புற்றுநோய்க்கு மருந்து




சளி  கிருமி.? 


லண்டனைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள், சளியை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகளைக் கொண்டு புற்று நோயைக் குணப்படுத்தும் புதிய சிகிச்சை முறையை கண்டு பிடித்திருக்கிறார்கள்.
ஆட்கொல்லி நோயான புற்று நோயிலிருந்து மனிதனை காப்பாற்ற இன்று வரை முறையான சிகிச்சை கண்டுபிடிக்கப்படவில்லை. 
உடல் உள் உறுப்புகளிலும் தோலிலும் ஏற்படும் புற்று நோய்கள் பெரும்பாலும் உயிருக்கு ஆபத்தில் முடிகிறது.

சளிக்கு காரணமான வைரஸ் கிருமிகள், உயிருக்கு ஆபத்து விளைவிக்காதவை. இவற்றை மரபணு மாற்றத்தின் மூலமாக புற்று நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடும் வகையில் விஞ்ஞானிகள் மாற்றியிருக்கிறார்கள். 

"வைரஸ் இம்யுனோதெரபி' எனப்படும் இச்சிகிச்சை முறையில் மரபணு மாற்றம் பெற்ற வைரஸ். 
இரண்டு வழிகளில் புற்று நோயை எதிர்த்து போராட உதவுகிறது. 


முதலாவதாக, கேன்சரை ஏற்படுத்தும் கிருமிகளில் தங்கி அவற்றை அழிக்கிறது. 
இரண்டாவதாக, உடம்பில் இயற்கையாகவே எதிர்ப்பு சக்தியை உண்டாக்கி புற்று நோய் குணமாக உதவுகிறது.

புற்று நோய்க்கு முறையான சிகிச்சை குறித்து தீவிரமான ஆராய்ச்சி உலகெங்கும் நடந்து வரும் வேளையில் இச்செய்தி மருத்துவ உலகிற்கு ஆறுதலான விஷயமாக இருக்கிறது. 
ஏற்கனவே நடைமுறையில் உள்ள புற்று நோய்க்கான சிகிச்சைகளுடன், இச்சிகிச்சை இணைந்து அளிக்கப்படும் போது நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர்கள், "வைரஸ் இம்யுனோ தெரபி' க்கு உட்படுத்தப்பட்ட தோல் புற்று நோயாளிகளிடம், நோயின் தாக்கம் குறைந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். 
எதிர்காலத்தில் இது புற்று நோய்க்கு மிகச் சிறந்த மாற்றுச் சிகிச்சையாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
கடலலையை  இப்படி கூட படம் எடுக்கலாம்.
========================================================================
இன்று,
மே -29.
சர்வதேச அமைதி காப்போர் தினம்

நைஜீரியா மக்களாட்சி தினம்(1999)

இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அமைக்கப்பட்டது(1947)

ஆஸ்திரிய-ஹங்கேரி பேரரசு அமைக்கப்பட்டது(1867)

========================================================================

ரூ. 97 கோடி ஆளுங்கட்சிக்கு தேர்தல் நிதியா?

2009-ஆம் ஆண்டு மத்திய அரசு கட்டாய கல்வி உரிமைச் சட்டம் நிறைவேற்றியது. 
இதில் தனியார் பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 25 சதவீதம் தனது பள்ளியின் முதல் வகுப்பில் ஏழை மாணவர்களை இலவசமாக சேர்க்க வேண்டும். எவ்வித கட்டணமும் இந்த மாணவர்களிடம் வசூல் செய்யக் கூடாது என்று சட்டம் இயற்றியது. 
இந்தச்சட்டத்தின்படி தமிழகத்தின் நிலையைப் பார்த்தால் மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது. சட்டத்திற்கே சவால் விடக்கூடிய வகையில் தனியார் பள்ளி உரிமையாளர்கள் ஏப்ரல் 25 அன்று தமிழக ஆளுநரை வைத்துக் கொண்டு நாங்கள் இந்தச் சட்டத்தின்படி மாணவர்களை சேர்க்கை நடத்த முடியாது.
அரசு சொல்லியுள்ள எந்த விதிமுறைகளையும் கடைபிடிக்க மாட்டோம் என்றும், அரசு வசூல் செய்யும் கல்வி வரியை தனியார் பள்ளிகளுக்கும் கொடுக்க வேண்டும் என்று சட்டத்திற்கு விரோதமான தீர்மானத்தை நிறைவேற்றியது.
 மாநாட்டில் கலந்து கொண்ட ஆளுநர் இது சம்பந்தமாக சட்டத்திற்கே சவால் விடக்கூடிய அரசியல் சட்டத்திற்கு எதிராக இந்தத் தீர்மானத்திற்கு மௌனமாக இருந்தது இவரே சட்டத்தை மதிக்கக் கூடாது என்பதற்கு ஆதரவாக இருப்பது போல் இருக்கிறது. இந்தியா முழுவதும் இந்தச் சட்டத்தின்படி 29 சதவீதம் மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளார்கள்.
தமிழகத்தில் வெறும் 11.3 சதவீதம் தான் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் தமிழக அரசு தனியார் பள்ளிகள் கேட்ட ரூ.97 கோடியை மத்திய அரசு பெறாத நிலையில் மாநில அரசு தானே தருவதாக கூறியுள்ளது.
சேர்க்கப்பட்ட மாணவர்களின் விபரங்களைப் பார்த்தால், மிகப்பெரிய மோசடி நடந்ததாக தெரிகிறது. 2013-14-ஆம் ஆண்டில் மெட்ரிக் பள்ளி இயக்குநர் 44330 மாணவர்கள் சேர்க்கப்பட்டதாக கூறியுள்ளார்;.
 ஆனால் அகமதாபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றின் ஆய்வில் 15730 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஆனால் தமிழக அரசு அரசு ஆணை 120-ன் மூலம் இந்த இரண்டு புள்ளி விபரங்களுக்கும் மாறாக 49864 மாணவர்கள் சேர்க்கப்பட்டதாக கூறுவது எந்த அடிப்படையில் என்று, எந்தக் கல்வியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரியவில்லை.
2014-15-ஆம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கையில் தகவல் அறியும் சட்டத்தில் தமிழகத்தில் 2959 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த தகவல் அறியும் சட்டம் வெளிவந்தபிறகு பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் சபிதா 89941 பேர் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறியுள்ளார்.
ஆனால் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் 86729 பேர் சேர்க்கப்பட்டதாக கூறுகிறார். கல்வித்துறை செயலாளர் சொல்வதற்கும் தமிழகத்தின் முதல்வர் சொல்வதற்கும் இடையில் பெரும் வித்தியாசம் உள்ளது. ஏன் என்று தெரியவில்லை?
யார் சொல்வது உண்மை.
பழனி கல்வி மாவட்டத்தில் தகவல் அறியும் சட்டப்படி 34 தனியார் பள்ளிகள் உள்ளது.
7 பள்ளிகளில் 83 பேர்தான் மாணவர்களை சேர்த்துள்ளார்கள். 27 பள்ளிகள் 1 மாணவரையும் கூட சேர்க்கவில்லை என்று திண்டுக்கல் மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பள்ளிக் கல்வித்துறையில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அரசே வெளியிடுவதால், இந்த ரூ. 97 கோடியில் மிகப்பெரிய ஊழல்கள் நடந்துள்ளது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கையில் பெரும் குழப்பங்கள் உள்ளது. இந்த நிலையில் 97 கோடியை எந்தப் பள்ளிகளுக்கு தமிழக அரசு கொடுக்கப்படுகிறது என்பது தெரிவிக்கப்படவில்லை.
தனியார் பள்ளிகள், சேர்க்கப்பட்ட மாணவர்களை பள்ளி வாரியாக வெளியிடுவதற்கு தயாராக இருக்கிறார்களா என்றால் இல்லை. மேலும் எந்த ஒரு நிதியையும் பணியை செய்து முடிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கின்ற பொழுது அரசு அலுவலர்கள் மூலம் தணிக்கை செய்வார்கள். அரசு ஆடிட்டர் மூலம் ஆடிட் செய்யப்படும். அப்படி எதுவும் செய்யப்பட்டதாக தெரியவில்லை. எனவே மேற்கண்ட ரூ.97 கோடி எப்படி அரசுப் பணிகளில் ஊழல்கள் மூலம் கமிசனாக கை மாறுகிறதோ அதே போல் இந்த 97 கோடியும் ஆளும் கட்சிக்கு குறிப்பிட்ட சதம் கமிசனாக கை மாறுகிறதோ என்ற அச்சம் கல்வியாளர்கள் மத்தியிலும் பொது மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. மேலும் தனியார் பள்ளிகளுக்கு சொத்துவரி என்பதில்லை.
ஆனால் தனியார் பள்ளிகளால் வரக்கூடிய திடக்கழிவுகளை அகற்றும் பணி உள்ளாட்சி அமைப்புகளால் நடைபெறுகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த வேண்டிய சேவை வரியையும் செலுத்துவதில்லை. சட்டத்திற்கே சவால் விடக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் செலவினம் ஏற்படுகிறது. மாணவர்களுடைய சேர்க்கை என்பது வெளிப்படைத் தன்மை வாய்ந்ததாக இல்லை.
யாராலும் கண்காணிக்கப்படுவதும் இல்லை. எனவே மாணவர் சேர்க்கையை கண்காணிக்கக் கூடிய வகையில் கண்காணிப்பு குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். ரூ.97 கோடியை கொடுப்பதற்கு முன்னால் அரசின் மூலம் சேர்க்கப்பட்ட மாணவர்களின் சேர்க்கையை தணிக்கை செய்த பிறகு தான் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய நிதியை மட்டும்தான் கொடுக்க வேண்டும். தனியார் பள்ளிகள் கேட்ட முழுமையான நிதியைக் கொடுக்கக் கூடாது.

கே. கந்தசாமி




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?