பட்டுக்கோட்டையார்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார்.

 எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார்- விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார்.

 இவர் தந்தையும் கவிபாடும் திறன் பெற்றவர். கணபதி சுந்தரம் என்கிற சகோதரரும் வேதாம்பாள் என்கிற சகோதரியும் உண்டு.

பள்ளிப்படிப்பு மட்டுமே கொள்ள முடிந்த கல்யாணசுந்தரம் கம்யூனிசஇயக்கதில் ஈடுபாடு கொண்டவர்.
இவர் இயற்றி வந்த கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டு வந்தது.
 1955ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார்.
பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. 

பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். 
இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும், அந்தரங்க சக்தியுடன் பாடல்களாக இசைத்தார்.

 இவருடைய துணைவியார் பெயர் கௌரவாம்பாள். 1959-ஆம் ஆண்டு இவர்களுக்கு குமரவேல் என்ற குழந்தை பிறந்தது. 
அதே ஆண்டில் (08.10.1959) 
 தனது இளம் வயதிலேயே அழியாப்புகழுடன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்  மரணம் அடைந்தார்.

பட்டுக்கோட்டையார் என்று பாராட்டப்படும் இவரது பாடல்களை தனது படங்களில் கண்டிப்பாக இடம் பெறவைத்தே நடிகர் எம்ஜிஆர் தந்து புகழை,ஆளுமையை மக்கள் மனதில் வளர்த்துக்கொண்டார்.

'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?
இதுவும் பட்டுக்கோட்டையார் வரிகள்தான்.
=============================================================================================
காமராஜர்

தமிழ்நாடு முதல்வரானார்.

[ ஏப்.13- 1954]
காமராஜர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954-ம் ஆண்டு முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார்.

ஏழைகளுக்கும் கல்வி கிடைக்க வர்களை பள்ளி வர வைக்க தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை காமராஜர்தான் அறிமுகப்படுத்தினார்.


அதைத்தான் இன்றைய ஆட்சியாளர்கள் 
சத்துணவு என்று பெயர் மாற்றி தங்கள் கண்டுபிடிப்பு போல் தம்பட்டமடித்து வருகின்றனர்.

 காமராஜர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர் (King Maker), பெருந்தலைவர் என்றெல்லாம் புகழப்படுகிறார்.

இவர் இறந்த பிறகு 1976-ல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. 

சென்னை வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

காமராஜர் உயிருடன் இருக்கையில் அவரை மதிக்காத பொறுப்பான உரிய தகுதியை வசங்க்காத காங்கிரசார் இன்று காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம் என்று வாக்கு கேட்கும் அளவு காமராஜர் ஆட்சி சிறப்பான இடத்தை தமிழக வரலாற்றில் பெற்றுள்ளது.

=============================================================================================
 'ஜாலியன் வாலாபாக் படுகொலை' 

[1919 - ஏப்ரல் 13 ]

இந்திய விடுதலைப்போர் உச்சத்தை எட்டிக்கொண்டிருந்தபோது  1919ல், இந்தியாவில், மக்கள், நான்கு பேராக கூடக்கூடாது என, 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது. 
அமிர்தசரஸ் நகரில், ஜாலியன் வாலாபாக் எனும் பகுதியில், ஒரு மைதானம்; சுற்றிலும் கோட்டைச் சுவர். அதற்கு, ஒரே ஒரு வாசல் தான்,
 போகவும், வரவும். 
அது உள்ளூர் வாராந்திர சந்தை நடைபெறும் இடம்.
 144 தடையை மீறி, இந்த மைதானத்தில் தேச பக்தர்களின் பொதுக் கூட்டம் நடந்தது.
 இதைக் கேள்விப்பட்ட, ஆங்கிலேய அதிகாரி டயர் என்பவன், போலீஸ் வேனுடன் வந்து, மைதான வாசலை வழிமறித்தபடி நிறுத்தி, சிப்பாய்களுடன் உள்ளே நுழைந்து, கண்மூடித்தனமாக மக்களை சுட்டுப் பொசுக்கினான். 
ஆண் - பெண் மற்றும் குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் துடிதுடித்து இறந்தனர். 
இந்திய விடுதலைப் போர் சரித்திரத்தில், பஞ்சாப் படுகொலை என அழைக்கப்படும், 'ஜாலியன் வாலாபாக் படுகொலை' நடந்த நாள் இது! 
================================================================
மேலும்

இன்று 

ஏப்ரல்-13.

  • ஹங்கேரி நாடு குடியரசானது(1849)
  • கூகுள் காலண்டர் வெள்ளோட்டம். (2006)
  • அமெரிக்காவின் முதல் வணிக செயற்கைகோள்  வெஸ்டார் 1 ஏவப்பட்டது(1974)
  •  முதலாவது ஜேம்ஸ் பாண்ட் புதினத்தை  ஐயன் ஃபிளமிங், 
  • வெளியிட்டார்(1953)

============================================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?