என்ன சொல்கிறது மோடி அரசின் நிலச் சட்டம்?



இந்திய விவசாயிகளின் நிலங்களை எப்படியேனும் பறித்து, கார்ப்பரேட் கம்பெனிகள் வசம் கொடுத்துவிடத்துடிக்கும் மோடி அரசு, நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை நான்காவது முறையாக நாடாளுமன்றத்தில் முன்வைக்கவும், நான்காவது முறையாக அவசரச்சட்டம் கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளது. 
‘நிலம் கையகப்படுத்தும் சட்டம் 1894’ கைவிடப்பட்டு, அதற்குப் பதிலாக ‘நியாயமான இழப்பீடு மற்றும் நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்த்தல் உரிமைக்கான சட்டம், 2013’ (டுஹசுசு 2013) நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற நிலைக்குழுவின் நீண்ட விவாதங்களுக்குப் பின்னரும், பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாயிகள், கிராமப்புற ஏழைகள் ஆகியோரைப் பிரதிநிதித்துவப்படுத்திடும் அமைப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட தனிநபர்கள் ஆகியோரை கலந்தாலோசித்து, இவ்விஷயத்தில் கருத்தொற்றுமையை ஏற்படுத்திடுவதற் கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே இச்சட்டம் நிறைவேற்றப் பட்டது. 
இச்சட்டமானது ஒரு சில குறைபாடுகளைக் கொண்டதாக இருந்த போதும் கூட, விவசாயிகள் மற்றும் நிலம் சார்ந்திருப்போரின் பாதுகாப்பை யும், இந்திய நாட்டின் உணவுப் பாதுகாப்பு தொடர்பான அம்சங்களையும் உத்தரவாதம் செய்கின்ற சில பிரிவுகள் அச்சட்டத்தில் இடம் பெற் றிருந்தன. நிலச்சட்டம் 2013ல் இடம்பெற்றிருந்த இத்தகைய குறைந்தபட்ச பாதுகாப்பளிக்கும் அம்சங்கள் ஒவ்வொன்றும் தற்போது அரசால் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களால் பலவீனப்படுத்தப்படுகின்றன. நிலம் கையகப்படுத்தும் சட்டம் 1894ன் வரையறைகளை நோக்கி பின்னுக்கு இழுக்கும் பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளாகவே இத்திருத்தங்கள் உள்ளன.

 ஒப்புதல் பெறுவதிலிருந்து விலக்கு
தற்போது முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தில் 
(அ) பாதுகாப்புத் துறை, 
(ஆ)கிராமப்புற கட்டமைப்பு வசதிகள், 
(இ)மக்கள் வாங்கக் கூடியவிலையில் குடியிருப்புகள் அமைத்தல், 
(ஈ)தொழிற்பேட்டை 
 (உ) மத்திய அரசுக்கு நிலம் சொந்தமாக இருக்கின்ற அரசு மற்றும்தனியார் கூட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு திட்டங்கள் ஆகிய ஐந்துசிறப்பு பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. 
தனியார் திட்டங்களுக்கு எனில் கையகப்படுத்தப்படும் நிலத்தின் உரிமையாளர்களில் 80 சதவீதத்தினரின் ஒப்புதலும், தனியார் மற்றும் அரசு கூட்டுத் திட்டங்களுக்கு எனில் பாதிப்பிற்கு ஆளாகும் மக்களில் 70 சதவீதத்தினரின் ஒப்புதலும் பெறப்பட வேண்டும் என்ற நிபந்தனையிலிருந்து மேற்கூறப்பட்ட ஐந்து சிறப்புப் பிரிவுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நில உரிமையாளரின் ஒப்புதலைப் பெறாமலேயே வலுக்கட்டாயமாக நிலத்தை கையகப்படுத்திடுவதற்கான ‘நிலவுடைமை உரிமை’ (நுஅiநேவே னுடிஅயin) அல்லது அதிகாரத்தை இத்திருத்தம் அரசுக்கு அளிக்கிறது. காலனியாதிக்க காலத்து நிலம் கையகப்படுத்தும் சட்டம் 1894ல்இடம் பெற்றிருந்த கொடூரமான அம்சங்களை திரும்பவும் கொண்டு வருவதாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. 
மேலும், நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2013ல் இடம் பெற்றிருந்த குறைந்தபட்ச உத்தரவாதங்களைக் கூட நீக்கிடுவதாகவே உள்ளது. அரசின் தேவைகளுக்காக நிலம் கையகப்படுத்தப்படுவது மற்றும் தனியார் நிறுவனங்களின் தேவைகளுக்காக நிலம் கையகப்படுத்தப்படுவது ஆகியவற்றிற்கு இடையே உள்ள வேறுபாட்டை இத்திருத்தங்கள் நீக்குகின்றன. 
இத்தகைய நடவடிக்கை தனியார் நிறுவனங் களையும், லாப நோக்குடனான அவர்களது தங்குதடையற்ற நடவடிக்கை களையும் ஊக்குவித்திடும். 
மக்களின் பொதுவான பயன்பாட்டிற்காக என்ற பெயரில் நிலத்தை வலுக்கட்டாயமாக கையகப்படுத்திட-அரசின் சிறப்பு நிலவுடைமை உரிமையைப் பயன்படுத்திட 1894ம் ஆண்டு சட்டம்அனுமதித்தது. எனினும், இதனைப் பயன்படுத்தி ஒரு தனியார் நிறுவனத்தின் சொந்த தேவைகளுக்கு நிலத்தை அரசு கையகப்படுத்திட இயலாது. மேலும், தனியார் நிறுவனங்களுக்குத் தேவைப்படுகிறது என்பதற் காக எவ்வித பரிசீலனையையும் மேற்கொள்ளாமல் நிலத்தை கையகப்படுத்திடக் கூடாது என்றும் அந்தச்சட்டம் சொன்னது.

ஒப்புதல் பெற வேண்டும்
ஆனால் , தற்போது முன்வைக்கப்படும் திருத்தங்கள், நிலம் கையகப்படுத்தப்படுவதற்கான வரம்பை விரிவுபடுத்துகிறது. மேலும், நிலம் கையகப்படுத்தப்படுவதால் பாதிக்கப்படும் மக்களின் ஒப்புதலைப் பெறுவது என்பதிலிருந்து பெருமளவிலான திட்டங்களுக்கு விலக்களிக்கிறது. 
பாதிக்கப்படும் மக்களின் ஒப்புதலின் அடிப்படையில், குறைந்த அளவிலான புலம்பெயர்தலோடு, மக்களின் ஜனநாயகப்பூர்வமான பயன்பாட்டிற்காகவே நிலம் கையகப்படுத்தப்படலாம் என்பதே எங்களது கருத்தாகும். பஞ்சாயத்துகள் மற்றும் கிராம சபைகளை கலந்தாலோசித்து அவற்றின் ஒப்புதலைப் பெறுதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்த்தல், சமூகத்தில் ஏற்படும் தாக்கம் குறித்த மதிப்பீடு செய்தல் போன்றவை உத்திரவாதம் செய்யப்பட வேண்டும். 
நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான முதன்மைச் சட்டத்தில் குறிப்பிட்டிருந்தபடி, பாதிப்பிற்கு ஆளாகும் மக்களுக்கு முன்கூட்டியே தகவல்அளித்து அவர்களது ஒப்புதலைப் பெறுவது என்பதற்கு எவ்வித விலக்கும் அளிக்கப்படாமல் செயல்படுத்தப்பட வேண்டும்.
பொதுப்பயன் என்பதன்வரையறை
சமூகத்தின் பொதுவான நலனைக் கருத்தில் கொண்டு, பெரும்பா லான மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கின்ற நடவடிக்கைகளே பொதுத்தேவைகளாக வரையறுக்கப்பட வேண்டும். தனியாரின் ஊகநடவடிக் கைகளையும், லாபத்தையும் அதிகரித்திடுகின்ற நடவடிக்கைகள் இத்த கைய வரையறைக்குள் வரக் கூடாது. 
மிகச் சரியான வரையறைகள், கொள்கைப்பூர்வமாக உறுதிசெய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயகப்பூர்வமான கொள்கைகள் மற்றும் நடைமுறைகளின் அடிப் படையில் பொதுப்பயன் என்பது அமைந்திட வேண்டும். இந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் நெறிமுறை கொள்கைகள் ஆகியனவற்றின் மதிப்பீடுகளோடு பொருந்திடுவதாகவும் இது அமைந்திட வேண்டும். பொதுப்பயன் உத்தரவாதம்கொள்கைப்பூர்வமான, ஜனநாயகப்பூர்வமான மற்றும் பரவலான நடைமுறையின் கீழான சமூகத்தில் ஏற்படும் தாக்கத்தின் மதிப்பீடு குறித்த ஆய்வின் வாயிலாகவே பொதுப்பயன் என்பது உத்தரவாதம் செய்யப்பட வேண்டும். 
மேலும், பாதிப்பிற்கு ஆளாகும் மக்கள் மற்றும் நிபுணர்கள் ஆகியோரால் ஆய்வு முடிவுகள் அங்கீகரிக்கப்பட வேண்டும். 
நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக இயற்றப்பட்ட முதன்மைச் சட்டத்திலும் கூட பொதுப்பயன் என்ற வரையறைக்குள் அநேகமாக அனைத்து நடவடிக்கைகளும் கொண்டு வரப்பட்டு இருந்தன. எனினும், பொதுப்பயன் என்ற வரையறைக்குள் ஏற்கனவே இடம்பெறாது இருந்த பல்வேறு நடவடிக்கைகளையும் தற்போது அதற்குள் கொண்டு வர திருத்தம் வழிகோலுகிறது.
தொழிற்பேட்டை விரிவாக்கம்
தொழிற்பேட்டைக்கான வழித்தட சாலை அல்லது ரயில் வழிப்பாதை என அடையாளம் காணப்பட்ட இடத்தின் இருபுறத்திலும் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை அமைந்துள்ள நிலத்தை தொழிற்பேட்டைக்கான நிலம் என விரிவுபடுத்திட திருத்தங் கள் வழிவகை செய்கின்றன. 
இதனை அனுமதிப் பதன் வாயிலாக பெருமளவிலான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப் படுவதற் கான நிலை உருவாகிடும் என்றே நாங்கள் கருதுகிறோம்.

இத்தகைய நடவடிக்கை, நிலத்தை அபகரித் திடும் மாபியா கும்பலுக்கும், நில வர்த்தகத்தில் ஊகபேரம் செய்திடுவோருக்கும் உதவிடுவதையே நோக்க மாகக் கொண்டுள்ளது. 
இதன்காரணமாக பல லட்சக்கணக்கான மக்கள் புலம் பெயர்ந்திட நேரிடும். அவர்களது வாழ்வாதாரத் திற்கு அடிப்படையாக உள்ள நிலத்தின் மீதான அவர்களது உரிமை மறுக்கப்படும். தேசத்தின் உணவுப் பாதுகாப்பையும் அது மிக மோசமாக பாதித்திடும்.
 தொழிற்பேட்டைக்காக நிலம் கையகப்படுத்தப்படுவது என்பது சட்டப்பூர்வமான உண்மையான தேவைக்கான நிலத்தை மட்டுமே கையகப்படுத்துவது என்ற விதிமுறையின் அடிப்படையில் இருந்திட வேண்டும்.
பயன்படுத்தாத நிலத்தை திரும்ப அளித்தல்
கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் சொல்லப்பட்ட திட்டத்திற்கென பயன்படுத்தப்படாத நிலத்தை மிக நீண்ட காலத்திற்கு வைத்துக் கொள்ள ஏதுவாக, ‘எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்திட குறிப்பிடப்பட்டுள்ள கால அளவுஅல்லது ஐந்தாண்டு காலம், இவற்றில் எது அதிகமோ அத்தனை காலத்திற்கு’ என தற்போதைய திருத்தங் களில் மாற்றப்பட்டு உள்ளது. 
பயன்படுத்திடாத நிலத்தை மிக நீண்ட நாட்களுக்கு வைத்துக் கொள்ள வழிவகுப்பதுடன், ஊக நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இத்திருத்தங்கள் ஊக்குவித்திடும். இவ்வாறு கையகப் படுத்தி பயன்படுத்தப்படாத நிலங்களை பிணையாக அளித்துஎவ்வளவு பெரிய அளவிலான தொகை கடனாகப் பெறப்பட்டுள்ளது என்பது தொடர்பான சிஏஜி அறிக்கை ஏற்கனவே வெளிவந்துள்ளது.
பயன்படுத்தத் தவறினால்அபராதம் விதிப்பது
எனவே, நிலம் கையகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து மூன்றாண்டு களுக்குள் எத்தகைய பயன்பாட்டிற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதோ அதற்காக அது பயன்படுத்தப்படவில்லை எனில் அந்த நிலத்தின் உரிமையாளர்களுக்கே - அதாவது விவசாயிகளுக்கே திருப்பித்தரப்பட வேண்டும். அல்லது நிலமற்ற குடும்பங்களுக்கு அவை மறுவிநியோகம் செய்யப்பட வேண்டும். 
அதோடு, அந்த நிலத்தை விளைச்சலுக்கு பயன்படக் கூடிய ஒன்றாக மாற்றிடுவதற்கான செலவுகளை அந்நிலத்தை பயன்படுத்தத் தவறிய நிறுவனமே ஏற்றுக்கொள்ள வேண்டும். 
நிலத்தை சீர்செய்வதுடன், அதனை ஈடுசெய்திட நிலத்தை முறையாகப் பயன்படுத்தத் தவறிய நிறுவனங்களின் மீது சிறப்பு தண்டத் தீர்வை விதிக்கப்பட வேண்டும்.
பின்தேதியிட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
1894 சட்டத்தின் கீழ் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள ஒரு சில வழக்குகளில், 1894 சட்டமே பொருந்தும் என நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2013 கூறுகிறது. 
எனினும், இத்தகைய தீர்ப்பு 2013 சட்டம் இயற்றப்படுவதற்கு ஐந்தாண்டு காலம் அல்லது அதற்கு முன்பாக அளிக்கப்பட்டு, நிலத்தின் மீதான உரிமை எடுத்துக் கொள்ளப்படாமலோ அல்லது இழப்பீட்டுத் தொகை அளிக்கப்படாமலோ இருந்தால், அத்தகைய வழக்குகளில் 2013 சட்டமே பொருந்தும். இந்த கால அளவை நிர்ணயம் செய்வதில், (அ)நீதிமன்ற தடை உத்தரவின் காரணமாக, அல்லது (ஆ) நில உடைமையை எடுத்துக் கொள்ள தீர்ப்பாயத்தின் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருக்கும் கால அளவு அல்லது (இ)நிலம் கையகப் படுத்தப்பட்ட போதும் இழப்பீட்டுத் தொகை நீதிமன்றத்திலோ அல்லது வேறு ஏதேனும் கணக்கிலோ செலுத்தப்பட்டிருந்த காலம் ஆகியன கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என தற்போதைய அரசின் திருத்தங் களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இதன் காரணமாக, தற்போது நடைபெற்று வரும் நிலம் கையகப்படுத்தப்படும் நடவடிக்கைகள் அதற்கான துவக்க நிலையிலேயே உள்ளன என்றாலும் கூட, அவை எல்லாம் காலனி யாதிக்க கால சட்டத்தின் கீழேயே வரும்.எனவே, நிலம் கையகப்படுத் தும் சட்டம் பின் தேதியிட்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே எங்களது கருத் தாகும்.
இழப்பீடு செலுத்துதல்
மேலும், 1894 சட்டத்தின் கீழ் கையகப்படுத்திடு வதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டபோதும், இன்ன மும் அந்நடவடிக்கை முடிவு பெறாமல் உள்ளன எனில்,அவற்றிற்கான நடவடிக்கை கள் புதிய சட்டத்தின் விதிமுறைகளின்படி மீண்டும் புதிதாக துவக்கப்பட வேண்டும். 
பின்தேதியிட்டு நடைமுறைப்படுத்திடுவதற்கான பிரிவில், நிலம் கையகப்படுத்தப்படு கின்றபோது அளிக்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகைக்காகஎன குறிப்பிடப்பட்ட எந்தவொரு கணக்கிலும் தொகை செலுத்தப்பட்டிருந்தது எனில், இழப்பீட்டு தொகை ஏற்கனவே செலுத்தப்பட்டு விட்டதாகவே கொள்ளப்படும் என தற்போது முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இழப்பீட்டுத் தொகையானது நீதிமன்றத்தில் செலுத்தப்பட் டாலோ அல்லது பயனாளியின் கணக்கில் செலுத்தப்பட்டாலோ மட்டுமேதொகை செலுத்தப்பட்டுவிட்டதாக கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் வரையறுத்துள்ளது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் இந்த வரையறையை இத்திருத்தம் நிர்மூலமாக்குகிறது.
புதிய இணைப்பு
‘தனியார் குழுமம்‘ என்ற வார்த்தைக்குப் பதிலாக, ‘தனியார் நிறு வனம்‘ என்ற வார்த்தை திருத்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
தனியார் நிறுவனம் என்பது அரசல்லாத எந்தவொரு நிறுவனமும் ஆகும். மேலும், தனிநபர் முதலாளி, பங்குதாரர், நிறுவனம், கழகம்,தொண்டு நிறுவனம் உள்ளிட்ட சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட எந்த வொரு நிறுவனமும் இதன் கீழ் வரும்.
இத்தகைய திருத்தத்தின் வாயிலாக நிலத்தை யாரும் கபளீகரம் செய்திடலாம் என்பதற்கான வாய்ப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து தனியார் அமைப்புகளுக்காகவும் அரசு நிலத்தைகையகப்படுத்திட இது அனுமதி அளித்திடும். 
எனவே, முன் மொழியப்பட்டுள்ள இத்திருத்தத்தை ஏற்றுக்கொள்ளவும், ஒப்புக் கொள்ளவும் இயலாது.
நிவாரணம் மற்றும் மறுவாழ்வு குறித்த அம்சங்களின் அமலாக்கம்
நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2013ன் பிரிவு 113ல் முன்மொழியப் பட்டுள்ள திருத்தமானது, நஷ்டஈடு, நிவாரணம், மறுவாழ்வு மற்றும்இதர நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுவதற்கான கால அளவை 2 ஆண்டுகள் என்பதிலிருந்து 5 ஆண்டுகள் என அதிகரிக்கிறது.
தேவையற்றது
சிரமங்களை நீக்கிடுவது என்ற பெயரில், சட்டத்தின் எந்த ஒரு பகுதியையும் திருத்தி உத்தரவு வெளியிடுவதற்கான அதிகாரத்தை மத்திய அரசு தனக்குத் தானே அளித்துக் கொள்கிறது. ஆனால், இத்தகைய அதிகாரம் தேவையற்ற ஒன்று, 
மேலும், பாதிக்கப்படும் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய அனைத்தும் திட்டம் செயல்படுத்தப்பட துவங்கப்படுவதற்கு முன்பே அளிக்கப்பட வேண்டும்.

 மாநிலத்தின் பூகோளரீதியான அமைப்பைக் கருத்தில் கொண்டும், நாட்டின் பிற பகுதிகளுட னான தொடர்புக்கான நீண்ட சுற்று வழியையும் கருத்தில் கொள்கிறபோது இது மிகவும் அவசியமாகும். 

-மாணிக் சர்க்கார்.
முதல்வர் ,திரிபுரா.
(பீப்பிள்ஸ் டெமாக்ரசி)தமிழில் : எம்.கிரிஜா
===========================================================================================================
இன்று,
ஆகஸ்ட்-10.
  • இந்திய அணுசக்தி கழகம் ஜவஹர்லால் நேருவால் துவக்கி வைக்கப்பட்டது(1948)
  • முகம்மது நபி, குர் ஆனை பெற்ற நாள்(610)
  • மெகலன் விண்கலம் வெள்ளிக் கோளை அடைந்தது(1990)
  • மிசெளரி, அமெரிக்காவின் 24வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது(1821)

============================================================================================================
இஃப்தார் விருந்து!


குடியரசுத் தலைவராக அப்துல்கலாம் இருந்த போது அவருக்கு தனிச்செயலாளராக இருந்த பி.எம். நாயர் என்பவர் கலாமுடன் பணியாற்றிய அனுபவங்களை 'கலாம் எபெக்ட்' என்ற புத்தகத்தில் கலாம் குறித்து சில அரிய தகவல்களை கூறியுள்ளார்.
அந்த வகையில் ரம்ஜான் மாதத்தில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இஃப்தார் விருந்து நடத்துவது மரபு. 
ஆனால் கலாம் பதவியில் இருந்த 5 ஆண்டுகளில் இஃப்தார் விருந்து நடத்தப்படவில்லை. 
இதற்கான காரணம் ஏன்? என்பது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:
"கடந்த 2002ஆம் ஆண்டு அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற சமயம். அப்போது நாயரை அழைத்த அப்துல் கலாம், இப்தார் விருந்துக்கு ராஸ்டிரபதி பவனில் எவ்வளவு செலவாகும்? என்று கேள்வி கேட்டார். நான் 22 லட்ச ரூபாய் செலவழிப்போம் என்றேன். ஏற்கனவே இருக்கப்பட்டவர்களுக்கு இப்தார் விருந்தளிப்பதால் என்ன பயன்? அந்த 22 லட்சத்தை அனாதை இல்லங்களுக்கு பிரித்து வழங்கி விடுவோம். அந்த தொகைக்கு இணையாக அனாதை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்ய சொன்னார். 
பின்னர் தனியாக என்னை அழைத்து ஒரு லட்ச ரூபாய்க்கும் செக் அளித்து இதையும் சேர்த்து 23 லட்ச ரூபாய்க்கு குழந்தைகளுக்கு உணவு ஏற்பாடு செய்யுங்கள் என அப்துல்கலாம் கூறிய போது, மனித நேயமிக்க மனிதரிடம் பணிபுரிவது குறித்து மிகுந்த பெருமையடைந்தேன். கலாம் இஸ்லாமியர்தான் என்றாலும் அவர் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்த வரை குடியரசு தலைவர் மாளிகையில் 'இப்தார்' விருந்து அளிக்கப்பட்டதில்லை.
அப்துல் கலாம் 'யெஸ் சார்' வகை அதிகாரிகளை பக்கத்தில் வைத்து கொண்டதில்லை. ஒரு முறை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ஜனாதிபதியை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். இருவரும் விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்போது அருகில் நின்ற என்னை பார்த்து மிஸ்டர். நாயர் நான் சொல்வது சரியா? என்று வினா எழுப்பினார். அது சரியாக இருக்காது என்றும் அதற்கான காரணங்களையும் நான் அடுக்கி கூறினேன். உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு பிரமிப்பு. ராஷ்டிரபதியின் கருத்துக்கு சாதாரண அதிகாரி எதிர் கருத்து சொல்வதும் அதனை அவர் அனுமதிப்பதையும் கண்டு நீதிபதி அசந்தே போனார்.
குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் பொறுப்பேற்ற போது ராமேஸ்வரத்தில் இருந்து அவரது உறவினர்கள் 50 பேர் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்கியிருந்தனர். அவர்கள் டெல்லியை சுற்றிபார்க்க ஒரு பஸ் அமர்த்தி தரப்பட்டது. அந்த பேருந்துக்கான கட்டணத்தை அப்துல் கலாம் வழங்கி விட்டார். இவர்களில் யாருக்கும் எந்த சமயத்திலும் அரசுக்கு சொந்தமான கார் பயன்படுத்தப்படவில்லை. கலாமின் உறவினர்கள் டெல்லியில் தங்கியிருந்த சமயத்தில் அவர்களுக்கு உணவு செலவாக 2 லட்ச ரூபாய் குடியரசுத் தலைவர் மாளிகையில் செலவிடப்பட்டது. அந்த தொகையை கலாம் தனது கையில் இருந்து செலுத்தி விட்டார். எந்த குடியரசுத் தலைவரும் இது போன்று செலுத்தியதே இல்லை.
அப்துல் கலாமின் 5 ஆண்டு காலம் முடிந்த பின்னர் குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரிகள் ஊழியர்கள் அவரை சந்தித்துக் கொண்டிருந்தனர். அப்போது நானும் அவரை சந்தித்தேன். என்ன மிஸ்டர் . நாயர் உங்கள் மனைவியை காணோம்? என்று கலாம் கேட்டார். எனது மனைவி ஒரு விபத்தில் சிக்கி கால் உடைந்து வீட்டில் இருக்கிறார் என்றேன். அடுத்த நாள் எனது வீட்டை சுற்றி ஒரே போலீஸ். என்னவென்று பார்த்தால் கலாம் எனது மனைவியை பார்க்க வீட்டுக்கே வந்து விட்டார். ஒரு குடியரசுத் தலைவர் சாதாரண ஊழியரின் மனைவியை சந்தித்து பேசுகிறாரே என்று நான் வியந்து போனேன்." என்று பி.எம்.நாயர் தெரிவித்துள்ளார்.
மேலும் அப்துல் கலாம் இந்திய குடியரசுத் தலைவராக இருந்த சமயத்தில் அவருக்கு ஏராளமான பரிசுப் பொருட்கள் வரும். வெளிநாடுகளில் இருந்தும் ஏகப்பட்ட பரிசுப்பொருட்கள் வந்த வண்ணம் இருக்கும். அவற்றையெல்லாம் அப்துல் கலாம் போட்டோ எடுத்து வைத்து வகைப்படுத்துவார். பின்னர் அப்படியே அதனை ஆவண காப்பகத்துக்கு அனுப்பி விடுவார். ஒரு பொருளை கூட திரும்பி பார்த்ததது இல்லை. ஒரு பென்சிலை கூட தனக்கு என்று எடுத்து கொண்டது இல்லை. 
வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் அன்பளிப்புகளை மறுத்தால், அந்த நாடுகளை அவமானப்படுத்துவது போல் அமைந்து விடும் என்பதால்தான் பரிசுபொருட்களை அப்துல்கலாம் பெறுவதை வழக்கமாக கொண்டிருந்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இப்போது வெளிநாடுகளில் தனக்கு கொடுத்த பரிசுப் பொருட்களை லாரியில் ஏற்றிக்கொண்டு சென்றவரும்,தனது பதவி காலத்தில் வாங்கப்பட்ட தளவாடச் சாமான்களை தன்னுடைய வீட்டுக்கு கொண்டு சென்றவரும்,
பதவி போன பின்னர் சொந்த உபயோகத்துக்கு அரசு கார் தந்தும் தனது மற்றொரு சொந்த காருக்கு பெட்ரோல் போட மாதம் 60000 ரூபாய்களை அரசிடம் கேட்டு அலம்பல் செய்யும்  முன்னாள் குடியரசுத்தலைவர் "பிரதீபா பாட்டீல் "அம்மையார் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
========================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?