தேர்தல் ஆணையமும், ஜென் நிலையும்,


 கலாபவன் மணியின் உறவினர்கள், கேரள முதல்வர் பினராயி விஜயனை சமீபத்தில் சந்தித்து, அவரது மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரணை செய்யக்  கோரினர்.
இதைத் தொடர்ந்து, கலாபவன் மணியின் மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு கேரளா முதல்வர் பரிந்துரைத்துள்ளார்.

நங்கநல்லூர்  48-வது தெரு தபால் பெட்டியில் கடந்த 2-ந்தேதி 20-க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட்டுகள் கிடந்தது. தபால் துறை அதிகாரிகள் அந்த பாஸ்போர்ட்டுக்களை  பழவந்தாங்கல் போலீசில் ஒப்படைத்தனர். அதே போல் சென்ற  6-ந்தேதி அதே தபால் பெடடியில் 13 பாஸ்போர்ட்டுகள் கிடந்தது. அதனையும் கைப்பற்றிய போலீசார் தபால் பெட்டியில் பாஸ்போர்ட்டுகளை போட்டது யார்? என்று விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் 3-வது முறையாக நேற்று முன்தினம் தபால் பெட்டியில் 15 பாஸ்போர்ட்டுகள் கிடந்ததால் தபால் ஊழியர் கடும் அதிர்ச்சி அடைந்தார். அதுவும் போலீசில் ஒப்படைக்கப்பட்டது.இதுவரை தபால் பெட்டியில் இருந்து 50 பாஸ்போர்ட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இவை அனைத்தும் ஒரிஜினல் பாஸ்போர்ட்டுகள் ஆகும்.இந்த பாஸ்போர்ட்டுகளின் உரிமையாளர்கள் 10 பேரிடம் போலீசார் விசாரித்தபோது, விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டுகளை தவற விட்டதாக தெரிவித்தனர். விமான நிலையத்தில் தவற விட்ட  பாஸ்போர்ட்டுகள் எவ்வாறு  தபால் பெட்டிக்கு வந்தது என  விமான நிலைய ஊழியர்களிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.இதற்கிடையே இது மத்திய அரசு துறை விவகாரம் என்பதால் சி.பி.ஐ. விசாரிக்கிறதுசி.பி.ஐ. விஜிலென்ஸ் அதிகாரி ஒருவர் போலீசார் கைப்பற்றிய பாஸ்போர்ட்டுகளின் விவரங்களை சேகரித்து சென்று உள்ளார். 

3 அதிகாரிகள் கொண்ட சி.பி.ஐ. விஜிலென்ஸ் பிரிவினர் இதுபற்றி விசாரிக்கிறார்கள்.
அடுத்து மாநிலங்களவை தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்களிடையே கட்சி மாறி வாக்களிக்க கோடிகளில் லஞ்சம் பேசப்படுவதாக வந்த செய்திகளால் சிபிஐ விசாரணைக்கு தேர்தல்  ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

ஆக இந்த மூன்று சிபிஐ  விசாரணை செய்திகள் மூலம் நமக்கு ஒரு விளக்கம் கிடைத்துள்ளது.

சிபிஐ விசாரணை நடக்க அது நாட்டின் பாதுகாப்பை ,இறையாண்மையை ,சட்டத்தை அச்சுறுத்தும் நிகழ்வாக மட்டும் இருந்தால் போதாது ஆட்சியாளர்களின் மனதுக்கு ஒத்துப்போவதாக இருக்க வேண்டும் என்பதுதான்.
இப்படி எல்லாம் கூற காரணம் தேர்தலைக் காரணம் காட்டி சின்ன நடைபாதை வியாபாரி கூட பணத்தைக் கொண்டுபோக விடாமல் வழிமறித்து புடுங்கி ஆவணம் கேட்ட தேர்தல் அலுவலர்கள் மூன்று கண்டெய்னர் மூலம் சரியான ஆவணங்கள் ,பாதுகாப்பு இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட அவர்களாகக் கூறும் 570 கோடிகளுக்கும்,மத்திய அரசு இலட்சினை,ஆம்புலன்ஸ் மூலம் பல நூறு கோடிகளை தேர்தல் பணிகளுக்கு தமிழகம் மூலம் பட்டுவாடா செய்த அன்புநாதன் விடயத்திலும் மன்மோகன் சிங் மவுனத்தை விட கனமான  கல்லுளி மங்கமவுனத்தை தேர்தல்  ஆணையமும், வருமான வரித்துறையும் ,மத்திய நிதித்துறையும்,ரிசர்வ் வங்கியும் இன்று வரை கடை பிடிப்பதின் அர்த்தம்தான் புரிய வில்லை.

இது தொடர்பாக பிடிபட்ட பணத்தின் உண்மையான எண்ணிக்கை,அதன் மீது தாங்கள் எடுத்த நடவடிக்கை பற்றி இதுவரை எந்த விளக்கமும் தரப்படவே இல்லை.
இது பற்றி திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி,பா.ம.க.தலைவர் ராம்தாஸ் போன்றோர்  பல அறிக்கைகள் வெளியிட்டும் புத்தரின் போதிமர தியானம் போல் அரசு ,தேர்தல் ஆணையம்  மவுனம் கடை பிடிக்கிறது.
தேர்தல் ஆணையம் கிட்டத்தட்ட கோமா நிலையிதான் இந்த விவகாரத்தில் இருக்கிறது.அல்லது எல்லாம் கடந்த ஜென் நிலை என்றும் கொள்ளலாம்.

இவர்கள் மவுனத்தால் அரசு,தேர்தல் ஆணையம்,வங்கிகள் மீதான நம்பிக்கை மக்கள் மனதில் கலைந்து வருகிறது.

இந்த கண்டெய்னர் விவகாரத்தில் இன்னமும் இருக்கும் ஐயங்கள்.
பதில் தருவது யார் ?
 1. திருப்பூர் அருகே, 570 கோடி ரூபாய் பணத்துடன் பிடிபட்ட லாரிகள், டீசல் போடுவதற்காக, சர்வீஸ் சாலையில் சென்று கொண்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், கோவையில் இருந்து, அவை பிடிபட்ட இடம் வரை, 15 பெட்ரோல் பங்க்குகள் இருந்தன. அவற்றில் டீசல் நிரப்பாதது ஏன்? 
2. மேலும், பிடிபட்ட போது, மூன்று லாரிகளிலும் டேங்க் முழுவதும் டீசல் இருந்தது. பெருமாநல்லுார் அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் டீசல் நிரப்பப்பட்டது தெரிய வந்துள்ளது. 
இதற்கான பதில் என்ன?
3. மூன்று லாரிகளும், தேர்தல் அதிகாரிகளால், 7 கி.மீ., துாரம் துரத்தி செல்லப்பட்ட போது, மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் சென்றுள்ளதாக தெரிகிறது. இது சாதாரண வேகம் தான், மேலும் சர்வீஸ் சாலையில் இதற்கு மேல் வேகமாக செல்ல முடியாது, அப்படி இருக்கையில் தேர்தல் அதிகாரிகளால் ஏன் உடனடியாக அவற்றை நிறுத்த 
முடியவில்லை? 
4. மூன்று லாரிகளிலும் மொத்தம், 195 மரப்பெட்டிகளில் பணம் இருந்தது. முதல் லாரியில் - 60, இரண்டாவது லாரியில் - 65, மூன்றாவது லாரியில் - 70. விதிமுறைகளின்படி, ஸ்டீல் பெட்டிகளில் தான் பணம் எடுத்துச்செல்லப்பட வேண்டும். இதற்கு தீ விபத்து அபாயமும் ஒரு காரணம். 
இதை கருதி, தீயணைப்பு கருவியும் வாகனத்தில் இருக்க வேண்டும். ஆனால், மரப்பெட்டியும், தீயணைப்பு கருவி இல்லாததும் சந்தேகத்தை 
கிளப்புகின்றன. 
5. பிடிப்பட்ட லாரிகளின் பதிவு எண்கள் - ஏபி 13 எக்ஸ் 8650, ஏபி 13 எக்ஸ் 8204, ஏபி 13 எக்ஸ் 5203.
இதில், ஏபி 13 எக்ஸ் 5203 என்ற பதிவு எண் தான் ஆவணங்களில் மாறி உள்ளது. ஆவணங்களில் உள்ள பதிவு எண் என்ன என்பதை அதிகாரிகள் தெரிவிக்க மறுப்பது ஏன்?
6. மூன்று லாரிகள் மற்றும், மூன்று இன்னோவா கார்கள் பிடிப்பட்டன. மூன்று லாரிகள் பற்றிய தகவல்கள் தான் வெளி வருகின்றன. மூன்று இன்னோவா கார்களில், இரண்டு மட்டும் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டு உள்ளன. மூன்றாவது எங்கே? 
மூன்றாவது காரை எடுத்துச் சென்ற, வங்கி ஊழியர் சூரி ரெட்டி என்பவர் இதுவரை சம்பவ இடத்திற்கு வரவில்லை. வேறு அதிகாரிகள் தான் வந்து செல்கின்றனர். சூரிரெட்டி உண்மையிலேயே வங்கி ஊழியரா? சூரிரெட்டியை அதிகாரிகள் தேடாதது ஏன்? இந்த, இரண்டு வண்டிகள் யாருக்கு சொந்தமானவை? அதிகாரிகள் அவை பற்றி தகவல் வெளியிட மறுப்பது ஏன்? மூன்றாவது வண்டியை அதிகாரிகள் தேடாதது ஏன்?
7. கோவை போலீசாருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதா?
8. தேர்தல் ஆணையத்திடம் முன்கூட்டியே அனுமதி பெறாதது ஏன்?
9. விசாகப்பட்டினம் வங்கி கிளைக்கு, சென்னையில் இருந்து தான் பணத்தை எடுத்து செல்வது எளிது. கோவையில் இருந்து எடுத்து செல்ல முயற்சித்தது ஏன்?
10. இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையமும், ரிசர்வ் வங்கியும் நேரிடையாக எந்த பதிலும் கூறாமல், வருமான வரி அதிகாரிகளை கை காட்டுவது ஏன்?
11. இந்த விஷயத்தில் மத்திய அமைச்சர் தலையிட்டார் என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டி உள்ளார். யார் அந்த மத்திய அமைச்சர்?
12. இந்த பணம், ஸ்டேட் வங்கிக்கு உரியது என்றாலும், அதற்கான உரிமையை கோர, 18 மணி நேரம் ஆனது ஏன் என்ற கேள்விக்கு, சனிக்கிழமை இரவு பணம் பிடிப்பட்டது. அடுத்த நாள் ஞாயிற்று கிழமை. விடுமுறை தினம் என்பதால், அரசு வங்கி அதிகாரிகளிடம் தாமதம் ஏற்பட்டது என்று காரணம் கூறப்படுகிறது. 
இவ்வளவு பணம் பிடிபட்டும் விடுமுறையை காரணம் காட்டுவது சரியா? அப்படியானால் விடுமுறையை ஒட்டி பணத்தை எடுத்துச் சென்றதற்கான காரணம் என்ன? 
13. விசாகப்பட்டினத்தில், 77 ஸ்டேட் வங்கி கிளைகள் உள்ளன. 2,500 ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. இவற்றில் பணம் வைக்க, நாள் ஒன்றுக்கு, 40 கோடி ரூபாய் தேவை என்று, விசாகப்பட்டினம் எஸ்.பி.ஐ., வங்கி கிளை மேலாளர் பூர்ண சந்திர ராவ் கூறுகிறார். வங்கி கிளைக்கு, ஒரு நாளைக்கு எவ்வளவு பணம் தேவை என்பதை தெரிந்து வைத்து இருக்கும் அவர், மார்ச் மாதமே கோவை வங்கி கிளையிடம் பணம் கேட்டதாக கூறுகிறார். ஆனால், அதை எடுத்துச் செல்வதற்கு ஏன் 
இவ்வளவு தாமதம்?
14. இதற்கு முன் இது போல், பெரிய தொகை கொண்டு செல்லப்பட்டதற்கு உதாரணம் உண்டா என்ற கேள்விக்கு, விசாகப்பட்டினம் எஸ்.பி.ஐ., வங்கி கிளை மேலாளர் பூர்ண சந்திர ராவ் கூறுகையில், ''கடந்த செப்டம்பரில், மைசூரில் உள்ள ரிசர்வ் வங்கியின் கரன்சி வினியோக மையத்தில் இருந்து, 1,116 கோடி ரூபாயை இங்கு கொண்டு வந்தோம்,'' என, பதில் கூறியுள்ளார். 

ஆனால், ''மாநிலம் விட்டு மாநிலத்துக்கு ரொக்கம் கொண்டு செல்லும் வழக்கம் இல்லை. ஒரு மாநிலத்தில் உள்ள வங்கி கிளைக்கு பணம் தேவை என்றால், அருகில் உள்ள அதே வங்கியின் கிளையை நாடலாம் அல்லது அந்தப் பகுதியில் உள்ள ரிசர்வ் வங்கி கிளையை நாடலாம்; இது தான் நடைமுறை,'' என்று ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
15. இந்தியாவில் பண நிர்வாகத்தின் பொறுப்பு ரிசர்வ் வங்கி உடையது. நாட்டில் எந்த இடத்திலும் பண 
தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க; 18 இடங்களில் நோட்டு அச்சகங்கள் மற்றும் நாணய உற்பத்தி மையங்கள்
● ஒரு கிளை அலுவலகம்
● நேரடி நிர்வாகத்தில், கொச்சியில், ஒரு பண காப்பகம்
● வங்கிகளின் நிர்வாகத்தில், 4,211 பண காப்பகங்கள் என, ஒரு மாபெரும் பண நிர்வாக கட்டமைப்பை ரிசர்வ் வங்கி நடத்தி வருகிறது. இதில், வங்கிகளிடம் உள்ள பண காப்பகங்கள், அந்தந்த வங்கியின் செயல்பாட்டிற்கு மிக முக்கியமானது. வங்கிகளே பண காப்பகங்களை நடத்துவதன் மூலம், தங்கள் பண தேவைகளுக்கு, ஒவ்வொரு முறையும் ரிசர்வ் வங்கியை அணுக வேண்டியதில்லை. 
தனியார் வங்கிகளுக்கு பண காப்பங்களை நடத்தும் உரிமை முதலில், 1994ல் தான் கொடுக்கப்பட்டது. இதை பெற்ற வங்கி எச்.டி.எப்.சி., 
என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்த காப்பகங்களில் நடக்கும் பண பரிவர்த்தனைகள் பற்றி, ரிசர்வ் வங்கிக்கு தகவல் தெரிவிப்பது அவசியம். அப்படி தெரிவிக்காவிட்டால் வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். 
இதுபற்றி, ரிசர்வ் வங்கி, 2014ல் வெளியிட்ட சுற்றறிக்கையில், 'பண காப்பகங்கள், ஒவ்வொரு நாளும் நடக்கும் அனைத்து பரிவர்த்தனைகள் பற்றியும், அன்றிரவு, 9:00 மணிக்குள், 'ஐகாம்ஸ்' மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால், அன்று பண காப்பகத்தில் இருந்த தொகையின் மீது அபராத வட்டி வசூலிக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
நிலை இப்படி இருக்க, எஸ்.பி.ஐ., ஒரு பண காப்பகத்தில் இருந்து மற்றொன்றுக்கு பணத்தை மாற்றியது பற்றி ரிசர்வ் வங்கிக்கு தகவல் வரவில்லை என்று, ரிசர்வ் வங்கியின் தமிழ்நாடு பிராந்திய இயக்குனர் சதக்கத்துல்லா ஞாயிறன்று காலை கூறினார். தகவல் தெரிவிக்காததற்கு காரணம் என்ன?
16. விசாகப்பட்டினம் வங்கி கிளை மேலாளர் பூர்ண சந்திர ராவ், மூன்று 
கன்டெய்னர் லாரிகளுடன், மூன்று ஜீப்களில் போலீசாரை பாதுகாப்புக்கு அனுப்பியதாக கூறுகிறார். ஆனால், திருப்பூரில், மூன்று இன்னோவா கார்கள் பிடிப்பட்டுள்ளன. ஜீப் 
என்பது இன்னோவா காராக மாறியது எப்படி?
17. இப்பிரச்னை குறித்து தனியார் வங்கிகள் கூறுவது என்ன? அவை, என்ன மாதிரியான நடைமுறைகளை 
பின்பற்றுகின்றன? இது குறித்து தனியார் வங்கியின் நிர்வாக இயக்குனர் ஒருவர் கூறியதாவது:
ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான, 570 கோடி ரூபாய் சிக்கியிருப்பது பற்றி அறிந்தேன். இதேபோல், எங்கள் வங்கிக்கு சொந்தமான, ஐந்து கோடி ரூபாய், கடந்த சட்டசபை தேர்தலின் போது வழி மறிக்கப்பட்டது; நாங்கள் அதை பின்னர் மீட்டோம். 
அதுமட்டுமின்றி, கர்நாடகாவில் இருந்து, ஆந்திராவுக்கு பல கோடி ரூபாயை கொண்டு சென்ற போது, அங்கும் தேர்தல் அதிகாரிகள் முடக்கினர். வேறு மாநிலம் என்பதால், அதை மீட்டு வருவதற்கு, மூன்று 
நாட்களுக்கு மேல் ஆனது.
இதுபோன்ற நேரங்களில், மின்னஞ்சல் பரிவர்த்தனை, பணம்
அனுப்பியதற்கான, 'வவுச்சர்' மற்றும், இன்சூரன்ஸ் செய்யப்பட்டதற்கான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். எவ்வளவு பணம் கொண்டு செல்கிறோம் என்பதற்கு கட்டுப்பாடு இல்லை. எனினும், வழியில் உள்ள ஒவ்வொரு கரன்சி மையத்திலும் நின்று போகவேண்டும். 
எங்கள் கரன்சி வினியோக மையத்தில் அதிகபட்சமாக, 250 கோடி ரூபாய் வரை வைத்திருக்க அனுமதி உள்ளது. அதற்கு மேல், ஒரு மையத்தில் இருந்தால், அதை வேறு மையத்திற்கு மாற்றி விடுவோம். இவ்வாறு, மாற்றும் போது தான் ஸ்டேட் வங்கியின் பணம் சிக்கியிருக்கக்கூடும். 
வார விடுமுறை நாளில் பணம் சிக்கியதும், அது அரசு வங்கி என்பதாலும், அது தொடர்பாக யார் உடனடியாக உரிமை கோருவது என்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம். பணம் எடுத்துச் செல்லும் முன், உள்ளூர் போலீசிடம் நாங்கள் சொல்லிவிட்டு புறப்படுவோம்.
பொதுவாக, வங்கிகள் இவ்வாறாக பணம் அனுப்புவதை வெளியில் சொல்ல விரும்பமாட்டார்கள். அது சில நேரங்களில், வேறுவித சிக்கலுக்கு வழிவகுக்கிறது. எங்கள் பணத்தை அனுப்பும் போது, எங்கள் வாகனம் என்பதை வெளியில் இருந்து பார்த்து அறிய முடியாது. பதிவுச்சான்றை பார்த்தால் தான், அது
எங்களுக்கு சொந்தமான வாகனம் என்பது தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.இந்த நடைமுறையை, எஸ்.பி.ஐ., பின்பற்றாததற்கு காரணம் என்ன?
18. ஒரு வங்கி கிளையில் இருந்து மற்றொரு வங்கி கிளைக்கு அதிகபட்சம், ஐந்து கோடி ரூபாய் தான் கொண்டு செல்ல முடியும் என்று கூறப்படும் நிலையில், 570 கோடி ரூபாயை, ஒரே நேரத்தில் கொண்டு சென்றதற்கான காரணம் என்ன?
19. ஒவ்வொரு கிளையும், அதன் வைப்புத் தொகைக்கு ஏற்ப, 4.5 சதவீத ரொக்கத்தை வைத்துக் கொள்ளலாம். அதற்கு அதிகமான ரொக்கத்தை, ரிசர்வ் வங்கி சார்பில் வங்கிகள் நிர்வகிக்கும், 'செஸ்ட்' என, அழைக்கப்படும் பண காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும். 4.5 சதவீதத்துக்கு கீழ் ரொக்கம் குறையும் போது, இந்த பண காப்பகத்தில் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த நடைமுறையில் இப்படிப்பட்ட பண பரிவர்த்தனையின் நிலை என்ன?

20. கோவை ஸ்டேட் வங்கியிலிருந்து, 570 கோடி ரூபாய் ரொக்கத்தை, ஆந்திர மாநிலம் கொண்டு செல்ல விதிகள் அனுமதிக்கிறதா?
கோவையிலிருந்து இவ்வளவு அதிகமான ரொக்கம், ஆந்திராவிற்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை. விசாகப்பட்டினம் ஸ்டேட் வங்கி கிளைக்கு ரொக்கம் தேவைப்பட்டால், அந்த மாநிலத்தில் உள்ள, அந்த வங்கியின் பண காப்பத்தை தான் நாட வேண்டும்.
ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைப்படி, கோவையில் சேமிக்கப்பட்ட, 570 கோடி ரூபாய் ரொக்கத்தை, சென்னை ரிசர்வ் வங்கியின் பண பாதுகாப்பு மையத்துக்குத் தான் கொண்டு சென்றிருக்க வேண்டும். விசாகப்பட்டினத்திற்கு கொண்டு சென்றது விதிகளுக்கு புறம்பானது. வழக்கத்திலும் இதுபோன்ற நடைமுறை இல்லை.
21. ஸ்டேட் வங்கிக்கு தமிழகத்தில், 144 பண காப்பகங்கள் உள்ளன. ஆந்திர எல்லையை ஒட்டி திருத்தணியில் இருந்து சென்னை வரை வசதியான இடங்களில் இவை உள்ளன. அப்படி இருக்கையில், கோவையில் இருந்து குறிப்பாக பணம் எடுத்துச் செல்லப்
பட்டது எதற்காக? 
22. வங்கியின் பணத்தை கொண்டு செல்லும் லாரி, வழியில் எங்காவது நிறுத்தப்பட்டால், நிறுத்தப்பட்ட, 15 நிமிடத்திற்குள் வங்கியின் தகுந்த அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். 
அந்த அதிகாரி, 'டிபாசிட் இன்சூரன்ஸ் அண்ட் கிரெடிட் கேரன்டி கார்ப்பரேஷன்' என்ற நிறுவனத்திற்கு, உடனடியாக தகவல் தெரிவித்திருக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்காவிட்டால், அந்தப் பணம் வங்கியுடையது அல்ல என்று கருதப்படும் என்பது விதி. 
இந்த நடைமுறையைப் 
பின்பற்றாமல், 18 மணி நேரம், தாமதம் செய்தது ஏன்? 

=====================================================================================
இன்று,
ஜூன்-12.

  • குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்
  • பிலிப்பைன்ஸ் விடுதலை தினம்
  • கூகுள் எர்த் மற்றும் லினக்ஸ் பதிப்பு வெளியிடப்பட்டது(2006)
=====================================================================================
மலிவு விலையில்  மருந்துகள்.
அமேரிக்கா நெருக்கடிக்கு மோடி  பணிவு.
புற்றுநோய், காசநோய் உள்ளிட்ட தீவிர நோய்களுக்கு, இந்திய கம்பெனிகள் மலிவான விலையில் மருந்து தயாரிக்கக் கூடாது என்ற அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு மோடி அரசு அடிபணியும்நிலை ஏற்பட்டிருப்பதாக அச்சம் எழுந் துள்ளது.
எச்ஐவி, காசநோய் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட தீவிரமான உயிர்கொல்லி நோய்களுக்கு, இந்திய கம்பெனிகள், எளிய மக்களும் வாங்கக் கூடிய விலையில் மருந்து தயாரித்து வருகின்றன. 
அவற்றின் விலைகள், வளர்ச்சி அடைந்த நாடுகளில் தயாரிக்கப்படும் மருந்து களின் விலைகளை விட 80 விழுக்காடு குறைவாக இருந்து வந்தன.
இதனால் பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள், குறிப்பாக அமெரிக்க மருந்துக் கம்பெனிகள்- இந்தியா தனது உள்நாட்டு மருந்துக் கம்பெனிகளுக்கு அளிக்கும் பாதுகாப்பை நீக்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் அளித்து வந்தது. 
ஏற்கெனவே உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியா செய்து கொண்டுள்ள எண்ணற்ற ஒப்பந்தங்களில் ஒன்றான அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தின்படி இந்திய காப்புரிமைச் சட்டம் திருத்தப்பட்டது.
1970-களில் இந்திரா காந்தி யின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்திய காப்புரிமைச் சட்டத்தின் கீழ், இந்தியா மருந்து தயாரிப்பில் பெரும் முன்னேற்றம் கண்டது. 
இச்சட்டத்தின் கீழ் அனைத்து மருந்துகளுக்கும் காப்புரிமையில் விதி விலக்குகள் கொண்டு வரப்பட்டன. அதாவது ஒரு மருந்து தயாரிப்பிலுள்ள உற்பத்திமுறைக்கு மட்டுமே காப்புரிமை அளிக்கப்பட்டது; உற்பத்தி பொருளுக்கு காப்புரிமை அளிக்கப்படவில்லை. 
இதன்படி வெளிநாடு களில் தயாரிக்கப்படும் மருந்துகளின் அதே உற்பத்தி முறையை பின்பற்ற க்கூடாது; வேறு முறையை பின்பற்றி அதே மருந்தை தயாரித்துக் கொள்ளலாம் என்ற வாய்ப்பு கிடைத்தது. இதனால் எண்ணற்ற மருந்துகள் வேறு வகையான உற்பத்தி முறைகளை பின்பற்றி ஆயிரக்கணக் கில் தயாரிக்கப்பட்டன. 
இதேபோலநாட்டின் காப்புரிமைச் சட்டத்தில் உயிர் காக்கும் மருந்து களுக்கும், உயிரினங்களுக்கும் நுண்ணு யிரிகளுக்கும் காப்புரிமைச் சட்டத் திலிருந்து முற்றிலும் விதி விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், உலகவர்த்தக அமைப்புடன் செய்து கொள்ளப்பட்ட அறிவுசார்சொத்துரிமை ஒப்பந்தத்தின்படி காப்புரிமைச் சட்டம் கடந்த 2005-ல் திருத்தப்பட்டது. 
அதன் படி சில மருந்துகள் மற்றும் தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகளுக்கு காப்புரிமை அளிக்கப்பட்டது. காப்புரிமை 20 ஆண்டுகாலத்திற்கு நீட்டிக்கப்பட்டது. மருந்துப் பொருட்களை பொருத்தவரை உற்பத்தி முறைகளுக்கும் உற்பத்தி பொருட்களுக்கும் காப்புரிமை நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் உலக வர்த்தக அமைப்பு வலியுறுத்தி வந்தது. 
இதை இந்தியா முழுமையாக ஏற்றுக் கொள்ளாமல் சில மருந்துகளுக்கு மட்டும் காப்புரிமை அளிப்பதை மேற்கொண்டு வருகிறது. 
இதில் புற்றுநோய் மருந்துகளுக்கு காப்புரிமை அளிக்கப்பட்டதால் அவற்றின் விலைகள் வளர்ச்சி அடைந்த நாடுகளில் விற்கப்படும் விலை அளவுக்கு உயர்ந்தன. இவ்வகை மருந்துகளுக்கு நோயாளிகள், பல லட்சம் செலவழிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
ஆனால் காசநோய் மற்றும் எச்ஐவி போன்ற நோய்களுக்கான மருந்துகளை நடுத்தர மக்களும் ஏழை, எளியமக்களும் வாங்கும் விலைக்கு இந்தியா தொடர்ந்து தயாரித்து வருகிறது. 
இவற்றின் உற்பத்தியையும் நிறுத்தி விட்டு அவற்றுக்கும் காப்புரிமை அளிக்க வேண்டும் என்பது அமெரிக்கக் கம்பெனிகளின் நீண்டநாள் கோரிக்கை. இதனை நடைமுறைப்படுத்த இந்தியா மீது வர்த்தகத் தடை நடவடிக்கை உள்ளிட்ட பொருளாதாரத்தை பாதிக்கும் பல நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக அந்த கம்பெனிகள் மிரட்டியும் வருகின்றன
. இந்திய மருந்துக் கம்பெனிகளுக்கு அளித்து வரும் பாதுகாப்பை, இந்தியா தளர்த்திக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2013-லிருந்து அமெரிக்க மருந்துக் கம்பெனிகள் நிர்ப்பந்தம் அளித்து வருகின்றன. 
மன்மோகன் சிங் அமெரிக்கா சென்றிருந்த போதும் இதேபோல நிர்ப்பந்தம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அமெரிக்கா சென்றிருந்த நரேந்திரமோடிக்கும், ஒபாமாவுட னான பேச்சுவார்த்தையில் இந்த நிர்ப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 
இந்த பேச்சுவார்த்தையில் அறிவுசார் சொத்துரிமை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இருநாட்டு தலைவர்களும் தங்களது சந்திப்புக்குப் பின்னர் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்திருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.
=======================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?