பால் பயங்கரம்...,



 எந்தப் பொருளுக்குத் தேவை அதிகம் இருக்கிறதோ, அதன் விலை அதிகரிக்கும்... அது மட்டுமல்ல... அதில் கலப்படங்களும் பெருகும். 
நம் தினசரி வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இடத்தை வகித்துக் கொண்டிருக்கும் பாலில் நிகழ்த்தப்படும் கலப்படங்கள் பற்றி:
கோவையில் பரவலாக சக்கைப் பாலில் ரசாயனங்களை கலந்து நல்ல பாலாக விற்பனை செய்கின்றனர் என்கிற செய்தி கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களைத் தயாரித்த பின் வெளியாகும் சத்துகள் அற்ற கழிவுப்பாலை சக்கைப் பால் என்பார்கள். இந்த சக்கைப்பாலால் எவ்வித பயனும் இல்லாததால், நியாயப்படி இதனை கழிவுநீர் போல ஊற்றி அழிக்க வேண்டும். 
பணத்தாசை கொண்டவர்கள் சும்மா விட்டுவிடுவார்களா என்ன? 
கீழே ஊற்ற வேண்டிய கழிவுப்பாலை வியாபாரிகளுக்கு லிட்டர் 10 ரூபாய் ரேட்டில் விற்பனை செய்கின்றனர். 
அந்த சக்கைப் பாலை வாங்கிச் செல்லும் வியாபாரிகள் அதை நல்ல பால் போல மாற்றி, பாக்கெட் பாலாக அல்லாமல் லூசில்  40 ரூபாய்க்கு விற்பனை செய்து, லிட்டருக்கு 30 ரூபாய் லாபம் பார்க்கின்றனர்.

சக்கைப் பாலை நல்ல பால் போன்று மாற்றுவதற்கு கொஞ்சம் கூட மனிதத்தன்மையே இல்லாத முறையைக் கையாள்கின்றனர். 
200 லிட்டர் சக்கைப் பாலில் 50 லிட்டர் நல்ல பாலைக் கலந்து விடுகின்றனர். 
அதன் இளமஞ்சள் நிறத்துக்காக கேசரி பவுடர் பயன்படுத்துகின்றனர். 
பாலில் நுரை வருவதற்கென ஒருவித ரசாயன அமிலத்தைப் பயன்படுத்துகின்றனர். 
இப்படித் தயாரிக்கப்படும் போலி பால் ஆதிக்கம் கோவையில் மிகுந்திருப்பதாகத் தெரிகிறது. 
இது கோவையில் மட்டுமே நடக்கவில்லை... கோவையில் மட்டும்தான் இப்போது இந்த மோசடி வெளியாகியிருக்கிறது. 
பல ஊர்களில் இது போன்ற கலப்படப் பால்களை நல்ல பால் என்று நம்பி பலரும் பயன்படுத்தி வருகின்றனர். 
இச்சூழலில் ஒரு பாலின் தரத்தை நுகர்வோர் எதை வைத்து தீர்மானிப்பது?

‘‘பாலில் தண்ணீர் கலப்படம் செய்திருப்பதை வேண்டுமானால், நாமே கண்டறியலாம். ஆனால், இது மாதிரியான கலப்படங்களை ஆய்வுக்கூட சோதனைகள் மூலம்தான் கண்டு பிடிக்க முடியும். நீங்கள் வாங்கும் பாலில் கலப்படம் இருக்கலாம் என சந்தேகித்தால், உடனே உணவுத் தரக்கட்டுப்பாட்டு அலுவலருக்குத் தெரியப்படுத்த வேண்டும். 
அவர்கள் அந்தப் பாலை சோதனைக்கூடத்துக்கு அனுப்பி, கலப்படம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்து, தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். 
பாக்கெட் பால் வாங்குவதுதான் இது போன்ற கலப்படங்களிலிருந்து தப்பிக்க ஒரே வழி. ஒவ்வொரு பாக்கெட்டிலும் பேட்ஜ் எண் குறிப்பிட்டிருப்பார்கள். ஒவ்வொரு பேட்ஜும் சோதனைக்குப் பின்னரே வெளிவருகிறது என்பதால் பிரச்னையில்லை. 
அதையும் மீறி ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் கூட, உரிய நிவாரணத்தை பெற்று விடலாம். ஆவின் நிறுவனம் நுகர்வோர் கண்காணிப்பகத்தை வைத்திருக்கிறது. அதன் மூலம் உங்களது குறைகளை நிவர்த்தி செய்கின்றனர்’’ என்கிறார் இந்திய நுகர்வோர் சங்கத்தின் துணை இயக்குனர் கிருஷ்ணன்.

பொதுவாக பாலைத் தவிர்ப்பதே நல்லது என்று நாம் முந்தைய கட்டுரையில் தெரிவித்திருந்தோம். மக்களால் அவ்வளவு எளிதில் தவிர்க்க முடியாத ஒன்றாக பால் மாறிவிட்டாலும், இது போன்ற கலப்படங்களில் இருந்தாவது தப்பித்துக் கொள்வோம்.

                                                                                                                                      - கி.ச.திலீபன்

================================================================================================
அக்குவாபினா வெறும் குழாய் நீர்தான்!

பெப்சி கம்பெனி ஒப்புதல்!!

பெப்சி கம்பெனி தயாரித்து விற்கும் அக்குவாபினா மினரல் வாட்டர் பாட்டிலில் இருப்பது வெறும் குழாய் நீர்தான், சுத்திகரிக்கப்பட்ட நீர் அல்ல என்று அந்த கம்பெனியே அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பெப்சி கம்பெனி தயாரிக்கும் அக்குவாபினா மினரல் பாட்டிலின் லேபிள் மாற்றப்பட்டது. 
பெப்சியின் உற்பத்தி பொருள் என்று இருந்தது தற்போது பொது நீர் ஆதாரத்திலிருந்து என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றம் குறித்து அமெரிக்க பத்திரிகையாளர்கள் பெப்சி கம்பெனியின் மக்கள் தொடர்பு அதிகாரி மைக்கேல் நாட்ரான் என்பவரிடம் கேட்ட போது அவர் கூறிய பதில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
வெறும் குழாய் நீர்தான்
நாட்ரான் கூறியதாவது:சர்வதேசரீதியாக பொறுப்பேற்பதற்காக இவ்வாறு எங்களது உற்பத்தி பொருளின் மூலாதாரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
 இதுவே சரியானதாக இருக்கிறது.
மக்கள் தங்களது குளியலறைகளில் பெறும் நீருக்குத்தான் அவர்கள் சற்று கூடுதல் விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள உதவும்.
இவ்வாறு நாட்ரான் கூறியுள்ளார்.
 இதே போல் அமெரிக்க நீர் பணிகள் சங்கமும் மக்கள் வாங்கும் தண்ணீர் சாதாரணமாக பொதுக் குழாய்களில் பெறப்படுவதுதான் என்று உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கிடையே அமெரிக்க நுகர்வோர் அமைப்பும் நீர் பாதுகாப்பு மையம் என்ற அமைப்பும் பெப்சி மற்றும் தனியார் குடிநீர் கம்பெனிகளை கடுமையாக கண்டனம் செய்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
அவை அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:மக்கள் குளியலறைகளில் வரும் நீருக்காக 2,000 மடங்கு செலவழிக்கிறார்கள். 
இப்படி பொது வளமான நீரை விற்று கொள்ளையடிப்பது ஒரு புறமிருக்க, இன்னொரு புறம் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மாபெரும் சுற்றுச்சூழல் மாசுப்பிரச்சனையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.
டெக்சாஸ் நகரத்தின் அளவை போன்று ஒரு பிரம்மாண்டமான மினரல் பாட்டில் பிளாஸ்டிக் கழிவுகள் பசிபிக் கடலில் மிதந்து கொண்டிருக்கின்றன.


இதன் அபாயத்தை இன்னொரு வகையில் கூற வேண்டுமானால் வரும் 2050-ல் இந்த பூமியில் உள்ள பறவைகள் ஒவ்வொன்றின் உடலிலும் உள்ள ஜீரண மண்டலத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களின் துகள்கள் இருக்கும்.
இவ்வாறு அந்த அமைப்புகள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளன.
===================================================================================
கும்பகோணம் தீவிபத்து: உயிரிழந்த குழந்தைகளுக்காக நடிகர் சங்கம் பிரித்த தொகை எங்கே?
டந்த 2004-ம் ஆண்டு  கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர்.இந்த விபத்து நடந்தபோது ஏராளமான நடிகர்கள்,  குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர்.  அந்த சமயத்தில் அவர்களுக்கு நடிகர் சங்கம் சார்பாக நிதியுதவி அளிக்கப்படும் என்று நடிகர் சரத்குமார் கூறியிருந்தார்.

இதையடுத்து கமல்ஹாசன் 12 லட்சம்,நடிகர் ரஜினிகாந்த் 2 லட்சம், விவேக் ஒரு லட்சம், , விஜய், சூர்யா தலா ரூ. 5 லட்சம் என பல நடிகர்கள் நடிகர் சங்கத்திற்கு  நிதியுதவி அளித்தனர். 
அந்த வகையில் 60 லட்ச ரூபாய்க்கு மேல் வசூலானதாக கூறப்படுகிறது. 
நடிகர் விஜயகாந்த் மட்டும் நடிகர் சங்கம் மூலம் இல்லாமல் தனியாகபாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, தான் அறிவித்த 10 லட்ச ரூபாயை  ஒவ்வொரு குடும்பத்திற்கும் பகிர்ந்தளித்தார். 
                                                 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் நலனுக்கான குழுவின் தலைவரான இன்பராஜ், பாதிக்கப்பட்ட எங்களுக்கு நிதி உதவி அறிவித்து, வசூலித்து விட்டு, அந்த நிதியை தராமல் இழுத்தடிப்பதாக இன்று செய்தியாளர்களிடம் பரபரப்பான குற்றச்சாட்டை கூறினார்.
நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் , எங்கள் குழந்தைகள் பெயரில், நிதி  வசூலித்து அதனை மோசடி செய்தது குறித்து விசாரித்து, அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க   வலியுறுத்தினார். 
இந்த சிக்கல்களில் இருந்து தப்பிக்க  மறைவாக வெளிநாட்டுக்கும்,பெங்களூருக்கும் போய் இருந்தாலும் விட மாட்டேன்கிறார்களே?
===================================================================================
இன்று,
அக்டோபர்-27.

  • பென்சல்வேனியாவின் ஃபிலடல்ஃபியா நகரம் அமைக்கப்பட்டது(1682)
  • காங்கோ ஜனநாயக குடியரசு, சயீர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது(1971)
  • நாசா தனது முதலாவது சட்டர்ன் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது(1961)



ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான்,இந்தியாவரை நில நடுக்கம்.







====================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?