விஷ்ணுப் பிரியா


நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றியவர் விஷ்ணுபிரியா. இவர்   கடந்த 18-ம் தேதியன்று அங்குள்ள காவலர் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக எஸ்பி நாகஜோதி தலைமையிலான சிபிசிஐடி போலீஸார் கடந்த 7நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 எனினும், விசாரணை முழுமையாக முடிவடையாமல் மீண்டும் வருவதாக சொல்விட்டு திரும்பிச் சென்றுள்ள விசாரணை குழு விஷ்ணுபிரியாவின் தந்தை ரவியிடம் எந்த விசாரணையும் நடத்தவில்லை.வியாழக்கிழமை அன்று எஸ்.பி நாகஜோதி தனது குழுவினருடன் கடலூர் மாவட்டம்,கோ ண்டூரில் உள்ள விஷ்ணுபிரியா வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். இதில், அவரது தாயார் கலைச்செல்வி, தங்கை திவ்யா ஆகியோரிடம் விஷ்ணுபிரியாவின் குணநலன்கள் குறித்த கேள்விகளை கேட்டனர்.
நிலமை இப்படியிருக்க வெள்ளிக்கிழமை காலையில் டிஎஸ்பி விஷ்ணுபிரியா பெயரில் சேலத்தில் முத்திரையிடப்பட்ட பெயர், விலாசம் இல்லாத கடிதம் வந்தது. அதனை உறவினர்கள் பெற்று படித்தபோது அதிர்ச்சியடைந்ததாகத் தெரிகிறது.

அக்கடிதத்தில் “”கோகுல்ராஜ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவரோடு செயல்படும் சில ஜாதிவெறி பிடித்த காவலர்களும், காவல்துறையைச் சேர்ந்தவர்களும் விஷ்ணுபிரியாவை பலாத்காரத்துக்கு உட்படுத்தி கொலை செய்திருக்கலாம். எனவே விஷ்ணுபிரியாவின் உடலை மறு உடற்கூறு பரிசோதனை வேண்டுமென அரசை வலியுறுத்துங்கள்” என்று  அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி,
விஷ்ணுபிரியா இறப்புக்கு 20 நாள்களுக்கு முன்பிலிருந்தே சிலர் வீட்டினை நோட்டம் விட்டு வந்துள்ளனர். அவர்களிடம் நீங்கள் யார் என்று கேட்டதற்கு சரியான பதில் அளிக்காமல் சென்று விட்டனர். விஷ்ணுபிரியா இறந்த 18ஆம் தேதி பகல் 2.38 மணியிலிருந்து 5 மணி வரை அவரது செல்போன் பேச்சு பதிவுகளை கைப்பற்றி விசாரித்தாலே இறப்புக்கான காரணம் தெரிந்துவிடும். விஷ்ணுபிரியா, தான் விசாரித்து வந்த கொலை வழக்குகள் தொடர்பான ஆவணங்களை பத்திரப்படுத்தியுள்ளார். அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும். மேலும், திருச்செங்கோடு பகுதியில் 1 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையை முழுமையாக தடுத்ததாலும் இவர் மீது பலர் ஆத்திரத்தில் இருந்ததாகத் தெரிகிறது. எனவே இதில் அரசியல்வாதிகளும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம்  எங்களுக்கு உள்ளது. சிபிசிஐடி போலீஸார் எனது மகள் எழுதியதாகக் கூறப்படும் 9 பக்க கடிதத்தை காண்பித்தும், சில புகைப்படங்களை காண்பித்தும் விளக்கம் கேட்டனர். அதில், 2 பக்கம் மட்டுமே விஷ்ணுபிரியாவின் கையெழுத்து. மற்றவை அவரது கையெழுத்து இல்லை என்று கூறிவிட்டோம் என்றும் ரவி கூறினார்.
விஸ்ணுபிரியாவின் தற்கொலைக்கு காதல் காரணமா ?
இந்நிலையில், விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு தொடர்பாக, சிபிசிஐடி போலீஸ் எஸ்.பி நாகஜோதி, ஏடி.எஸ்.பி ஸ்டாலின், டி.எஸ்.பி.கள் ராஜன், வேலன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கடந்த 19ஆம் தேதி முதல் நாமக்கல், சேலம், கடலூர் மாவட்டங்களில் முகாமிட்டு, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஷ்ணுபிரியா தற்கொலைக்கு உயரதிகாரிகள் தொல்லையே காரணம் என அவரது தோழியும், டி.எஸ்.பி.யுமான மகேஸ்வரி குற்றம்சாட்டியதால், சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை அந்தக் குற்றச்சாட்டை மையப்படுத்தியே நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டது.
விஷ்ணுபிரியா 2 செல்லிடப்பேசிகளை வைத்திருந்தார். ஒன்று அலுவலகப் பணிக்கும், மற்றொன்று சொந்த விஷயங்களுக்கும் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதில், அவர் சொந்த தேவைக்கு வைத்திருந்த செல்போன் அழைப்பு விவரங்களை சிபிசிஐடி போலீஸார் சேகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அரசியல் கட்சிகள், ஊடகங்கள், விஷ்ணுபிரியாவின் தோழி மகேஸ்வரி உள்ளிட்டோரால் குற்றம்சாட்டப்படும் காவல் துறை உயரதிகாரிகள் அளித்த தகவலின்பேரில், சிபிசிஐடி போலீஸார் இந்த விவரங்களை சேகரித்துள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கூடவே விஷ்ணுபிரியாவுக்கும், சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் காதல் இருந்ததும், அதில் பிரச்னை ஏற்பட்டு இருவருக்கும் இடையே நடந்த உரையாடல்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மாவட்ட போலீஸார் தங்கள் மீதான நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், இந்த விவரங்களை சிபிசிஐடி போலீஸாருக்குத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
விஷ்ணுபிரியா தற்கொலை நிகழ்ந்து 8நாள்கள் முடிந்துள்ள நிலையில், இதுவரை அறியப்படாத, விவாதிக்கப்படாத கோணத்துக்கு இந்த வழக்குத் திரும்பியுள்ளது, போலீஸார் மட்டுமன்றி, விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் கவனம் செலுத்திய அனைத்துத் தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு குறித்த விசாரணை அறிக்கையை இந்த மாத இறுதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளதாகவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் விஸ்ணுபிரியாவின் பெற்றோர் தரப்பில், விஸ்ணுபிரியாவின் சாவை போலிஸ் அதிகாரிகள் திட்டமிட்டு மறைக்க நினைக்கிறார்கள். அவள் சாவுக்கு காதல் காரணம் என சொல்ல பார்க்கிறார்கள். நாமக்கல் மாவட்ட போலீஸார் எப்படி உண்மையை சொல்வார்கள் அவர்கள் தங்கள் மேலதிகாரியை காப்பாற்ற துடிக்கிறார்கள். உண்மையான காரணங்களை இந்த அதிகாரிகள் கண்டுபிடிப்பார்கள் என இப்போதும் நம்பிக்கையோடு இருக்கிறோம் என்றுள்ளார்கள்.
வி்ஷ்ணுப் பிரியாவின் அசாதாரண மரணத்துக்குக் காரணம் காதல்தான் என்பதை சிபிசிஐடி போலிசார் புலனாய்ந்து சொல்வதற்கு முன் புலனாய்வு ஊடகங்கள் கண்டறிந்து சொல்ல ஆரம்பித்திருக்கின்றன. யூகத்தில் சொல்வதற்கும் ஒரு அடிப்படை இருக்க வேண்டும். 
இல்லாத அடிப்படைகளைப் புனைவதுதான் ஊடகங்களின் அறமாக இருக்கிறது. ‘விஷ்ணுப் பிரியா வீட்டுக்குள் வந்தால் எப்போதும் செல்போனில் பேசியபடியே இருப்பார்’ என அவருடைய பணிப்பெண், சிபிசிஐடி போலீஸாரிடம் சொன்னதாக ஒரு பத்திரிகை எழுதுகிறது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதன்மை விசாரணை அதிகாரியான விஷ்ணுப் பிரியாவின் வேலை பரபரப்பானது. 
வீட்டை, நண்பர்களை விட்டு தனித்திருக்கும் பலருக்கு செல்போன் தான் துணை. வேலை நிமித்தமாகவோ, அல்லது தனது வீட்டினருடனோ நண்பர்களிடமோ கூட விஷ்ணுப் பிரியா பேசியிருக்கலாம். ஒரு பெண் செல்போன் பேசினாலே அவர் காதல் வயப்பட்டிருப்பார் என்பது 21-ஆம் நூற்றாண்டின் வடிகட்டின முட்டாள்தனம்!
அடுத்து, கீழக்கரை டிஎஸ்பி மகேஸ்வரி, தன் தோழியின் மரணத்தையொட்டி சொன்ன ஆதங்க வார்த்தைகளுக்கு இவர்கள் என்ன விளக்கம் தருவார்கள்? மகேஸ்வரிக்கு தன் தோழியின் காதல் தெரிந்திருக்காதா? தன் தோழியின் காதலை மறைத்து உயரதிகாரி மீது பழிபோட அவருக்கு என்ன தேவை ஏற்பட்டது?எஸ்பி செந்தில்குமாருக்கும் மகேஸ்வரிக்கும் அப்படியென்ன என்ன பகை? இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்குமா?
வடமாநிலங்களில் சுற்றித்திரிந்த ‘அட்டாக்’ பாண்டியை ஸ்காட்லாண்டு யார்டுக்கு இணையான தமிழக போலீஸ் வளைத்துப் பிடிக்கிறது. ஆனால் வாட்ஸ் அப்பில் போலீசுக்கே சவால் விடும் யுவராஜ் என்ற குற்றவாளியைப் பிடிக்க முடியவில்லை. பிடிக்க முடியவில்லை என்பதா? 
பிடிக்க விரும்பவில்லை என்பதா?
விஷ்ணுப் பிரியாவின் மரணத்துக்கான காரணங்களாக, அவர் தலித் என்பதும், பெண் என்பதும், அதோடு அவர் கோகுல்ராஜ் என்ற தலித்தின் அசாதாரண மரணம் குறித்து விசாரித்தார் என்பதும் வெட்ட வெளிச்சமாகிவிட்ட நிலையில் காதல்தான் விஷ்ணுப் பிரியாவைக் கொன்றது என கதைக் கட்டுவதில் ஒளிந்திருப்பது உயர்சாதி செருக்கு அன்றி வேறென்ன?
‘நான் இந்த வேலையைக் காதலிக்கிறேன். இது எனக்குக் கடவுள் போல’ என தன்னுடைய மரண சாசனத்தை எழுதிவிட்டுச் சென்ற விஷ்ணுப் பிரியாவுக்கு இந்தச் சாதிய சமூகம் சிறப்பான அஞ்சலியை செலுத்திக்கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் வெளியாகவிருக்கும் சிபிசிஐடி விசாரணையின் முடிவும் விஷ்ணுப் பிரியாவின் காதல் கதையை உறுதிப்படுத்தலாம்.
ஆனாலும் நாம் கதறத்தான் வேண்டியிருக்கிறது ‘விஷ்ணுப் பிரியாவுக்கு நீதி எங்கே?’ என்று!
தன் பெற்றொரிடம் சம்மதம் வாங்கி காதலில் வெற்றியடைய தைரியம் இல்லாத பெண்ணா டி எஸ் பி பதவிக்கு வந்தார்?
கதை வசனம் யாருங் ஜி??

கருப்பு கருணா

பகத்சிங்கும்கூட காதல் தோல்வியால்தான் தூக்குல தொங்கினாராமே...ஜெயில்ல பேசிக்கிட்டாங்க..

 மனோராமா ஆச்சியின் பிறந்தநாள்


==================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?