திமுக தேர்தல் அறிக்கை

 முக்கிய அம்சங்கள்.

இன்றைய அளவில் தமிழ் நாட்டில் ஒவ்வொருவரும் எதிர் பார்த்து காத்திருந்தது திராவிட முன்னேற்றக் கழகத்தின் 2016 தேர்தலுக்கான செயல்பாட்டு அறிக்கையைத்தான்.அ .இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா உட்பட அந்த அறிக்கை வெளியீட்டைத்தான் எதிர்பார்த்திருந்தார்.
வெளியிட்டை காண  போயஸ் தோட்டத்தில் கலைஞர் தொலைக்காட்சியின் நேரலைதான் ஓடிக்கொண்டிருந்திருக்கும் .
காரணம் அதிமுக இதுவரை தேர்தல் அறிக்கை தயாரிக்கவில்லை.அதில்லாமலே தீவுத்திடலில் அம்மையார் மது விலக்கு பற்றி பேசிவிட்டார்.அதற்கு காரணமே திமுக வின் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு கண்டிப்பாக இடம் பெறும் என்ற எண்ணம்தான்.
ஆனால் அத்துடன் விட முடியாதே.
வேறு புதிய அம்சங்கள்,இலவசங்கள் இருந்து விட்டால்?அதை விட ஒரு படி மேலானதை அறிவிக்க வேண்டுமே.
ஆனால் திமுக தேர்தல் அறிக்கை இலவசங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழர்களை கையேந்த வைப்பதில் இருந்து காத்துள்ளது.
அத்துடன் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஐந்தாண்டுகளாக இதோ தருகிறோம்.அடுத்த மாதம் தருகிறோம் என்று பூச்சி காட்டிய குடும்ப அட்டை ஸ்மார்ட் கார்டு விண்ணப்பித்த 15 நாட்களில் என்று உறுதி தரப்பட்டுள்ளது.
சரி.இனி நீங்களே திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய விபரங்களை படித்துக்கொள்ளுங்கள்.

1. நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆய்வு மையம் உருவாக்கப்படும் 
2. டாஸ்மாக் நிறுவனம் கலைகப்பட்டு அதில் பணியாற்றுவோருக்கு மாற்றுப்பணி வழங்கப்படும். 
3. மது அடிமைகளுக்கு சிறப்பு சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும். 
4. விவசாயிகளுக்கு கடன்கள் முழுக்க தள்ளுபடி 
5. மகளிருக்கு 9 மாதகால காலம் பேறுகால விடுமுறை அளிக்கப்படும் 
6. மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு திட்டம் கொண்டுவரப்படும் 
7. அனைத்து விவசாயிகளுக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் 
8. வெள்ள சேதங்களை தடுக்க 5 ஆயிரம் கோடியில் திட்டம் 
9. தமிழகம் முழுவதும் அறிஞர் அண்ணா உணவகங்கள் அமைக்கப்படும் 
10. அனைத்து நாட்களிலும் ரேசன் பொருட்கள் வழங்க நடவடிக்கை 
11. மத்திய அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழியாக தமிழ் இடம்பெற நடவடிக்கை 
12. ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்படும் 
13. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.7 வரை குறைக்கப்படும் 14. 3 லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் 
15. விசைத்தறிக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் 
16. கரும்புக்கு கொள்முதல் விலையாக டன் ஒன்றுக்கு 3,500 வழங்கப்படும் 
17. சுயதொழில் தொடங்க ஒரு லட்சம் நிதி வழங்கப்படும் 
18. மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு சட்டம் கொண்டுவரப்படும் 
19. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை 
20. மீனவர்களுக்கு 5 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் 
21. தமிழகம் முழுவதும் முதியோருக்கு கட்டணமில்லா பயணச்சலுகை 
22. சென்னை முதல் ஓசூர் வரை நெடுஞ்சாலை தொழிற்சாலைகள் திட்டம் 
23. மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும் 
24. மீனவர் சமுதாயத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை 
25. 10 ஆயிரம் கோடி செலவில் தமிழகத்தில் உள்ள ஏரிகள் தூர் வாரப்படும் 
26.தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவோடு பால் வழங்கப்படும் 
27.மாதத்தின் அனைத்து நாட்களிலும் ரேசன் பொருட்கள் வழங்கப்படும் 
28.மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.5000 தரப்படும்

 29.விண்ணப்பித்த 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வடிவில் குடும்ப அட்டை வழங்கப்படும் 
30.மாணவர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை 
31.மீனவர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்ப்டும் 
32.படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித் தொகை 
33.ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 7 வரை குறைக்கப்படும் 
34.மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும் 
35.மருத்துவக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படும் 
36.மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி 
37.முதியோர் உதவித்தொகை ரூ. 1300 ஆக உயர்த்தப்படும் 
38. தமிழகத்தில் மீண்டும் சட்டமேலவை அமைக்கப்படும் 
39. பத்திரிக்கையாளர்கள் மீதான அவதூறு வழக்குகள் திரும்பப் பெறப்படும் 
40. அனைத்து மாணவர்களுக்கும் 2ஜி 4ஜி சேவை வழங்கப்படும்.

        இந்த தேர்தல் அறிக்கையை தயாரிக்க அமைக்கப்பட்ட குழு மாவட்டம்,மாவட்டமாக பயணம் செய்து மக்களை சந்தித்து குறைகளை கேட்டிருக்கிறது.அதுவும் ஸ்டாலின் நமக்கு நாமே பயணத்தில் அறிந்த,கண்ட தகவல்களும் இணைத்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அந்த உழைப்பின் வியர்வை இத்தேர்தல் அறிக்கை முழுவதும் தெரிகிறது.
ஆனால் இந்த உழைப்பை,வியர்வையை தோட்டத்தின் குளிர்காற்றில் ஓய்வெடுத்துக்கொண்டே நகல் எடுத்து வெளியிட காத்திருப்போர் அனுபவிப்பதுதான் காலத்தின் கட்டாயம்.

==================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?