குடும்ப [முதலுதவி]ப் பெட்டி

அலைபேசி, 'டிவி, ஏசி' என, வீட்டிக்கு தேவையான அனைத்தையும் வைத்திருக்கும் வீடுகளில், முதலுதவிப் பெட்டி இருப்பதில்லை. 
இதற்கு காரணம், அலட்சியம் .நாம் நன்றாகத்தானே இருக்கிறோம் என்ற எண்ணம். 
ஆபத்து எந்த நேரத்திலும் ஏற்படலாம். 
வீடுகளில் கழிப்பறை எவ்வளவு அவசியமோ, அதேபோல் முதலுதவி பெட்டியும் அவசியம்.

முதலுதவி பெட்டியில் என்னென்ன இருக்க வேண்டும்?

கிருமிநாசினி
உடலில் எந்த இடத்தில் அடிபட்டாலும், அடிபட்ட இடத்தின் வழியாக கிருமிகள் உடலுக்குள் செல்வதை தடுக்க, அடிபட்ட இடத்தில் தடவுவதற்கு, கிருமிநாசினி அவசியம் வேண்டும். சிறு குழந்தைகள், சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதை, சொல்லாமலே கழித்துவிடுவர். அப்போது, அந்த இடத்தை துடைத்தால் மட்டும் போதாது; தண்ணீரில் கிருமிநாசினி கலந்து, அந்த இடத்தில் தெளித்து நன்றாக துடைத்தால், கிருமிகள் வீட்டிற்குள் நுழையாது.

பாராசிட்டமால்
தலைவலி, உடல்வலி மற்றும் சாதாரண காய்ச்சலுக்கு, எப்போதாவது, 'பாராசிட்டமால்' மாத்திரையை பயன்படுத்தலாம். இரண்டு வேளை 'பாராசிட்டமால்' எடுத்தும் நிவாரணம் கிடைக்கவில்லை எனில், மறுபடியும் 'பாராசிட்டமாலை' எடுத்துக் கொள்வது நல்லது அல்ல. ஆனால், முதலுதவி பெட்டியில் இதுவும் இருக்க வேண்டும்.

காயங்கள்:
 காயமடைந்தால், அதை சுத்தப்படுத்துவதற்கு, போவைடீன் அயோடைன் மருந்து அவசியம் வேண்டும்.

தீக்காய மருந்து: 
தீக்காயம் ஏற்படும்போது, முதலில் குளிர்ந்த நீரில், காயம்பட்ட இடத்தை கழுவ வேண்டும். பின், தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். காரணம், தீக்காயம் ஏற்படும்போது உடலில் நீர்ச்சத்து குறையும். தீக்காயம் பட்டதும், 'சில்வர் சல்பாடையாசின்' உள்ள களிம்புகளை காயத்தின் மேல் தடவ வேண்டும். பெரிய அளவிலான தீக்காயங்களுக்கு, மருத்துவமனை செல்வதே நல்லது.

மாரடைப்பு:
 மாரடைப்பு மற்றும் இதயத் தசைகளுக்கு ரத்தம் பாய்வது தடைபடுவது அல்லது மாரடைப்பு வரும் என, அறிகுறிகள் தென்படும்போது, 'ஐசோசார்பைடுடைநைட்ரேட்' 10 மி., கிராம் சாப்பிட்ட பின், உடனடியாக மருத்துவமனைக்கு செல்வதே நல்லது. இம்மாத்திரைகள், ரத்த குழாய் அடைப்புகளை சற்றே தளர்த்தும். 

குறிப்பு: 
உயர் ரத்த அழுத்தத்திற்கு, வீட்டில் அவசரத்திற்கு மருந்துகள் கொடுக்கக் கூடாது. கண்டிப்பாக, மருத்துவரின் ஆலோசனை பெற்றே சிகிச்சை பெற வேண்டும்.
ஒவ்வாமை: 
பூச்சிக்கடி, சாப்பிட்ட உணவு நச்சு ஆகுதல், ஒவ்வாமை போன்ற பிரச்னைகளுக்கு, 'லிவோசிட்ரிசன்' மருந்து கண்டிப்பாக இருக்க வேண்டும்.

பஞ்சு: 
காயங்கள், தோல் ஒவ்வாமை, சொறி, சிரங்கு, போன்றவை ஏற்பட்டால், அந்த காயங்களுக்கு பழைய துணிகளில் துடைத்து கட்டுப் போடுவதால், தெரிந்தே ஆபத்தை விலை கொடுத்து வாங்கி கிருமிகளை உடலுக்குள் நுழைய அனுமதி கொடுக்கிறோம். எனவே, மேற்சொன்ன பிரச்னைகளுக்கு பஞ்சை பயன்படுத்தியவுடன், உடனடியாக குப்பைத் தொட்டியில் எறிந்துவிட வேண்டும். 

பேண்டேஜ்: 
எதிர்பாராமல் ஏற்படும் சிறு விபத்துகள் மற்றும் காயங்களுக்கு, பேண்டேஜ் போட வேண்டி வரும். அப்போது, கிருமி நாசினி உதவியோடு, காயப்பட்ட பகுதியை துடைத்த பின், பேண்டேஜ் போடுவது நல்லது. அவற்றை முதலுதவி பெட்டியில் வாங்கி வைப்பது நல்லது.

கையுறைகள்:
 மருத்துவம் சம்பந்தமான வேலை செய்யும் மருத்துவ பொருட்களை கையாளுவதற்கு, தரமான கையுறைகள் அணிந்து கொள்வது நல்லது. கையுறை அணிவதால், கைகளில் உள்ள அழுக்குகள் அடுத்தவருக்கு பரவாது. 

கத்தரிக்கோல்:
 காயம்பட்ட நேரத்தில் முதலுதவி செய்யும்போது, பேண்டேஜ் மற்றும் மருந்து பொருளின் கவர்களை கத்தரிக்க, கைக்கு அடக்கமான சின்ன கத்தரிக்கோல் அவசியம்.



த.தமிழ்ச்செல்வன், 
======================================================================================================
இன்று,
செப்டம்பர்-14.
  • உலக முதலுதவி தினம்
  • அனைத்து நாடுகள் கலாச்சார ஒற்றுமை தினம்
  • தட்டச்சுப் பொறியின் நாடா கண்டுபிடிக்கப்பட்டது(1886)
  • ரஷ்யா அதிகாரப்பூர்வமாகக் குடியரசானது(1917)
  • எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது(1960)
  • 1941 முதன் முதலாக வெளிநாட்டு அஞ்சல் உறை அறிமுகம்.
முகனூல்.







======================================================================================================

சீனா வென்றதன் பின்னால்,

2007ம் ஆண்டு சீன நாட்டுக்குச் சென்று வந்தேன். ஷாங்காயில் 3 நாட்கள் அகில உலக பிளாஸ்டிக்ஸ் எக்ஸிபிஷன் மற்றும் மாநாடு நடைபெற்றது. 
அங்கு சென்று விட்டு, பீகிங், பழைய பீகிங் பார்த்து விட்டு, சீனா முன்னேறியதற்கான காரணத்தை அறிந்து வந்தேன்.
நதிகளை இணைத்து விட்டனர்.
 வீணாக பெட்ரோலியப் பொருட்களை செலவிடுவதில்லை. 
இராணுவ செலவை குறைத்து விட்டனர். 
எந்த தொழிற்சாலைக்கும்  விடுமுறை இல்லை. ஆனால் வேலை பார்ப்பவர்களுக்கு  வாரம் ஒருநாள்ஊதியத்துடன் விடுப்பு உண்டு.
 நிறுவனம் இரவு, பகல் இயங்கிக் கொண்டிருக்கும். 20 கோடி பெண்களும் பணிபுரிகின்றனர். 
விவசாயம், கால்நடை வளர்ப்பு ஏற்றுமதியை ஊக்குவிக்கின்றனர். சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது.
உணவுக்கு சமையலுக்கு அதிக நேரம் பணம் செலவு செய்வதில்லை. 
மக்களின் நாட்டுப்பற்று, தங்கள் உடல் நலம் மீதும், குடும்பம் மீதும் அவர்கள் காட்டும் அக்கறை. அந்நாடு அமெரிக்காவுக்கு 210 மில்லியன் டாலர் கடன் கொடுக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளதே அதற்கு இது தான் காரணம். 
இங்கு தமிழ்நாட்டுடன் அவர்களை ஒப்பிட்டுப் பார்த்தேன். 
மிக மிக வேதனையாக உள்ளது. 
பெண்களின் வேலை, உணவு, சமைப்பது, டி.வி., சினிமா பார்ப்பது அரட்டை அடிப்பது. பெண்கள் பத்திரிகைகளின் வேலை, கோலம், அழகுக்கலை, சமையல், வித விதமாக உணவு சமைப்பது பற்றி மட்டுமே எழுதுவது.
இந்த அவல நிலை எப்பொழுது மாறும்.
 3.75 கோடி பெண்களும் வேலைக்கு செல்வது எப்பொழுது? 
அனைவரும் தொழில் தொடங்கப் போவது எப்பொழுது? 
சமையலில் அதிக நேரம் செலவிடாமல் சத்தான பொருட்களைத் தயாரித்து பல நாட்கள் வைத்திருந்து சாப்பிடப் போவது எப்பொழுது? 
பல பயிற்சிகள் பெற்று சிக்கனமாக இருந்து, நேரத்தினை ரேடியோ, டிவி, சினிமாவுக்கு வீணாகாமல் முன்னேறுவது எப்பொழுது? 
அன்று தான் இந்தியா முன்னேறும். அமெரிக்காவுக்கு ஏன், சீனாவுக்கு கடன் கொடுக்கும் அளவு முன்னேறும். சிந்திப்பீர்களா?.
- எம்.ஞானசேகர்,
விவசாய ஆலோசகர்


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?