காலை எழுந்ததும் குடியுங்கள்?


தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது .
 தண்ணீர் குடிப்பதால் எண்ணற்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம். 
தினமும் தண்ணீர் குடிப்பதால் வயிறு சுத்தமாவதுடன், உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீர், மலம் மூலம் வெளியேறிவிடும்.
பெரும்பாலான நபர்களுக்கு உடலில் நீர்ச்சத்து குறையும்போது தான் தலைவலி ஏற்படுகிறது, 
அத்தகைய நபர்கள் தினமும் தண்ணீர் குடித்து வருவது நல்லது. 
குறிப்பாக காலையில் அவசர அவசரமாக வேலைக்கு கிளம்பும் நபர்கள், சாப்பிடாமல் செல்வது வழக்கமாகிவிட்டது. 
இவர்கள் தினமும் தண்ணீர் குடிக்கும் போது பசி எடுப்பதுடன் அல்சர் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம். 

வெதுவெதுப்பான தண்ணீரை குடித்தால் உடலின் மெட்டாபாலிசம் அதிகரிப்பதுடன், உண்ணும் உணவு விரைவில் செரிமானமாகி விடும்.
 மேலும் இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சியானது அதிகரித்து, இரத்தமானது அதிகப்படியான ஆக்சிஜனை கொண்டிருப்பதால் உடலானது எனர்ஜியுடன் இருக்கும். 
எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். 
முகமும் பொலிவுடன் இருப்பதுடன், பருக்கள் வருவது குறைந்துவிடும். தலை முடியும் நன்கு வளரும் என்பது சமீபத்திய தகவல்.
===========================================================================================
இன்று,
டிசம்பர்-20.
  • சர்வதேச மனித ஒருமைப்பாட்டு தினம்
  • சோவியத்தின் முதலாவது ரகசிய காவல்துறையான சேக்கா அமைக்கப்பட்டது(1917)
  • கார்டிஃப், வேல்சின் தலைநகராக அறிவிக்கப்பட்டது(1955)
  • போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான ஐ.நா., உடன்படிக்கை வியென்னாவின் கையெழுத்தானது(1988)

===========================================================================================
மாட்டுகளை கொன்ற பாவம்.
அதற்கு நன்கொடை வாங்கினால் தீரூம்.?

உத்தரப்பிரதேசத்தில் மாட் டிறைச்சியை அதிகளவில் ஏற்று மதி செய்யும் பெரும்புள்ளி ஒருவரிட மிருந்து ரூ.200 கோடியை பாஜக நன்கொடை என்ற பெயரில் பெற்றிருக் கிறது என அம்மாநில அமைச்சரான ஆசம்கான் குற்றம்சாட்டியுள்ளார்.
ஏற்கெனவே மாட்டிறைச்சி ஏற்று மதியாளர்களிடமிருந்து ரூ.2.50 கோடி நிதியை பெற்றிருப்பதாக பாஜகவே ஒப்புக் கொண்டுள்ள நிலையில், ஆசம்கானின் இந்த குற்றச்சாட்டை அக் கட்சி மறுத்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் நகரில் வெள்ளியன்று இரவு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த ஆசம்கான் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மாட்டிறைச்சி விவகாரத்தைக் கொண்டு பாஜக அரசியல் செய்துவருகிறது.
ஆனால் அதே பாஜக, மாட்டிறைச்சியை அதிக அளவில் ஏற்றுமதிசெய்யும் பெரும்புள்ளி ஒருவரிட மிருந்து ரூ.200 கோடியை நன்கொடை என்ற பெயரில் பெற்றிருக்கிறது” என குற்றம்சாட்டினார். மேலும், பாஜக வாங்கிய பணத்தில் கறுப்புப் பணம் எவ்வளவு என்பதை அக்கட்சி தெரிவிக்க வேண்டும் என் றும் குறிப்பிட்டார்.
“விலங்குகளை படுகொலை செய்வது குற்றமானால் அது எந்த விலங்கானாலும் குற்றமே, பசுவாக இருந் தாலும் வேறு விலங்காக இருந்தாலும் அனைத்தும் ஒன்றே. 
ஆனால் பாஜக பசுவதைக்கு எதிராக மட்டுமே குரல் எழுப்புகிறது” என்று கூறிய ஆசம்கான், “அயோத்தியில் ராமர் கோயில்கட்டும் விவகாரத்தை பாஜக மட்டுமேதனது குறுகிய அரசியலுக்கு பயன்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்துக் காக எவ்வளவு பணத்தை பாஜக நன் கொடையாக வசூலித்தது என்பதையும் அக்கட்சி தெரிவிக்க வேண்டும்“ என் றும் கேள்வி எழுப்பினார்.
இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பாஜக அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்த அறிக்கை மூலமாக 2013-14 மற்றும் 2014-15 நிதி ஆண்டுகளில் அக்கட்சி திரட்டிய நன்கொடைகளில் வெளிநாடுகளுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் சிலகம்பெனிகளிடமிருந்து ரூ.2.50 கோடிநன்கொடை பெற்றிருப்பது தெரிய வந்தது. 
இதுதொடர்பான செய்திகள் டிசம்பர் 16 அன்று வெளியாகின.
மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, பாஜக ஆளும் மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடைவிதித்தது மட்டுமின்றி, மாட்டிறைச்சி வைத்திருப்பதாக தெரிந்தால் கூட மிகப்பெரும் குற்றமாக கருதி மதவெறியையும் படு கொலையையும் அரங்கேற்றியது. 
அப்படிப்பட்ட கட்சி, மாட்டிறைச்சி ஏற்று மதி செய்யும் நிறுவனங்களிடமிருந்தே கோடிக்கணக்கில் நன்கொடை பெற்ற தகவல், அக்கட்சியின் முகத்திரையை கிழித்தது.
இந்தப் பின்னணியில், வெறும் 2.50 கோடி ரூபாய் மட்டுமல்ல, கணக்கில் வராமல் ரூ.200 கோடி அள விற்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறு வனத்திடமிருந்து பாஜக நன்கொடை பெற்றிருப்பதாக ஆசம்கான் எழுப்பி யுள்ள புதிய குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
உத்தரப்பிரதேசத்தில், குறிப்பாக மேற்கு உத்தரப்பிரதேசத்தில் முசாபர் நகர் உள்பட பல பகுதிகளில் மதவெறிவன்முறையை தூண்டி கொலைபாதகச் செயல்களில் பாஜகவின் சட்டமன்ற உறுப்பினரான சங்கீத் சோம் உள் ளிட்ட நிர்வாகிகள் ஈடுபட்டனர்.
குறிப் பாக தாத்ரி கிராமத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக இஸ்லாமிய முதியவர் முகமது இக்லாக், ஆர்எஸ் எஸ் - பாஜக குண்டர்களால் கொடூரமான முறையில் அடித்தே கொலை செய்யப்பட்டார். 
இதிலும் மேற்படி பாஜகஎம்எல்ஏ சங்கீத் சோம், பிரதானகுற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. 
அதே சங்கீத் சோம், உத்தரப்பிரதேசத் தில் இஸ்லாமிய பெயரில் மிகப்பெரும்மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனம்நடத்துவதும் அம்பலமாகி  ஊடகங் களில் வெளியானது. 
பாஜகவுக்கு பார்தி, ஆதித்ய பிர்லா குழுமங்கள் அதிக அளவில் நன்கொடை வழங்கியுள்ளதாகவும், 2014-15ம் ஆண்டில் பாஜக மட்டும் ரூபாய் 437 கோடி நன்கொடையாக பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பெறப்படும் நன்கொடைகள் பற்றிய விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் அறிக்கையாக அளிக்க வேண்டும். அவ்வாறு அளிக்கப்பட்ட அறிக்கை விவரங்களை ஜனநாயக சீரமைப்புக்கான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


அதன்படி பார்தி குழுமம், தனது அறக்கட்டளையின் வாயிலாக 132 கோடி ரூபாய்யை பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு நன்கொடையாக அளித்துள்ளது. இதில் பாஜகவுக்கு மட்டும் 107 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளது. இது அக்கட்சி பெற்ற மொத்த நன்கொடை தொகையில் 25 சதவிகிதமாகும். அதேபோன்று ஆதித்ய குழுமம் தனது அறக்கட்டளையின் வாயிலாக பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு 117 கோடி ரூபாய்யை நன்கொடையாக அளித்துள்ளது. அரசியல் கட்சிகள் சுமார் 92 சதவிகிதம் நன்கொடையை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பெற்றுள்ளன. 
===========================================================================================
முகநூல் 


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?