காலத்தின் கட்டாயம்?



மார்ச்  -1ல் ,தமிழ் நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
அன்று  முதலே தேர்தல் விதிகள் நடமுறைக்கு வந்தும் விடும்.

அது நடை முறை என்றாலும்  தேர்தல் ஆணையத்தை மத்தியிலும்,மாநிலத்திலும் தனது கைப்பிடிக்குள் வைத்திருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அந்த நடை முறைகளை கண்டு கொள்ளப்போவதில்லை.அவர் எடுக்கும் நடவடிக்கைகள்தான் ஆணையத்தின் நடை முறைகளாகி விடுகின்றன.
இதை கடந்த பிரவீன் குமார் காலம் முதல் காட்டிவருகிறது .இந்திய தேர்தல் ஆணையம் இவர் காலத்தில் இருந்துதான் தமிழ் நாடு மாநில தேர்தல் ஆணையம் போல் மாறி யது.மத்தியிலோ சேசன் காலத்துடன் நடு  நிலை மாறி விட்டது.
 கடந்த சட்டமன்ற ,பாராளுமன்ற தேர்தல்களில் அதிமுக முறைகேடுகளை பற்றி ஆதாரத்துடன்,படங்களுடன் எதிர்கட்சிகள் கொடுத்த குற்றசாட்டுகளுக்கு இன்றுவரை எந்த வித நடவடிக்கைகளும் இந்திய தேர்தல் ஆணையம் எடுத்ததாக தெரியவில்லை.
பதட்டமே இல்லாத சட்டமன்ற தேர்தலில் 144 தடை சட்டம் தேர்தல் ஆணையர்  பிரவின்குமார் கொண்டுவந்தது இந்தியாவிலேயே முதல்முறை.
கலவரமும்,பதட்டமும் நிறைந்த காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலுக்கு கூட 144 தடை சட்டம் இதுவரை பிறப்பிக்கப்பட்டத்தில்லை.
ஆனால் பிரவின் குமார் பிறப்பித்த தடை சட்டம் எதிர் கட்சிகளுக்கு மட்டுமே பொருந்தியது.பொருந்த வைக்கப்பட்டது.திமுக உட்பட்ட கட்சியினர் பிரசாரம் செய்ய தடை வந்தது.
ஆனால் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு காவல்துறை பாதுகாப்புடன் பணம் கொடுக்க உதவியது.
அதை தடுக்க வந்த மாற்றுக்கட்சியினர் 144 ஐ பயன் படுத்தி கைது செய்த அவலங்கள்தான் நடந்தேறியது.
இதை அனைத்துக் கட்சியனரும் கடுமையாகக் கண்டித்தும் இன்றுவரை நடவடிக்கை ஒன்றும் இல்லை.
மாறாக முறைகேடுகள் அனைத்துக்கும் காரணமான பிரவின் குமார்  தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பதவி மாறுதலில் அழைக்கப்பட்டுள்ளார்.

தற்பொதைய 2016 சட்ட மன்ற பொதுத்தேர்தலில் அவர் தனது பணியை மத்தியில் இருந்தே செவ்வனே நடத்துவார்.
தொகுதி வாக்காளர் எண்ணிக்கையை விட அதிக வாக்குகள் தற்போதைய ஆர் .கே.நகர் இடைத்தேர்தலில் பதிவாகிய கொடுமையும் ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியில் நடந்துள்ளது.
அனைத்து வாக்குகளும் இரட்டை இலைக்குத்தான்.
அதற்கு இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை?
தற்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலேயும் கண்கானிப்பு காமிராக்கள் பொருத்தப் பட்டுள்ளன.அதை சோதித்தாலே கள்ள வாக்காளர்கள் மாட்டிக்கொள்வார்கள்.
அது கூட வேண்டாம் அந்த தொகுதிக்கே சம்பந்தமில்லாத அதிமுக வட்ட செயலார்கள் ,கவுன்சிலர்கள்,கட்சி நிரவாகிகள் பலர் கூட்டம்,கூட்டமாக வந்து மீண்டும் ,மீண்டும் வந்து வாக்குகளை போட்டுத்தள்ளியதையும்,கைகளில் பல முறை அடையாள மையிருப்பதை காமிராக்களில் பெருமையாக காட்டி பேட்டி கொடுத்ததையும் நக்கீரன் உட்பட பல பத்திரிகைகள் படத்துடன் செய்தி வெளியானதே அதை வைத்து எதிர்கட்சிகள் மனு கொடுத்ததே அதற்காவது நடவடிக்கை எடுத்திருக்கலாமே ?
அல்லது நடவடிக்கை எடுப்பதாக நடித்தாவது இருக்கலாமே?
எதுவும் இல்லை.ஆனால் அந்த வாக்கு சாவடியில் மிரட்டப்பட்டு உயிருக்கு பயந்து பணி புரிந்த அலுவர்கள் மீது விசாரணை என்று கதையை மூட்டைக்கட்டி வைத்து விட்டார்கள்.
இப்போது கூட 40 லட்சத்துக்கும் அதிகமாக வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.ஆனால் பல லட்சம் வாக்களர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.உயிருடன் இருப்பவர்கள் பலர் இறந்ததாக நீக்கப்பட்டுள்ளார்கள்.அனைவரும் திமுக உட்பட்ட கட்சியினர்.
அது தொடர்பாக திமுக ஆதாரங்களுடன்சென்னையிலும்,டெல்லியிலும்  மனு கொடுத்தும்  நடவடிக்கை.???
ஜெயலலிதா கூட்டணியில்லை என்று கூறினாலும் அவர் மறைமுகமாக தேர்தல் ஆணையம்,காவல்துறையினர் கூட்டணியை அமைத்துக்கொண்டுள்ளார்.
நடக்கவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலை பலகட்டமாக குறைந்த பட்சம் இரு கட்டமாக நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தற்போதைய முதல்வர் ஜெயலலிதா அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிகிறது.
பாதுகாப்பு,வெள்ளம்,காரணங்களைக்காட்டி இருகட்ட தேர்தல் நடத்த சொல்லப்பட்டிருக்கிறது.
ஒரே நேரம் ஒருகட்டமாக தேர்தல் நடந்தால் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள்[?]பல தொகுதிகளில் ஒருவரே ஒரே நேரத்தில் எப்படி இரட்டை இலைக்கு வாக்களிக்க இயலும்?
அதற்கு இந்திய தேர்தல் ஆணையமும் ஒத்துப்போகக்கூடிய இணக்கம் உருவாகியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் எதிர்கட்சிகள் அனைத்தும் இணைந்து பல கட்ட தேர்தலை எதிர்த்து ஒரே கட்டமாக நடத்த வலியுறுத்த வேண்டும் .
வெள்ள சேத பாதிப்பை காரணம் காட்டினால் வெள்ள பாதிப்பில் இருந்து அந்த மக்கள் மீள்வதாக எண்ணி ஆணையம் என்று தேர்தல் நடத்த உத்தேசித்துள்ளதோ அன்றே எல்லா தொகுதிகளுக்கும் ஒட்டு மொத்த தமிழ் நாட்டுக்கும் பொதுத்தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தை மற்றகட்சியினர் வையுறுத்த வேண்டும்.
இல்லையெனில் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக அமைவது காலத்தின் கட்டாயமாகி விடும்.
எதிர்கட்சியில் அமர கூட திமுக,தேமுதிமுக,பாமக,ம.ந.கூ ,வினருக்கு நாற்காலிகள் கிடைப்பது அரிது.
==============================================================================================
இன்று,
பிப்ரவரி-04.

  • சர்வதேச புற்றுநோய் தினம்
  • இலங்கை சுதந்திர தினம்(1948)
  • பிலிப்பைன்ஸ்-அமெரிக்க போர் ஆரம்பமானது(1899)
  • முதல் முறையாக ரேடியம் ஈ என்ற செயற்கைக் கதிரியக்க மூலகம் உருவாக்கப்பட்டது(1936)
  • யூகொஸ்லாவியா அதிகாரபூர்வமாக, சேர்பியா மற்றும் மொண்டெனேகுரோ எனப் பெயர் மாற்றப்பட்டது(2003)





==============================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?