மது விலக்கு?

இன்றைய முக்கிய பாபரப்பு நிகழ்வுகளாக இருப்பது மது விலக்கு போராட்டங்கள்தான்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக,ராமதாஸ் அறிக்கைகளாக மட்டும்  நடந்தது இன்று  பராரபரப்பாக காரணம் இரண்டு.
ஒன்று தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் மது வில க்கு கொண்டு வருவோம் என திமுக அறிவித்தது.
இரண்டாவது மது விளக்கு போராளி சசி பெருமாள் போராட்டத்தின் போது மரணமடைந்தது.
இரண்டும் மதுவிலக்கு போராட்டங்களை அரசியல் கட்சிகள் தீவிரமாக நடத்த காரணமாகி விட்டன.
வைகோ போராட்டம் கலகமாகி துப்பக்கிச் சூடு வரை போய்விட்டது.
எங்கே மது விலக்கு கொண்டுவந்த பெயரும் புகழும் கருணாநிதி க்கு போய்  விடுமோ என்ற பயம்தான் அரசியல்வாதிகள் மது விளக்கை தீவிரமாக பிடிக்க காரணம்.
இதுவரை அவவப்போது ராமதாஸ் மட்டுமே மதுக்கடைகளை பற்றி அறிக்கைகளை அவவப்போது விடுத்துக்கொண்டிருந்தார்.
பொது மக்களும் தங்கள் பகுதியில் மதுக்கடை திறப்பதால் உண்டாகும் சங்கடங்களை போக்க கடைகளை மூட ஆங்காங்கே மறியல்கள்,போராட்டங்களை செய்து கொண்டிருந்தனர்.
சசி பெருமாளும்,சட்டக்கல்லுரி மாணவியும் மட்டுமே தினமும் மது விலக்குக்காக போராடிக்கொண்டிருந்தனர்.
திமுக மதுக்கடைகளை படிப்படியாக மூடி மதுவிலக்கு கொண்டு வருவோம் என்றதுதான் இந்த மது தீப்பற்றிக்கொண்டது.அதில் சசி பெருமாள் மரணம் எண்ணையை ஊற்றி விட்டுள்ளது.
மதுக்கடைகள் வருமானத்தை இந்த ஜெயலலிதா அரசு முழுவதுமாக நம்பி ஆட்சி செய்வதுதான் இந்த மது விளக்கு தீப்பற்ற காரணம்.
ஆட்சி செய்ய பொருளாதாரமே மதுக்கடை வருமானமானமான 23000 கோடிகள்தான் என்ற நிலையில் ஜெயலலிதா அரசு உள்ளது.
குடி நீர் ,மின்சாரம் பற்றாக்குறையில் தமிழகமே இருண்டு வரும் வேளையில் அரசு பொது மக்களை பாதிக்கும் அவற்றை தீர்ப்பதில் அக்கறை கொள்ளாமல் தெருவுக்கு இரண்டு மதுக்கடைகளை திறந்து குடிமக்களின்  வாங்கும் வசதியை மட்டும் பெருக்கி பல குடும்பங்களின் தாலியை அறுத்தது மக்களை ரொம்பவே பாதித்து வருகிறது.
இதற்கு முன்னர் எழாத மது விலக்கு .மதுக்கடைகள் மூடல் எதிர்ப்பு மக்களிடம் அதிகமாக எழக் காரணமே ஜெயலலிதா அரசு மின் உற்பத்தி,குடி நீர் போன்றவற்றை கண்டு கொள்ளமல் மது உற்பத்தி,விற்பனை போன்றவற்றை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்படுவதுதான்.
கேட்டால் இலவச மிக்சி,மின் விசிறி போன்றவற்றை தர பணம் வேண்டாமா என்று அமைச்சர்கள் பகிரங்கமாகவே கூறுகிறார்கள்.

கணவரை தாலி விற்று குடித்து வர அவர் மனைவிக்கு இலவச மின் விசிறியா?
அவை மட்டுமல்ல பள்ளி,கல்லுரி ,கோவில்கள் அருகாமையில் மதுக்கடைகள் இருக்கக் கூடாது என்ற விதிகளை மீறி மதுக்கடைகள்.
விளைவுசீருடை அணிந்த மானவை,மாணவர்கள் போதையில் சாலையில் ஆடுவது தான்.மூன்று வயது சிறார்களுக்கும் கூட மது தாராளமாக கிடைத்து வாட்ஸ் அப் வரை வந்ததுதான்.
21 வயது க்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கக் கூடாது என்ற விதி அரசே மீறச் சொல்லியுள்ளதாகவும்,விற்பனை ஒன்றே லட்சியம் என்றும் மதுக்கடை விற்பனையாளர்கள் வருந்துகிறார்கள்.
ஆக ஜெயலலிதா இப்போது தனது ஆட்சியின் ஆதாரமான டாஸ்மாக் கிற்கு எதிராக மக்கள் கிளம்பியது அதிர்ச்சியை தந்துள்ளது.
டாஸ்மாக் வருமானம் என்ற புலியின் வாலை ஜெயா பிடித்துள்ளார்.
அதை விட்டால் ? இலவச ஆட்சி எப்படி??
ஆனால் இப்போது ஜெயலலிதா  மனதில் ஒரு எண்ணம் .மது விலக்கை ஒரு மாதம் கழித்து கொண்டு வந்து பெயர் வாங்கிக்கொள்ளலாம்.என்பதுதான். காரணம் ஆட்சிக்கு இன்னமும் சில மாதங்கள்தான் உள்ளன.
கடைகளை படிப்படியாக குறைத்து மது விளக்கு கொண்டுவர சாத்தியங்களை கருணாநிதி கண்டறிவதற்குள் மது விலக்கை கொண்டுவந்து'மக்களின் வயிற்றில் மதுவுக்கு பதில் தேனை வார்த்த தாயே "என்ற பெயரை வாங்கிக்கொள்வது.
பின் ஆட்சியை பிடித்து மது விலக்கை பார்த்துக்கொள்வது.என்பதுதான்.
ஆனால் இன்றைய உடனே கொண்டு வந்தால் கருணாநிதிக்கு பயந்து கொண்டுவந்தது போல் இருக்குமே?
சசிகலா,மற்றும் தமது பினாமி மிடாஸ் நிலை பற்றியும் கவலை.இருக்காதா பின்னே?
========================================================================
இன்று,
ஆகஸ்ட்-03.

  • வெனிசுலா கொடி நாள்
  • காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1976)
  • தேசிய கூடைப்பந்து சங்கம் அமெரிக்காவில் அமைக்கப்பட்டது(1949)
  • அமெரிக்காவின் முதல் கப்பலான லெ கிரிஃபோன், ராபர்ட் லசால் என்பவரால் அமைக்கப்பட்டது(1678)
========================================================================
நாட்டின் முதன்மையான ஊழல்.

நாட்டில் நடைபெற்றுள்ள ஊழலிலேயே மாபெரும் ஊழலாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ள வியாபம் ஊழல் உருவெடுத்துள்ளது. 
இதுவரை 50க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் மரணம் அடைந்திருக்கிறார்கள், 
2500 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக்கப் பட்டிருக்கிறார்கள். 
இவர்களில் 1900 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 
கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இவ்வூழல் சுதந்திர இந்தியாவில் அமைப்புரீதியாக நடைபெற்றுள்ள மாபெரும் ஊழலாக உருவெடுத்துள்ளது.வியாபம் ஊழல் தொடர்பாக நடைபெற்று வரும் புலனாய்விலிருந்து மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு மோசடியான முறையில் ஏராளமான அளவிற்கு மாணவர்களை சேர்த்திருப்பது தெரிய வந்திருக்கிறது. 
வியாபம், ஆரம்பத்தில் மருத்துவக் கல்லூரிக்கு மாணவர்களைச் சேர்க்கும் வேலையை மட்டுமே பார்த்தது. 
பின்னர் மாநில அரசின் துறைகளுக்கு ஊழியர்களைத் தேர்வுசெய்யும் பொறுப்பும் வியாபம் அமைப்பிற்குக் கிடைத்தபின் பலநூறுகோடி ரூபாய் இதில் புரள ஆரம்பித்தது. 
மருத்துவக் கல்லூரிக்கு ஒரு மாணவனைச் சேர்ப்பதற்கு 80 லட்சம் ரூபாயிலிருந்து ஒன்றரைக் கோடி ரூபாய் வரை பெறப்பட்டிருக்கிறது. மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் எனில் இத்தொகை இன்னும் அதிகம். பாஜக/ஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் பெரும்புள்ளிகளிலிருந்து, அரசு அதிகாரிகள், உயர்மட்ட வர்த்தகர்கள், மருத்துவர்கள், ஒப்பந்தக்காரர்கள், எண்ணிலடங்கா இடைத்தரகர்கள் சங்கிலித்தொடர்போல் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கின்றனர்.
ஊழல் துவங்கியது?
மத்தியப் பிரதேச தொழிற்கல்வி தேர்வு வாரியம் என்கிற வியாபம் 1970இல் துவக்கப்பட்டது. மாநில அரசின் 40 துறைகளுக்கு ஊழியர்களைத் தேர்வு செய்யும் பொறுப்பும், மருத்துவக் கல்லூரிகளுக்கும், பொறியியல் கல்லூரிகளுக்கும் மாணவர்களைத் தேர்வு செய்யும் பொறுப்பும் இதனைச் சார்ந்தது. 2007ஆம் ஆண்டில் சிறிய அளவில் வேண்டியவர்களுக்கு நியமனங்கள் வழங்குதலும், மாணவர்களை மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பதும் தொடங்கி இருக்கிறது. 
ஒவ்வொரு ஆண்டும் இது பல்கிப் பெருகத்தொடங்கிவிட்டது. ஆரம்பத்தில் பணம் கொடுத்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவர்கள் பின்னர் அதேபோன்று மற்ற மாணவர்களைச் சேர்ப்பதற்கான இடைத்தரகர்களாக மாறிவிட்டனர்.ஒரு கட்டத்தில் வியாபம் ஊழலால் ஊதிப்பெருத்தவர்கள் இதனை மிகவும் அற்புதமான விதத்தில் நிறுவனமயப்படுத்திவிட்டனர். 
வியாபம் உயர்மட்ட அதிகாரிகள், மருத்துவக் கல்லூரிகள், அரசியல்வாதிகள், மருத்துவக் கல்லூரிக்கு மாணவர்கள் சேர்க்கைக்காக நடத்தப்பட்டு வந்த பயிற்சி மையங்கள், அரசியல் தரகர்கள் அனைவரும் ஒரு சங்கிலித்தொடர்போல் இயங்கத் தொடங்கிவிட்டனர்.குவாலியர், இந்தூர், பிந்த் போன்று நகரங்களில் மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டுமானால் யாரைப் பிடித்தால் காரியம் நடக்கும் என்று சாமானிய மக்களே பேசத் துவங்கிவிட்டார்கள். 
இதனைத்தொடர்ந்து வியாபம் ஊழலுக்கு பிரதான நபரான டாக்டர் ஜகதீஷ் சாகர் வீட்டிற்கு மக்கள் நேரடியாகவே வரத் தொடங்கிவிட்டார்கள்.வியாபம் ஊழல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஊதிப் பெருகத் தொடங்கியதும், இதில் ஈடுபடும் அரசியல் தரகர்களும் அதிகரிக்கத் தொடங்கி விட்டார்கள்.பெரும் அரசியல்வாதிகளுக்கு அடுத்து, இதில் பெரிதும் பயனடைந்தது தனியார் மருத்துவக் கல்லூரிகள். இவை மருத்துவக் கல்லூரிகளுக்கான இடங்களை பணத்திற்குத்தான் விற்றன. மாணவர்களின் தகுதி, திறமை குறித்தெல்லாம் இதற்கு சிறிதும் கவலையில்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் முறைகேடுகளால் பயனடைந்தவர்களில் பெரும்பாலோர் அமைச்சர்கள், நீதிபதிகள், அதிகார வர்க்கத்தினர், அரசியல்வாதிகள் ஆவர். மத்தியப்பிரதேச சட்டமன்றத்தில் சுயேச்சை உறுப்பினர்களான பிரதாப் கிரேவால் மற்றும் பராஸ் சக்லேசா என்பவர்கள் பல தடவைகள் வியாபம் ஊழல் பிரச்சனையை எழுப்பியுள்ளனர். 
ஆயினும் பாஜக அரசு இப்பிரச்சனை குறித்து எதுவும் கூறாது அமைதி காத்ததுடன், பிரச்சனையை எதிர்கொள்ளாமல் நழுவிக் கொண்டே இருந்தது. 
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தேர்வுகளில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதற்காக 2008க்கும் 2012க்கும் இடையே 55 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆயினும் அரசுத்தரப்பில் இதுவெல்லாம் அற்ப சமாச்சாரங்கள் என்ற முறையில் ஒதுக்கித்தள்ளப்பட்டது. ஆள்மாறாட்டம் செய்த 20பேர் 2013 ஜூலையில் இந்தூர் ஓட்டல் ஒன்றில்கைது செய்யப்பட்ட போதுதான் ஊழல் மக்கள் மத்தியில் பூதாகாரமாக வெளிப்பட்டது. 
ஆள்மாறாட்டம் செய்ததற்காகக் கைது செய்யப்பட்டவர்கள், தங்கள் குற்றச் செய்கைக்காக டாக்டர் ஜகதீஷ் சாகர் 5000 ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ருபாய் வரை தங்களுக்கு அளிப்பதாக உறுதி அளித்திருந்தார் என்று காவல்துறையினரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்கள். 
டாக்டர் ஜகதீஷ் சாகர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் இயக்கிவந்த பல கும்பல்களும் அவற்றின் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.
முதல்வருக்கு வேண்டிய அமைச்சர்
இதன் பின்னர் 2013 ஆகஸ்ட்டில் வியாபம் ஊழல் தொடர்பாக விசாரணை செய்வதற்காக சிறப்பு அதிரடிப் படையை அமைத்தது. 
இதனால் கைதுசெய்யப்பட்டவர்கள் அப்போது மாநில அரசின் உயர்கல்வி அமைச்சராக இருந்த லக்ஷ்மிகாந்த் சர்மா பெயரைச் சொல்லி இருக்கிறார்கள். இவர் முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகானுக்கு மிகவும் வேண்டியவராவார். இத்தனை நாட்களும் மாநில அரசு இதன்மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது அப்போதுதான் தெள்ளத்தெளிவாகத் தெரிய வந்தது. இதில் சம்பந்தப்பட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் முக்கிய கட்சித் தலைவர்களைப் பாதுகாத்திடவே அரசு இதில் நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்து வந்தது.
இதற்குப்பின் ஊழலில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரின் பெயரும் வெளிவரத் துவங்கின. இவர்கள் அனைவரும் முதல்வருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
வியாபம் ஊழலில் சிக்கிக்கொண்டுள்ள மற்றுமொரு முக்கிய நபர் சுதிர் சர்மா. இவர் முதல்வரின் பால்ய கால நண்பர், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நீண்டகால ஊழியர், ஆர்எஸ்எஸ் நடத்தும் பள்ளி ஒன்றின் முன்னாள் ஆசிரியர் இவர் லக்ஷ்மிகாந்த் சர்மாவின் சிறப்புப்பணி அலுவலர். 
இவர் சிவராஜ் சிங் சௌகான் ஆட்சிக்காலத்தில் பெரும் சுரங்கத் தொழில் அதிபராக மாறினார். 
மாநில அரசுக்கு நேர்மையற்ற முறையில் ஆட்களைத் தேர்வு செய்ததில் இவர் பெயரும் அடிபட்டது. இவருக்குக் கீழ் இயங்கிய ஊழல் வலைப்பின்னலுக்கு உயர் கல்வி அமைச்சரின் முழு ஒத்துழைப்பும் இருந்து வந்திருக்கிறது.ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் தொடர்புடைய பல வர்த்தகர்களும் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளனர். இந்தூர் அரபிந்தோ மருத்துவக் கல்லூரி உரிமையாளர் வினோத் பண்டாரி இந்த ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கிறார். 
பாஜகவுடன் மிகவும் நெருக்கமாக உள்ள அதிகார வர்க்கத்தினரும் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளனர். லக்ஷ்மிகாந்த், ஓஎஸ்டி ஓ.பி. சுக்லா, வருவாய் ஆணையர் ரவிகாந்த் திவிதேதி, மற்றும் ஆர்.கே.சிவ்ஹரே,ஐ.பி.எஸ்., ஆகியோருக்கு எதிராகவும் ஊழலில் பல்வேறு குற்றங்களுக்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
ஆர்எஸ்எஸ் உயர்மட்டத் தலைவர்கள் சுரேஷ் சோனி மற்றும் பிரபாத் ஜா மற்றும் மத்தியப் பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திரா பிரதானும் மத்தியப் பிரதேசம் முழுதும் பயணம் செய்வதற்கான செலவினங்கள் முழுவதையும் சுதிர் சர்மாதான் ஏற்றுக்கொண்டிருக்கிறார். 
இதற்கான ஆவணங்கள் தற்போது ஃப்ரண்ட்லைன் வசம் உள்ளன.ஊழலை வெளிக்கொணர்வதற்காக தகவல் உரிமைச்சட்டத்தைப் பயன்படுத்திய ஷீலா மசூத் என்பவர் கொல்லப்பட்டார். இவரைக் கொன்றவர்கள் பட்டியலில் அனில் தவே என்கிற ஆர்எஸ்எஸ் ஊழியர் பெயர் உள்ளது. 
பாஜகவின் தலைமை செய்தித் தொடர்பாளர் சுதான்சு திரிவேதி பெயரும் ஊழலில் இடம் பெற்றுள்ளது. இவர்களின் பெயர்கள் அனைத்தும் சுதிர் சர்மாவின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் வெளி உலகத்திற்குத் தெரிய வந்தது.
ஆளுநரின் ஊழியர்கள்
சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய புலனாய்விலிருந்து ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் பல அதிகாரிகளும் இவ்வூழலில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. 
2012 வனக்காவலர் தேர்வுக்கு ஆஜரான ஐந்து பேர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் மூன்று லட்சம் ரூபாய் ஆளுநர் ராம் நரேஷ் யாதவ் பெற்றிருப்பதாக சிறப்பு அதிரடிப் படையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனினும் உயர்நீதிமன்றம், ஆளுநர் மீது இவ்வாறு அதிரடிப்படையினர் குற்றச்சாட்டுப் பதிவு செய்ய முடியாது என்று கூறி அதனை ரத்து செய்துள்ளது. 
அவரது மகன் சைலேஷ் யாதவ், ஒப்பந்த ஆசிரியர்கள் பணியிடத்திற்காக பத்து பேரிடமிருந்து 30 லட்சம் ரூபாய் பெற்றிருக்கிறார். ஆயினும் அவர்களில் எவரும் நியமனம் செய்யப்படவில்லை. 
காரணம் அதற்கான குறைந்தபட்ச தகுதி அவர்களுக்கு இல்லை. 
இவர் கடந்த மார்ச் மாதம் மர்மமான முறையில் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
அதேபோன்று ஆளுநரின் ஓஎஸ்டி-யான தன்ராஜ் யாதவ், நியமனங்களுக்காகப் பணம் பெற்றிருப்பதாக சிறப்பு அதிரடிப்படையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
இவர் இப்போது பிணையில் இருக்கிறார்.
முதல் பொறுப்பு?
முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் 2008 முதல் 2012 வரை மருத்துவக் கல்வித் துறைக்கும் அமைச்சராவார். 
இவரது துறையில் நடைபெற்றுள்ள இந்த ஊழல்கள் குறித்து இவருக்கு எப்படித் தெரியாமல் இருக்கும்? அவரது நெருங்கிய உதவியாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பிரசாந்த் பாந்தே என்பவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் முதல்வர் 64 பேர்களுக்கு பரிந்துரைத்திருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். 
இது இப்போது உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் முதல்வர் பெயர்மட்டுமல்ல, உமாபாரதி மற்றும் பல அமைச்சர்களின் பெயர்களும் இடம் பெற்றிருக்கின்றன.
மே 30 அன்று யோகேந்திர உப்ரிட் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் சிறப்பு அதிரடிப்படையினர் முன் அளித்துள்ள வாக்குமூலத்தில் முதலமைச்சருக்குத் தெரியாமல் எதுவும் நடைபெறவில்லை என்று கூறியிருக்கிறார். 
2006இலிருந்தே சிவ்ராஜ் சிங் சௌகான் அமைச்சரவையிலிருந்த சுகாதார அமைச்சர்கள் ஒவ்வொருவரும், இந்த ஊழலை மறைப்பதற்காக பத்து கோடி ரூபாய் பெற்றனர் என்று குறிப்பிட்டிருக்கிறார். 
ஆயினும் இவை அனைத்தையும் முதல்வர் சட்டமன்றத்தில் மறுத்து அறிக்கை சமர்ப்பித்தார். 
ஐமுகூ அரசாங்கத்தின் ஊழல்கள் வெளிவர சுமார் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாயிற்று. 
ஆனால் தேஜகூ அரசாங்கங்களின் ஊழல்கள் ஒரு வருடத்திற்குள்ளேயே வெளிவந்து நாடு முழுதும் நாறிக்கொண்டிருக்கிறது.
========================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?