மோடி முதல்வராயிருந்த கால ஊழல்!

மோடியின் குஜராத் கால‌ ஊழல்….


இந்தக் கடுமையான அரசியல் சூழலிலும் பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான விலைமதிப்பற்ற  இயற்கை வளங்களைத் தாரை வார்க்கும் ஊழல் ஒப்பந்தம் பொது மக்களின் பார்வையிலிருந்து தப்பித்துள்ளது. 
இந்த ஒப்பந்தம்  தற்போதைய இந்திய‌ பிரதமரும், அன்றைய குசராத் முதல்வருமான  நரேந்திர மோடியும், கரீபியன் தீவுகளைச் சேர்ந்த ஐயத்திற்குறிய நிறுவனமும் தொடர்புடைய ஓர் ஒப்பந்தமாகும்.
அன்றைய‌ மோடி தலைமையிலான குசராத் அரசு, ஏலம் முறையில், காகிதத்தில் மட்டுமே இருக்கும், செயல்பாட்டிற்கே வந்திராத‌, வெறும் 64 அமெரிக்க டாலர் முதலீட்டில் தொடங்கப்பட்ட, கரீபியன் தீவுகளைச் சியோ குளோபல் ரிசோர்சு (Geo Global Resource) எனப்படும் நிறுவனத்துடன்  செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி  மிகப்பெரிய எரிவாயு திட்டத்தில்(பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள) மேற்குறிப்பிட்ட நிறுவன‌ம் பங்குகொள்வதற்காக 10 விழுக்காடு பங்குகளைத் தாரைவார்த்தது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தான 2003ம் ஆண்டில் மத்தியிலும், மாநிலத்திலும்  பா.ச.க அரசு ஆட்சி செய்தது குறிப்பிடத்தக்கது (மாநிலத்தில் மோடி). 
மேலும் எரிவாயு ஆய்விற்கு  இந்த நிறுவன‌ம் செலுத்தவேண்டிய தொகையையும் குசராத் அரசே செலுத்தியது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தான சில தின‌ங்களிலேயே சியோகுளோபல் நிறுவனம், கிருஷ்ணா கோதாவரி படுகையில் தனக்குச் சொந்தமான ப‌ங்குகளில் 50 விழுக்காடு பங்குகளை மொரீசியசை சேர்ந்த மற்றொரு எண்ணெய் நிறுவன‌த்திற்குக் கைமாற்றியது.
Cover
குசராத் அரசு, சியோகுளோபல் ரிசோர்சு நிறுவன‌த்தை இந்த எரிவாயு ஆய்வில் தனக்கு உதவும் ஒரு  தொழில்நுட்ப நிபுணராகக் கொண்டே ஒப்பந்தம் போடப்பட்டது என்று அறிக்கை விட்டது. ஆனால் அதன்பிறகு தலைமை கணிக்கையாளரின் அறிக்கைப்படி சியோகுளோபல் ரிசோர்சு நிறுவன‌ம் தனக்குக் கொடுக்கப்பட்ட தொழில்நுட்ப வேலைகளை சரிவரச் செய்யாமல் தவறியது எனவும் சியோகுளோபல் ரிசோர்சு செய்ததாகக் கூறப்பட்ட வேலைகளைச் சரிவரச் செய்வதற்காக வேறொரு  தொழில்நுட்ப நிபுணரை நியமித்ததில் ரூபாய் 2.64 கோடி செலவிடப்பட்டது. ஆனால் மேற்குறிப்பிட்ட தொழில்நுட்ப ஆய்விற்காக அதைச் சரிவரச்  செய்யாத சியோகுளோபல் ரிசோர்சுக்கு பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள 10 விழுக்காடு பங்குகளை அள்ளிக்கொடுத்தது அப்போதைய மோடி அரசு.
2002 மார்ச் மாதம் குசராத் பெட்ரொலிய நிறுவன‌ம், பா.ச.க அரசு கொண்டுவந்த National Exploration Licensing Policy IIIஇன்   கீழ் இந்திய கிழக்கு கடல் கரையிலுள்ள கிருஷ்ணா கோதாவரி நதிப்படுகையில் சுமார் 4,57,000 ஏக்கர்  பரப்பளவில் உள்ள நிலங்களில் எரிவாயு ஆய்விற்காக ஒரு கூட்டமைப்பை உருவாக்கியது அதில் சியோகுளோபல் ரிசோர்சு,  ஜுப்லியண்ட் என்ப்ரொ எனப்படும் இந்திய நிறுவனமும் இடம்பெற்றது. கூட்டமைப்பின் தலைவராக ஜீன் பால் ராய் எனப்படும் நபரை நியமித்தது. இந்த ஜீன் பால் ராய் தான் சியோகுளோபல் ரிசோர்சின் முதலாளி. மேலும் சியோகுளோபல் ரிசோர்சு இந்தக் கூட்டமைப்பு உருவாக்கபடுவதற்கு 6 நாட்களுக்கு முன்னர் தான் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிழக்கு கடற்கரையிலுள்ள கிருஷ்ணா கோதாவரி நதிப்படுகையில் சுமார் 45 டிரில்லியன் கன அடி அளவுக்கு எரிவாயு கிடைக்கும் என அரசு தீர்மானித்தது. அதன்படி குசராத் அரசு தனக்குச் சொந்தமான எரிவாயு தொகுதியிலிருந்து மட்டும்  சுமார்  20 பில்லியன் டாலர் வரை வருமானம் பெறத் திட்டமிட்டது. ஆனால் மொத்த வருமானம் என்பது பல மில்லியன் மதிப்புள்ள சியோகுளோபல் ரிசோர்சுக்குத் தரப்பட்ட 10 விழுக்காடு பங்குகளைக் கழித்துத் தான் கூற வேண்டும். இந்தப் பல மில்லியன் மதிப்புள்ள 10 விழுக்காடு பங்குகளைச் சியோகுளோபல் ரிசோர்சு எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வில் அனுபவம் வாய்ந்த நிறுவன‌ம் என்ற அடிப்படையில் தான் வழங்கினோம் என்று கூறினார்கள். ஆனால் உண்மை என்னவெனில் சியோகுளோபல் ரிசோர்சு அமெரிக்க அரசிடம் சமர்ப்பித்த அறிக்கையில் இந்தியாவில் போட்டுக்கொண்ட ஒப்பந்தமே தனது முதல் ஆய்வு என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேற்கூறப்பட்ட ஜீன் பால் ராய், சியோகுளோபல் ரிசோர்சு நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன் நிலவியல் துறையில் வல்லுனராகச் சில எண்ணெய் நிறுவனங்களில் பணிபுரிந்த்துள்ளர். ஆனால்இந்த நிறுவனம் தொடங்கி குசராத் பெட்ரோலிய நிறுவனத்துடனான ஒப்பந்தத்தைத் தனது அனுபவமாகக் காண்பித்து இந்திய அரசாங்கத்துடன் மேலும் 9 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். இந்த ஒப்பந்தங்களில் பெரும்பான்மை மத்தியில் பா.ச.க ஆட்சியின் கீழ் போடப்பட்டது. மேற்குறிப்பிட்ட விவரங்களை இந்த நிறுவனமே தனது காலாண்டு அறிக்கையில் 2102 சூன் 30ம் நாள் வெளியிட்டது.
இந்த ஒப்பந்த்ததில் அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், ஒப்பந்தத்தின்படி சியோகுளோபல் ரிசோர்சு செலுத்தவேண்டிய 10 விழுக்காடு பங்கு தொகையையும் குசராத் பெட்ரோலிய நிறுவனமே ஏற்றது. அதன்படி எரிவாயு ஆய்வில் மொத்தம் செலவிடப்பட்ட தொகையான 3.069 பில்லியன் டாலர் தொகையில் 306.9 மில்லியன் டாலர் தொகை (இந்திய மதிப்பில் தோராயமாக 1200 கோடி ரூபாய் -ஒரு டாலர் 40 ரூபாய் எனக் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது) சியோகுளோபல் ரிசோர்சு செலுத்தவேண்டிய தொகையாகும். ஆனால் அந்தத் தொகை குசராத் மாநில மக்களின் வரிப்பணத்தில் இருந்தே செலுத்தப்பட்டது. இவ்வாறு குசராத் அரசு செலவு செய்த தொகையை, திட்டத்தில் இருந்தது வருமானம் வந்தபிறகு செலுத்தினால் போதும் என்ற உடன்படிக்கையும் போடப்பட்டது. ஆக மக்களின் வரிப்பணத்தை முதலீடாகக் காட்டி அழைத்து வரப்பட்ட நிறுவனத்திற்கு, வருமானத்தில் 10 விழுக்காடு பங்குகளைக் கொடுத்து அனுப்பிவைத்தது அன்றைய மோடி தலைமையிலான குசராத் அரசு.
மோடியின் கரங்கள் இரத்தக்கறை மட்டுமல்ல ஊழல் கறையும் படிந்தவையே
மோடியின் கரங்கள் இரத்தக்கறை மட்டுமல்ல ஊழல் கறையும் படிந்தவையே
இந்த ஒப்பந்தம் கையெழுத்தான சில நாட்களிலே தனது 10 விழுக்காடு பங்குகளில் இருந்து 50 விழுக்காட்டை (அதாவது  5 விழுக்காடு) மவுரிசியசை சேர்ந்த ராய் குருப் எனும் நிறுவனத்திற்குக் கைமாற்றியதை முன்னறே குறிப்பிட்டிருந்தேன். இந்த ராய் குருப் முழுவதுமாக ஜீன் பால் ராய் அவர்களின் தனிக் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனம். ஆகத் தலைமை தணிக்கை கணக்காளரின் அறிக்கைப்படி சரிவரச் செயல்படாத இந்த நிறுவனத்திற்கு வருமான‌த்தில் 10 விழுக்காடு பங்குகளைக் கொடுத்ததும் அந்தப் பங்குகள் சில நாட்களிலே பகுதி பங்குகளைக் கைமாற்றியதும் பற்றியான ஐயங்க‌ளை குசராத் பெட்ரோலிய  நிறுவனம் எழுப்பியது. இந்நிலையில் ஒப்பந்தம் கையெழுத்தான சுமார் 5 மாதங்களில்,suite101.com எனப்படும் அமெரிக்க நிறுவனம் அந்த நாட்டுடனான ஒர் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கவே அந்த ஒப்பந்ததை சியோகுளோபல் ரிசோர்சு கைப்பற்றியது. ஆக suite101.comன் 34 மில்லியன் பங்குகளை அசாதாரண‌ முதலீடான‌ மேலும் 2 மில்லியன் டாலர் தொகையை கொடுத்து வாங்குகிறது. இந்த 34 மில்லியன் பங்குகளில் முதற்கட்டமாக 14.5 மில்லியன் பங்குகளை மட்டும் முழுமையாக பெருகிறது மேலும் 19.5 மில்லியன் பங்குகளை கிருஷ்ணா கோதாவரி எரிவாயு திட்டத்தின் சில நிகழ்வுகளுக்காக நிறுத்திவைக்கப்படுகிறது. இந்த நிலையில் 2004,பிப்ரவரி 02ம் திகதி அன்று suite101.com, GeoGlobal Resources Inc என பெயர் மாற்றம் செய்கிறது. ஆரம்பக் கட்டத்தில் வெறும் 0.001 டாலர் மதிப்புடைய சியோகுளோபல் ரிசோர்சு நிறுவனத்தின் பங்குகள், கிருஷ்ணா கோதாவரி எரிவாயு திட்டத்தில் குசராத் அரசுடணான ஒப்பந்ததினால் சில தினங்களுக்கு பிறகு அதாவது 2006,சனவரி யில் 14.92 டாலராக உயற்கிரது. ஆக இரண்டு ஆண்டுகளில் 15000 மடங்கு உயர்ந்துள்ளது சியோகுளோபல் ரிசோர்சு நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு.
குசராத் பெட்ரோலிய  நிறுவனம், சியோகுளோபல் ரிசோர்சு இடையேயான ஒப்பந்தத்தில் பங்குகள் மற்றும் இயற்கை வளங்கள் மேலாண்மை குறித்த விடயங்களில் முறைகேடு நடந்துள்ளதாகவும் முறையான வேலைகள் தொடங்கப்படவில்லை என வைக்கப்பட்ட கேள்விகளுக்கு கனிமவள இயக்குனரகம் தெரிவித்த பதிலில், குசராத் பெட்ரோலிய  நிறுவனம் இதுவரை 2 ட்ரில்லியன் கன அடி அளவுக்கு எரிவாயு உள்ளதை கண்டரிந்துள்ளது, 11 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு சூலை 2013ல் இருந்து உற்பத்தி தொடங்கும் என்றும் மேலும் இந்த திட்டத்தின் மூலம் 1 பில்லியன் டாலர் வரை வருமான‌ம் கிடைக்கும், மேலும் எரிவாயு இருக்கும் இடங்கள் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கபடும் என்ற அறிவிப்பை வெளியிட்டது.
பலதரப்பட்ட தரவுகளின்படி குசராத் பெட்ரோலிய  நிறுவனம், சியோகுளோபல் ரிசோர்சுக்கு 10 விழுக்காடு பங்குகள் மட்டுமின்றி  மேலும் அதிகப்படியான தொகையை அளித்துள்ளது என்று இரு தரப்பிடமும் கேட்கப்பட்ட கேள்விக்கு இருதரப்புமே அதை ஒப்புக்கொள்ளவுமில்லை, மறுக்கவுமில்லை. தலைமை கணக்கு தணிக்கையாளரின் அறிக்கையின்படி சியோகுளோபல் ரிசோர்சு தனது ஆய்வினை சரிவரச் செய்யத் தவறியது அதற்காக 2.64 கோடி செலவில் வேறொரு நிறுவனத்தை நியமித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், வெறும் 2.64 கோடி மட்டுமே செலவாகும் ஆய்விற்கு சியோகுளோபல் ரிசோர்சுக்கு வருமான‌த்தில் 10 விழுக்காடு பங்குகளை கொடுத்தது எதற்காக?
மேற்கூறப்பட்ட கேள்விக்கு குசராத் ஆரசு தனது தரப்பிலிருந்து தலைமை கணக்கு தணிக்கையாளருக்கு கூறிய பதிலாவது, திரு. ராய் அவர்கள் ஒரு தொழில் நுட்ப நிபுணர் ஆவார், எனவே அவரை இந்த ஆய்வில் சேர்ப்பதனால் திட்டம் விரைவில் சரியாக நடைபெறும் என்று அவரை அணுகியபோது தனக்கு வருமானத்தில் பங்கு தந்தால் மட்டுமே தான் ஆய்வில் ஈடுபடுவேன் என்று தெரிவித்தார் அதனாலேயே அவருக்கு 10 விழுக்காடு பங்குகள் கொடுக்கப்பட்டது என்று தெரிவித்தது.
ஆனால் தலைமை கணக்கு தணிக்கையாளரோ இந்த பதில் ஏற்புடையதாக இல்லை, மேலும் இந்த ஒப்பந்தத்தில் திரு. ராய் அவர்களுக்கு வருமான‌த்தில் பங்கு கொடுத்தது தவறு என்றும் இந்த ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதையும் கூறி ஏற்க மறுத்துவிட்டார்.
ஒப்பந்தத்தில் தொடர்புடைய‌ சிலர் கூறுகையில் இந்த ஒப்பந்தம் ஆரம்ப நிலையிலே தோல்வியைத் தழுவியது. மேலும் இதுபோன்ற கடின‌மான எரிவாயு கண்டறியும் ஆய்விற்கு ஒர் அனுபவம் வாய்ந்த நிறுவனத்தை நியமிப்பதற்கும், பல நிபுண‌ர்களை கொண்ட குழுவை அமைப்பதற்கும், ஒரே ஒரு நிபுண‌ரைக் கொண்டு தொடங்கப்பட்ட நிறுவனத்தை நியமிப்பதற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. இந்த அளவுக்கு கூட தெளிவில்லாமல் குசராத் பெட்ரோலிய  நிறுவனம் நடந்த்து கொண்டுள்ளது ஐயத்தை எழுப்புகின்றது என்று கூறியுள்ளனர்.
தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கைப்படி குசராத் பெட்ரோலிய  நிறுவனம், சியோகுளோபல் ரிசோர்சு, ஜூப்ளியண்ட் ஆகிய நிறுவனங்களை உள்ளடக்கிய கூட்டமைப்பின் மொத்த மதிப்பு 60.5 மில்லியன் டாலர்கள் மட்டுமே ஆகும். ஆனால் இந்த கூட்டமைப்பு தனது முதற்கட்ட வேலைகளை முடிக்க திட்டமிடப்பட்ட தொகையாக 59.23 மில்லியன் டாலர் தொகையை கோரியது. ஆனால் உண்மையில் ஆழ்துளைக்கிணறு அமைப்பதில் இருந்து அனைத்து முதற்கட்ட செயல்பாடுகளையும் மேற்கொள்ள 169.270 மில்லியன் டாலர்கள் ஆகும், ஆக திட்டமிடப்பட்ட தொகையைவிட 3 மடங்கு இந்த தொகை அதிகமாகும். இவ்வாறு  தேவைப்படும் தொகையைவிட குறைவாக கூறியதனால் தான் ஜியோ குளோபல் நிறுவனம் ஏலத்தில் தகுதி பெறவே முடிந்த‌து.  ஆனால் சியோகுளோபல் ரிசோர்சு சரிவர செய்யாமல் விட்ட வேலைகளுக்கும் சேர்த்து மொத்தம் 3.069 பில்லியன் டாலர்களை ஆய்விற்காக செலவளித்துள்ளது இந்த தொகை ராய் அவர்கள் ஏலத்தில் சொன்ன‌ தொகையைவிட 60 மடங்கு அதிகமாகும். ஆக இவ்வாறு திட்டமிடப்பட்ட தொகையினை குறைத்து கூறி ஏலத்தில் வெற்றி பெற்று வேலைகளை செய்யாமல் வருமானத்தில் 10 விழுக்காடு பங்குகளை தட்டி சென்றுள்ளது ராய் அவர்களின் சியோகுளோபல் ரிசோர்சு.
ஆக மொத்தம் தோராயமாக குசராத் பெட்ரோலிய நிறுவனம், ராய் குழுமங்களிடமிருந்து மொத்தம் 306.9 மில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் தோராயமாக 1200 கோடி ரூபாய் -ஒரு டாலர் 40 ரூபாய் என கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது)  மற்றும் மவுரீசியசு நிறுவனதிற்கு கைமாற்றப்பட்ட பங்குகளுக்கான வட்டியினையும் சேர்த்து கோரி பெற்றாக வேண்டும். ஆனல் ராயோ தான் குசராத் பெட்ரோலிய  நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி அந்த  நிறுவனம் தன்னிடமோ அல்லது தனது நிறுவனங்களிடமோ எந்த தொகையையும் கோர முடியாது என்றும் கோரினாலும் தரத்தேவையில்லை என்றும் திட்ட வட்டமாக தெரிவித்துவிட்டார்.
சியோகுளோபல் ரிசோர்சு மொத்தமாக கிருஷ்ணா கோதாவரி எரிவாயு திட்டத்தில் இருந்து 10 விழுக்காடு பங்குகளை எந்தவித முதலீடோ, செலவோ , எந்தவித அர்த்தமுள்ள வேலையோ செய்யாமல் திருவாளர் நரேந்திர மோடி, மத்தியிலும் மாநிலத்திலும் ஆண்ட பா.ச.க அரசின் துணையோடு கொண்டு சென்றுள்ளது. இங்கு அன்றாடம் உழைத்து கடினப்பட்டு வரி செலுத்தும் மக்களின் பணம் மோடி அரசின் கார்ப்பரேட் பாசத்தால் களவாடப்பட்டுள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.
இந்த ஊழலின் சுருக்க முறை வரலாறு.
1 . மோடி தலைமையிலான அன்றைய குசராத் அரசாங்கம் கிருஷ்ணா கோதாவரி படுகையிலிருந்து எரிவாயு எடுக்க, காகிதத்தில் மட்டுமே இருக்கும் சியோகுளோபால் ரிசோர்சு எனும் நிறுவனத்திற்கு 10 விழுக்காடு பங்குகளைத் தாரைவார்க்கிறது.
2 .  சியோகுளோபால் ரிசோர்சு, ஜீன் பால் ராய் எனும் கரிபியன் தீவுகளைச் சேர்ந்த தனி நபரால் வெறும் 64 டாலர்கள் முதலீட்டில் குசராத் பெட்ரோலிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடுவதற்கு 6 நாட்களுக்கு முன்னராக உருவாக்க படுகிறது.
3 . முறையாகவோ வெளிப்படையாகவோ எந்த ஒரு தேர்ந்தேடுப்புகளும் நடத்தபெறாமல், குசராத் பெட்ரோலிய நிறுவனத்துடன்(Gujarat State Petroleum Corporation) கிருஷ்ணா கோதாவரி படுகையிலிருந்து எரிவாயு கண்டெடுக்கும் திட்டத்தில்  இணை நிறுவனமாக(Joint Venture)  இணைகிறது சியோகுளோபால் ரிசோர்சு.
4 . இந்தப் பத்து விழுக்காடு பங்குகள் பல ஆயிரம் கோடி மதிப்புடையது. ஏனென்றால் அங்கு 2 லிருந்து 20 ட்ரில்லியன் கன அடி அளவுக்கு எரிவாயு உள்ளது.
5 .  குசராத் பெட்ரோலிய நிறுவனம் ஜியோ குளோபல் கொண்டுள்ள பத்துவிழுக்காடு பங்குகளுக்கான வட்டித் தொகையையும் கொடுத்து, அதே நேரத்தில் ஜியோ குளோபல் நிறுவனம் இந்தப் பணியில் செலவு செய்ய வேண்டிய முதலீட்டு தொகையையும், பணிகளுக்குச் செலவு செய்ய வேண்டிய தொகையையும்  ஏற்கிறது.
6 . தான் ஏற்ற தொழில்நுட்ப பணிகளைச் சியோகுளோபால் ரிசோர்சு சரிவரச் செய்யாமல் போகவே, புதியதாக ஒரு தொழில்நுட்ப  நிறுவனத்தைப் பணியில் அமர்த்துகின்றது குசராத் பெட்ரோலிய நிறுவனம், இதற்காக அவர்களுக்கு 2.64 கோடி ரூபாய்  செலவு செய்கின்றது. ஆனால் இதே பணியைச் செய்வதற்காகத் தான் பல கோடி மதிப்பலான ஒப்பந்தம் சியோகுளோபால் ரிசோர்சுடன் அரசால் போடப்பட்டுள்ளது.
7 . எரிவாயு கண்டுபிடிக்கவும், கிணறுகள் அமைப்பதற்காகவும் இதுவரை 20,000 கோடி ரூபாயையும், இந்தப் பணிக்காக‌  சியோ குளோபல் நிறுவனம் செலவு செய்ய வேண்டிய 2000 கோடியையும் குசராத் பெட்ரோலிய நிறுவனமே செய்துள்ளது.
8 . இந்த ஒப்பந்தம் கையெழுத்தான சில தினங்களிலே ராய் 1தன்னிடம் உள்ள் பங்குகளில் 50 விழுக்காட்டை அதாவது தனது 5 விழுக்காடு பங்குகளை மௌரிசியசை சேர்ந்த ஐயத்திற்குரிய ஒரு நிறுவனத்திற்குக் கைமாற்றிவிட்டார்.
9 . ஒப்பந்தம் போடப்படும் பொழுது 0.001 டாலர் மதிப்புள்ள சியோகுளோபால் ரிசோர்சின் ஒவ்வொரு பங்குகளும் சில தினங்களில் 14.92 டாலராக உயர்ந்துள்ளது.
10. அதாவது கிருஷ்ணா கோதாவரி எரிவாயு திட்டத்தில் ஒப்பந்தம் செய்த பிறகு பங்குகளின் மதிப்பு 15000 மடங்கு உயர்ந்துள்ளது.
மூலப்பதிவு – http://archive.tehelka.com/story_main54.asp?filename=Ne081212Coverstory.asp
மொழியாக்கம் – தீபன்- இளந்தமிழகம் இயக்கம்

========================================================================
இன்று,
ஆகஸ்ட்-14.


  • காங்கோ விடுதலை தினம்(1960)
  • பராகுவே கொடி நாள்
  • பசிபிக் போர் முடிவுக்கு வந்தது(1945)
  • பாகிஸ்தான் விடுதலை தினம்(1947)
  • இஸ்ரேல்-லெபனான் போர் முடிவுக்கு வந்தது(2006)


ஒரு பொதுக் கழிவறையின் ஒவ்வொரு சதுர அங்குலத்துக்கு சுமார் ஆயிரம் நோய் விளைவிக்கும் கிருமிகள் வரை இருக்கலாம்.
இதுவே, வீடுகளில் உள்ள தனிப்பட்ட கழிவறைகளில் சுமார், ஐம்பது முதல் முந்நூறு கிருமிகள் இருக்கக்கூடும்.
இந்நிலையில் காலை எழுந்து கழிவறைக்கு செல்வது முதல் இரவு கட்டிலுக்கு செல்வது வரை உங்களுடனேயே பயணிக்கும் ஸ்மார்ட்கைப்பேசியின் ஒவ்வொரு சதுர அங்குலத்துக்கும் சுமார் இருபத்தைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட தீங்கு விளைவுக்கும் பாக்டீரியா கிருமிகள் தொற்றிக் கொண்டுள்ளன என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளன.
ஸ்மார்ட் கைப்பேசிக்கு அடுத்த நிலையில், ஐபேட்டில் சுமார் 600 பாக்டீரியாக்களைக் கொண்டுள்ளதாக சமீபத்திய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
கணனியின் தட்டச்சுப் பலகையில், பொதுக் கழிவறையைக் காட்டிலும் மூன்று மடங்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன. இதில், ஒரு சதுர அங்குலத்துக்கு சுமார் மூன்றாயிரம் கிருமிகளும், மவுஸ்களில் சுமார் ஆயிரத்து அறுநூறு கிருமிகளும் இருப்பதாக வெவ்வேறு ஆய்வுகளின் வாயிலாக தெரியவந்துள்ளது.
எல்லா இடங்களுக்கும் கைபேசியுடன் செல்வதால் ஏற்படும் கிருமிகள் தொற்றின் காரணமாகவே புதுப்புது வியாதிகளால் மனிதர்கள் தாக்கப்படுகின்றனர் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
=======================================================================

ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதுக்கும் இந்த திரையுலகமே கண்ணீர் சிந்தி உண்ணாமல் இருந்ததே?

அன்புமணி இந்த காந்தியவியாதிக்கு மூடச்சொல்லி கடிதம் எழுதாதது ஏன் ?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?