உறையும் உலகம் ?

தினமும் காலை எழுந்தால் சுட்டெரிக்கும் வெயிலை தான்  பார்த்து வருகிறோம். 
சில ஆண்டாகவே சரியான மழை இல்லை; எங்கும் வறட்சி; இந்த  சூழ்நிலையில் வெப்பமயமாதல் எல்லாம் மாறி திடீரென இந்த உலகம், கொட்டும் பனியால் உறையும் என்றால் எப்படி இருக்கும்?
 ஆம், அப்படித்தான்  2030-40களில் இந்த உலகம் உறைபனியில் வெடவெடக்கப்போகிறது. 
இப்படி தான் சர்வதேச விஞ்ஞானிகள் குழு தனித்தனியாக ஆராய்ந்து வெளியிட்ட அறிக்கைகள் எல்லாம் கூட்டாக பயமுறுத்துகின்றன. வழக்கம் போல, ஹும்ம்... இதெல்லாம் நடக்காது; கவலைப்படாதீங்க என்று சொல்லும் எதிர்கோஷ்டி விஞ்ஞானிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். 
உறையத்தான் போகிறது என்று முதன்  முதலில் பகீர் ஆராய்ச்சி அறிக்கையை விட்டது, பிரிட்டன் வேல்ஸ் நகரில் கூடிய சர்வதேச வானியல் ஆராய்ச்சி  விஞ்ஞானிகள் தான். 

இதன் தலைவர் நார்த்தம்ப்ரியா பல்கலைக்கழக தலைமை பேராசிரியர் சகர்கோவ் கூறுகையில், ‘17ம் நூற்றாண்டு இறுதியில் இருந்து 18ம் நூற்றாண்டு  ஆரம்பம் வரை உள்ள ஆண்டுகளில் பெரும்பாலும் உலகின் பல நாடுகள் உறை நிலையில் தான் இருந்தன. 
வெயில் வருவதே அபூர்வம்’ என்றார். 
இவரை தொடர்ந்து ரஷ்யாவின் இயற்பியல் பெண் விஞ்ஞானி டாக்டர் ஹெலன் பாபோவா, ப்ராட்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் சைமன்  ஷெபர்டு, ஹல் பல்கலைக்கழக பேராசிரியர் செர்கி சர்கோவ் ஆகியோரும் எப்படி உலகம் உறையும் என்று பேசினர். அவர்கள் ஆய்வறிக்கையில் சில சுவையான பகுதிகள்: * சூரியன் பளீச்சென காலையில் கிளம்பி, உலகம் பூரா  தன் கிரணங்களை பரப்புவதும், வேகத்துடன் காந்த அலைகளை வீசுவதும் நடக்க  காரணம், அதில் இயற்கையாக ஸ்டாக் வைத்துள்ள காந்தசக்தியால் தான். இந்த வீச்சு, அதிகமாவதும், குறைவதும் அதன் சக்தியை பொறுத்தது. 

* சூரியனில் இருந்து மின் காந்த அலைகள் பரவுவது, ஒரு வித பளாஸ்மா நீர்  சுரப்பது, சூரியனில் கரும்புள்ளிகள் உருவாவது போன்றவை  எல்லாம் இந்த காந்த சக்தியை அடிப்படையாக வைத்து தான். 

* இந்த சுழற்சி 11 ஆண்டுக்கு ஒரு முறை மாறும்;  அதாவது, சூரியனில் உள்ள காந்த சக்தி பரவுவது, வீச்சின் தன்மை வலுவிழக்கும் நிலை  உருவாகும். அப்போது அதன் கிரணங்கள், கரும்புள்ளி உருவாவது என்று ஆரம்பித்து, ஒரு நாளைக்கு சூரியன் உதயமாகி, மறைவது வெறும்  நிமிடக்கணக்கில் மாறும் அளவுக்கு இயற்கை விந்தை நேரலாம். 

* 90 ஆண்டு கால கட்டத்தில் 11 ஆண்டுக்கு ஒரு முறை இப்படி கட்டாயம் நேரும் என்று சொல்ல முடியாது; எப்போதாவது அப்படி நேரலாம்.  கடந்த 17ம் நூற்றாண்டு இறுதியில் இப்படி தான் சூரியன் தன் பணியை குறைத்து ெகாண்டது. அதாவது, மாலை 4.30 மணிக்கு உதயமாகி, 5 மணி  வரை தான் கிரணங்களை வீசும். அதுவும் மிக அரிதாக சில நாடுகளில் தெரியுமாம். 
* சூரியனில் வழக்கமாக 40-50 ஆயிரம் கரும்புள்ளிகள் தென்படும். இந்த காலகட்டத்தில் வெறும் 50 கரும்புள்ளிகள் தான் இருக்கும்  என்கின்றனர் விஞ்ஞானிகள். 

* சூரியன் தன்னிடம் இருந்து வெளிப்படுத்தும் சூரிய கிரணங்கள், மின்காந்த அலைகளை ஜோடிஜோடியாக வெளி விடும். அப்படி விடும் போது  பிரதானமாக வெளிவிடும் மின்காந்த அலைக்கற்றைகள் 40  சதவீத அளவுக்கு பரவும். இது துருவத்துக்கு துருவம் மாறும். எளிதாக சொன்னால்  கண்டங்களுக்கு கண்டம் மாறும். 

* பூமியின் அரைக்கோளத்தில் சுற்றி பரவும் இந்த மின்காந்த அலைக்கற்றைகள், வடக்காக பரவி, பின் தெற்காக பரவும். இதில் மாற்றங்கள்  ஏற்படும் போது தான் சூரியனில் கரும்புள்ளிகள் குறையும். வெகுவாக குறையும் போது சூரியன் வீச்சு பலவீனம் அடையும். இது தான் ‘மாவுண்டர்  மினிமம்’ என்று இயற்பியலில் சொல்கின்றனர். 

* சூரிய வீச்சு  குறைந்ததும், பூமியில் வெப்பம் வெகுவாக குறைகிறது. கடும்  குளிர், பனி பரவுகிறது; பல இடங்களில் உறை பனி  ஏற்படுகிறது. சூரியன் வெளிச்சம் இருந்தாலும் பூமியில் உறை பனி ஆங்காங்கு காணப்படும் சூழல் ஏற்படும்.  இதைத்தான் ‘மினி உறை பனி’ சீசன்   என்று  கூறுகிறோம். 

* அப்போது, ஐரோப்பா, வட  அமெரிக்க நாடுகளில் இன்னும் கடும் பனி காணப்படும். மாஸ்கோ நதி, லண்டன்  ேதம்ஸ் நதி எல்லாம்  ஆண்டுக்கு ஆறு மாதம் உறைந்து காணப்படும். சமவெளிப்பகுதி கூட பனி மூடியிருக்கும். 
  ‘கண்டிப்பாக இதெல்லாம் நடக்கப்போகிறதா? உலகில் எந்தெந்த கண்டத்தில் உள்ள நாடுகள் பாதிக்கப்போகின்றன என்பதெல்லாம் இன்னும்  5ஆண்டுகளில் உறுதி செய்யப்படும்’ என்று ஹெலன் கூறினார். 
உலக வெப்பமயமாதல் என்று சில ஆண்டுகளாகவே இதே போன்ற சர்வதேச விஞ்ஞானிகள் பயமுறுத்தினர். 
இப்போது இந்த  விஞ்ஞானிகளோ, உலக  உறைபனியாதல்  என்று வேறு திசையில் அச்சுறுத்துகின்றனர். 
உலக வெப்பமயமாதல் ஆரம்பித்து விட்டது; அடுத்த சில ஆண்டுகளில் இமயமலையில் பனி உருகி இந்தியாவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும், பல மாநிலங்களில் வறட்சி தாண்டவமாடும் என்றெல்லாம் சொல்லி தீர்த்து விட்டனர். 
இதன் அறிகுறிகள் தென்படுவதை பார்த்தால், உலக பனிமயமாதல் கூட உண்மையாக இருக்குமோ என்று அஞ்சத்தான் தோன்றுகிறது.

இந்தியா கதி?


இந்தியாவுக்கு ‘உறை பனி’யால் பாதிப்பு வருமா? வழக்கமாகவே நம் இயற்கை சூழல், மாறி மாறி வருவது தான். 
அதனால் இப்போது உலக  வெப்பமயமாதல் காரணமாக பெரும் வெப்பம்  பரவி காணப்படுகிறது. எங்கும் வறட்சி தாண்டவமாடுகிறது. 
இந்த நிலை நீடிக்குமா? 
அல்லது அடுத்த  பதினைந்து ஆண்டில் சூழ்நிலை மாறுமா என்பது பெரும் கேள்விக்குறி.

பாதிப்புக்குள்ளாகும் நாடுகள் ?


பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், சுவீடன், போலந்து, ஆஸ்திரியா, நெதர்லாந்து, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, கிரீஸ், துருக்கி, ரஷ்யா போன்ற  நாடுகளில் ஏற்கனவே பனிக்காலம் அதிகம் தான்.
 17ம் நூற்றாண்டை ஒப்பிட்டால், ஆறு மாத காலம் இந்த நாடுகள் பனியில் முடங்கி விடும்.  அதுபோல, அமெரிக்கா, மெக்சிகோ, கனடா, ஜமைக்கா, பகாமாஸ், கோஸ்டாரிகா, நிகாரகுவா என்று 4 வட அமெரிக்க நாடுகள் கடும் பனியில்  பாதிக்கும்.
========================================================================
இன்று,
ஜூலை-23.

  • இந்திய விடுதலை போராட்ட வீரர் லோகமான்ய திலகர் பிறந்த தினம்(1856)
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா இறந்த தினம்(1925)
  • கனடா மாகாணம் என்ற பெயரில் வடஅமெரிக்காவில் பிரிட்டன் குடியேற்ற நாடு அமைக்கப்பட்டது(1840)
  • ஃபோர்டு மோட்டார் நிறுவனம் தனது முதல் காரை விற்பனை செய்தது(1903)

========================================================================
மின்சாரச் சட்டத்  திருத்தத்தினால்
 வரும் அபாயங்கள்.?

மின்சாரச் சட்டம், 2003 மற்றும் 2014இல் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தங் கள் நிறைவேற்றப்படும் நிலையில் ஏற்படும் அபாயங்கள் பின்வருமாறு :-

1.மின் விநியோகம் முழுதும் தனியார் கைகளுக்குச் சென்று விடும். ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள மின்வாரியத்தின் கட்டமைப்பைப் பயன்படுத்திக் கொண்டு மின்சாரத்தைக் கொண்டு செல்லவும், பகிர்மானம் செய்யவும் முதலீடு எதுவுமின்றி தனியார் முயற்சிகள் செய்வதற்கு ஏதுவாகும். 
2.தனியார் மின் நிறுவனங்களுக்கு ஏற்படும் நட்டத்தை அரசு நிறுவனங்கள் பகிர்ந்து கொள்ளுமென்று இந்தப் புதிய சட்டத்தில் குறிப் பிடப்பட்டிருப்பது பேரபாயத்தை ஏற்படுத்தக் கூடியது.

3.விவசாயிகளுக்குப் பல்லாண்டு காலமாக வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம், குடிசைகளுக்கும், கைத்தறிகளுக்கும், விசைத்தறிகளுக்கும் வழங்கப்படும் இலவச மின்சாரம் போன்றவை முற்றிலுமாக நிறுத்தப்படும் அபாயம் உள்ளது.

4.மின்சாரத்திற்கு பல மாநிலங்களிலும் வழங்கப்பட்டு வரும் மானியம் நிறுத்தப்பட்டு விடும்.

5.மின்துறை தனியார் மயமாவதால் நுகர் பொருள்களின் விலைவாசி மேலும் கடுமையாக உயர்ந்து விடும்.

6.தற்போது பணியாற்றி வரும் பல இலட்சக்கணக்கான மின்சார ஊழியர்கள், படிப்படியாகத் தங்களுடைய பணியையும் அதனைத் தொடர்ந்து தங்களுடைய வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்திட வேண்டிய பரிதாபமான நிலை தோன்றிவிடும். 

7.மாநில அரசுகள் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்திற்கும் தனியார் துறைகளையே சார்ந்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்படும்.

8.எல்லாவற்றுக்கும் மேலாக தற்போது மத்திய, மாநில அரசுகளின் கூட்டு அதிகாரத்தின் கீழ் இருந்து வரும் மின்சாரம் புதிய சட்டம் நிறைவேற்றப் பட்டதற்குப் பிறகு மத்திய அரசே மேலாண்மை செய்யும் அதிகாரம் ஏற்பட்டு விடும். 
அதன் மூலம் மாநில உரிமைகள் பெரிதும் பாதிக்கப்படும்.

                                                                                                                                         
 -கலைஞர் .

========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?