இந்த ஊழல் போதுமா?இன்னும் கொஞ்சம் வேண்டுமா?


காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ்.. இளங்கோவன்  வெளியிட்ட தமிழக அரசின் ஊழல் விவரம்:


1,எஸ்.முத்துக்குமாரசாமி தற்கொலை

திருநெல்வேலி மாவட்ட வேளாண் பொறியியல் துறைக்கு, ஏழு ஓட்டுனர்களை நியமனம் செய்ய, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து மூப்பு பட்டியல் பெற்று, அதிலிருந்து தேர்வு செய்து, கலெக்டர் மூலமாக பணி ஆணை வழங்க முத்துக்குமாரசாமி முடிவு எடுத்திருந்தார்.இதை அறிந்த வேளாண் அமைச்சர், 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி, உதவியாளர் மூலம், 'நான் சொல்லும் நபர்களுக்குத் தான் பணி ஆணை வழங்க வேண்டும்' என, மிரட்டியுள்ளார். இதை செய்யாததால், அவரிடம் பணம் கேட்டும் மிரட்டப்பட்டிருக்கிறது. இந்த மிரட்டலுக்கு பயந்து, முத்துக்குமாரசாமி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,க்கு பதிலாக சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்.
2,மின் கொள்முதல் ஊழல்
மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அப்போதைய மின் வாரிய தலைவர் ஞானதேசிகன் ஆகியோர் கூட்டு சதியின் காரணமாக, தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து, மின்சாரம் கொள்முதல் செய்வதால், ஆண்டுக்கு, 5,000 கோடி ரூபாய், மின் வாரியத்துக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

3,கோகோ கோலா நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்கீடு

ஈரோடு மாவட்டம், பெருந்துறை, 'சிப்காட்' தொழில் வளாகத்தில், பன்னாட்டு நிறுவனமான கோகோ கோலா குளிர்பான தயாரிப்புக்காக, தமிழக அரசு, 72 ஏக்கர் நிலத்தை, 99 ஆண்டுகள் குத்தகையில், ஆண்டு ஒன்றுக்கு, 1 ஏக்கருக்கு, ஒரு ரூபாய் தரை வாடகை நிர்ணயித்துக் கொடுத்ததில், மிகப் பெரிய முறைகேடு உள்ளது. தற்போது, ஒப்பந்தம் ரத்தாகி விட்டாலும், விசாரித்தால் ஊழல் வெளிப்படும்.

4,உயர் கல்வித் துறையில் ஊழல்

பல்கலைக் கழக துணைவேந்தர் பதவிகள், 5 கோடி ரூபாய் முதல், 20 கோடி ரூபாய் வரை பெறப்பட்டு நிரப்பப்பட்டுள்ளன. பேராசிரியர் பணி நியமனத்துக்கு, 20 லட்ச ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளது. இப்படி, கல்லுாரிகளின் எல்லா நிலை பதவிகளுக்கும் பணம் பெற்று, நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.பல்கலைக் கழக ஆட்சிக் குழு உறுப்பினர் நியமனத்திலும் ஊழல் நடந்துள்ளது. இதையெல்லாம் விசாரிக்க வேண்டும்.

5,பள்ளிக் கல்வித் துறை

பள்ளிக் கல்வித் துறையில் எந்த நியமனம் என்றாலும், 'புரோக்கர்'களை வைத்து, லஞ்சம் வசூலிக்கின்றனர். இது, கல்வித் துறை அமைச்சர் வீரமணிக்கு தெரிந்து தான் நடக்கிறது. தமிழகத்தில், பள்ளிக் கல்வித் துறையில், ஓராண்டில் மட்டும், 10 ஆயிரம் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், கோடிக்கணக்கில் லஞ்சம் பெறப்பட்டுள்ளது; தனியார் பள்ளிகளை அங்கீகரிக்கவும் லஞ்சம் பெற்றுள்ளனர்.
=======================================================================================
.ரபி பெர்னார்ட் ஜெயலலிதாவைபேட்டி எடுகிறார்." படு தோல்வி அடைந்த மைனார்ட்டி திமுக அரசுக்கு 1,50,000 கோடி கடன் சுமையை விட்டு சென்று உள்ளது அதை எப்படி அடைக்க போறீங்க மேடம் .. எல்லாமே 1,50,000 கோடி தான்" என்று ரபி பெர்னார்ட் சிரிக்க, ஜெவும் சேர்ந்து சிரிக்க .. (2 ஜியைசொல்லுங்க்கறாங்கலாம் ) அதற்கு ஜெயலலிதா "மைனார்ட்டி
திமுக வைத்து சென்ற அனைத்து கடனும் வட்டிவுடன் செலுத்தி தமிழகத்தை கடன் இல்லா மாநிலம் ஆக்குவேன்"
என்று அன்று வசனம் பேசினார் ..ஆனால், இ்ன்றைய ஜெயலலிதாவின் ஆட்சியில்  தமிழக அரசின் கடன் சுமை
இது வரை 4,50,000 கோடி ! 

என்று அன்று வசனம் பேசினார் ..
ஆனால், இ்ன்றைய ஜெயலலிதாவின் ஆட்சியில்  தமிழக அரசின் கடன் சுமை
இது வரை 4,50,000 கோடி ! 

========================================================================================

6,ஆவின் பால் கலப்படம்

ஆவின் பால் எடுத்துச் செல்லும் ஒப்பந்தத்தை, 'தீபிகா டிரான்ஸ்போர்ட், சவுத் இந்தியா டிரான்ஸ்போர்ட்' ஆகிய நிறுவனங்கள் எடுத்திருந்தன. பால் எடுத்துச் செல்லும் போது, அதில் கலப்படம் செய்ததாக அந்த நிறுவன உரிமையாளர் வைத்தியநாதன், நிறுவன ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். இதில், பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இதில், பால்வளத் துறை அமைச்சருக்கும் பங்குண்டு. அதனால், அதையும் முறையாக விசாரிக்க வேண்டும்.

7,'லேப் டாப்'

பள்ளி மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் இலவச, 'லேப் டாப்' திட்டம் ஏற்படுத்தப்பட்டு, முதலில், 21 லட்சமும், பின், 30 லட்சமும் லேப் டாப் கம்ப்யூட்டர்கள் வாங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ், லேப் டாப் பெற்ற பயனாளிகள் பட்டியலை, தமிழக அரசு துறைகள்வைத்திருக்கவில்லை. 3,900 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ள இத்திட்டத்தில் பெரும் பங்கு ஊழலாகி விட்டது.

8,நெடுஞ்சாலைத் துறை

மாநில நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் பணியை தனியாருக்கு ஒப்படைப்பது என, அ.தி.மு.க., அரசு முடிவெடுத்தது. இதன் மூலம், பல கோடி ரூபாய் விரயமாக்கப்பட்டுள்ளது. 
ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ், பல பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட இந்த நிதியை பொய்க்கணக்கு எழுதி, போலி ஆவணங்கள் தயார் செய்து, 390 கோடி ரூபாய்க்கு கணக்கு காட்டப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டை எளிதாக கண்டறிந்து விடலாம்.

9,பாதாள சாக்கடை ஊழல்

ஈரோடு மாநகராட்சியில், பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது. இதில், திட்ட மதிப்பீட்டை உயர்த்தி, பல கோடி ரூபாய் சுருட்டி உள்ளனர். இப்படி, தமிழகம் முழுவதும் பல மாநகராட்சிகளிலும் நடந்துள்ளது.

10,உடன்குடி மின் திட்டம்
துாத்துக்குடி மாவட்டம், உடன்குடியில், 1,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய, 8,362 கோடி ரூபாயில் திட்டம் தயார் செய்யப்பட்டது. இதில், தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளிப்பதில் நடந்த பேரம் படியாததால், திட்டம் ரத்து செய்யப்பட்டது. இதில் நடந்த திரைமறைவு வேலைகளை விசாரித்தால், ஊழல் வெளிச்சத்துக்கு வரும்.

11,'டாஸ்மாக்'

முந்தைய, தி.மு.க., ஆட்சியில், 7.2 சதவீதமாக இருந்த, 'மிடாஸ்' மதுபான நிறுவனத்திலிருந்து கொள்முதல் அளவு, தற்போது, 16.62 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரத்திற்கு நெருக்கமாக இருப்பவர்களிடம் இருந்து மட்டுமே மது கொள்முதல் செய்யப்படுவதோடு, டாஸ்மாக் விற்பனை கடைகளிலும் முறைகேடுகள் இறக்கை கட்டி பறப்பதால், பல நுாறு கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது; அதையும் விசாரிக்க வேண்டும்.

12,நெல்லில் மண் கலந்து
நெல் மூட்டைகளில் கலப்படநெல்லில் மண்ணை கலந்து விற்பனை செய்து மோசடி செய்துள்ளனர். இந்த மோசடி கண்டறியப்பட்டு, மதுரை மாவட்ட, அ.தி.மு.க.,வினர் ஜேம்ஸ், சத்தியமூர்த்தி ஆகியோரை, உணவு கடத்தல் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு சொந்தமான நெல்லிலும் மணல் கலக்கப்பட்டு, மோசடி நடந்துள்ளது.

13.தொழில் துறை
'மேக்னசைட்' தாது மணல் தொழிலில் ஈடுபடும் தனியார், தமிழ்நாடு கனிம வளத் துறையின் அனுமதி பெற்றும்; பெறாமலும் நடத்தி வருகின்றனர். கனிம வளங்களுக்கான உரிமம் வழங்கும் போது, விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஆனால், அதை செய்யாததால், அரசுக்கு, ஆண்டுக்கு, 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அமைச்சர் மற்றும் அவர் மருமகன் ஆகியோர் பலன் அடைந்துள்ளனர்.

14,மின் வாரியம்
பழைய மீட்டர்களுக்கு பதிலாக, 'ஸ்டேடிக்' மின் மீட்டர்களை பயன்படுத்த, மத்திய மின்சார ஆணையம் வலியுறுத்தியது. ஆனால், எட்டு தனியார் நிறுவனங்களிடம் இருந்து 1,500 கோடி ரூபாய்க்கு, 'எலக்ட்ரோ' மீட்டர்களை கொள்முதல் செய்து, அதை வீடுகளில் பொருத்தியது, தமிழக மின்சார வாரியம். பின், எலக்ட்ரோ மீட்டர்களை கழற்றி விட்டு, ஸ்டேடிக் மீட்டர்களை பொருத்தி வருகின்றனர்.இதனால், 1,500 கோடி ரூபாய்க்கும் மேல் விரயமாகி உள்ளது. இதில் நடந்த ஊழலையும் விசாரிக்க வேண்டும்.

15,செய்தித்துறை

தியேட்டர்களில், ஒரு டிக்கெட், 120 ரூபாய் என, நடைமுறைப்படுத்தப் படுகிறது ஆனால், கேளிக்கை வரி விலக்கு கொடுக்கப்பட்ட படத்துக்கு, 90 ரூபாய் சலுகை கிடைக்கும். இதன் மூலம் வரும் வருமானத்தை, தியேட்டர் உரிமையாளர், வினியோகஸ்தர், தயாரிப்பாளர் பிரித்துக் கொள்ள வேண்டும். இப்படி வரும், பெரும் தொகைக்காக, அரசு தரப்பில் கேளிக்கை வரி சலுகை கொடுக்க, பெரும் தொகை லஞ்சமாக பெறப்படுகிறது. இப்படி மட்டும் ஆண்டுக்கு, 100 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெறப்படுகிறது.

16,போக்குவரத்து துறை

ஆம்னி பஸ்கள் அதிகம் வசூல் செய்வதில் ஊழல்; போக்குவரத்துக் கழகங்களில் பணி நியமனம்செய்வதில் ஊழல்; வாகனப் பதிவில் ஊழல்; ஓட்டுனர் பள்ளி அங்கீகாரம் அளிப்பதில் ஊழல் என, போக்குவரத்துத் துறையில் ஒவ்வொரு அங்குலமும் ஊழலில் தலைவிரித்தாடுகிறது. இதனால், ஆண்டுக்கு பல நுாறு கோடி ரூபாய்க்கு, இத்துறையில் மட்டும் ஊழல் நடக்கிறது.

17,நுாலகத் துறை
நுாலகங்களுக்கு வாங்கப்படும் நுால்களை, ஒன்றுக்கு, 10 ஆக விலை நிர்ணயம் செய்வதன் மூலம், பல கோடி ரூபாய் ஊழல் நடக்கிறது. இதையும் விசாரிக்க வேண்டும்.

18,மருத்துவத் துறை

அரசு மருத்துவமனைகளுக்காக வாங்கப்படும் உபகரணங்கள், 'எக்ஸ் - ரே' கருவிகள், 'சி.டி., ஸ்கேன்' கருவிகள் என, எல்லாவற்றிலும் ஊழலோ ஊழல். மருத்துவ காப்பீட்டிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. மருத்துவம் அல்லாத முடநீக்கியல் கல்லுாரி, நர்சிங் கல்லுாரி ஆரம்பிக்க என, பல கோடி ரூபாய் லஞ்சம் பெறப்படுகிறது.மருத்துவர்கள், செவிலியர் நியமனம், மருந்து கொள்முதல் என, எல்லாவற்றிலும் ஊழல். மருத்துவத் துறையில் பல நுாறு கோடி ஊழலால், தனியார் பாக்கெட் நிரம்புகிறது.

19,பத்திர பதிவுத் துறை

சொத்துகளை தவறாக மதிப்பிட்டு காட்டியதால், அரசுக்கு சேர வேண்டிய பதிவு கட்டணம் குறைவாக்கப்பட்டதில், பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. தமிழகம் முழுவதும் பத்திர பதிவில் வழிகாட்டி மதிப்பீட்டை குறைத்துக் காட்டி, ஊழல் செய்துள்ளனர்.
20,ரியல் எஸ்டேட் துறை

வீட்டு மனை பிரிவு சார்ந்த உள்ளூர் திட்ட குழுமத்திற்கு, ஏக்கருக்கு, 50 ஆயிரம் ரூபாய்; சி.எம்.டி.ஏ., - டி.டி.சி.பி.,க்கு, ஐந்து லட்சம் ரூபாய் வரை லஞ்சம் தந்தால் தான், அனுமதி கிடைக்கிறது. வீடு கட்டுவதென்றால், பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி தலைவர்
களுக்கு லஞ்சம்; பொறியாளருக்கு லஞ்சம் என, இந்த துறை லஞ்சத்துக்கு கணக்கே இல்லை.

21,வணிக வரித் துறை
தமிழகத்தில் அதிக வருவாய் இத்துறை மூலம் வருகிறது. வருடாந்திர மதிப்பீட்டு கணக்கை சமர்ப்பித்து குறைந்த வரியை பெறுவதற்காக, வணிகர்கள் கொடுக்கும் லஞ்சம் ஒரு பக்கம் இருக்க, பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பும் நடத்தப்படுகிறது. இப்படி, பல நுாறு கோடி வருவாய் இழப்பு அரசுக்கு ஏற்படுத்தப்படுவதால், அதை விசாரிக்க வேண்டும்.

22,கிரானைட்

தமிழகத்தில், 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுத்திய, 'கிரானைட்' ஊழல், மாநிலத்தையே உலுக்கி வருகிறது. சட்டத்துக்கு புறம்பாக குவாரி அமைத்து கிரானைட்டை சுரண்டி விற்பதன் மூலம், தமிழகம் முழுவதும் கனிம வளம் கொள்ளை போவதோடு, அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பும் ஏற்படுகிறது.

23,டீசல்

மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய டீசலை, அதிகாரிகள் இடைத்தரகர்கள் மூலம் வாங்கி, அதை வெளிச் சந்தையில் விற்று, சம்பாதிக்கின்றனர். இதில், 100 கோடி ரூபாய் வரை ஊழல் நடக்கிறது. மீனவர்களுக்கு கிடைக்க வேண்டிய பலனை, அதிகாரிகள் கொள்ளையடிக்கின்றனர்.

24,இ.எஸ்.ஐ.,

இ.எஸ்.ஐ., மருத்துவமனைகள், மருத்துவக் கல்லுாரி நடத்துவதில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என, மத்திய அரசு அறிவித்ததால், அதை முறியடிக்க, தமிழக அரசு சுகாதாரத் துறை அமைச்சர் மூலம் முயற்சி எடுத்தது. இதற்காக, மருத்துவக் கல்லுாரிகளில் படித்த மாணவர்களிடம் இருந்து, பல கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டு முறைகேடு நடந்துள்ளது.

25,பொது வினியோகம்

தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 35.32 லட்சம் டன் அரிசியில், 31.56 லட்சம் டன் மட்டும் தான், பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது; மீதி கடத்தப்பட்டுள்ளது. இதில் மட்டும், 610 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. மொத்தமுள்ள, 3,900 கோடி ரூபாயில், 19 சதவீதம் அளவுக்கு கடத்தல் நடக்கிறது.

ரேஷன் கடைகளில் விற்கப்படும் பல்வேறு பொருட்களை கடத்துவதன் மூலம், 1,977 கோடி ரூபாய், தனியார் கைகளுக்கு செல்கிறது. இதனால், தமிழக அரசுக்கு, நான்கு ஆண்டுகளில் ஏற்பட்ட இழப்பு மட்டும், 7,908 கோடி ரூபாய்.
"தமிழக அரசின் பல்வேறு துறைகளில் நடந்த ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கவர்னரிடம் ஏற்கனவே மனு அளித்தோம்.

ஏழு மாதங்கள் ஆகியும், அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அந்த ஊழல் விவரங்களை பட்டியலாக தயாரித்து, 40 பக்கங்கள் கொண்ட புத்தகமாக வெளியிட்டுள்ளோம். 
இதில், 25 துறைகளில் நடந்த ஊழல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இதைத் தவிர, ஏராளமான துறைகளிலும் சொல்ல முடியாத அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளன. அவற்றையும் ஆதாரங்களுடன் சேகரித்து வருகிறோம்; அவற்றையும் வெளியிடுவோம்.


வெள்ளச் சேதம் பற்றி, மத்திய குழு, இத்தனை காலம் கடந்து வந்து, தாமதமாக ஆய்வு நடத்துவது அதிருப்தி அளிக்கிறது.

வெள்ள நிவாரண நிதி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, நால்வருக்கு வழங்கப்பட்டுள்ளது; இப்படி பயன் பெற்றவர்களில் பலர், அ.தி.மு.க.,வினர்.ஆனால், உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. 
ஊழல் விவகாரத்தை, மக்கள் மன்றத்தின் முன், வெளிச்சம் போட்டு காட்டியுள்ளோம். மக்கள் கட்டாயம், அ.தி.மு.க.,வுக்கு தண்டனை தருவர். இந்த ஊழல்கள் தொடர்பாக யார் வழக்கு போட்டாலும், அவர்கள் கேட்டால், ஆதாரங்களை தரத் தயாராக உள்ளோம்.
அமைச்சர்கள் முதல் அடி மட்டத்தொண்டன் வரை அனைத்துமே முதல்வர் ஜெயலலிதா ஆணைக்கினங்கத்தான் செயல்படுகிறார்கள்.
அமைச்சர்கள் துறையின் ஆணைகளை கூட முதல்வர்தான் வெளியிடுகிறார்.தமிழக ஒவ்வொரு அசைவையும் ஜெயலலிதாதான் தீர்மானிக்கிறார்.
அப்படி இருக்கும் நிலையில் ஜெயலலிதாவுக்கு தெரியாமல் ஒன்றும் நடந்திருக்க வாய்ப்பேயில்லை. 
அவருக்கு தெரியாமல் நடந்தது என்றால் அதை தமிழ் நாட்டில் உள்ள சிறு குழந்தை கூட நம்பாது.

ஊழல்களை பட்டியலிட்டதால், அரசு தரப்பில் வழக்கு போட்டால், சந்திக்க தயாராக இருக்கிறோம்."
என்று  இளங்கோவன் கூறினார்.
                                                                    இது பழசு!
============================================================================================
இன்று,
ஜனவரி-08.
  • மொனாக்கோ விடுதலை பெற்றது(1297)
  • ஆல்பிரட் வெயில், புள்ளிகளையும் கோடுகளையும் கொண்ட தொலைத்தந்தியை அறிமுகப்படுத்தினார்(1838)
  • அலாஸ்காவில் ராணுவ ஆட்சி வந்தது(1900)
  • பிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான  கியூபப் புரட்சி வெற்றி பெற்று கம்யூனிஸ்ட் ஆட்சி மலர்ந்தது.(1959)
                                  ஜனவரி 8: ஸ்டீபன் ஹாகிங் எனும் நம்பிக்கை  பிறந்த தினம்.
"என்னுடைய இருபத்தி ஒரு வயதிலேயே என்னுடைய எதிர்பார்ப்புகள் மருத்துவர்களால் ஒன்றுமே இல்லாமல் ஆக்கப்பட்டுவிட்டது. 
அதற்கு மேல் நான் பெற்றது எல்லாமே போனஸ் தான். 
எதை இழந்தோம் என்பது அல்ல விஷயம் ? 
எது மிச்சமிருக்கிறது என்பதே முக்கியம் ! 
வாழ்க்கை சுகமானது !"
-ஸ்டீபன் ஹாகிங்
============================================================================================
 78வது பிறந்த நாளை கொண்டாடிய நடிகை சரோஜா தேவி,
தன் பிறந்த நாளை ஒட்டி, தமிழக வெள்ள நிவாரண நிதிக்காக, 5 லட்ச ரூபாயை, நடிகர் சங்க நிர்வாகிகளிடம் அளித்தார்.
பின்னர் அவர் கூறிய பேட்டி ;
இப்போதெல்லாம் அதிக படங்களில் நடிப்பதில்லையே ஏன்?
என் பிள்ளைகள் சம்மதித்தால் மட்டுமே நடிப்பேன். நிஜத்தில் நான் எப்படி இருக்கிறேனோ, திரையிலும் அப்படியே காட்ட வேண்டும். நிறைய பேர் நடிக்க கூப்பிடுகின்றனர்; சும்மா வந்து போகும் கதாபாத்திரத்தில் நடிக்க மனம் இல்லை.
முன்னாள் மற்றும் இந்நாள் நடிகர்களை பற்றி?
எம்ஜிஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் போன்றோர், நடிப்பில் ஜாம்பவான்கள். சிவாஜியின், ஒரு நடையிலேயே, பத்து நடைகள் பேசும். திருடாதே, அன்பே வா, எங்கவீட்டுப்பிள்ளை போன்ற பல படங்கள், பொன் விழாவை கொண்டாடின; அவர்களுடன் நடித்த படங்கள் காலத்தால் அழியாதவை.
இப்போதுள்ள நடிகர்களுக்கு, நடிக்கவும் இயக்குனர்கள் வாய்ப்பு தர வேண்டும். வெறும் சண்டை, பாட்டு 
மட்டுமே இருந்தால் எப்படி? சிவாஜி, எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் படங்களின், 'சிடி'யை போட்டு பார்த்து இப்போதுள்ள நடிகர்கள், நடிக்க கற்க வேண்டும்.
இப்போதுள்ள நடிகைகளுக்கு தாங்கள் கூறும் அறிவுரை?
நான் நடித்த போது, புடவையிலேயே, 'கிளாமரை' காட்டியிருப்போம். நடிகைகள் எப்போதும் சுய கவுரவத்தை காக்க வேண்டும். பெரியவர்களுக்கு மரியாதை தர வேண்டும். எங்களை போன்றவர்களை, பழம்பெரும் நடிகைகள் என கூறுவதை தவிர்க்க வேண்டும். எப்போதும் நாங்கள் நடிகர்கள் தான்.
நடிகர் கமல் உங்களிடம் முத்தம் கேட்டாரா
பார்த்தால் பசி தீரும் படத்தில் நடித்த போது, கமல் மிகவும் சிறுபிள்ளை. சுட்டியாக இருந்த அவனை நான் உட்பட அனைவரும் முத்தமிட்டு 
அரவணைப்போம். ஆனால், இப்போது கமல், நடிகைகளுக்கு மட்டுமே முத்தம் தருகிறார். ஒரு முறை நான் அவரிடம், 'ஏம்பா... நாங்கள் முத்தம் தரலாமா' என்றேன்; அவரும், 'தாராளமாக... நீங்கள் என் அம்மா மாதிரி... எவ்வளவு முத்தம் வேண்டுமானாலும் தரலாம்' என்றார்.
அரசியலுக்கு வந்து இருக்கலாமே?
முன்னாள் பிரதமர் ராஜிவ், என்னை அரசியலுக்கு வருமாறு அழைத்தார்; மைசூரில் போட்டியிட வாய்ப்பு அளித்தார். அரசியலில் சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்பட்டு விடும் என்பதால், 'எந்த வேலையாக இருந்தாலும் செய்கிறேன்; ஆனால், அரசியல் பதவி மட்டும் வேண்டாம்' என, மறுத்து விட்டேன்.
எம்.ஜி.ஆரோடு நடித்த போது சுவாரசியமான அனுபவம் ஏதாவது உண்டா?
நான் ஆணையிட்டால் படப்பிடிப்பு சனிக்கிழமை, இரவு நேரத்தில் 
நடந்தது. அப்போது, எம்.ஜி.ஆர்., வீட்டிலிருந்து வந்த பிரியாணியை சாப்பிட கொடுத்தார். நான், ஆஞ்சநேய பக்தை என கூறி, பிரியாணியை 
சாப்பிட மறுத்தேன். அவர், 'இந்த வயதில் இவ்வளவு பக்தியா' என, மற்றவர்களிடம் ஆச்சரியத்தோடு கூறினார்.
ஆனாலும், எம்.ஜி.ஆர்., என்னை விடவில்லை. 
நள்ளிரவு, 12:00 மணியை கடந்த போது, என்னிடம் வந்து, மீண்டும் பிரியாணியை கொடுத்து, 'ஞாயிற்றுக்கிழமை வந்து விட்டது; பிரியாணி சாப்பிடலாம்' என்றார். ஆனால் நான், 'சூரியன் வந்தால் தான் மறு நாள்' என கூறி, மறுத்து விட்டேன்.சினிமாவில் கோடிகளில் சம்பாத்தித்து கொடிகட்டி பறந்த எம்ஜிஆர் வாழ்ந்த வீடு வெள்ளத்தால் சீரழிந்து அதுவும் அவர் உண்டாக்கிய  கட்சி ஆட்சியில் இருக்கும் போதே அலங்கோலமாக இருப்பதை பார்க்க கண்ணீர்தான் வருகிறது.
படங்களை இயக்கும் ஆசை உள்ளதா?
சிவாஜி, ஒரு படத்தையாவது இயக்கி இருக்கிறாரா? படத்தை இயக்குவதை விட, கடைசி வரை நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே என் ஆசை.
தமிழ் ரசிகர்கள் பற்றி?
எனக்கு மட்டும் பெங்களூருவில் திருமணம் ஆகவில்லை என்றால், சென்னையில் தான் இருந்திருப்பேன். 
எம்.ஜி.ஆர்., மற்றும் சிவாஜி மறைந்த சென்னையில் தான், என் உயிரும் போக வேண்டும். என்னை நேசித்த தமிழ் ரசிகர்கள் இங்கு அதிகம்.
இவ்வாறு நடிகை சரோஜா தேவி கூறினார்.
==================================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?