மக்கள் மீது தொடரும் தாக்குதல்..?

 மோடி அரசின் நிதி நிலை அறிக்கை!

பாஜக தலைமையிலான மத்திய அரசு ஆட்சியில் அமர்ந்த நாளில் இருந்து மக்கள் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, உரம் உள்ளிட்ட அனைத்து முக்கியமானவற்றின் விலைகள் இந்த அரசின் கொள்கைகள் காரணமாக அதிகரித்துள்ளன.

பன்னாட்டு சந்தை யில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்த பொழுதும் அதன் பயன் மக் களுக்குப் போய்ச் சேராமல் இருக்க கலால் வரிகளை மீண்டும் மீண்டும் உயர்த்தியது அரசு.

உணவு பாதுகாப்பு சட்ட அமலாக்கத்தை தொடர்ந்து ஒத்திவைத்துள்ளது. பாதுகாப்பு மற்றும் காப் பீட்டுத் துறைகளில் அந்நிய நேரடி முதலீடு வரம்பை உயர்த்தவும், நிலம் கை யகப்படுத்துதல் தொடர்பான சட்டத்தை பெருமுதலாளிகளுக்கு சாதகமாக திருத்தியும் அவசரச் சட்டங்களை பிறப் பித்து நாடாளுமன்ற ஜனநாயகத்தை அவமதித்து, தனது மக்கள் விரோத நடவடிக் கைகளை தொடர்கிறது. ரயில்வே பட் ஜெட்டில் சரக்கு கட்டணங்களை உயர்த்தி விலைவாசி உயர்வை தீவிரப் படுத்தியுள்ளது.

இதன் தொடர்ச்சிதான் மத்திய பட்ஜெட் 2015-16.இந்த பட்ஜெட், செல்வந்தர்களுக்கும் இந்திய மற்றும் பன்னாட்டு பெரு முதலாளிகளுக்கு பல சலுகைகளை வழங்கியுள்ளது.

சொத்துவரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
 சொல்லப்படும் காரணம் என்ன?
 “ஆயிரம் கோடி ரூபாய்கூட வசூலாவதில்லை, இதை வசூலிப்பதற்கு நிறைய செலவாகிறது, எனவேநீக்கிவிடலாம்” என்பது அரசின் வாதம்.

இது என்ன வாதம்?

 திருடனைப் பிடிக்கமுடியாவிட்டால் திருட்டை சட்டப் பூர்வமாக ஆக்கி விடலாமா? 
வாக்களித்த மக்களுக்கு அல்வா தயார்.

அது மட்டுமல்ல.
இது எந்தச் சூழலில் சொல் லப்படுகிறது?
நூற்று இருபத்தைந்து கோடி மக்கள் வசிக்கும் நமது நாட்டில் நூறுக்கும் குறைவான செல்வந்தர்கள் வசம் தலா ஆறாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளன.
இவர்கள் வசம் உள்ள சொத்துக்களின் மொத்த மதிப்பு தேச உற்பத்தி மதிப்பில் நாலில் ஒருபங்கு என்று கணக் கிடப்பட்டுள்ளது.
 மறுபுறம் பல கோடி மக்கள், குறைந்தபட்சம் நாற்பது கோடிக்கும் அதிகமானோர் - அரசு கணக்குப் படியே வறுமை கோட்டின் கீழ் உள்ளனர். இத்தகைய ஏற்றத்தாழ்வு நிலவும் நாட்டில் சொத்து வரியும் வாரிசு வரியும் இல்லை என்பது பெரும் கொடுமை அல்லவா?
இதுமட்டுமல்ல. வரும் ஆண்டில் இருந்து பெரும் கம்பெனிகள் தங்களது நிகர லாபத்தில் 25சதம் வரியாக கட்டினால் போதுமாம்.
 தற்சமயம் இந்த வரி விகிதம் 30சதம் ஆக உள்ளது.
மேலும் இந்த பட் ஜெட்டில் கலால் வரி, சுங்க வரி, சேவை வரி என்ற மறைமுக வரிகள் மூலம் 23,568 கோடி ரூபாய் வரிப்பளு மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
ஏழைகளை ஒழிக்காமல் விடமாட்டேன்

மறுபுறம் தனி நபர் மற்றும் கார்ப்பரேட் வருமானவரி சலுகைகளால் அரசுக்கு 8000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று பட்ஜெட் உரை கூறுகிறது. 

 மக்களுக்கு வரிச்சுமை, செல்வந்தர்களுக்கு வரிச்சலுகை, இது தான் பாஜக பட்ஜெட் அரசியல்.

இன்னொரு செய்தியும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

நிதி அமைச்சகத்தின் கணக்குப்படி, கம்பெனி களுக்கும் செல்வந்தர்களுக்கும் அளிக்கப்பட்ட வரிச்சலுகைகளால், கடந்த நிதியாண்டில் ஐந்தரை லட்சம் கோடி ரூபாய், நடப்பு நிதி ஆண்டில் கிட்டத்தட்ட ஆறு லட்சம் கோடி ரூபாய் என்ற அளவிற்கு அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. 

முத லீட்டை ஊக்குவிக்க இத்தகைய சலுகைகள் அவசியம் என்று தாராள மயவாதம்கூறுகிறது.
இதையே நமது நாட்டு கார்ப்பரேட் ஊடகங்களும் ஒத்தகுரலில் ஒலிக்கின்றன. மறுபுறம் விவசாயி களுக்கும் உழைப்பாளி மக்களுக்கும் அளிக்கப்பட்டுவரும் சொற்ப மானியங் களையும் ஒழிக்க வேண்டும் என்று ஊடகங்களும் முதலாளிகளின் அமைப்பு களும் கூச்சலிடுகின்றன.

இதைத்தான் பட்ஜெட் அமலாக்க முயற்சித்துள்ளது.

இதுவே அதன் வர்க்க அரசியல்.இந்த பட்ஜெட்டில் விவசாயி களுக்கும் இதர உழைப்பாளி மக்களுக்கும் என்ன உள்ளது?
வரிச்சலுகை நிச்சயம் இல்லை. புதிய வரிச்சுமைகள் உண்டு என்பதை ஏற்கெனவே பார்த்தோம்.

 மறு புறம் விவசாயம், கல்வி, சுகாதாரம், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த துறைகளுக்கான அரசின் திட்டஒதுக்கீடு கடந்த ஆண்டின் பட்ஜெட் ஒதுக்கீடுகளை விட அதிகமாக இல்லை.
மாறாக, விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டால், உண்மை அளவில் சரிவுதான் காணப்படுகிறது: எடுத்துக்காட்டாக, மனிதவள மேம்பாட்டு துறைக்கு கடந்த பட்ஜெட்டில் கிட்டத்தட்ட அறுபத்து ஏழாயிரம் கோடிரூபாய் திட்ட ஒதுக்கீடு.

ஊரக வளர்ச்சி துறையில் ஒதுக்கீடு பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வெட்டப் பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் ஐம்பத்து ஐந்தாயிரம் கோடி ரூபாயைக் கூட எட்டவில்லை.

போக்குவரத்து துறையில் திட்ட ஒதுக்கீடு கூட்டப்பட்டுள்ளது. ஆற்றல் துறையில் சிறிய அளவு அதி கரிப்பு உண்டு. ஆனால் மற்ற அநேக துறைகளில் வெட்டு தான். மொத்தத்தில் கடந்தபட்ஜெட்டில் ஐந்து லட்சத்து எழுபத்தி ஐந்தாயிரம் என்று காட்டப்பட்டு இருந்த திட்ட செலவு இந்த பட்ஜெட்டில் நான்குலட்சத்து அறுபத்தி ஐயாயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இது கூட நிறைவேறுமா என்பது சந்தேகமே.
பெரியண்ணன் சொன்னா சரிதான்.

ஏனெனில் கடந்த ஆண்டு திட்டச் செலவுக்கான பட்ஜெட் செலவு இலக்குஅடையப்படவில்லை.
 மாறாக, திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி, திட்ட செலவு நான்கு லட்சத்து அறுபத்து எட்டாயிரம் கோடி தான்.
அதாவது இலக்கை விட ஐந்தில் ஒருபங்கு குறைவு.
இந்த நிதி ஆண்டு பட்ஜெட் மதிப்பீடு இதை விட குறைவு.
 ஆண்டு முடியும் பொழுது இதிலும் பெரும் துண்டு விழலாம். அரசின் செலவுகளை குறைப்பதும், திட்ட மிடுதலை முடிவுக்கு கொண்டுவருவதும் பாஜக அரசின் முன்னுரிமையாக இருப்பதால் என்ன வேண்டுமானாலும் நடக்க லாம்!
திட்டம் சாரா செலவுகளிலும் பெரும் வெட்டு நிகழ்ந்துள்ளது. பட்ஜெட் கணக்கிற்கும் திருத்தப்பட்ட கணக்கிற்கும் ஏறத்தாழ ஆறாயிரத்து அறுநூறு கோடி ரூபாய் குறைவு உள்ளது.
 மக்கள் நல திட்டங்களில் இதனால் பல இழப் புகள் ஏற்பட்டிருக்கும் என்பது தெளிவு. வரும் ஆண்டிற்கான திட்டம் சாரா செலவுகளுக்கான பட்ஜெட் மதிப்பீடு கடந்த ஆண்டு தொகையைவிட எட்டு சதமானம் தான் அதிகம்.
இது பணவீக்கத்தை தான் அதிக பட்சம் ஈடுசெய் யும்.
உண்மை அளவில் அரசின் செலவு கூடவில்லை.
ஆக, அரசின் செலவை குறைப்பதில், வளர்ச்சிக்கான, மக்கள் நலனுக்கான ஒதுக்கீடுகளை வெட்டுவதில் மோடி அரசுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம் என்றகேள்வி இயல்பாக எழுகிறது.
அரசும்ஆளும் வர்க்க பொருளியல் அறிஞர்களும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது என்ன?
"விவசாய நிலங்களை எல்லாம் பிடுங்கி  இவருகிட்டே கொடுத்துட போறேன்.அரிசி,கோதுமையை ஒபாமா நாட்டில் இருந்து இறக்குமதி செஞ்சுடலாம்."
அரசின் செலவை குறைக்க வேண்டும். அதன் மூலமாக அரசின் வரவு - செலவு பற்றாக்குறையை குறைக்க வேண்டும் என்பது தான்.
இதற்குப் பின் ஒரு தத்துவம் உள்ளது.
ஒரு அரசுக்கு வரிகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஈட்டித்தரும் லாபங்கள் ஆகியவை வரவுகள். அரசின் செலவுஇந்த தொகைக்குள் அடங்க வேண்டும் என்பது தாராளமய தத்துவத்தின் கோட்பாடு.
 இதற்குமேல் தேவைப்பட் டால் அதிக பட்சம், அரசு தனது பொதுத்துறை பங்குகளை விற்று வரவை கூட்டிக்கொள்ளலாம் என்பது அதன் வாதம். “ஒரு அரசு, நாட்டு வளர்ச்சிக்காக, செல் வந்தர்கள் மற்றும் பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் மீது லாபம் மற்றும் வருமான வரி விதித்து வளங்களை திரட்டக் கூடாது.
அப்படி செய்ய முற்பட்டால் முதலீட்டாளர்கள் ஊக்கம் இழந்து விடு வார்கள்.
பொருளாதார வளர்ச்சி தடை படும்.” என்பது தாராளமயத்தின் நிலைப்பாடு. ஒரு நாட்டில் அரசின் வரவு-செலவு கொள்கைகள் இந்த கோட் பாட்டிற்கு எதிராக இருந்தால் அந்நிய நிதிமூலதனம் அங்கே வராது, இருந்தால் வெளியேறி விடும், என்று தாராளமய வாதிகள் கூறுகின்றனர்.
ஆனால், அரசு நாட்டு வளர்ச்சிக்கு, செல்வந்தர்கள் மீதுஉரிய வகையில் வரி விதித்து, வளங் களை ஈட்ட வேண்டும் என்பது நமது வாதம்.
 தனியார் துறை வேண்டாம் என்று நாம் கூறவில்லை. 
ஆனால், பல துறைகளில் தனியார் முதலீடுகள் வராது. மேலும் அனைத்து உழைப்பாளி மக்களுக்கும் பயன்தரும் திட்டங்களை தனியார் முதலீடுகள் மூலம் பெற இயலாது.
அரசு, முதலீடுகளை மேற்கொண்டே ஆக வேண்டும். கல்வி,சுகாதாரம், கட்டமைப்பு போன்ற துறைகளில் லாபநோக்க அடிப்படை யில் மட்டுமே முதலீடுகள் நிகழ்ந்தால் அவை பெரும்பகுதி உழைப்பாளி மக்களுக்குப் பயன்தராது. அனை வருக்கும், உணவு, உறைவிடம், ஆரோக்கியம், கல்வி, நல்ல வாழ்க்கை என்ப தெல்லாம் அரசு முதலீடுகளை மேற்கொள்ளாமல், தனியார்களை ஒழுங்குபடுத்தாமல், சாத்தியம் அல்ல.
எனவே, நமது பார்வையில், ஒரு முதலாளித்துவ அமைப்பிற்குள்கூட, மக் களின் குறைந்தபட்ச தேவைகளை பெற்றிட அரசின் வரவு-செலவு கொள்கைகள் மாற்றப்படவேண்டும் என் பது தான்.
அந்த திசையில் நாடு நகர்ந்திட, அரசின் வரவு-செலவு கொள் கையின் வர்க்கத்தன்மையை அம்பலப் படுத்துவதும் நமது மாற்று கொள்கைகளை முன்வைப்பதும் அவசியமாகிறது.
மோடிக்கு வாக்களித்ததற்கு இதுதான் மிச்சம்.  
அந்தவகையில், பாஜக அரசின் பட்ஜெட் நேர்முக வரிகளில் செல்வந்தர் களுக்கு சலுகைகளை அள்ளி வீசு வதையும் மக்கள் மீது மறைமுக வரிச் சுமைகளை போடுவதையும் நாம் கடுமை யாக எதிர்க்கிறோம்.
இன்று ஊரக வேலைத்திட்டம் சுருக்கப்பட்டுள்ளது.
 வேளாண் விளை பொருட்களை உரியவிலை கொடுத்து கொள்முதல் செய்யும் பொறுப்பில் இருந்து அரசு பின் வாங்க முற்படுகிறது.
பட்ஜெட்டில் வேளாண் துறைக்கான ஒதுக்கீடுகள் வெட் டப்பட்டுள்ளன.
விவசாயிகள் கடும் நெருக்கடியில் உள்ளனர்.
பன்னாட்டு சந்தையில் ஏற்பட்டு வரும் வேளாண் பொருட்களின் விலைச்சரிவு நமது நாடு முற்றிலுமாக திறந்துவிடப்பட்டிருப்பதால் நமது விவசாயத்தையும் விவசாயி களையும் பெரும் துயரத்தில் தள்ளி விவசாயிகளின் தற்கொலைகள் தொடரும் நிலை உருவாகியுள்ளது.
 இந்த சூழலில்,வேளாண் துறையையும் விவசாயி களையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும்.
ஆனால்பாஜக அரசின் பட்ஜெட் இதை செய்ய வில்லை. அரசின் வேளாண் ஆராய்ச்சி அமைப்பை வலுப்படுத்துவது, விரிவாக அமைப்பை சீர் செய்து மேம்படுத்துவது, வேளாண்துறையில் பொதுத்துறை முதலீடுகளை அதிகரிப்பது, உர உற்பத்தி யை உள்நாட்டில் அதிகப்படுத்தி உர விலை உயர்வை தடுப்பது உள்ளிட்ட எந்தநடவடிக்கையும் பட்ஜெட் முன்வைக்க வில்லை. இதற்குப் பதிலாக உணவுமானியம், உரமானியம், எரிபொருள் மானி யம் உள்ளிட்ட மக்கள் நல மானியங்கள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன.
ஊரக வேலை உறுதித்திட்டத்திற்கான ஒதுக்கீட்டை ஐயாயிரம் கோடி ரூபாய்அளவிற்கு பட்ஜெட்டில் அதிகரித்திருப்ப தாக சொன்னாலும்,
 உண்மை அளவில் கடந்த மூன்று ஆண்டுகளாகவே ஒதுக்கீடு குறைந்து வருகிறது. கடந்த ஆண் டில் 62000 கோடி ரூபாய் தேவை என்றுகணக்கிடப்பட்டிருந்தும் அரசு முப் பத்து நான்காயிரம் கோடி மட்டுமே ஒதுக்கியது.
இந்த ஆண்டு கூடியுள்ள அள வும் சொற்பமே. இதேதான் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து மக்கள் நல துறைகளின் கதியும்.
சிறு-குறுதொழில்களின் நிலைமையும் இதே தான்.
நாட்டு உற்பத்தி பாய்ச்சல் வேகத்தில் ஏற்பட்டு வருவதாகக் கணக்கு காட்டும் அரசு தனது பட்ஜெட்டின் ஒதுக்கீடு களில் இந்த வளர்ச்சியை ஏன் பிரதி பலிக்கவில்லை என்ற கேள்விக்கு அரசி டம் விடை கிடையாது.
அந்நிய, இந்திய பெரு மூலதனங்களை சார்ந்து நின்று அவர்கள் நலனையே மையமாக வைத்து போடப்படும் பட்ஜெட்டுகள் மக்கள் நலனுக்கான வளர்ச்சியை மேற்கொள்ள தேவைப்படும் வளங்களை திரட்ட உதவாது என்பதே இந்த பட்ஜெட் அளிக்கும் செய்தி. 
இதனை எதிர்த்தும் தாராளமய ,அந்நிய மயமாக்கல் கொள்கைகளை எதிர்த்தும், வரவு - செலவு கொள்கை தொடர்பான அணுகு முறைகளை மாற்றிடவும் மக்கள் குரல் எழுப்பி மோடி அரசுக்கு எதிராக இறங்கினால்தான் இந்த பாஜக அணுகு முறையில் ஒரளவாவது மாற்றம் உண்டாகும்.
                                                                                                             -  வெங்கடேஷ் ஆத்ரேயா

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?