அம்மா ஆணையம் ?

திமுக ஆட்சியை பிடிக்குமளவு வாக்குகளைப் பெற்றும் ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வராகக் காரணம் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையமும்,தேர்தல் நடத்தும் மாவட்ட ஆட்சியர்களும் நடந்து கொண்டதுதான்.

மத்திய அரசின் தமிழக உளவுப் பிரிவு அனுப்பிய அறிக்கை இங்கு நடத்த அசிங்கங்களை,முறைகேடுகளை வெளிப்படுத்தியுள்ளதாம்.

மோடிமுடிவுகள் வரும் முன்னரே 11 மணிக்கெல்லாம் வாழ்த்து சொல்ல அதுதான் காரணம்.50% வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னணி என்றால் அதிமுக வெற்றி பெற வைக்க வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டிய முறை பற்றி தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாம்.

அதன் காரணமாகத்தான் பெரும்பாலான அதிமுக வேட்பாளர்களுக்கும் அடுத்து வந்த திமுக வேட்பாளர்களுக்குமான வாக்கு வித்தியாசம் 49 இல் இருந்து 1000க்குள்ளாக இருந்ததாம்.தபால் வாக்குகள் ஆயிரக்கணக்கில் கண்க்கிலேயே கொண்டு வரப்படவில்லையாம்.
இது போக தபால் வாக்குகளை இருமுறை எண்ணவேண்டும் என்று லக்கானி புதிய ஆனையை வேறு பிரப்பித்து தன்னால் இயன்ற அளவு தபால் வாக்குகளில் குழப்பத்தை உண்டாக்கினார.காரனம் எல்லாத் தொகுதிகளிலும் 90% தபால் வாக்குகள் திமுகவுக்கு என்பதுதான்.

வாக்கு சீட்டுகளாக எண்ணிக்கை இரவு நடந்த காலங்களிலேயே வாக்கு எண்ணுபவர்கள் ஓரு மணிக்கு மேல் ஒவ்வொருவராக சாப்பிட்டு வர அனுமதித்தது போய் 11 மணிக்கெல்லாம் மொத்தமாக சாப்பிட்டு வர பல இடங்களில் அனுப்பப்பட்டுள்ளார்கள்.இடையில் நடந்தது என்ன?

தபால் வாக்குகளை எண்ணும் முறையை திமுகவுக்கு அதிகாமாக வந்ததால் குழப்பமாக எண்ண வைத்து வித்தியாசம் 500க்கு மேல் போகாத அளவு பார்த்துக்கொண்டனர்.

ராதாபுரம் அப்பாவு அப்படித்தான் வெற்றி பெற்றவர் தபால் வாக்குகளை செல்லாததாக அறிவித்து49 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.

அரசு ஊழியர்கள் தபால் வாக்குகள் போடும் பெட்டிகள் முன்பெல்லாம் வெள்ளைத்தாளால்மறைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டிருக்கும்.வாக்கு எண்ணிக்கைக்கு அரை மணினேரத்துக்கு முன்னாள்தான் வாக்கு சீட்டு போடும் இடமும் தாளால் ஒட்டப்பட்டு வாக்கு எண்ணிக்கை இடத்துக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும்.

ஆனால் இந்த தேர்தலில் தபால் வாக்கு போட பெட்டிகலையே பாலளையங்கோட்டை உடபட பல தொகுதிகளி வைக்கப்பட வில்லை ,வைக்கப்பட்ட பெட்டிகலும் பூட்டாமல் வெறுமனே கொண்டி மட்டும் போட்டு யாரும் திறந்து வாக்குகள எடுத்துக்கொள்ளலாம் என்றநிலையிலேயே இருந்த்து.அதை சுட்டிக்காட்டியவர்களை தபாலில்போடுங்கள்என்றுசொல்லப்பட்டதாம்.

சில தொகுதிகளில் அடிக்கடி தபால் வாக்கு பெட்டிகள் மாற்றப்பட்டுள்ளன.இவைகளைப்பற்றி ஆணையத்திடம் புகார் செய்தால் அது செவிடன் காதில் ஊதிய சங்குதான்.
வாக்குஎண்ணும்இடத்துக்குப்போகும்முன்னர்தபால்வாக்குகள் கட்டுகட்டாக வெளியில்எடுத்துஎண்ணிக்கையை குறைக்கவைக்கப்பட்டதெல்லாம்நடன்துள்ளது.
கோவையில் தங்கள் வாகனத்திலேயே அதிமுகவுக்காக பணம் கடத்தியதாக இரண்டு தேர்தல் அலுவலர்கள் மாட்டிக்கொண்டனர்.வாகனங்கள் மட்டுமே கைப்பற்றி வைத்தனர்.
ஆனால் அந்த இரண்டு அதிகாரிகள்தான் தேர்தலை கடைசிவரை நடத்தினர்.
அந்த தேர்தல் லட்சனம் எந்த லட்சணத்தில் இருந்திருக்கும்?

கோவை ,ஈரோடு,கடலூர் மாவட்டங்களில் உண்மையில் வென்றது அதிமுகதான்.ஆனால் அப்படியே தேர்தல் அலுவலர்கள் மூலம் அதிமுகவாக மாற்றப்பட்டிருக்கும் என்பதுதான் பலத்த சந்தேகத்தை தருகிறது .
அதற்கு அந்த இரண்டு பேர்கள் பிடிபட்டும் நடவடிக்கை இல்லாதது மட்டுமல்ல,
இவர்களைப்போல் மாட்டிக்கொள்ளாமல் இருக்க வைக்கப்பட்டவர்கள் அதிகமாக இருக்கலாம்.மேலும் கோவை ,ஈரோடு ,கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலர்கள்,கண்கானிப்பு படையினர்,பார்க்கும் படையினர்,,காவல் அதிகாரிகள் என தேர்தல் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் நட்சத்திர ஓட்டலில் நடந்த படாகானா விருந்துக்கும் இதர செலவுகளுக்கும் பலகோடிகளை அதிமுக அமைச்சர் ஏற்றுக்கொண்டதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

தினமலர்-நியுஸ் 7 கருத்துக்கணிப்பில் அதிமுக தோல்வி எனக் கூறப்பட்ட இடங்களை அதிமுக தலைமை கணக்கிட்டு அதில் வெற்றி பெற எல்லாவகையான ஏற்பாடுகளையும் தனது அதிகார,பணம்,காவல்துறை,தேர்தல் ஆணையம் துணையுடன் செய்து வெற்றி பெற்றுள்ளது.
தற்பொது திமுக வென்ற இடங்கள் இரண்டாகப் பிரிக்கலாம்.

1,தவிர்க்க முடியாத அளவு வாக்கு வித்தியாசமாக இருந்திருக்கலாம்.
2,தேர்தல் அதிகாரிகள் மனசாட்சியுடன் பணிபுரிந்திருக்கலாம்.
ஆக2016 வென்றது திமுகதான்.
அதானால்தான் ஜெ முகத்தில் முப்பு வெற்றி பெற்றால் தெரியும் மகிழ்ச்சி தற்போது இல்லாமல் இருக்கிறது.
அதற்காக அவர் கொடுத்த விலை எல்லாவகையிலும் மனதை நெருடச்செய்கிறது போல்.
23ல்தேர்தல்என்றஅரவக்குறிச்சி,தஞ்சாவூர்திமுகவெல்லும்சூழல்இருப்பதாலேயே 
ஒருமாதம்தள்ளிவைக்கஏற்பாடு செய்யப்பட்டுஅதற்குதேர்தல்ஆணையமும்தலையாட்டியுள்ளது.

இனிஅங்கு இடைத்தேர்தல்போன்றுஅமைச்சர்கள்,அதிகாரிகள் வார்டுவார்டாகநியமிக்கப்பட்டு அதிமுக வெற்றிபெற வேண்டியஎல்லாவற்றையும்தடங்களின்றிசெய்வார்கள்.
இவைகள் எல்லாம் திமுக தலைமைக்கு தெரிந்தும் யாரிடம் புகார் கொடுத்தால் நடவடிக்கை என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.ராஜேஷ் லக்கானியிடம் கொடுத்தால் அதை நேரடியாக ஜெயலலிதாவிடம் கொடுத்தது போல்தான்.

தலைமைத்தேர்தல் ஆணையரிடம் நஜிம் ஜைதியிடம் கொடுத்தால் அதை அவர் விசாரிக்க சொல்லி லக்கானியிடந்தான் அனுப்புவார்.

அதுவும் அங்குள்ள தமிழ் நாட்டு தேர்தல் விவகாரங்களை கவனிக்கும் ஜெயலலிதா விசுவாசிகள் சுதீப் ஜெயின்,சக்சேனா இவர்கள் ஆய்வுக்குப்பின்னார் 2021 தேர்தலை ஒட்டித்தான் லக்கானி க்கு அனுப்பப்படும்.

இதற்கு ஒரே தீர்வு ராணுவம் தமிழ் நாட்டு தேர்தலை நடத்த வேண்டும் எண்ண வேண்டும் .அல்லது இப்போதுள்ள வாக்குகளையாவது மற்ற மாநில அலுவலர்களை வைத்து வேட்பாளர்களை மட்டும் பார்க்க வைத்து எண்ண வேண்டும் .

ஆனால் இதற்கு தேர்தல் ஆணையமும் நம் நாட்டு ஜனநாயகமும் ஒத்துக்கொள்ளாதே.
========================================================================================
இன்று,
மே-21.


  • சிலி கடற்படை தினம்
  • இந்திய தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினம்
  • பிக் பென் மணிக்கூடு முதன் முறையாக இயக்கப்பட்டது(1859)
  • பாரீசில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டது(1904)
  • இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் இறந்த தினம்(1991)
========================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?