணியைச் சே ர்ந்தவர்.அதேபோல் காவல் அலுவலர் கபிலன் மக்களின் முதல்வரின் விசுவாசி காவல்துறை அதிமுக அணியின் பிரமுகர்.
இவர்களை  மாற்ற புகார் செய்தால் சக்சேனா கண்டு கொள்ளவில்லை.இந்திய தேர்தல் ஆணையமும் கண்டு கொள்ளவில்லை.
பின்னர் டெல்லி சென்று நேரடியாக காணொளி காட்சிகளை காட்டி நீதிமன்றம் போகப்போவதாக கனிமொழி கூறிய பின்னர் ,தேர்தல் பணிகள் எல்லாம் முடிந்த பின்னர் தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன் மாற்றம் செய்துள்ளனர்.
அதை கூட நீதிமன்றம் போய் தேர்தலை நிறுத்திவிடக் கூடாது என்பதினால்தான் .
இப்போது சொல்லுங்கள் இது வெற்றியா.
வாக்குக்கு மக்களவை தேர்தலில் 200 கொடுத்தவர்கள். 2000 முதல் 5000 வரை கொடுத்து வாங்கிய வாக்குக்கு பெயர் வெற்றியா ?தோல்வியா ??
2.70,000 வாக்குகளில் கிட்டத்தட்ட 2,00,000 வாக்குகளுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டும் 1,51,000 வாக்குகள் பெற்றது வெற்றியா?
75,000 வாக்காளர்களை போலியாக சேர்த்து அவர்கள் வாக்களித்தும் பெற்றதற்கு பெயர் வெற்றிதானா?

இதை விட மிகப்பெரிய கவலை நமக்கு.அது நியாயமாக திமுக போன்ற எதிர்கட்சிகளுக்குத்தான் வர வேண்டும் .
அது.இது போன்ற தேர்தல் அதிகாரிகள்,காவல்துறை ,மாநில தேர்தல் ஆணையம்,இந்திய தேர்தல் ஆணையம் போன்றவற்றை வைத்துக்கொண்டு இவற்றை சீரமைக்காமல் நீதிமன்றம் சென்று மாற்றங்கள் செய்யாமல் 2016 தேர்தலை எதிர் கொள்வது எனபது தேவையற்ற செயல்.பணத்துக்கு மோசம்.நேரத்தையும் வீணடிப்பது.ஆகும்.
இன்றைய தேர்தல் அலுவலர்கள்,காவல்துறை அதிகாரிகள் நிலையில் மாற்றம் இல்லாமல் பொதுத்தேர்தலி சந்திப்பதை விட அனைத்து தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றி என்று அறிவித்து விடுவதுதான் நாட்ட்க்கு நல்லது. பொது மக்கள் வரிப்பணமும் வீ ணாகாமல் இருக்கும். என்ன ஒன்று வாக்காளர்களுக்கு கிடைக்க கூடிய 500 ரூபாய் கிடைக்காது.
நாம் கடைசி யில் கூறிக்கொள்ள விரும்புவது வாழ்க சனநாயகம் .
========================================================================
















இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?