அமெரிக்காவில் சளி பிடித்தால்



முதலில் சீனாவில் எற்பட்ட பங்கு சந்தை சரிவு.ஆனால் சீனா உடனேயேசரிவில் இருந்து மீண்டு விட்டது.
இப்போது தொடர்ந்து ஜப்பான்,ஐரோப்பிய நாடுகள்,இந்தியா என்று பங்கு சந்தை சரிவு தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிகழ்வு 2000 ம் ஆண்டுகளி உண்டானது போல் பொருளாதார தேக்கத்துக்கு அறிகுறியா?
இந்திய பங்குச்சந்தை கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்திய பங்குச்சந்தை அவ்வப்போது  சிறிய ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த நிலையில், நேற்று வர்த்தக துவக்க நாளிலேயே பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. காலை வர்த்தக துவக்கத்தில்  மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவடைந்தது. இதுபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 8,000 புள்ளிகளுக்கு கீழ் சென்றது. வர்த்தக  இடையில் சென்செக்ஸ் 1,741.35 புள்ளிகள் சரிவடைந்தது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1624.51 புள்ளிகள் சரிந்து 25,741.56 ஆகவும், நிப்டி 490.95  புள்ளிகள் சரிந்து 7,809 ஆகவும் இருந்தது.
இதற்கு முன்பு கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி திங்கட்கிழமை வர்த்தக முடிவில் 1,408.35 புள்ளிகள் சரிவடைந்திருந்தது. 
இதன்பிறகு வரலாறு  காணாத வீழ்ச்சி பங்குச்சந்தையில் நேற்று ஏற்பட்டுள்ளது. இதன்பிறகு 2008 மார்ச் 17ம் தேதி திங்கள் கிழமை 951.03 புள்ளி சரிந்தது. 
இதற்கு அடுத்த  வீழ்ச்சியாக மார்ச் 3ம் ேததி 900.84 புள்ளி சரிந்திருந்தது. 
வர்த்தக இடையில் ஏற்பட்ட வீழ்ச்சியை பொறுத்தரை கடந்த 2008 ஜனவரி 22ம் தேதி 2,272.93  புள்ளி சரிவடைந்திருந்தது. 
இதற்கு முந்தைய நாளான 21ம் தேதி திங்கட்கிழமை சென்செக்ஸ் 2,062.20 புள்ளிகள் வீழ்ந்தது. 

 இதன்படி, நேற்றைய சென்செக்ஸ் 1,624.51 புள்ளிகள் வீழ்ந்தது பங்குச்சந்தை வரலாற்றிலேயே முதன்முறையாகும். இது முதலீட்டாளர்களிடையே  கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலீட்டாளர்கள் ரூ.7 லட்சம் கோடிக்கு மேல் இழப்பை சந்தித்துள்ளனர். சீனாவில் ஏற்பட்ட பொருளாதார  மந்தநிலை இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. சீனாவின் யுவான் மதிப்பு சரிவு, ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவையும் இதற்கு காரணம். 
அச்சம்வேண்டாம்: ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறுகையில், ‘‘சீனாவுடன் ஒப்பிடுகையில் பங்குச்சந்தை பாதிப்பு இந்தியாவில் குறைவுதான்.  சீனாவின் ஷாங்காய் குறியீட்டு எண் 8.49 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. 

இந்திய பொருளாதாரம் சிறப்பாகத்தான் இருக்கிறது. 

பங்குச்சந்தை சரிவை தடுக்கவும், ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும். அந்நிய செலாவணி கையிருப்பு  38,000 கோடி டாலர் உள்ளது. இதைக்கொண்டு சமாளிக்கலாம். அச்சம் வேண்டாம்’’ என்றார். இதுபோல் இந்திய ரூபாய் மதிப்பும் ஓராண்டில் இல்லாத  அளவு கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. நேற்று அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.66.65ஆக இருந்தது.

வார இறுதியில் நிறைவு பெறும் பங்குச்சந்தைகள் திங்கட்கிழமை துவங்கும். 

இதுவரை சந்தை முடிவில் 10 மாபெரும் பங்குச்சந்தை வீழ்ச்சிகள்  நிகழ்ந்துள்ளன. இதில் 7 வீழ்ச்சி திங்கள் கிழமையிலும், 2 வியாழக்கிழமையிலும், 1 செவ்வாய் கிழமையும் நிகழ்ந்துள்ளன. இதற்கு முன்பு ஏற்பட்ட  2008 ஜனவரி 21ம் தேதி ஏற்பட்ட வீழ்ச்சியும் திங்கட்கிழமையில்தான் ஏற்பட்டுள்ளது.  இதுபோல் வர்த்தக இடையில் சரிந்த பெரும் 10 சரிவுகமில் 6  திங்கள் கிழமையிலும், 2 வெள்ளிக்கிழமையும், செவ்வாய் மற்றும் புதன் கிழமையில் தலா 1 சரிவும் ஏற்பட்டுள்ளது.
அ ருண் ஜெட்லியோ இந்த நிலை விரைவில் மாறிவிடும்.என்கிறார் அதற்கு காரணம் பிரதமர் மோடி இந்த சரிவை கவலையுடன் கூர்ந்து நோக்கி வருகிறார் என்பதுதானாம்.
மோடி இந்தியாவிலேயே இல்லையே.அங்கிருந்து இங்கு எப்படி கூர்ந்து நோக்கி பரிகாரம் செய்வார் ?மேலும் மோடி அந்நிய மூலதனம் இன்னமும் வெண்டும் என்றுதானே நாடு,நாடாக அ லைகிறார். 
அந்த அந்நிய மூலதனம் போடும் ஆட்டம்தானே அமெரிக்காவில் சளி பிடித்தால் இந்திய தலால் தெருவில் தும்மல் போடும் நிலைமை ?
என்னவோ நடக்குது மர்மமாக இருக்கிறது.
========================================================================
பாதரச ஆலை அவலம்

கொடைக்கானலில் மூடப்பட்ட பாதரச ஆலையில் பணிபுரிந்த 300-க்கும் மேற்பட்டோர் உடல் உறுப்பு பாதிப்பால் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். 
ஆலையில் பணிபுரிந்த பெண்கள் மட்டுமின்றி ஆண் தொழிலாளர்களின் மனைவிகளும் கர்ப்பபை கோளாறுக்கு ஆளானதுடன் அவர்களும் பிறந்த குழந்தைகளும் மனவளர்ச்சி குன்றியவர்களாக காணப்படுகின்றனர். 
கொடைக்கானல் என்றாலே இயற்கை எழில் கொஞ்சம் காட்சிகள் தான் நினைவிற்கு வரும். 
இதனை அப்படியே புரட்டி போட்டுள்ளது. 
அங்கு பூட்டி கிடக்கும் பாதரச தர்மோ மீட்டர் ஆலை. 

1984-ம் ஆண்டு துவங்கப்பட்ட பாதரச தர்மோ மீட்டர் ஆலை பலத்த எதிர்பின் காரணமாக 2001-ல் மூடப்பட்டது. 

அதனுள் குவிந்து கிடக்கும் பாதரச கழிவுகள் மெல்ல மெல்ல கசிந்து அருகில் உள்ள நீர்நிலைகளில் கலப்பதோடு பாம்பாறு, வைகை ஆற்றையும் மாசுப்படுத்துகிறது. 

இது கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. 

பாதசர கழிவை அகற்றும் விவகாரத்தில் சர்வதேச தொழில்நுட்ப முறையை கையாள வேண்டும் .ஆனால் ஆட்சியாளர்கள் அதை கண்டு கொள்ளவே இல்லை.

இதில் பணிபுரிந்த தொழிலாளர்கள் வசிக்கும் இடங்களுக்கு சென்றால் அதிர்ச்சியில் உறையும் வண்ணம் மக்கள் இருப்பதை பார்ப்பது மனதுக்கு அவலம். 

உதிர்ந்துவிட்ட பற்கள் , உடம்பெல்லாம் புண்கள், உச்சி முதல் பாதம் வரை நீங்காத எரிச்சல், ஞாபக மறதி என பல்வேறு உடல் உபாதிகளுக்கு ஆளாகி உள்ளனர்.  
பாதரச ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும், பெண் தொழிலாளர்கள் மட்டுமின்றி ஆண் தொழிலாளர்களின் மனைவிகளும் கர்ப்பபை கோளாறு, கர்ப்பபை கட்டி போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
அவர்களுக்கு பிறந்த குழந்தை பலர் மனநலம் குன்றியவர்களாக வலம் வருவது சோகத்தின் உச்சம். 
மக்களுக்காகவே ஆலைகள் கொண்டுவருவதாக கூறும் மத்திய,மாநில அரசுகள் மற்ற நாடுகளில் இருந்து விரட்டப்பட்ட  கெடுதல் விளைவிக்கும் ரசாயன ஆலைகளை எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் இந்தியாவில் ஆரம்பிக்க அனுமதி வழங்கி விடுகிறார்கள்.

இதில் மக்கள் பாதுகாப்பு தொடர்பான எந்த விதி முறைகளும் கடை பிடிக்கப்படுவதில்லை.

அதானால் பாதிக்கப்பட்டு உயிரை இழப்பது இந்த அரசுகளை தேர்ந்தெடுத்து ,நமக்கு நன்மை செய்வார்கள் என்று வாக்களித்த மக்கள்தான்.
========================================================================
இன்று,
ஆகஸ்ட்-25.

  • உருகுவே விடுதலை தினம்(1825)
  • பெல்ஜியம் புரட்சி ஆரம்பமானது(1830)
  • கலிலியோ கலிலி தனது முதல் தொலைநோக்கியை அறிமுகப்படுத்தினார்(1609)
  • ஜிம்பாப்வே ஐ.நா., வில் இணைந்தது(1980)


========================================================================
சட்ட சபை துவங்கியாயிற்று ,
இனி இந்த வழிபாடுகளுக்கு குறைவில்லை.!






இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?