மோடியின் "வாக்கு"றுதி?

இன்று மத்திய பாஜக அரசு முற்றிலுமாக மறந்துவிட்ட, மக்களால் மறக்கப்பட எண்ணும் ஆனால் மக்கள் மறவாதிருக்கிற ஒரு விசயம், 2014 மக்களவைத் தேர்தலின்போது பாஜக அளித்த முதல் வாக்குறுதி கறுப்புப் பணம் கைப்பற்றப்படும் என்பது. 

ஒவ்வொரு நபருக்கும் 15 லட்சம் ரூபாய் அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்கிற அளவுக்குக் கறுப்புப் பணத்தைக் கைப்பற்றப் போவதாகவும், அதைக் கொண்டு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட தரமான சேவைகளை வழங்கப் போவதாகவும் வாக்குறுதிகளை அடுக்கினார்கள். 

ஆனால் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் சொல்லப்பட்ட காரணங்களை இவர்களும் சொல்லி, வாக்குறுதியை மறக்கடிக்க முயன்றதே மக்கள் அனுபவம்.இத்துடன் இணைந்ததுதான் வங்கிகளின் வராக் கடன் பிரச்சனை. 

அது பல ஆண்டுகளாகத் தொடர்கிறது என்றாலும், கடந்த இரண்டாண்டுகளில் தீவிரமடைந்திருப்பது கவனிக்கப்பட வேண்டிய “வளர்ச்சி” அல்லவா! 

மோசடி வழிகளில் 2015-16ல் மட்டுமே ரூ.13,000 கோடி அளவுக்கு வராக் கடன் எகிறியுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இது இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய தொகையை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாகும். 
2014-15ல் பதிவானதை விட 16 சதவீதம் கூடுதலாகும்.பாங்க் ஆப் இந்தியா, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், சிண்டிகேட் பாங்க், கனரா பாங்க், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய ஐந்து தேசிய வங்கிகள் கடன் மோசடிகளில் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளன.

 2013-14ல் இவ்வங்கிகளைப் பொறுத்தவரையில் மோசடி செய்யப்பட்ட மொத்தக் கடன் ரூ.5,591 கோடியே 30 லட்சம். 

அதற்கடுத்த ஆண்டில் இத்தொகை ரூ.11,124 கோடியே 59 லட்சத்தைத் தொட்டது. 

2015-16ல் இது மேலும் அதிகரித்து ரூ.12,934 கோடியே 62 லட்சமாக மாறிவிட்டது. 
பல்வேறு வங்கிகளும் கடன் பெற்ற பெரும் புள்ளிகளால் ஏமாற்றப்பட்டுள்ளன என்றாலும் சென்ற ஆண்டு பதிவான மொத்த வங்கிக் கடன் மோசடிகளில் 60 சதவீதம் இந்த 5 வங்கிகளில்தான் நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாகப் பொதுத்துறை வங்கிகளில் இவ்வாறு நடந்திருப்பது, மனசாட்சியற்ற கார்ப்பரேட் கும்பல்கள் மக்களின் பணத்தை சூறையாடக் கூச்சப்படவில்லை என்பதைத்தானே காட்டுகிறது? 

2014க்குப் பிறகு இந்த இரண்டு ஆண்டுகளாக மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வருவது நரேந்திர மோடி அரசுதான் என்பது தற்செயலானதுதானா? 

இந்த ஆட்சியில் மேற்படி கும்பல்கள் மேலும் ஊக்கம்பெற்றிருக்கின்றன என்பதையும் இதுகாட்ட வில்லையா? 

மல்லையாக்கள் எளிதாகத் தப்பவிடப் படுவதோடு இதையெல்லாம் இணைத்துப் பார்க்கா மல் இருக்க முடியுமா? 

கல்விக் கடனை செலுத்தாதவர்கள் வங்கித் தேர்வை எழுத முடியாது என்று முடிவெடுத்திட வங்கித் துறைக்கு ஆலோசனை வழங்கியதற்கு மத்திய அரசுக்கும் நிதித்துறை அமைச்சகத்துக்கும் பொறுப்பில்லையா? 

கார்ப்பரேட் கனவான்களுக்கு மட்டும் தயாளகுணம் காட்டுவதுதான் இவர்கள் கூறும் வளர்ச்சிப் பொருளாதாரம்.
எளிய மாணவரோ, சாதாரண விவசாயியோ கடனில் சிறிதளவு பாக்கி வைத்தாலும் தற்கொலைக்குத் தூண்டுகிற அளவுக்கு அவமானப் படுத்திக் கெடுபிடி வசூல் செய்யத் தயங்காத நிர்வாகங்கள் பெருந்தொகை விழுங்கிகளை விட்டுவைத்தது எப்படி? 

கடும் நடவடிக்கை எடுக்க முடி யாமல் கட்டிப்போட்டது யார்? 

இந்தக் கடன்களும் வட்டிகளும் வராமல் போயிருக்கலாம், ஆனால் மோசடிக் கும்பல்களுக்கும் அவர்களுக்கு உடந்தையாக இருப் போருக்கும் மக்கள் வட்டியும் முதலுமாக கணக்குத் தீர்க்கிற காலம் வருவதைத் தடுக்க முடியாது.

ஆனால்  தங்கள்ஆட்சியின்  தோல்விகள் எல்லாவற்றையும் மறந்து விட்டு மோடி வெட்கமே இல்லாமல் தமிழ் நாட்டில் தங்களுக்கு வாக்களித்தால் தமிழ் நாட்டை சொர்க்கப் பூமியாக்குவதாக வாக்குறிதிகளை அள்ளி வீசி ஏமாற்றுகிறார்.

முதலில் மோடி ஆண்ட குஜராத் பற்றி அவர் காட்டிய வளர்ச்சி வடிவங்களுக்கு நேர் மாறாக மிகவும் மோசமான நிலையில்தான் குஜராத்தின் மறுபக்கம் உள்ளது.குடிநீர் பஞ்சம்,விலைவாசி ஏற்றம் கார்பரேட் நிறுவனங்களின் சுரண்டல் என்று.

ஆனால் வெளிப்பார்வைக்கு குஜராத்தின் வளர்ச்சி வடிவம் மட்டும் மோடிக்கே உரிய போட்டோஷாப்பில் ஜொலிக்கிறது.
===================================================================================
இன்று,
மே-09.
  • ரோமானிய சுதந்திர தினம்(1877)

  • கான்பராவில் ஆஸ்திரேலிய பார்லிமென்ட் திறந்து வைக்கப்பட்டது(1927)

  • காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது(1985)

  • குதிரையால் செலுத்தப்படும் உலகின் முதலாவது பயணிகள் வண்டி, பம்பாய் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது(1874)

====================================================================================












இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?