ஜெட்லி பட்ஜெட் : சில குறிப்புகள்.



மத்திய அரசின்2016-2017 ம் ஆண்டுக்கான  செலவு திட்ட அறிக்கை வெளியாகியுள்ளது.
இந்த மே -2016ல் சில மாநிலங்களில் சட்டமன்றத்தேர்தல் நடப்பதை கண்டு கொண்டு மோடி அரசு ஒரு சமாளிப்பு ,மென்மையான பட்ஜெட்டை போட்டு தாக்கியுள்ளது.
இந்திய பட்ஜெட் என்பதே நடுத்தர மக்களின் பணத்தை வரியாக்கி பட்டென எடுத்து ஜெட் வேகத்தில் கார்பரெட்களுக்கு வரிச்சலுகைகளாக கொடுப்பதுதானே.
வரி விவரங்கள்
வருமான வரி விகிதங்களில் மாற்றம் ஏதும் இல்லை.
புகையிலைப் பொருட்கள் மீதான உற்பத்தி வரி 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிப்பு
35 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட வீட்டுக்கடன் வட்டிக்கு ரூ.50 ஆயிரம் ரூபாய் வரிச் சலுகை.
வீட்டின் மதிப்பு ரூ.50 லட்சத்துக்கு உட்பட்டிருந்தால் மட்டுமே இந்தச் சலுகை செல்லுபடியாகும்.
60 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் குறைந்த விலை வீடுகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு.
வாடகை வீட்டில் வசிக்கும் வருமான வரிதாரருக்கு ரூ.60,000 வரை வரிச்சலுகை.
வாடகை வீட்டில் வசிப்போருக்கு இதுவரை சலுகை ரூ.24,000 ஆக இருந்தது.
வரிச் சலுகைகள்
ஆட்டிசம், பெருமூளைவாதம் போன்ற நோய்கள் தொடர்பான ஆரோக்கிய காப்பீட்டு திட்டத்தின் கீழ் வரும் பொது காப்பீட்டுத் திட்டங்களுக்கு சேவை வரி விலக்கு அளித்தல்.
`இந்தியாவில் உற்பத்தி செய்வோம்‘ திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தி திறன்களுக்கு சுங்க மற்றும் கலால் வரிச் சலுகைகள் வழங்குதல்.
வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் புதிதாக இணையும் ஊழியர்களுக்கான 8.33 சதவீதம் பங்களிப்பை முதல் மூன்று ஆண்டுகளுக்கு அரசே ஏற்கும்.
ஒதுக்கீடுகள்
சிறு தொழிலில் கடன் வழங்க முத்ரா திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு ரூ.1,80,000 கோடியாக உயர்வு
`ஸ்டாண்ட் அப் இந்தியா’ திட்டத்துக்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளின் முதலீட்டு மேம்பாட்டுக்கு ரூ.25,000 கோடி நிதி ஒதுக்கீடு.
`ஸ்டார்ட் அப்’ திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் கம்பெனி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.
பருப்பு வகைகள் கையிருப்பை உறுதி செய்ய ரூ.900 கோடி ஒதுக்கீடு.
தீனதயாள் உபாத்யாயா, குரு கோவிந்த் சிங் பிறந்த நாள் விழாக்களுக்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு.
2016-17 நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை 3.5 சதவீதம் ஆக இருக்கும் என கணிப்பு.
மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்.
நாடு முழுவதும் 160 விமான நிலையங்கள் மேம்படுத்தப்படும்.
1,500 திறன் மேம்பாட்டு மையங்களுக்காக ரூ.1700 கோடி நிதி ஒதுக்கீடு.
உள்கட்டுமான துறைக்கு ரூ.2.31 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
2016-17 நிதியாண்டில் சாலை, ரயில் போக்குவரத்துத் துறைக்கான மொத்த ஒதுக்கீடு ரூ.2.18 லட்சம் கோடி.
அரசு வழங்கும் மானியத் தொகைகள் தேவைப்படுவோருக்கு நேரடியாகச் சென்றடையுமாறு ஆதார் அட்டைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடிவு செய்துள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் வறுமைக்கோட்டின் கீழ் இருக்கும் 5 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு, அந்தந்த குடும்பத்திலுள்ள பெண்களின் பெயரில் சமையல் எரிவாயு இணைப்பு வழங்க ரூ.1000 நிதி கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்காக மொத்தம் ரூ.87.769 கோடி நிதி ஒதுக்கீடு.
பிரதான் மந்திரி கிராமின் சதக் யோஜனா திட்டத்தின் கீழ் சாலைப் பணிகளுக்காக ரூ.19,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
`தூய்மை இந்தியா’ திட்டத்துக்கு ரூ.9,000 கோடி நிதி ஒதுக்கீடு.
அறிவிப்புகள்
10 அரசு கல்வி நிறுவனங்களும், 10 தனியார் கல்வி நிறுவனங்களும் உலகத்தரத்துக்கு மேம்படுத்தப்படும்.
பள்ளிச் சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புச் சான்றிதழ்கள் டிஜிட்டல் ஆவணங்களாகவும் வழங்கப்படும்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் புதிதாக 62 நவோதயா பள்ளிகள் தொடங்கப்படும்.
அனைத்து மாவட்ட சுகாதார மையங்களிலும் டயாலிஸிஸ் சிறப்பு முகாம்கள் அவ்வப்போது நடத்தப்படும். டயாலிஸிஸ் சிகிச்சைக்கான சில மருத்துவ உபகரணங்களுக்கு அனைத்து விதமான சுங்கவரியிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும்.
பொதுத் துறை - தனியார் துறை பங்களிப்பில் தேசிய டயாலிஸிஸ் சேவை திட்டம் தொடங்கப்படும்.
பிரதான் மந்திரி ஜன் ஓளஷதா யோஜனா திட்டத்தின் கீழ் தரமான பொது மருந்துகள் கிடைக்கும் வகையில், நாடு முழுவதும் 3000 அரசு மருந்துக் கடைகள் தொடங்கப்படும்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ சேவை அளிக்கும் வகையில் அரசு மருத்துவக் காப்பீடு திட்டம் தொடங்கப்படும்.
எஸ்.சி. / எஸ்.டி (தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்) தொழில் முனைவோருக்காக சிறப்பு மையம் அமைக்கப்படும்.
அடுத்த 3 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 6 கோடி இல்லங்களில் கணினி அறிவியல் அறிவை வளர்ப்பதற்கு இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
பிரதான் மந்திரி கிருஷி சிச்சாய் யோஜனாவின் கீழ் 28.5 லட்சம் ஹெக்டேர் விளைநிலத்துக்கு நீர்ப்பாசன வசதி ஏற்படுத்தப்படும்.
கிராமப்புறம் மற்றும் நகராட்சி நிர்வாகங்களுக்கு ரூ.2.87 கோடி நிதி ஒதுக்கீடு.ட கடலுக்கு அடியில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய ஊக்கத்தொகை வழங்கப்படும்.
2015- 16 நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2016-17 நிதியாண்டு அரசுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்.
7-வது ஊதிய கமிஷன், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டங்களால் 2016-17 நிதியாண்டில் கூடுதல் நெருக்கடி ஏற்படும்.
========================================================================

விலை உயருபவையும் குறைபவையும்

வரி விதிப்புகளில் மேற்கொண்டுள்ள மாற்றத்தின் எதிரொலியாக விலை உயருபவை
1.ஸ்போர்ட் யுடிலிட்டி வாகனங்கள்;
 2. சிறிய ரக கார்களுக்கு 1 சதவீத வரி, டீசல் கார்களுக்கு 2.5 சதவீதம், சொகுசு கார்களுக்கு 4 சதவீதம் வரி உயர்த்தப்படுகிறது; 
3.வெள்ளி அல்லாத ஆபரணங்கள்; 
4.பீடி நீங்கலாக சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள்; 
5.விமானப் பயணச்சீட்டு; 
6.பிராண்டட் உடைகள்; 
7.தங்க ஆபரணங்கள்; 
8.வைரம்; 
9.ஹோட்டல் உணவுகள்; 
10.செல்போன் கட்டணம்
; 11.இன்சூரன்ஸ் திட்டங்கள்; 
12. ஸ்மார்ட் ஃபோன்கள்; 
13. திரைப்பட கட்டணம்; 
14.மினரல் வாட்டர்
விலை குறைபவை:
1.டயாலிஸிஸ் மருத்துவ உபகரணங்கள்
2. பிரெயிலி தாள்களுக்கு (பார்வையற்றவர்களுக்கான பிரத்யேக தாள்) வரி விலக்கு.
3. டயாலிஸிஸ் மருத்துவச் செலவு குறைகிறது. காரணம், அனைத்து மாவட்ட ஆஸ்பத்திரிகளிலும் தேசிய இலவச இரத்த சுத்திகரிப்பு சேவை அமலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.
4. இன்டர்நெட் மோடம்; 
5. ஆம்புலன்ஸ் சேவை; 
6. செட்டாப் பாக்ஸ்
விவசாயிகளுக்கு 13 அறிவிப்புகள்
வேளாண் துறைக்கு ரூ.35,984 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிரதான் மந்திரி கிருஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் 5 லட்சம் ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்யப்படும்.
 ஒருமைப்படுத்தப்பட்ட வேளாண் மின்னணு மேடை சந்தைப்படுத்துதல் அமைப்பு துவக்கி வைக்கப்படும்.
வேளாண் சந்தைகள் இணையதளம் மூலம் இணைக்கப்படும்.
வேளாண் பொருட்களுக்கான ஆன்-லைன் சந்தைதொடங்கப்படும்.
பிரதமரின் புதிய பயிர்க் காப்பீட் டுத் திட்டத்துக்கு ரூ.5,500 கோடி ஒதுக்கீடு.
89 நீர்ப்பாசன திட்டங்கள் விரைந்து நிறைவேற்றப்படும்.
மழை வளம் நிறைந்த பகுதிகளில் இயற்கை வேளாண் முறையில் மகசூலை பெருக்க இரண்டு திட்டங்கள் அறிமுகம்.
இயற்கை வேளாண் முறையை ஊக்குவிக்க ரூ.412 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீர்ப்பாசன திட்டங்களுக்காக நபார்டு வங்கியில் பிரத்யேகமாக ரூ.20,000 கோடி முதலீட்டில் நீர்ப்பாசன நிதியம் உருவாக்கப்படும்.
பிரதான் மந்திரி கிருஷி சிச்சாய் யோஜனாவின் கீழ் 28.5 லட்சம் ஹெக்டேர் விளைநிலத்துக்கு நீர்ப்பாசன வசதி ஏற்படுத்தப்படும்.கால்நடை நலன் பேண 4 பிரத்யேக திட்டங்கள்.
விவசாயிகள் வருமானத்தை அடுத்த 5 ஆண்டுகளில் இரட்டிப் பாக்க இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.
100 நாள் வேலைத் திட்டத்துக்கு ரூ.38,500 கோடி நிதி ஒதுக்கீடு.
========================================================================
பட்ஜெட் எதிர் விளைவுகள்..,


கார்ப்பரேட் துறையினருக்கு மேலும் சலுகைகள் வாரி வழங்கியிருப்பதை மூடிமறைப்பதற்காக படாடோபமான வார்த்தைகளை பட்ஜெட் முழுவதும் “மத்திய நிதி அமைச்சர் அள்ளித் தெளித்திருக்கிறார். 
உலகப்பொருளாதாரமும், உலக முதலாளித்துவ அமைப்புமுறையும் தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாகிவரக்கூடிய சூழலில், பட்ஜெட்டில் கூறப்பட்டிருக்கிற பொது உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மற்றும் நிதி நெருக்கடியை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் காரணிகளுடன் பொருத்திப் பார்க்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது.
வேடிக்கையாகும் வேலைவாய்ப்பு
கடுமையாக உயர்ந்துள்ள விலைவாசியைக் கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையையும் அறிவிக்காத நிதியமைச்சர், பணவீக்கம் சரிந்துவிட்டதாக தம்மைத்தாமே தட்டிக்கொள்கிறார். ஆனால் மக்களின் அன்றாட வாழ்க்கையோ வேறு மாதிரியாகத்தான் இருக்கிறது.
 படித்த இளைஞர்கள் பல்லாயிரக்கணக்கானோர் வேலையின்றி வீதியிலேயே அலைந்துகொண்டிருக்கையில், திறமை வளர்ச்சி மையங்களைத் திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்று கூறியிருப்பதன் மூலம் எவ்வித பலனும் ஏற்படப் போவதில்லை. 
அரசாங்கத்தில் வேலைக்கு ஆள்எடுப்பதற்கான தடை நீடிக்கக்கூடிய சூழலில், பல தொழில் நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கானோர் வேலைகளிலிருந்து நீக்கப்பட்டு வரக்கூடிய சூழலில், முதலாளிகளுக்கு மூன்றாண்டுகளுக்கு சேமிப்பு நிதிக்காக ஒரு தொகை அளிக்கப்படும் என்று கூறியிருப்பதன் மூலம் வேலை வாய்ப்பைப் பெருக்கமுடியும் என்பது வேடிக்கையாகும்.
பொதுத்துறைகளுக்கு சாவுமணி
பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்கள் மற்றும் பங்குகள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படும் என்று கூறியிருப்பதானது பொதுத்துறைகளுக்கு சாவுமணியடிக்கக்கூடியவைகளாகும். தனியாருக்குத் தாரைவார்க்கும் துறை என்பது மிகவும் கபடத்தனமாக முதலீடு மற்றும் பொது சொத்துக்கள் மேலாண்மைத்துறை என்று மாற்றப்பட்டிருக்கிறது.
வளமான பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மேலும் விரிவான அளவில் நம் நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டிருக்கின்றன. பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருள்களுக்கு சந்தைப்படுத்த 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு வகை செய்யப்பட்டிருக்கிறது. 
பொதுத்துறை போக்குவரத்து நிறுவனங்களுக்கு முற்றிலுமாக சாவுமணிஅடிக்கக்கூடிய விதத்தில் தனியாரை அனுமதிக்கக்கூடிய விதத்தில் மோட்டார் வாகனச் சட்டம் திருத்தப்பட இருக்கிறது. பொதுசுகாதாரத் திட்டத்தில் அரசுக்கு இருந்துவந்த கொஞ்சநஞ்ச பொறுப்பையும் கைகழுவக்கூடிய விதத்தில் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
1லட்சம் மெகாவாட் மின் திட்டங்கள் என்னாயிற்று?
கிராமப்புற மின்மயம் விரைவுபடுத்தப்படும் என்று அறிவித்திருப்பது பாராட்டத்தக்கதே. 
ஆனால், இன்றையதினம் சுமார் ஒரு லட்சம் மெகாவாட் மின்உற்பத்தி திட்டங்கள் செயல்பாடின்றி இருக்கின்றன. இதனைச் சரிசெய்யாமல், தற்போதுள்ள அதீத மின்கட்டணங்களைக் குறைக்காமல், மக்களின் வாங்கும் சக்தியைப் பெருக்காமல் வெறுமனே மின் இணைப்பு கொடுப்பதாகச் சொல்வதால் எந்த உதவியும் மக்களுக்கு ஏற்படப்போவதில்லை.
வங்கிக்கடன்களை ஏமாற்றியவர்களுக்கு சுதந்திரம்

பொதுத்துறை வங்கிகளுக்கு கார்ப்பரேட் துறையினர் அளிக்கவேண்டிய தொகைகளை வசூலிக்க வலுவான நடவடிக்கை எதுவும் எடுக்காது, அரசாங்கம் பொதுத்துறை வங்கிகளைக் காப்பாற்றுவதற்காக மேலும் தொகைகள் அளிக்க இருப்பதாகக் கூறியிருக்கிறது. 
பொதுத்துறை வங்கிகளை ஏமாற்றிய கார்ப்பரேட் துறையினர் சுதந்திரமாக செல்வதற்கே இது உதவிடும்.
பி.எப்.களுக்கும் வரி விதிப்பா?
மத்திய நிதி அமைச்சர் கார்ப்பரேட் வரிகளைக் குறைத்திட அறிவிப்புகளைச் செய்திருக்கும் அதே சமயத்தில் வருமானவரி உச்சவரம்பை அதிகரிக்கவில்லை. 
இது லட்சக்கணக்கான மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களைக் கடுமையாகப் பாதிக்கும். அதுமட்டுமல்லாத தொழிலாளர்களின் ஆயுள்கால வருங்கால வைப்பு நிதிக்கு வரிவிதிக்கப்பட்டிருக்கிறது.நேரடி வரியை குறைத்திருப்பதன் மூலம் வருவாய்இழப்பு 1060 கோடி ரூபாய்களாகும்.
இத்துடன் 20 ஆயிரத்து 670 கோடி ரூபாய்க்கு சாமானிய மக்கள் மீது மறைமுக வரிமூலம் மேலும் சுமைகள் ஏற்றப்பட்டிருக்கின்றன.விவசாயத்துறையில் விவசாயிகளின் தற்கொலைகள் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில் விவசாயத்துறைக்கு அளித்திருக்கும் சலுகைகள் வெறும் கண்துடைப்பேயாகும்.
கைவிடப்பட்ட ஊழியர்கள்
மத்திய அரசு முறைசாராத் தொழிலாளர்களையும் திட்டப் பணிகளில் பணியாற்றும் ஊழியர்களையும் மீண்டும் உதாசீனப்படுத்தியிருக்கிறது. 
லட்சக்கணக்கான அங்கன்வாடி ஊழியர்கள், `ஆஷா’ ஊழியர்கள், மதிய உணவு ஊழியர்கள், இதர திட்டப்பணி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்புப் பலன்களை அறிவிக்காமல் பட்ஜெட் முழுமையாக அவர்களை கண்டுகொள்ளாமல் கைவிட்டுவிட்டது. 
பட்ஜெட்டுக்கு முன் தொழிற்சங்கங்கள் அரசிடம் முன்வைத்த கோரிக்கைகள் எதுவும் கண்டுகொள்ளப்படவேயில்லை. ஆனால் அதே சமயத்தில் முதலாளிகளின் கோரிக்கைகள் மட்டும் முழுமையாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
கடைகள் மற்றும் சிறுநிறுவனங்களில் வேலைபார்த்து வந்த தொழிலாளர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை இருந்துவந்ததைக்கூட இந்த பட்ஜெட் ஒழித்துக்கட்டிவிட்டது.
இந்த பட்ஜெட் நவீன தாராளமய நிகழ்ச்சிநிரலுக்கு வெண்சாமரம் பூசி, சாமானிய மக்கள் மற்றும் தொழிலாளர்களின் வயிற்றில் அடித்து, கார்ப்பரேட் மற்றும் பெரும் வர்த்தக நிறுவனங்களின் முதலாளிகளைத்தான் குஷிப்படுத்தி இருக்கிறது.

=======================================================================================
இன்று,
மார்ச்-01.
  • தமிழ் திரைப்பட நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்(1910)
  • திமுக பொருளாளர் ஸ்டாலின் பிறந்த தினம்(1953)
  • ஸ்பெயினில் யூரோ நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது(2002)
  • ரியோ டி ஜெனிரோ நகரம் அமைக்கப்பட்டது(1565)
  • தென்கொரியா விடுதலை தினம்.

=======================================================================================
இதை கொஞ்சம் முழுசா படியுங்க ப்ரெண்ட்ஸ் !!!
இது குன்கா கணக்கா, கு.சாமி கணக்கா தெரியல.
தமிழ் மக்கள் இதை தயவு செய்து படியுங்கள் பகிருங்கள் .
தாமோ சிவகுமார் திமுக
தமிழ் நாட்டில் பிறந்த தமிழ்மக்களின் கவனத்திற்கு 
📢📢📢📢
நம் தமிழக அரசு நம் தமிழ் நாட்டின் 💶 கடன் தொகையா வெளியிட்டுள்ளது அதில் தமிழக மக்கள் ஒவ்வொருவர் மீதும் சராசரியாக 3,528.5714285714 ரூபாய் கடன் 😱 எப்படி என்று தெரியவில்லையா
விளக்கம் :
தமிழக அரசின் கடன் தொகை:
247,000,000,000 ரூபாய்
நம் மக்கள் தொகை 7 கோடிக்கு மேல் இருந்தாலும் 7 கோடி என்று கணக்கிடுவோம்
📱
247,000,000,000
7,00,00,000
__________________
3,528.5714285714
__________________
இது சரியா ஏன் நம் தமிழக அரசிற்கும் வருமானம் வரவில்லையா
தமிழக அரசின் டாஸ்மாக்கில் மட்டும் வருமான விளக்கம்
ஒருநாளில் நம் தமிழகத்தில் டாஸ்மார்க்கில் ஒரு நபர் 90 ரூபாய் (1குவாட்டர்)
நம் தமிழ் நாட்டில் குடிகாரர்கள் அதிகம் நம் சராசரியாக 50 லட்சம் பேர் மட்டுமே கணக்கிடுவோம்
கணக்கு விவரம்:
1*90 = 90
90*5000000= 450000000 ரூபாய்
ஒரு நாளில் அப்படியானால் ஒரு வருடத்திற்கு
450000000*365= 164250000000 ரூபாய்
ஆட்சி காலம் 5 வருடம்
164250000000*5= 821250000000 ரூபாய்
கடன் தொகை 247,000,000,000 ரூபாய் கழித்தால்
821,250,000,000
247,000,000,000
----------------------------
574,250,000,000
---------------------------
மற்ற செலவுகள் தோராயமாக 470,000,000,000 ரூபாய்
574,250,000,000
470,000,000,000
---------------------------
104,250,000,000
----------------------------
104,250,000,000 ரூபாய் எங்கே !?
இதை கேட்டா நம்மை கிருக்கன்னு சொல்வானுங்க !!?
‪#‎DMK‬ ‪#‎Dmkfor2016‬
தாமோ சிவகுமார் திமுக இன் புகைப்படம்.







இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?