சல்லிசான விலை

சூரியனை பிளாட் போட்டு ஒரு பெண் விற்றுள்ளார். 
இதுவரை தமிழகத்தில் குளம்,ஏரிகளை மனை களாகப் பிரித்து விற்று பனம் சம்பாதித்தவர்களைப் பார்த்திருக்கிறோம்.
அவர்களை விஞ்சி ஸ்பெயினை சேர்ந்த பெண் ஒருவர் ஆன்-லைன் வர்த்தக நிறுவனமான இ-பேயில் இதற்காக விளம்பரம் செய்து சுமார் 700 ப்ளாட்களையும் அவர் விற்றுள்ளார்.
 ஆனால் தனக்கு சேர வேண்டிய பணத்தைத் தராமல் இ-பே நிறுவனம் மோசடி செய்துள்ளதாக தற்போது வழக்கும் தொடர்ந்துள்ளார். ஸ்பெயின் நாட்டின் கால்சியா பகுதியைச் சேர்ந்த 54 வயதாகும் மரியா டுரான் என்ற அந்தப் பெண், கடந்த 2010ம் ஆண்டில் இருந்து சூரியன் தனக்குச் சொந்தமானது என்று கூறி இந்த விற்பனையை செய்துள்ளார்.
சூரியன் தனக்கு சொந்தமானது என்பதற்கான ஆவணத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். அதைத் தொடர்ந்து சூரியனை பிளாட் போட்டு விற்க முயற்சித்துள்ளார். ஒரு சதுர மீட்டர் நிலம் ஒரு யூரோ என்ற அடிப்படையில், பிரபல ஆன்-லைன் வர்த்தக நிறுவனமான இ-பேயில் விளம்பரம் செய்துள்ளார். 
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவருடைய இந்த விற்பனையை தெரிந்துக் கொண்ட இ-பே, சூரியனில் பிளாட் போட்டு விற்கும் அந்த பெண்ணின் விளம்பரத்தை தடை செய்தது. 
மேலும் அவருடைய கணக்கையும் செயல்படுத்த முடியாதபடி முடக்கியது. இதுவரை எனது விளம்பரத்தைப் பார்த்து 700 பேர் பதிவு செய்துள்ளனர். 

அவர்கள் செலுத்திய பணத்தை இ-பே நிறுவனம் எனக்குத் தராமல் மோசடி செய்துள்ளது. விளம்பரத்தைத் தொடர்ந்து வெளியிட அனுமதிக்க வேண்டும். மேலும் இதுவரை செலுத்தப்பட்ட தொகையையும் இ-பே செலுத்த வேண்டும் என்று உள்ளூர் நீதிமன்றத்தில் மரியா வழக்குத் தொடர்ந்தார்.
 அதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது. விளம்பரம் செய்வது தொடர்பான ஒப்பந்தத்தில் எந்தப் பிரிவை அந்தப் பெண் மீறியுள்ளார். 
எப்படி அவருடைய விளம்பரத்தை நிறுத்தலாம் என்று விளக்கம் அளிக்கும்படி இ-பே நிறுவனத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதனிடையில் சமரசம் செய்து கொள்ள இ-பே முன்வந்ததாகவும், அதை ஏற்க மறுத்ததாகவும் மரியா கூறியுள்ளார். 
தனக்கென தனி இணைய தளம் தொடங்கி, தனக்கு சொந்தமான சூரியனில் போட்டுள்ள பிளாட்களை தொடர்ந்து விற்பனை செய்ய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சர்வதேச சட்டத்தின்படி எந்த ஒரு கோளையும், நட்சத்திரத்தையும் (சூரியன் ஒரு நட்சத்திரம்) எந்த ஒரு நாடும் உரிமை கோர முடியாது. “ஒரு நாடுதான் நட்சத்திரங்களுக்கு உரிமை கோர முடியாது. இதுகூடவா எனக்குத் தெரியாது. 
ஆனால் நான் தனி மனுஷி. எனக்கு உரிமையுள்ளது. 
அதனால் சூரியன் எனக்குத்தான் சொந்தம்” என்கிறார் மரியா.
நீங்கள் வாங்கும் இடத்துக்கருகிலெயே பேருந்து நிலையம்,ரெயில்வே நிலையம்,விமான நிலையம்,கப்பல் நிலையம் எல்லாம் வருகிறது.
அதைவிட முக்கியம் மின் தகன மேடை வருகிறது.மின்சாரமே தேவையில்லை.அவ்வளவு வெளிச்சம் இரவு-பகல் எல்லா நேரமும். உங்களை தகன செய்யக்கூட மின்சாரம் தேவை இல்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
ஒரு யூரோக்கு ஒரு சதுர மீட்டர் சல்லிசான விலை.என்ன நீங்கள் வாங்கிய இடத்தை நீங்கள் போய் பார்த்து வர முடியாது.அதற்கு மரியா வாகன வசதி செய்து தரவில்லை.கடைசிவரை உங்கள் சந்ததிகள் கூட பார்க்க முடியாது.
========================================================================
இன்று,
ஜூன் -09.
  • இந்தியாவின் முதல் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண்பேடி பிறந்த தினம்(1945)

  • தங்கனீக்கா குடியரசானது(1962)


  • வால்ட் டிஸ்னியின் டொனால்ட் டக் வரைகதை வெளிவந்தது(1934)

  • வடமேற்கு சீனாவில் ஜப்பானியரின் ஆக்கிரமிப்பை சீனக் குடியரசு அங்கீகரித்தது(1935)

========================================================================
தமிழகம் முழுவதும், இரு சக்கர வாகன ஓட்டிகள், ஜூலை 1 முதல், கண்டிப்பாக, 'ஹெல்மெட்' அணிய வேண்டும்; இல்லையென்றால், ஓட்டுனர் உரிமம் உட்பட ஆவணங்களை முடக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 
=================================================================================
முதலில் கோழி அப்புறம்?
பாஜக தலைமையிலான மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில அரசுகள் மாட்டு இறைச்சிக்கு தடைவிதித்துள்ளன.
 மாட்டு இறைச்சியை சாப்பிடுவது மட்டுமல்ல, வைத்திருப்பதும் கூட தண்டனைக்குரிய குற்றம்என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 நாடு முழுவதும் இத்தகைய சட்டத்தைக் கொண்டு வரப்போவதாகவும் மோடி அரசின் அமைச்சர்கள் மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள். 
ஆனால் முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும், பாஜக கூட்டணி ஆட்சியிலும் உலக வர்த்தக அமைப்புடன் செய்துகொண்ட உடன்பாடுகளால் அமெரிக்காவிலிருந்து கோழிக்கறி வந்து இங்கே குவியப்போகிறது.
இதைத் தடுக்க வழியில்லாமல் கையைப் பிசைந்து கொண்டு நிற்கின்றனர் மத்திய ஆட்சியாளர்கள். 
அசைவ உணவுப்பழக்கம் கொண்டவர் களுக்கு ஓரளவு மலிவு விலையில் கிடைப்பது கோழிக்கறி மட்டுமே. 
அதுவும் கூட இனிமேல்அமெரிக்காவிலிருந்து நேரடியாக இறக்குமதி யாகப்போகிறது. இதனால் உள்நாட்டு கோழி உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படும் ஆபத்து எழுந்துள்ளது. உலக வங்கி, சர்வதேச நிதியம், உலக வர்த்தக அமைப்பு என பல்வேறு ஏகா
திபத்திய நிழல் நிறுவனங்களிடம் இந்தியாவின் இறை யாண்மை சிக்கவைக்கப்பட்டுள்ளது. 
மத்திய ஆட்சியாளர்கள் மாறிமாறி போட்ட உடன் பாடுகளின் விளைவை இப்போது நாடு சந்திக்கத் துவங்கியுள்ளது.
அமெரிக்கக் கோழியை இந்தியாவில் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டது. 
இதை எதிர்த்து உலக வர்த்தக அமைப்பின் மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் அமெரிக்கத் தரப்பு மேல்முறையீடு செய்தது. 
இந்தியா விதித்த தடை செல்லாது என தீர்ப்பாயம் கூறிவிட்டது. 
இதனால் கோழிக்கறி இறக்குமதிக்கு தடை விதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
இதனால் இந்தியாவின் பல மாநிலங்கள் குறிப்பாக தமிழகம் கடும் நெருக்கடியைச் சந்திக்க நேரும்.தமிழகத்தில் மட்டும் 4 கோடி முட்டையும் 2 கோடி கிலோ கறிக்கோழியும் உற்பத்தி செய்யப் படுகிறது
. இதில் 90 சதவீதம் அளவுக்கு உள்நாட்டி லேயே பயன்படுத்தப்படுகிறது. இதேபோன்று பல்வேறு மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள கோழிப்பண்ணைகள் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது. 
அந்நிய முதலீடு வந்து கொட்டப்போவதாக ஆசை வார்த்தை கூறி மக்களை ஏமாற்றி னார்கள். 
ஆனால் அமெரிக்கர்கள் கோழியின் நெஞ்சுக் கறியைச் சாப்பிட்டுவிட்டு லெக் பீஸ் எனப்படும் கோழிக்காலை வெறும் கழிவாக கருதுகின்றனர். அதை அவர்கள்சாப்பிடுவதில்லை. 
அந்த செத்த கோழியின் கால்களை இந்தியர்களின் வயிற்றில் கொண்டு வந்து கொட்டப்போகிறார்கள்.
கோக், பெப்சி பாணியில் பிரம்மாண்டமான விளம்பரங்கள் செய்யப்படும். நம் நாட்டு திரைப்பட கலைஞர்களும் கிரிக்கெட் வீரர்களும் அமெரிக்கக் கோழிக்காலை கடிப்பது அற்புதமான அனுபவம் என்று விளம்பரம் செய்வார்கள்.
 பிறகு உள்நாட்டுக் கோழிகள் கிலிபிடித்து காணாமல் போய்விடும். ஏற்கெனவே உள்நாட்டு குளிர்பானங்கள் இப்படித்தான் ஒழிக்கப்பட்டன. இந்தியா இப்போதாவது விழித்துக் கொள்ளுமா? 
தேச விரோத உடன்பாடுகளை ரத்து செய்யுமா? 
அதற்கான தைரியம் உண்டா என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி.
பாஜக அரசு மாட்டிறைச்சிக்கு தடை கொண்டுவரக் காரணமே அமெரிக்க கோழிக்கு வழி விடத்தானோ?
=======================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?