இடுகைகள்

ஜூன், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திவாலாகும் அதிமுக அரசு.

படம்
தமிழ் நாடு  அரசு  31 ஆயிரத்து, 870 கோடி ரூபாய் நிதி நெருக்கடியில் சிக்கி  திணறுவதை, ரிசர்வ் வங்கி அம்பலப்படுத்தி உள்ளது. வரி வருவாய் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையால் அமலாகி சம்பளம் உயர்ந்தால், தமிழக அரசுக்கு மேலும் சிக்கல் ஏற்படும். தமிழக அரசுக்கான வரி வருவாயில், 70 சதவீதம் வணிக வரி மூலமாக கிடைக்கிறது. 2015 - 16ம் நிதியாண்டில், 72 ஆயிரத்து, 68 கோடி ரூபாய் வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.  பிப்., இறுதி வரை, 50 ஆயிரத்து, 100 கோடி ரூபாயே கிடைத்தது. ஒரு மாதத்தில், 22 ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வணிகர்களிடம், 'முன்கூட்டியே வரி கட்டுங்கள் ,அடுத்த மாதங்களில் சரி செய்து கொள்ளலாம்' என, கெஞ்சியும், வசூல் நடத்தியும், வரி வசூலாக, 61 ஆயிரத்து, 709 கோடி தான் கிடைத்தது.  இது, இலக்கை விட, 10 ஆயிரத்து, 359 கோடி ரூபாய் குறைவு. வரி வளர்ச்சி, 11.6 சதவீதம் வரை எதிர்பார்த்தாலும், 2.31 சதவீதமே உயர்ந்தது. '2011 - 12ல், 27 சதவீதமாக இருந்த வருவாய் வளர்ச்சி, படிப்படியாக சரிந்து, 2.31 சதவீதமாக குறைந்து வருவது தமிழக அரசி

தமிழக அரசே விடுதலை செய்யும்?

படம்
"இராசீவ் காந்தி வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் பேரறிவாளன் ஆகியோரை, ஏனைய குற்றவாளிகளான நளினி உள்ளிட்ட நால்வரோடு சேர்த்து விடுதலை செய்வதெனத் தமிழக அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.  இம்முடிவு மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்படும்.  இன்னும் மூன்று நாள்களுக்குள் மத்திய அரசிடமிருந்து எந்த விடையும் வரவில்லையென்றால், தமிழக அரசே தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை விடுதலை செய்யும்" என்று 2014 பிப்.19 அன்று சட்டமன்றத்திலேயே அறிவித்தார், அன்றும் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா.  இப்போது சில நாள்களுக்கு முன் (ஜூன் 25), சென்னை உயர்நீதிமன்றத்தில், விடுதலை கோரி நளினி அளித்திருந்த மனுவிற்குப் பதில் மனு (counter) அளித்த தமிழக அரசு, அவர் மனுவைத் தள்ளுபடி செய்யுமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.  இப்போதும் தமிழகத்தின் முதலமைச்சர் அதே ஜெயலலிதாதான். பிறகு ஏன் இந்த மாற்றம்?  மலையிலிருந்து மடுவில் குதித்திருப்பதன் நோக்கம் என்ன?  இந்தப் 'பச்சை இரட்டை வேடத்தை' எவரும் கண்டிக்கவில்லையே என்?  இவ்வாறு பல வினாக்கள் எழுகின்றன. விடுதலை செய்யப்போவதாக அவர் அறிவித்த நேரம், இ

அது அந்த காலம்

படம்
இன்று தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் மீண்டும் முழுசாக விட்டு திரும்புவோமா என்ற ஐயம் உண்டாகியுள்ளது. காரணம் ஆங்காங்கே நடக்கும் கொலை,கொள்ளை . ஆனால் அதை தடுக்க வேண்டிய காவல்துறை அதை சட்டை செய்யாமல் இருசக்கர வாகனங்களை இன்சுயூரன் ஸ் இருக்கிறதா ?கெல்மட் இருக்கிறதா என்று சோதனை செய்து காலத்தைக்கழிக்கிறது . காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் ஜெயலலிதாவோ இன்னும் ஒரு படி மேலே போய் சட்டசபையில் அமைதி பூங்கா தமிழ் நாடு என்று அறிக்கை வாசித்து   எதிர்க்கட்ச்சிகளின் வாயை அடைத்து விட்டதாக கருதி தனது கடமையை  முடித்துக் கொள்கிறார். காலையில் அலுவாக்கத்திற்கு செல்ல பேருந்துக்கு காத்திருக்கும் வேளையில் நம் பக்கத்தில் இருப்பவரை திடீரென வந்து போட்டுத்தள்ளி விட்டு சாவகாசமாக இரு சக்கர வாகனத்தில் போய் விடும் அவலம்தான் இன்று தமிழகத்தில். அந்த பக்கத்தில் நிற்பவருக்குப் பதிலாக அடையாளம்  தவறி நம்மையும் போட்டு விடக்  கூடிய  அபாயத்தை  ஒவ்வொருவரும்  தினமும் சந்திக்கவேண்டியதுதான் இன்றைய உண்மை நிலை. சுவாதிக்குப் பதில் தவறாக  சுகாசினியை வெட்டி விட மாட்டார்கள் என்பதற்கு அரசு உத்திரவாதம் இல்லை. இந்த கூ லிப்ப

மூட்டுவலியும் -கம்பும்

படம்
இன்றைக்கு, 40 வயதை கடந்த, 80 சதவீதம் பேருக்கு மூட்டுவலி உள்ளது.  அதற்கு உடல் உழைப்பும், உடற்பயிற்சியும் இல்லாததே காரணமாகும். அப்படியே வேலை செய்தாலும், பெரும்பாலானவர்கள் நாற்காலியில் அமர்ந்து வேலை செய்கின்றனர்.  இதனால், உடல் எடை அதிகரித்து மூட்டுவலிக்கு வழி வகுக்கிறது.  பாஸ்ட்புட் போன்ற நவீன உணவு பழக்கத்தில் ஆர்வம் காட்டுவதால், உணவை கட்டுப்படுத்த முடியவில்லை.  மூட்டுவலிக்கு மருந்து, மத்திரைகள் தற்காலிகமான தீர்வை தருகிறதே தவிர, நிரந்தர நிவாரணத்தை தருவதில்லை.  மூட்டுவலியை பொறுத்தவரை, இயற்கை வழியான மருந்து மற்றும் உணவு முறைகள் வாயிலாக நல்ல பலன் கிடைக்கும்.  அவற்றை குறித்து பார்க்கலாம்: குப்பைக்கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து, கஷாயம் வைத்து குடித்தால் மூட்டு வலி குறையும். பிரண்டை இலை, முடக்கத்தான் இலை, சீரகம் மூன்றையும் தலா, 10 கிராம் அளவு எடுத்து, அரைத்து காலையில் சாப்பிட்டால் மூட்டு வலி, மூட்டுத் தேய்மானம் குறையும். வேப்பிலை, வில்வ இலை, துளசி, அருகம்புல், வெற்றிலை முதலியவற்றை நன்கு சுத்தம் செய்து, பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.  இதனை தினமும், 2 கிராம

நம்மையும் காயப்படுத்தி விடும்!

படம்
ரொம்பவும் கவலையாக இருக்கிறது. தமிழ் நாட்டின் முகநூல் மக்களை பற்றி எண்ணினால். சமூக வலைத்தளங்கள் மூலம் சிலநாடுகளில் அரசியல் மாற்றங்கள் எல்லாம் நிகழ்ந்துள்ளது.பல ஆக்கப்பூர்வமான செயல்கள் நடந்துள்ளன.தேவையான ரத்தப் பிரிவை பரவவிட்டு பல உயிர்களை காத்திருக்கிறார்கள். படிக்க முடிந்து கல்விக்கட்டணம் கட்ட முடியாத மாணவர்களுக்கு நிதி பிரித்து படிக்க வைத்துள்ளார்கள். அரசியல் கட்சிகளின் இன்றைய முக்கிய பிரசார களமாகவும் முகநூல்,டுவிட்டர் உள்ளது.அதில் இயங்காத அரசியல் தலைவர்களே  இல்லை எனலாம். நேரடியாக இல்லாவிட்டாலும் ஆள்வைத்து அரசியல் செய்ப்பவர்கள் உண்டு. ஆனால் அவ்வாறு நல்லவை நடக்கும் சமுக வலைத்தளங்களில் சாதி,மத வெறியை தூண்டும், சண்டைகளை உருவாக்கும் பணிகளும் சிலரால் நடக்கிறது.இவை திட்டமிட்டே செய்யப்படுகிற செயலாகவே தெரிகிறது. இவர்களில் பலர் தங்கள் பெயர்களிலேயே சாதியை துணையாக்கி உள்ளார்கள். இவைகளை விடக் கொடுமை இன்றைய கொடூர கொலையான சுவாதி கொலையை இவர்கள் கையாளும் விதம். இக்கொலையை நேரில் பார்த்தவர்கள்  போலவே அப்போது கும்மிடிப்பூன்டியில்  கொய்யாப்பழத்தைக் கடித்துக்கொண்டிருந்தவன் இடுகை போடு

முதலில் கவனி

படம்
போதை ஒழிப்புத்தினம் இன்று. போதை என்ற இரண்டு எழுத்தால் இன்று உலகமே தள்ளாடிக்கொண்டிருக்கிறது.  சொல்லப் போனால் தமிழ்  நாட்டில் இந்த போதை வியாபாரத்தால்தான் அரசாங்கமே தள்ளாடாமல் நடந்து கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டு மக்கள் வாழ்க்கைதான் எதிர்காலம் பற்றிய பயத்துடன் போதை ஏற்றாமலேயே  தள்ளாடிக்கொண்டிருக்கிறது. அரசு தரும் போதையை தவிர மேலும் அதிகப்  போதைக்கென சிலர் சட்ட விரோதமான போதை பொருட்களைத் தேடி அலைவது இங்கு மட்டுமல்ல உலகமெங்கும் நடக்கத்தான் செய்கிறது. உலகமெங்கும்  சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் வியாபாரமும் ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. இதனை ஒழிக்கும் விதமாக ஜூன் 26ம் தேதி சர்வதேச போதைப்பொருள் பயன் மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ' இந்தாண்டு மையக்கருத்தாக்க வைக்கப்பட்டுள்ளது "  முதலில் கவனி '  .  சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது முதலில் கவனம் செலுத்தி அவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்கு உதவ வேண்டும் என்பது இதன் நோக்கம்.  போதை என்றால் சிலர்  மது,பான்பராக் ,கஞ்சா   மற்றும் சிகரட்டை மட்டுமே நினைக்கின்றனர். இதையும் தாண்டி, உலகம் மு