மூவாசனங்கள்.

அல்லது
 மூன்று ஆசனங்கள்.

பர்வதாசனம்.
முதலில் விரிப்பில் கால்களை நன்றாக நீட்டி தளர்த்தி கொண்டு அமர வேண்டும்.
 வலது காலை இடது தொடை பக்கமாகவும், இடது காலை வலது தொடை பக்கமாகவும் உள்ளது போன்று மேல் நோக்கு இருக்குமாறு வைக்க வேண்டும்.

அதாவது பத்மாசன முறையில் உட்கார்ந்து கொண்டு 2 கைகளையும் தரையில் நன்றாக அழுத்தியவாறு 2 கால் முட்டிகளையும் ஊன்றி நிற்க வேண்டும். பின்னர் மெதுவான உடலை மேல் நோக்கு தூக்கி 2 கைகளையும் கும்பிட்ட நிலையில் வைக்க வேண்டும்.
 இது தான் பர்வத ஆசன முறை.
இந்த ஆசனத்தை முதலில் செய்ய ஆரம்பிக்கும் போது சுவரை ஒட்டிய நிலையில் பயிற்சி செய்யலாம்.

நன்றாக பயிற்சி செய்த பின்னர் வழக்கமான இடத்தில் செய்யலாம். இது மூட்டுவலி வருவதை தடுக்கும் ஆசனம்.ஏற்கனவே
மூட்டு வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்ய கூடாது. வலி அதிகரித்து விடும்.இது வரும் முன்னர் காக்கும் ஆசனம் மட்டுமே.
முதலில் சாதாரண மூச்சில் செய்து விட்டு பயிற்சியை முடித்த பின்னர் ஆழ்ந்து மூச்சு விட வேண்டும்.
10 முதல் 20 வினாடிகள் வரை இந்த ஆசனத்தை செய்து விட்டு படிப்படியாக மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும்.

முதலில் கைகளை தளர்த்திய பின்னர் மெதுவாக தரையில் உட்கார்ந்து கால்களை தளர்த்த வேண்டும்.
 பயிற்சியை முடித்த பின்னர் கால்களை நீட்டி மடக்கி 5 முறை செய்வது நல்லது. இப்பது செய்தால் மூட்டு வலி வருவது தடுக்கப்படுகிறது.

பயன்கள் :

சுவாச உறுப்புகள் நன்றாக செயல்படவும், தோள்பட்டை வலி, கை மூட்டு வலி குணமாகவும் பர்வத ஆசனப்பயிற்சி உதவுகிறது.
 தோள்களில் படியும் தேவையற்ற அதிக கால்சியம் குறையும்.
அதிக உடல் எடை குறையும். இதானால் மூட்டு வலி வருவது தடுக்கப்படும்.
===========================================================================
தண்டாசனம் 
உட்கார்ந்து செய்யும் ஆசனங்களின் அடிப்படை தண்டாசனம் எனப்படும் நிலை.
நிமிர்ந்து உட்கார்ந்து கால்களை நீட்டுவதுதான் இந்த ஆசனம்.
 உடல் நேராக இருக்க வேண்டும்.
இரண்டு கைகளும் இடுப்புக்குப் பின்னால் இருக்க வேண்டும்.
 கைகளும் வளையாமல் நேராக இருக்க வேண்டும்.
நீட்டியிருக்கும் கால்களின் அடிப்பகுதி, கீழே அழுத்தியிருக்க வேண்டும்.

இடுப்பு எலும்புகள் கீழே அழுத்தியிருக்க வேண்டும்.
கைகளை அழுத்தி மார்பை நன்கு விரிவடையச் செய்யுங்கள்.
 முதுகெலும்பை நேராக வைத்திருங்கள்.
 தோள்பட்டைகளும் விரிந்திருக்க வேண்டும்.
தொடைகள், முழங்கால்கள் தளர்வாக இருக்கக் கூடாது.
 குதிகால்களை முடிந்தவரை வெளிப்புறமாகத் தள்ளுங்கள்.

நுனிக் கால்களை முன்னோக்கி இழுங்கள்.
கால் விரல்கள் உங்களை நோக்கியபடி இருக்கட்டும்.
 மூச்சை ஆழமாக இழுத்து விடுங்கள்.
மூன்று அல்லது ஐந்து மூச்சு வரை இதே நிலையில் இருக்கலாம்.
 பின்னர் மெதுவான பழைய நிலைக்கு வரவும்.
முதலில் கால்களை நன்கு நீட்டிய நிலையில் முதுகை நிமிர்த்த முடியாது. அத்தகைய நிலையில் சுவரில் சற்றே சாய்ந்தபடி இதைப் பயிற்சி செய்யலாம். அப்படிச் செய்யும்போது இரண்டு தோள்பட்டைகளும் சுவரில் பட்டுக்கொண்டிருக்க வேண்டும். முதுகு நேராக இருக்க வேண்டும். 
பயன்கள் :

முதுகெலும்பை வலுப்படுத்த உதவுகிறது. மார்பை விரியச் செய்து மூச்சைச் சீராக்க உதவுகிறது.
 பின்புறத் தசைகளை வலுப்படுத்துகிறது.
 தோள்பட்டைகள் வலுவாகும். உடலின் தோற்றம் மெருகேறும்.
 சிலருக்குத் தோள்பட்டை சற்றே வளைந்து கூன் விழுந்ததுபோல் இருக்கும்.

இந்த ஆசனத்தைத் தொடர்ந்து செய்து வந்தால், கம்பீரமான நிமிர்ந்த தோற்றம் கிடைக்கும்.
ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
உட்கார்ந்து செய்யும் ஆசனங்களுக்கான அடிப்படைப் பயிற்சியை இது கொடுக்கும்.
=========================================================================


மன இறுக்கத்தை போக்காசனம்

இந்த ஆசனத்தை எல்லா ஆசனங்களும் முடித்த பின்னர் செய்யலாம்.இது உடலுக்கு ஓய்வைத்தரும்.மனதை லேசாக்கி மன இறுக்கத்தை போக்கிடும்.

. குப்புறப்படுத்து, நெற்றி தரையில் தொடும்படி வைத்து, கைகள் இரண்டையும் விரல்கள் கோர்த்த நிலையில் தலையில்

வைத்துக் கைமுட்டிகளை தரையில் தொடும்படி வைக்கவும்.

 கால்கள் நீட்டப்பட்டு, குதிகால் மேல்நோக்க நுனிக்கால்கள் தரையிலிருக்க வேண்டும்.

மூச்சு சாதாரண நிலையில் இருக்க ஒரு சில நிமிடங்கள் இந்நிலையிலிருந்து ஆரம்ப நிலைக்கு வரவும்.

பயன்கள்:

தொப்பையைக் குறைக்கிறது.. மன இறுக்கத்தை போக்குகிறது.

 தண்டு வடங்களில் உள்ள கோளாறுகளை அகற்றுகிறது. உடலுக்கு நல்ல ஓய்வைக் கொடுக்கிறது.

=================================================================================== 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?