திராவிட மாயை?




 தேர்தலில் பாமக,சைமன் உட்பட சிலர் 50 ஆண்டுகால ஆட்சிகளால் தமிழகத்தை திராவிட இயக்கங்கள் சீரழித்து விட்டதாகவும். அதனால் மக்கள்மாற்றத்தை எதிர்பார்ப்பதாகவும் மிகவும் எதிர்பார்ப்புகளுடன் மேடைகளில் முழங்கினர்.
ஆனால்  தி.மு.க.,அ  தி.மு.க.,வுக்கு அதாவது திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக எந்த கூட்டணியையும், மக்கள் ஏற்கவில்லை என்பது இந்த தேர்தல் மூலம் நிரூபித்துள்ளது. 
கடந்த, 1967ம் ஆண்டு காங்., கட்சியை வீழ்த்தி, தி.மு.க., ஆட்சியை கைப்பற்றியது. 
அதன்பின் தமிழகத்தை, தி.மு.க.,- - அ.தி.மு.க., மட்டுமே ஆட்சி செய்கின்றன. 
ஆனால் இந்த  சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க. -தி.மு.க., கட்சிகளுக்கு மாற்றாக, ம.ந.கூ.,  தே.மு.தி.க., - -த.மா.கா., இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கின.
ம.ந.கூ.,வில் ம.தி.மு.க., -வி.சி.,- இ.கம்யூ -மா.கம்யூ., கட்சிகள் இடம் பெற்றன. 

இக்கூட்டணி உருவாவதற்கு, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ முக்கிய காரணமாக அமைந்தார். இந்த கூட்டணி, அ.தி.மு.க.,வின் வெற்றிக்காகவே  அமைக்கப்பட்டுள்ளது என்று பரபரப்பான குற்றச் சாட்டு  எழுந்தன. அதற்காக   செலவிட வைகோவுக்கு அதிமுக 1500 கோடிகளை கொடுத்ததாக குற்றச்சாட்டும் உண்டானது.அதை வைகோ மறுத்து இதுவரை பேசவில்லை.இது தொடர்பாக தொலைக்காட்சியில் வைகோ விடம் நேரடியாக கேள்வி எழுப்பப் பட்ட போது பேசாமல் எழுந்து வந்தாரே தவிர அதை பற்றி கருத்தே கூறவில்லை.பத்திரிகையாளர்களை கண்டால் பயமாக இருக்கிறது,என்றும்,நாங்கள் மோசமானவர்கள் என்றும் மட்டுமே பேசினார்.
கூட்டணிக்கு  தி.மு.க. கொடுத்த அழைப்பை நிராகரித்த விஜயகாந்த் தான் கிங் மேக்கராக இல்லாமல் தானே கிங்காகப் போவதாகக் கூறி மனைவியின் சொல்லே மந்திரம் என்று தே.மு.தி.க.,வை இக்கூட்டணியில் இணைத்துக் கொண்டார். இதற்காக அவரை முதல்வர் வேட்பாளராக 
அறிவிப்பதாகவும்,மக்கள் நலக் கூட்டணியையே கேப்டன் அணி என்று சொல்லுவதாகவும் வைகோ உறுதிகள் கொடுத்து திமுகவுடன் விஜயகாந்த் இணைந்து விடக் கூடாது என ரொம்பவே மெனக்கெட்டார்.
 கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அறிவிப்பதாக கூறியதை புறந்தள்ளி முதல்வர் வேட்பாளராகவும் விஜயகாந்தை, வைகோ அறிவித் தார். 
கூட்டணி வெற்றிக்காக, கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்தனர். 
மாற்றத்தை விரும்பும் மக்களின் ஆதரவும், புதிய வாக்காளர்கள் ஆதரவும் தங்களுக்கே கிடைக்கும் என, இக்கூட்டணி தலை வர்கள் கணக்கு போட்டனர். அதற்கேற்றார் போல் கூட்டணியினர் நடத்திய கூட்டங்கள்,மாநாட்டுக்கு கூட்டம் சேர்ந்தது.ஆனால் இந்த கூட்டம் விஜயகாந்த்,வைகோ மேடையில் பேசும்,செய்யும்,கொமாளித்தங்க்கலை ரசிக்க வந்த கூட்டம் மட்டும்தான் என்பது அதன் தலைவர்கள் உட்பட அனைவரும் மண்ணைக்கவியத்திலும்,அவர்களின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு மயிரிழையில் காப்புத்தொகையை பெற்றதிலும் இருந்து தெரிகிறது.

தி.மு.க. - அ .தி.மு.க.,விற்கு மாற்றாக எந்த கூட்டணியையும் மக்கள் விரும்ப வில்லை என்பது தேர்தல் முடிவு மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. இதுவரை மற்ற துக்கடா கட்சிகள் பெற்ற வெற்றிகள் இவர்களுடன் கூட்டணி வைத்ததனால்தான் என்பதும் வெட்ட வெளிச்சமாகி விட்டது.

ம.ந.கூ.,  தே.மு.தி.க., த.மா.கா., கூட்டணி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
சென்ற 2011 திமுகவின் 23 இடங்களை விட அதிகமாகப்பெற்று எதிர்க்கட்சித்தலைவர் 
மரியாதையை  பெற்றவர்,அதன் மூலம் அடுத்த முதலவர் கனவை  கண்டவர் இன்று 0.
1957 இல் இருந்து நடந்த அனைத்து தேர்தல்களிலும் சடடமன்றத்தில் தனது உறுப்பினர்களை அமர்த்திய கம்யூனிஸ்டுகள் இரண்டுக்குமே இன்று சட்டசபையில் 0.
ஆனால் இந்த தோல்வியை எதிர்பாத்தும்,தனக்கு ஜெயலலிதா தந்த வேலையை சரிவர முடித்த திருப்தியிலும் வைகோ தான் மட்டும் இந்த தோல்வி அசிங்கத்தில் இருந்து லாவகமாக தப்பி விட்டார்.
கோவில்பட்டியில் வேட்புமனுத்தாக்கல் செய்ய தேர்தல் அலுவலர் அறைக்குள் சென்றவர் தனக்கு பதிலாக ஒருவரை மனுத்தாக்கல் செய்யவைத்தார்.
வெளியெ வந்து ஒரு மொக்கை சாதி கலவரக்காரணத்தை கூறி மக்களை அதிர வைத்தார்.
ஆனால் மக்களை விட அதிகமாக அதிர்ச்சிக்குள்ளனவர்கள் அவர் கூட்டணித்தலைவர்கள்தான்.
இப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால், ம.தி.மு.க., வை தேர்தலில் ஈடுபடாத சமூக அமைப்பாக மாற்றும் திட்டம் இருக்கிறது' என, அக்கட்சி பொதுச் செயலர் வைகோ, தேர்தலுக்கு முன் பாகவே கூறியிருந்தார். அதனால் அவர் திட்டமிட்டே காய்களை நகர்த்தி விஜயகாந்த்,கம்யூனிஸ்டுகள்,திருமாவளவன் ஆகியோரை நம்ப வைத்து கழுத்தறுப்பு வேலையை செவ்வனே செய்துள்ளது தெரிகிறது.
வைகோ வுக்கு இத்தோல்வியினால் அவரது கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை.வரவு மட்டும்தான்.அவர்கட்சியில் இப்போது வைகோ,நாசரேத் துறை,மல்லை சத்யா (தலைவர்,செயலாளர்,பொருளாளர் )என்ற மூவர் மட்டும்தான்.
ஆனால் விஜயகாந்த் ,திருமா,ஜி.ரா,முத்தரசன் நிலை தான் ?ஆகி விட்டது.மறுபடியும் முதலில் இருந்து துவக்க வேண்டும் .
இந்த பாடம்தான் தமிழ் நாட்டையே கூறு போட வந்த குபீர் பேராளி (?)சைமன் என்ற சீமானுக்கும்.பெரியார் பூமி எங்கே காமி என்ற அவருக்கு நெத்தியடியாக காட்டியுள்ளது. இந்த சாதி,மத வெறியை தூண்டி வெற்றி காண துடித்தவருக்கு  களத்தில் ஐந்தாம் இடத்தையே மக்கள் தந்துள்ளனர்.
ஆக ஜெயலலிதா தலைமையில் அதிமுக திராவிட கொள்கைகளை முற்றிலும் துறந்து விட்டாலும் அக்கட்சியின் பிறப்பும்,பெயரும் திராவிட பாரம்பரியம் கொண்டதால் திமுகவுடன் அதையும் ஏற்றுக்கொண்டுள்ளர்கள்.
திமுகவோ இரண்டு உறுப்பினர்களையும் கூட சட்டமன்றத்துக்கு தந்தாலும் அதன் பின்னர் இரு முறை ஆட்சியை பிடித்து வரலாறு படைத்துள்ளது.
இந்த தேர்தலில் வென்றது அதிமுகவா?திமுகவா? என்றால் நிச்சயம் திமுகதான்.
2011 தேர்தலில் 23 இடங்களை வென்று விஜயகாந்திடம் எதிர்க்கட்சித்தலைவர் பதவியை கொடுத்தது திமுக.அடுத்த 2014 இல் மக்களவைத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் தோல்வி.
ஆனால் 2016 இல் 90 இடங்கள்.காங்கிரசுக்கு இடங்களை குறைத்துக் கொடுத்திருந்தால் 100க்கும் மேலாகியிருக்கும்.
திமுக வென்ற இடங்கள் அனைத்தும் அதிமுக விடமிருந்து கைப்பற்றிய இடங்கள்.அனைத்திலும் அதிமுகவின்  பணபலம்,அதிகார பலம் ,தேர்தல் ஆணைய மறைமுக கூட்டணி அனைத்தையும் மீறிதான் பெற்றுள்ளது.சென்ற முறை இடைத்தேர்தலில் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற ஜெயலலிதா வாக்கு வித்தியாசம் இத்தேர்தலில் வெறும் 35 ஆயிரம்தான்.
கலைஞர் வெற்றி வித்தியாசம் தமிழகத்திலேயே அதிகம் 66ஆயிரம்.
ஆக உண்மையான பெரியாரின் பூமியாகத்தான் தமிழம் உள்ளது.இதில் சைமன் போன்ற சாதி,மத,இன  வெறியர்கள் வெற்றி பெற முடியாது என்பது மீண்டும் நிருபிக்கப் பட்டுள்ளது.
இந்தியாவிலேயே இதுவரைகளம் கண்ட தேர்தல்களில் தோற்காத ஒரே தலைவர் கருணாநிதி!
ஜெயலலிதாவும் பர்கூரில் தோல்வியைத்தழுவியுள்ளார்.
=========================================================================================
176 இடங்களில் போட்டியிட்டு  திமுக பெற்ற வாக்குகள்  சதவிகிதம் 41.05.
232 இடங்களில் போட்டியிட்டு அதிமுக பெற்ற  வாக்குகள் சதவிகிதம்  40.78.
                      DMK polled 41.05% in 176 seats, the AIADMK polled 40.78% in 232 seats.
==========================================================================================
இன்று,
மே -20.
  • கமரூன் தேசிய தினம்
  • ப்ளூடூத் வெளியிடப்பட்டது(1999)
  • குவோமிங்தான் அரசு தாய்வானில் ராணுவ ஆட்சியை அறிமுகப்படுத்தியது(1949)
  • உலகின் முதலாவது நவீன அட்லஸை ஆபிரகாம் ஓர்ட்டேலியஸ் வரைந்தார்(1570
=========================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?