மூன்றாண்டு கொண்டாட்டம்,

மோடியின் ஆட்சி மூன்றாண்டு கொண்டாட்டத்துக்கு மக்களின் வரிப்பணம் கிட்டத்தட்ட 1000 கோடிகள் கொட்டப்பட்டுள்ளது.
 வளர்ச்சி’ நாயகன் மோடி ஆட்சியில் சாதாரண மக்கள் அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதே மரணவேதனையாக இருந்து வருகிறது. 
இந்நிலையில் மே 31 முதல் சேவை வரி 15 சதவிகிதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. 
மோடியின் மக்கள் சேவையே சாதாரண மக்கள் மீது வரி விதித்து வாட்டி வதைப்பதுதான் என்று மாறியிருக்கிறது. 
இதனையே கார்ப்பரேட் ஊட கங்களும், வலதுசாரி அறிவுஜீவிகளும் வளர்ச்சிப் பாதை என புகழ்மாலை சூட்டி வருகின்றனர். ஆங்கிலேயரிடம் இந்தியா அடிமையாக இருந்த போது கூட உற்பத்தியில் ஆறில் ஒருபங்கு மட்டுமே வரியாக வசூலிக்கப்பட்டது. 
இப்படி வரிமேல் வரி விதித்து மக்களை வாட்டி வதைக்கவில்லை. இந்தியாவை பொறுத்தவரை சேவை என்பது ஆண்டாண்டு காலமாக புனிதமாக கருதப்பட்டு வந்தது. 
சேவை என்றாலே இலவசமாக செய்வது என்ற நிலையே இருந்தது. ஆனால் உலகமயம், தாராளமயம், தனியார்மயம் இந்தியாவிற்குள் வந்த பின்னர்தான் சேவைக்கும் வணிகத் தன்மையை பூசி வரி வசூலிக்கப்பட்டது. 1994ல் புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போது முதலில் மூன்று சேவைகளுக்கு மட்டுமே வரி விதிக்கப்பட்டது. 
பின்னர் படிப்படியாக அதன் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. 
தற்போது மோடி அனைத்திற்கும் சேவை வரி என்ற நிலையை உருவாக்கியிருக்கிறார். மோடி தலைமையில் பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வரும் போது சேவை வரி 12.36 சதவிகிதமாக இருந்தது. இரண்டே ஆண்டுகளில் 2.5 சதவிகிதம் வரியை உயர்த்தி தற்போது 15 சதவிகிதம் என்ற சாதனையை மோடி எட்டியிருக்கிறார். 
இது இன்னும் தொடரும் என மறைமுகமாகத் தெரிவித்திருக்கிறார்.இந்த வரி உயர்வின் மூலம் அனைத்துப் பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. 
இதனால் அன்றாட வாழ்வை நகர்த்துவதே சாதாரண மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் போராட்டமாக மாறியிருக்கிறது. ஆனால் நாடு வளர்ச்சியடைந்து வருகிறது என பாஜக விளம்பரம் செய்கிறது. 
ஆனால் உண்மையான வளர்ச்சி யாருக்கு என்பதை மட்டும் சொல்ல மறுக்கின்றனர். 
தற்போது வெளியாகி யிருக்கும் உலக பணக்கார நாடுகள் குறித்த அறிக்கையில் இந்தியா 7 வது இடத்தில் இருக்கிறது.
அதே அறிக்கையில் இந்திய குடிமகன் அன்றாட அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கே கடுமையாகப் போராட வேண்டிய நிலை இருக்கிறது என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 
இதனை மோடியின் மோசடி வகையறாக்கள் வசதியாக மறைத்து விடுகின்றனர். 
அதுமட்டுமல்ல, பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கும் எங்களுக்கு சம்பந்தம் இல்லை என்கின்றனர். 
ஆனால் உலகச்சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறைந்த போது, அதன் பயனை மக்களுக்கு கிடைக்கவிடாமல் மோடி அரசு மோசடி செய்தது. 
பெட்ரோல் மீதான கலால் வரி கடந்த ஓராண்டில் 7 முறை 7.73 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 7.83 ரூபாயும் உயர்த்தப்பட்டிருக்கிறது. 
இதன் மூலம் அப்பாவி மக்களுக்கு கிடைக்க வேண்டிய ரூ.1,12,832 கோடி மோசடியாக சுருட்டப்பட்டிருக்கிறது.
இப்படி மோடியின் வளர்ச்சி என்பது சாதாரண மக்களை கழுத்தை நெரித்துக் கீழே தள்ளி மிதித்து புதைகுழியில் தள்ளுவதாகவும், கருப்புப் பண முதலைகளையும், கார்ப்பரேட்களையும் பாது காப்பதாகவும் இருக்கிறது.
இந்த கொண்டாட்டத்தின் போது கூட மக்களுக்கு கருப்புப்பணத்தில் பங்குதார சுவிஸ் போய் உட்கார்ந்து விட்டார் மோடி.
ஆனால் பாஜக அரசோ மூன்றாண்டு விழ பரிசாக மக்களுக்கு பெட்ரோல் விலை உயர்வை தந்து மக்களை மூடியின் நிர்வாகத்தை,அரசை கொண்டாட வைத்துள்ளது.
பெட்ரோல் வண்டிக்கு போட்டு பணம் கொடுக்கும் உள்ளங்கள் எல்லாம் மோடியை  வாழ்த்தும் மன ஓசைகேட்கிறது.
======================================================================================
"சட்ட பூர்வ வருமானத்துக்கு அதிகமாக என்பதற்கும்
சட்டத்திற்கு புறமபாக வருமானம் என்பதற்கும் உள்ள
ஆறுவித்தியாசங்களை சொல்லுங்களேன்?"

நீதியரசர்களின் பொன் மொழிகள்?

"வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தால் குற்றம் இல்லை."
என்று ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள்   பினாகி கோஷ் ,அமிதவா ராய் கூறிய கருத்துக்கள் இந்தியாவையே கொஞ்சம் அசைத்துள்ளது.

ஆனால் அரசியல்வாதிகள்,அரசு அதிகாரிகளை உற்சாகத்தில் தள்ளியுள்ளது.
ஜெயலலிதா வழக்கு தீர்ப்பு ஜெட்லி வேகத்தில் மன்னிக்கவும்.ஜெட் வேகத்தில் எதை நோக்கி பயணிக்கிறது என்பதை இந்த கருத்துக்கள் புடம் போட்ட தங்கமாகக் காண்பிக்கிறது.
நீதியரசர் குமாரசாமி "அலகபாத் தீர்ப்புப்படி 10% வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தால் குற்றமில்லை.ஆனால் ஜெயாவோ அந்த % விட குறைவாகவே சொத்துக்களை சேர்த்துள்ளார் "என்று தப்புக்கனக்கின்படி  வரை விடுவித்ததை மக்கள் இன்றுவரை தவறு என்று சொல்லிக்கொண்டு இருக்கையில் ஒட்டு மொத்த வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப் பட்ட சொத்துக்களுக்கும் பாதுகாப்பை தருவது போல் உள்ளது இந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து.
கணக்கில் காட்டக் கூடிய உண்மையான வருமானத்தில் சொத்துக்களை சேர்த்தால் இந்த வழக்கே வந்திருக்காதே.
பினாமி சட்ட விரோத நிறுவனங்கள் கருப்புப்பணம் இவைகளில் வாங்கப்பட்டவைதானே வருமானத்துக்கு அதிகமான கணக்கில் வருகிறது.

அதைத்தானே ஜெயலலிதா செய்துள்ளார் என்று 18 ஆண்டுகள் 108 வாய்தாக்களில் இவ்வழக்கில் நிருபிக்கப்பட்டு உண்மையான நீதியரசர் மைக்கேல் டி  குன்ஹா 100 கோடிகள் அபராதம், நான்காண்டுகள் சிறைத்தண்டனையை வழங்கினார் .

ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் அடிப்படையையே அசைக்கும் இந்த உச்ச நீதியரசர்கள்கருத்து சரி என்று இருக்குமேயானால் மேல் முறையீடுக்கு வரும் போதே தள்ளுபடி செய்திருக்கலாமே?

பல்லாயிரக்கணக்கான வழக்குகள் பல்லாண்டுகளாக நிலுவையில் இருக்கும் நீதிமன்ற நேரத்தை இவ்வளவு வீனடித்திருக்க வேண்டாமே?
பி.வி.ஆச்சார்யா
முதலில் வழக்கை தொடுத்த சுப்பரமணிய சாமி,பேராசிரியர் க.அன்பழகன் வாதுரைகளை செய்ய வேண்டாம் மனுவாக எழுதிக் கொடுங்க்கள் என்று சொல்லி விட்டு குற்றவாளிகளின் வாதுரைகளை மட்டும் கேட்டதிலிருந்தே குழப்பம் ஆரம்பம்.ஒரு பக்க சார்பாக வாதுரை கேட்டதாலே கூட  நீதியரசர்களுக்கு இந்த நீதி வசனக் கருத்து உண்டாயிருக்கலாம்.

10% அதிகம் சேர்க்கலாம் என்ற கருத்தை வைத்து  நீதியரசர் குமாரசாமி அய்யா ஜெயலலிதாவை விடுவித்தது போல் இந்த கருத்தை வைத்து கீழ்மை நீதிமன்றங்களில் ஊழல்,லஞ்சம் அதிகாரிகள்,கிராம நிர்வாக அதிகாரிகள்,நில அளவையர்கள் ,பதிவார் அலுவலக அலுவலர்கள்,ஆர்.டி .ஓ அலுவலக தரகர்கள் , பியூன்கள் தப்பி விட வாய்ப்புகள் உள்ளது.

அதுமட்டுமல்ல இந்த பொன் மொழியை பின்பற்றி சில மகேந்திர பூபதி போன்ற நீதியரசர்கள் பசியுடன் பாக்கெட் அடித்தால் பாவமில்லை,கோபத்துடன் கொலை செய்தால் குற்றமில்லை,ஆசையுடன் கற்பழித்தால் பாவமில்லை, என்று பொன்மொழிகளை உதிர்க்க ஆரம்பித்தால் இந்திய நீதி மன்றத்துக்கு வரும் வழக்குகள் குறையும் என்பதைத்தவிர சட்டம் ஒழுங்கு என்னவாகும்.

சட்டப்புத்தகங்களுக்கும் செல்வாக்கு இல்லாமல் போய்விடும்.

கட்டப்பஞ்சாயத்துகளுக்கு செல்வாக்கு வளர்ந்திடும்.
=====================================================================================
இன்று,
ஜூன்-02.
  • வடகொரியா குழந்தைகள் தினம்
  • மார்க்கோனி தான் கண்டுபிடித்த வானொலிக்கான காப்புரிமத்தைப் பெற்றார்(1896)
  • முதல் முறையாக  தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பரப்பானக இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்தின் அரசியாக முடிசூட்டும்  விழா நேரடி ஒளிப்பரப்பானது (1953)
  • பூட்டானில் முதல்முறையாக தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது(1999)
=====================================================================================






இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?