நான் நாத்திகன் அல்ல

5 ஆண்டுக்கு ஒருமுறை, ‘‘நீங்கள் அரசியலில் நுழைவீர்களா?’’ 
என்று என்னிடம் கேட்கிறார்கள். இது என் நேர்மையை சந்தேகப்படுவதாகும். நான் என் நிலைப்பாட்டை உறுதிபட கூறிய பிறகும் இத்தகைய கேள்விகள் கேட்கப்படுவதற்கு காரணம், எனது பஸ்ஸில் ஏறி சிலர் தாங்கள் விரும்பிய ஊருக்குச் செல்ல நினைக்கிறார்கள். 
என் ரூட்டு தனி. அந்த ஆசையில் யாராவது ஏறினால் அவர்களை இறக்கி விட்டுத்தான் இந்த பஸ் செல்லும். என் நடிப்பை பற்றி கேட்டால், பதில் சொல்வேன். 
இந்தப் படத்தில் நன்றாக நடிக்கவில்லை. அடுத்த படத்தில் நன்றாக நடியுங்கள் என்று சொன்னால் கேட்டுக் கொள்வேன். அதை விட்டுவிட்டு என்னை சீண்டுகிறார்கள்
. நான் ரத்த காயம்பட்டு நிற்கிறேன். என் தாயை பழித்தது போன்ற கோபம் வருகிறது. 

நான் நாத்திகன் அல்ல. பகுத்தறிவுவாதி. ஆஸ்தி என்றால் எல்லாம் பெறு என்றும் நாஸ்தி என்றால் ஒன்றுமே இல்லாமல் போ என்று அர்த்தம்.அதானால் நாத்திகன் என்பதை விட பகுத்தறிவாளன் என்பதே சரி.
நான் எந்த தனிப்பட்ட அரசியல் கட்சி மூலமும் பகுத்தறிவை பெறவில்லை. அரசியலில் எதைச் சொன்னாலும் அதனுள் ஒரு காரணம் இருக்கும். அதனால் எனது பகுத்தறிவு நானாக தேடிக் கொண்டது. நான் ஞானி அல்ல, ஞானத்தைத் தேடுகிறவன். 
அதற்காக மதங்கள், கடவுள்களை நிந்திக்க மாட்டேன். பெரியவர்கள் என் நெற்றியில் திருநீரு பூசினாலும் பூசியவர் கண் முன்னால் அதை அழிக்க மாட்டேன். அவர்கள் மனம் வருந்தக்கூடாது என்பதனால்தான்.
ஒரு மகான் தன் சக்தியை பயன்படுத்தி என் கண் முன்னால் ெதய்வத்தைக் கொண்டு வந்து நிறுத்தினாலும் கைகுலுக்குவேனே தவிர, வணங்க மாட்டேன். உங்களுக்கு ஏன் எங்கள் தமிழ்ப் புரியவில்லை என்று கேட்பேன். சுனாமி வந்தபோதும், பூகம்பம் வந்தபோதும் எங்கே போயிருந்தீர்கள் என்று கேட்பேன். 
உனக்கு ஏன் வடமொழியும் ,ஆர்மீனிய மொழியும்,உருது மொழியும் மட்டும் தெரிகிறது.11 கோடி மக்கள் பேசும் எனது "தமிழ் மொழி "கடவுளான உனக்கு ஏன் தெரியவில்லை என்றும் கேட்பேன்.
எல்லா கடவுளுக்கும் எக்ஸ்பரி டேட் உண்டு என்பதை நம்புகிறவன். ஒவ்வொரு கடவுளுக்கும் இங்கே ஒவ்வொரு நாட்களில் மவுசு இருப்பதைத்தான் சொல்கிறேன்.முந்தைய மக்கள் கும்பிட்ட  கடவுள்கள் பலர் இப்போது இல்லாமல் பொய் விட்டனரே?
இந்த கடவுளுக்கு இப்போது பவர் அதிகம் என்று சொல்வது மற்ற கடவுள்கள் எக்ஸ்பரி ஆகிவிட்டதைத்தானே காட்டுகிறது. நான் சொர்க்கத்தை நம்புகிறேன். 
அந்த சொர்க்கம் நான் வாழும் வாழ்க்கையில் இருக்கிறது. அதை அடைவேன். 
சகிப்பு தன்மை பற்றி பேசுகிறார்கள். 
எத்தனை மகான்கள் மசூதி பாங்கோசைக்கும், கோவில் மந்திரத்துக்கும், தேவாலய மணியோசைக்கும் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், தெரியுமா? 
அது இல்லாதவர்கள்தான் கோவிலை இடிப்பார்கள். 
என்றைக்கு நம் சகோதரனை தனியாக பிரித்து பாகிஸ்தான் என்ற தனிவீடு கட்டிக் கொடுத்து நாம் சந்தோஷப்பட்டுக் கொண்டோமோ, அன்றைக்கே நமக்கு சகிப்புத்தன்மை இல்லாமல் போய் விட்டது. 

கமல் விருதை திருப்பி கொடுக்க மறுக்கிறார் என்கிறார்கள். 
விருதை திருப்பிக் கொடுப்பதன் மூலம் என்ன சாதிக்க முடியும்? 
விருது எந்த அரசாங்கமும் தந்ததல்ல. 12 அறிஞர்கள் தந்தது. 
அவர்களை நான் ஏன் அவமானப்படுத்த வேண்டும்? வெள்ளையர்களை எதிர்த்து போராடிய போது காந்தி வெள்ளையர் தந்த தனது வழக்குரைஞர் பட்டத்தை திரும்பவா கொடுத்தார்.அப்படி செய்தால் அடுத்த வழக்கை வாதாட முடியாமல்தான் போகும்.
சகிப்புத்தன்மையின்மைக்கு எதிராக குரல் கொடுக்கிறேனே, அதுதான் என் எதிர்ப்பு. எங்கெல்லாம் சுதந்திரம் பறிபோகிறதோ அங்கு என் குரல் ஒலிக்கும். சகிப்பின்னமையை எதிர்த்து போராட எத்தனையோ வழிகள் இருக்கின்றன.விருதுகளை திருப்பி தருவதால் ஒன்றும் நடக்கப்போவதில்லை.விருதுகள்போனதை தவிர.
அதற்காக அரசியலுக்கு வருவேன் என்று நினைக்க வேண்டாம். 5 ஆண்டுக்கு ஒருமுறை என் கைவிரலை கரையாக்கிக் கொள்வதே போதுமானது. 
நாங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். ஆனால் அரசியல் புரியாதவர்கள் அல்ல. 
புரிந்ததால்தான் விலகி நிற்கிறோம். 
எங்களை நற்பணி செய்ய விடுங்கள். தூய்மை இந்தியா திட்டத்தில் சேரலாமா என்கிறார்கள். தேசத்துக்கு நல்லது செய்ய எந்த கட்சி அழைத்தாலும் முதல் ஆளாக நிற்பேன். காங்கிரசா,கம்யூனிஸ்டா ,பாஜகவா என்று கரை பேதம் பார்ப்பதில்லை.நல்லது மக்களுக்கு நடக்க வேண்டும் அவ்வளவுதான்.
திமுகவாக இருந்தாலும் சரி, அதிமுகவாக இருந்தாலும் சரி. 

மாட்டிறைச்சி சாப்பிடாதீர்கள் என்கிறார்கள். யாருக்கும் யாரும் மெனு கார்டு கொடுக்க முடியாது. மாட்டிறைச்சி சாப்பிடலாம். நான் சாப்பிட்டிருக்கிறேன். 
மாட்டிறைச்சி ஏன் சாப்பிடக்கூடாது என்பதற்கு மருத்துவம் சில காரணங்களைச் சொல்கிறது. அதனால் இப்போது சாப்பிடுவதில்லை. இறைச்சிகளை விட பூச்சிகளை சாப்பிடுவதுதான் சிறந்தது என்கிறது மருத்துவம். இன்னும் 30 ஆண்டுகளில் பூச்சி உணவு பெரிய வர்த்தகமாக இருக்கும். 
அந்த நேரத்திலும் ஒரு பூச்சி சாமியார் வந்து, பூச்சி சாப்பிடாதீர்கள் என்பார். 
பூச்சியை சாதாரணமாக எண்ணாதீர்கள்.[பூச்சி முருகனையும் சேர்த்து சொல்லுகிறாரா?]
அதுவும் நடந்து கொண்டுதான் இருக்கும். 
மனிதர்களிடம் காட்டாத அன்பை, விலங்கின் மீது காட்டுவதினால் என்ன பயன்?.
                                                                                                                        
                                                                                                                 உலகநாயகன். -கமலஹாசன் 
=========================================================================================
இன்று,
நவம்பர்-08.

  • உலக நகர திட்டமிடல் தினம்

  • வில்ஹெம் ராண்ட்ஜன், எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தார்(1895)
  • மொன்டானா, அமெரிக்காவின் 41வது மாநிலமாக இணைக்கப்பட்டது(1889)
  • பிரிட்டன் இந்திய பெருங்கடல் மண்டலம் அமைக்கப்பட்டது(1965)
=========================================================================================
முகனூல்,









இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?