டாக்டர்களும் ,இன்ஜினியர்களும்



நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரி அட்மிஷன் பெறுவதற்காக கள்ள சந்தையில் ரூ.12 ஆயிரம் கோடி வரை கருப்பு பணம் புழங்குவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. 
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான அட்மிஷனுக்கு கள்ள சந்தையில் கோடிக்கணக்கில் கருப்பு பணம் புழங்குவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. 
இது தொடர்பாக ஆங்கில ஏடு ஒன்று வெளியிட்ட செய்தியில், நாடு முழுவதும் 422 மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. 
அவற்றில் 224 கல்லூரிகள் தனியார் கல்லூரிகள் ஆகும். இந்த கல்லூரிகள் நாடு முழுவதும் உள்ள மொத்த மருத்துவ படிப்புக்கான அட்மிஷனில் சுமார் 54 சதவீதத்தை பகிர்ந்து கொள்கின்றன. 
தற்போது புரோக்கர்கள், ஏஜென்டுகள், கள்ளச்சந்தையினர் ஆகியோரின் இலக்கில் இந்த இடங்கள்தான் சிக்கியுள்ளதாக தெரிகிறது. 
இது தொடர்பாக ரகசியமாக நடத்தப்பட்ட ஆய்வில், 30 ஆயிரத்திற்கும் அதிகமான எம்பிபிஎஸ் இடங்கள், 9 ஆயிரத்திற்கும் அதிகமான முதுகலை மருத்துவ படிப்புகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. 
இதன் மூலம் மருத்துவ படிப்புக்கான கள்ளச்சந்தையில் சுமார் ரூ.12 ஆயிரம் கோடி கருப்பு பணம் புழங்கி வருகிறது என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு எம்பிபிஎஸ் மருத்துவ சீட்டுக்கான இடம் பெங்களூரில் ரூ.35 லட்சத்தில் தொடங்கி உத்தரபிரதேசத்தில் ரூ.1 கோடி வரை கள்ள சந்தையில் விற்பனையாவதாக அந்த அதிர்ச்சி தகவல் கூறுகிறது. 
இதில் முதுகலையில் ஒரு சில படிப்புகளுக்கு கடும் கிராக்கி உள்ள நிலையில் ரூ.3 கோடி வரை விற்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. ஆனால் பெரும்பாலான தனியார் கல்லூரிகள் ஆசிரியர்கள் பற்றாக்குறை, போதிய உள்கட்டுமான வசதியின்மை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளுடன் செயல்பட்டு வருகின்றன என்றும் கூறப்படுகிறது. 
என்ஆர்ஐ எனப்படும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான இட ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் இந்த கள்ள சந்தையில் மருத்துவ சீட்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
தற்போது ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு டாக்டர் அல்லது இன்ஜினியர் உருவாகி வருகின்றார்.
தமிழகத்தில் அதிகளவில் இன்ஜினியர்கள் உருவானாலும், அவர்களுக்குரிய வேலை கிடைப்பதில்லை என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 
அவர்கள் தங்களது படிப்புக்கு ஏற்ற வேலைக்கு செல்வதில்லை. அதுவும் தமிழகத்தில் படித்து முடித்த இன்ஜினியர்களுக்கு உரிய வேலை கிடைப்பதில்லை என்பதை சமீபத்திய புள்ளிவிவரம் உறுதிப்படுத்துகிறது.
:தமிழகத்தில் சுமார் ்650 இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. 
இதில் குறைந்தது 1.50 லட்சம் மாணவர்கள் படித்து வெளிவருகின்றனர். 
இதில் மிக சிலரே பிரபலமான கம்பெனிகளின் முக்கிய பதவிகளில் பணிபுரிகின்றனர். 
பலர் கிடைக்கும் வேலைக்கு ஏற்ப தங்களை மாற்றி கொள்கின்றனர்.
இன்ஜினியர்களை தரவரிசைப்படுத்தி தலா 25% என 4 பிரிவுகளாக வகைப்படுத்தியது.  
இதில் முதல் பிரிவில், பீகார், டெல்லி, கேரளா மற்றும் ஒடிசா ஆகியவை உள்ளது. 

கடைசி இடத்தில் தமிழகம், குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, இமாச்சல பிரதேசம் ஆகியவை உள்ளன.
ஐடி / பிபிஓ கம்பெனிகளில்ஆண்டுக்கு 45,000 பேர் தேர்வாகின்றனர். 
இதில் கல்லூரிகளின் வளாகத்தேர்வில் 35,000 பேரும்,  கல்லூரிக்கு வெளியே 10,000 பேரும் தேவு செய்யப்படுகின்றனர். 
ஆனால் ஒவ்வொரு வருடமும் இன்ஜினியரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை 5 சதவீதம் அதிகரித்து வருகிறது. 
இதனால் அதில் படித்து முடிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. 
இன்ஜினியரிங் மாணவர்களுக்கு உரிய வேலை கிடைப்பதில் தென்மாநிலங்களில் கேரளாதான் முதலிடம் பிடித்துள்ளது. 2ம் இடத்தில் கர்நாடகாவும், 3வதாக ஆந்திராவும் உள்ளது. தமிழகம் இவர்களுக்குப் பின்னர்தான்.
டெல்லி மற்றும் பெங்களுருவில் அதிகளவாக படித்து முடித்த இன்ஜினியர்கள் உடனடியாக வேலைக்கு செல்கின்றனர். 
இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 
நாட்டிலுள்ள 80% இன்ஜினியர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். 
கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்தவர்களில் 10% மட்டுமே வேலைக்கு செல்கின்றனர். 
டெல்லியில் 100க்கு குறைவான இன்ஜினியரிங் கல்லூரிகள் இருந்தாலும், அங்கு படித்தவர்கள் பிரபல நிறுவனங்களில் பணிக்கு சேர்ந்துள்ளனர். 
தமிழகத்தில் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே அன்றி, மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் வகையில் அவை கல்வி போதிப்பதில்லை.கல்விக்கட்டணங்க்களை அதிகரித்து கொள்ளையடிப்பதே அவைகளின் நோக்கமாக உள்ளது.
தங்களிடம் மாண்வர்கள் அதிகம் சேர வேண்டும் என்பதினால் பல நிறுவனங்களை பணம் செலவிட்டு வலுக்கட்டாயமாக தங்கள் கல்லூரியில் வந்து வளாகத் தேர்வை நடத்த வைக்கிறனர். அதில் மாணவ்ர்கள் தேர்வாவது குறைவு.அப்படியே அங்கு தேர்வானாலும் பணிக்கு அழைப்பு அனுப்பப்படுவதில்லை. மேலும் அந்தந்த நிறுவனங்களில் உள்ள கேரளா உட்பட்ட பிற மாநில அலுவலர்கள் தங்கள் மாநில,மொழி மாணவர்களையே தேர்ந்தெடுக்கின்றனர் என்ற குர்றச்ச்சாட்டு உள்ளது. 
 எனவே, பொறியியல் கல்வி நிறுவனங்கள் தங்களது தரத்தை மேம்படுத்தினால் மட்டுமே, அதில் பயிலும் மாணவர்களுக்கும் உரிய வேலைவாய்ப்பு கிடைக்கும் .
அதுவரை இஞ்சினியரிங் கல்லூரிகள் நடத்துபவர்கள் தான் கோடிகளை குவிப்பார்கள்.
===============================================================================================
இன்று,
ஜனவரி-31.

  • தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம் இறந்த தினம்(1987)

 நாகேஷ் நினைவு தினம்[ 2009]


  • நவூறு விடுதலை தினம்(1968)
  • அமெரிக்காவின் வெற்றிகரமான முதலாவது செய்மதியான எக்ஸ்புளோரர் 1 விண்ணுக்கு ஏவப்பட்டது(1958)
  • யூகொஸ்லாவியாவில் சோவியத் முறையிலான அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டு, 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது(1946)

 நாகேஷ்

பெற்றோர் கிருஷ்ணராவ் - ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன். பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்லப் பெயர் - குண்டப்பா!

பூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராகப் பணியாற்ற, குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது. 
தாராபுரம் பீமராய அக்ரஹாரம்தான் நாகேஷ் வளர்ந்த தொட்டில்!
பள்ளி நாடகத்தில் நாகேஷுக்கு எமன் வேஷம். வசனம் பேசிக்கொண்டே பாசக் கயிற்றினை வீச வேண்டும். இவர் வீசிய பாசக் கயிறு எசகுபிசகாக ஒருவர் கழுத்தில் போய் விழுந்தது. பள்ளித் தலைமை ஆசிரியரின் கழுத்து அது!
* இளம் வயதில் வீட்டில் கோபித்துக்கொண்டு ஹைதராபாத்துக்கு வந்தவர். ரேடியோ கடை, ஊறுகாய் கம்பெனி எடுபிடி, மில்லில் கூலி வேலை என்று பல வேலைகள் பார்த்திருக்கிறார்!
 கோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி. ஆர்ட்ஸ் காலேஜில் படித்தபோது, அடுத்தடுத்து மூன்று தடவை அம்மை போட்டது. முகம் முழுக்க அம்மைத் தழும்புகளை வைத்துக்கொண்டு பலரது முகத்தை மலரவைத்தது அவரது நடிப்பின் வெளிச்சம்!
* முதன்முதலில் நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார். அன்று அவரதுநடிப்பைப் பாராட்டி, முதல் பரிசை வழங்கியவர் எம்.ஜி.ஆர்!
** 'நாகேஷ் என் வாழ்வில் நட்சத் திரமாக, மூத்த அண்ணனாக, அறிவுரை சொல்லும் நண்பனாக, அறிவுரை கேட்கும் அப்பாவியாக, சொல்லிக்கொடுத்த ஆசானாக, சொல் பேச்சுக் கேட்கும் மாணவனாகப் பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்' என்று சொன்னவர் கமல்ஹாசன்!

* 'பஞ்சதந்திரம்' ஷூட்டிங். உணவு இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், 'கோழி இன்னும் சாகலையாப்பா?'

* 'தசாவதாரம்' கடைசி நாள் ஷூட்டிங் குக்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம், 'என் கடைசிப் படம் நல்ல படம். I am honoured-டா கமல்!'

* தாம் வாங்கிய பரிசுகள், ஷீல்டுகள் எதையும் வீட்டு ஷோகேஸில் வைக்கும் பழக்கம் இல்லாதவர்!
* இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் பிறந்தது - செப்டம்பர் 27, 1933-ல். மறைந்தது ஜனவரி 31, 2009-ல்!

* 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனுக்கு 'நம்மவர்' படத்துக்காக மட்டும் தேசிய விருது கிடைத்தது!
===============================================================================================
அடி,உதை பட்டியல் 
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., பழ.கருப்பையா வீட்டை, சிலர் தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள, தி.மு.க., தலைவர் கருணாநிதி, ஏற்கனவே, அ.தி.மு.க.,வினரால் தாக்கப்பட்டவர்கள் மற்றும் பழிவாங்கப்பட்டவர்களை பட்டியலிட்டு உள்ளார்.
அப்பட்டியல் வருமாறு:-
* முன்னாள் கவர்னர் சென்னா ரெட்டி, திண்டிவனம் அருகே தாக்கப்பட்டார் -
* தலைமை தேர்தல் ஆணையராக இருந்த டி.என்.சேஷன், சென்னை விமான நிலையத்தில், பல மணி நேரம் சிறை வைக்கப்பட்டார். பின், அவர் தங்கியிருந்த ஓட்டல் தாக்கப்பட்டது
* பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கப்பட்டார்
* முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், திருச்சி 
விமான நிலையத்திலிருந்து, காரைக்குடி செல்லும் வழியில் தாக்கப்பட்டார்
* எம்.ஜி.ஆர்., நினைவு இல்ல பொறுப்பாளராக பணியாற்றிய முத்து மீது, கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு போடப்பட்டது
* முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி,சந்திரலேகா மீது, 'ஆசிட்' வீசப்பட்டு, அவரது முகம் சிதைக்கப்பட்டது
* எம்.ஜி.ஆர்., மன்ற மாநில தலைவராக இருந்த, எம்.ஜி.சுகுமார் மற்றும் சிலர், ராமநாதபுரம் மாவட்டத்தில் தாக்கப்பட்டனர்
* முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.ராதா தாக்கப்பட்டார்.
* அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் வீட்டில் புகுந்து, அவரை தாக்கினர்
* மூத்த வழக்கறிஞர் விஜயன், வழக்கிற்காக டில்லி புறப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், கோடம்பாக்கம் வீட்டில் தாக்கப்பட்டார்
* தி.மு.க., மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், உடல் முழுவதும் அரிவாளால்வெட்டப்பட்டு, பிழைப்பாரோ... மாட்டாரோ... என்ற அளவில், ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டார்.
* வளர்ப்பு மகன் சுதாகரன் மீதே, 'ஹெராயின்' வைத்திருந்ததாக வழக்கு போடப்பட்டது.
* அ.தி.மு.க., ஆட்சியிலேயே, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வாக இருந்த துாத்துக்குடி ரமேஷ், மதுராந்தகம் சொக்கலிங்கம், உப்பிலியாபுரம் ரவிச்சந்திரன் ஆகியோர் தாக்கப்பட்டனர்.

* த.மா.கா., மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ், சட்டசபை உறுப்பினர் விடுதிக்கு வெளியில் தாக்கப்பட்டார்
* ஜெயலலிதாவுக்கு எதிராக, நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், கோவை வேளாண் பல்கலைக் கழக மாணவியர், கல்விச் சுற்றுலா சென்ற நேரத்தில், அவர்கள் சென்ற பஸ் தீ வைத்து கொளுத்தப்பட்டு, மூன்று மாணவியர் இறந்தனர்.
=இவைத்தவிர காவல்துறையை ஏவி அதன்  மூலம் தாக்கப்பட்டவர்கள் பட்டியல் தனி.
இவ்வாளவு ஏன் ?
இந்தப்பட்டியலை போட்ட கலைஞரே  நள்ளிரவில் எந்த வித காரணமுமின்றி வீட்டின் கதவை உடைத்து காவல் துறையால் தாக்கி சிறையில் அடைக்கப்பட்டவர்தானே ?
அதை தட்டிக்கேட்ட முரசொலி மாறன் ,டி .ஆர்.பாலு ஆகியோர் மத்திய அமைச்சர்களாக இருந்தும் தமிழக காவல்துறையால் தாக்கப்பட்டவர்கள்தானே?அந்த தாக்குதலால்தானே சில நாட்களில் முரசொலி மாறன் இறந்தார்.
அதை கொண்டாட சிறிதும் மனிததன்மையின்றி அதிமுகவினர் அவர் வீட்டருகே பட்டாசு வெடித்து  கூச்சல் போட்டதையும்இந்த  தமிழ் நாடு பார்க்கத்தானே செய்தது.

இது அன்று 
இது இன்று.
"நான் சிறையில் இருக்கும் போது கலைஞர் தான் என்னை பாத்தார். நானாக  போய்  பார்க்க வில்லை"
 ‪=‎வைகோ‬
{வைகோ நீங்கள்தான் உங்கள் அன்பு சகோதரியால் உள்ளே வைக்கப்படிருந்தீர்களே ,பின்னே எப்படி போய் பார்ப்பீர்கள்?]
===============================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?