சாது வள்ளுவர்.?

ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை மீண்டும் நிறுவப்பட்டது என பா.ஜ., முன்னாள் எம்.பி., தருண் விஜய் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
திரு வள்ளுவரை ஹரித்துவார் வரை கொண்டு சென்று தெருவில் கிடத்தி பின்னால் நிற்க வைத்த தருண் விஜய் க்கு மிக்க நன்றி.
அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு கீழே வள்ளுவரை பற்றியும்,அவர் எழுதிய திருக்குறளையும் உதாரணத்துக்கு எழுதி வைத்திருக்கிறீர்களா?இந்தி,அல்லது சம்ஸ்கிருதத்தில் ?
இல்லையெனில் இன்னும் கொஞ்ச நாளில் திருவள்ளுவரையும் இந்து சாமியாராக கதைக் கட்டி விடுவார்கள்.ஐயனும் கும்பமேளா சாதுவாக மாறிவிடும் அபாயம் உள்ளது.
இப்போவே சிலை அமைப்பும் பின்னாள் பறக்கும் காவித்துணியும் ஒரு அம்சமாக தெரிகிறது.


 
அம்பானி-அதானி தற்கொலையா செய்யப்போகிறார்கள்?  

20 ஆண்டுகளில் இல்லாத வகையில், பொதுத்துறை வங்கிகளின், கடன் வளர்ச்சி வீதம் மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது மேலும், வங்கிகள் அளித்த, 77 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வசூலிக்கப்படாததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
இப்பிரச்னைகளில் இருந்து மீட்கும் வகையில், பாரத ஸ்டேட் வங்கி உட்பட, 13 பொதுத்துறை வங்கிகளுக்கு புத்துயிர் அளிக்க, 23 ஆயிரம் கோடி ரூபாயை, மத்திய அரசு வழங்கியுள்ளது.

பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன், முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. கொடுத்த கடன் தொகையும், அதற்கான வட்டியும் வசூலிக்கப்படாமல், வங்கிகள் பெரிய அளவில் நஷ்டம் அடைந்து வருகின்றன.
வட்டி வீதம் அதிகமாக உள்ளதாலும், தொழில் துறை சிறப்பான வளர்ச்சியை எட்ட முடியாததாலும், வங்கிகள் அளிக்கும் கடன்களின் வளர்ச்சி வீதம், 20 ஆண்டுகளில் இல்லாத வகையில், மிகப்பெரும் சரிவை சந்தித்துள்ளது. மேலும், தனியார் வங்கிகளுடன் போட்டியிட முடியாத சூழலில், பொதுத்துறை வங்கிகள் உள்ளன.மேலும், கோடிக்கணக்கில் கடன் பெற்ற பலர் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வருவதால், பொதுத்துறை வங்கிகள் கடும் நிதிச் சிக்கலிலும் உள்ளன. 
நாடு முழுவதும் வங்கிகளில், 76 ஆயிரத்து, 685 கோடி ரூபாய் கடன் வாங்கி,அதை செலுத்தாத, 8,167 பேர், கடன் ஏய்ப்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், நசிந்து வரும் பொதுத்துறை வங்கிகளுக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கில், மத்திய அரசு, 22 ஆயிரத்து, 915 கோடி ரூபாய் நிதியை, அவற்றுக்கு வழங்கியுள்ளது. மிகப் பெரிய தொழில் அதிபர்கள், வங்கிகளில் கடன் வாங்கி, அவற்றை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றுவதால், கடன் கொடுக்கும் விவகாரத்தில், வங்கிகள் கடுமையான விதிமுறைகளை பின்பற்றுகின்றன.இதனால், சிறிய மற்றும் நடுத்தர தொழிலில் ஈடுபடுவோர், கடன் கிடைக்காமல் திண்டாடுகின்றனர்.
இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலும், இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மத்திய அரசு, 13 பொதுத்துறை வங்கிகளின் வளர்ச்சிக்காக, 22 ஆயிரத்து, 915 கோடிரூபாய் வழங்கி உள்ளது. இதில், அதிகபட்சமாக, நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான, பாரத ஸ்டேட் வங்கிக்கு, 7,575 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு, 3,101 கோடி ரூபாயும்; பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு, 2,816 கோடி ரூபாயும் வழங்கப்படும்.
இதன் மூலம், பொதுத்துறை வங்கிகளில், அரசின் பங்கு விகிதம் அதிகரிக்கும். அடுத்த நான்கு ஆண்டுகளில், பொதுத்துறை வங்கிகளுக்கு, மத்திய அரசு, 70 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கும். வங்கிகள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்னைகள் மற்றும் பாதிப்புகளுக்கு, அரசு வழங்கும் நிதி பெரும் தீர்வாக அமையும்.

ஆனால் வங்கிகளின் இருவேறு சார்பு நடவடிக்கைகள் வராக்கடனை குறைக்கப் போவதில்லை.
கல்விக்கடனை 55% தள்ளுபடியில் உடனே வசூல் செய்து விட்டு 15 ஆண்டுகளில் திருப்பி செலுத்த ரிலையன்சுக்கு குத்தகை கொடுக்கிறது வாங்கி.இந்த ரிலையன்ஸ் யார் 1.5 ஆயிரம் கோடி கடனை வாங்கி விட்டு வட்டி ,அசல் கொடுக்காமல் இருக்கும் மகா கடன்காரன்.
ரிலையன்சுக்கு கொடுக்கு 15 ஆண்டுகள் அவகாசம்,55% தள்ளுபடியை கல்விக்கடன் வாங்கிய ஏழை மாணவர்களுக்கு கொடுக்கலாமே.ஏன் அதை இந்த வங்கிகள் செய்யவில்லை.
ரிலையன்ஸ் கெடுபிடியால் லெனின் என்ற மாணவன் தற்கொலை செய்திருக்கிறான்.
இதே கெடுபிடியை 76 ஆயிரத்து, 685 கோடி வராக்கடனை வாங்கிய அம்பானி,அதானியிடம் வங்கிகள் ஏன் காண்பிக்கவில்லை .அவர்கள் என்ன தற்கொலையா செய்வார்கள்.?
மல்லையா போல் வெளிநாட்டு சென்று உல்லாசமாக வாழ்வார்கள்.

====================================================================================
இன்று,
ஜூலை-20.
  • உலக  சதுரங்க தினம்

  • கொலம்பியா விடுதலை தினம்(1810)
  • யுகோஸ்லாவியா அரசு  உருவாக்கப்பட்டது(1917)
  • வானொலியை கண்டுபிடித்த மார்க்கோனி இறந்த தினம்(1937)
  • டென்மார்க் பன்னாட்டு அமைப்பில் இருந்து விலகியது(1940)
  • திமுக இளைஞரணி ஆரம்பிக்கப்பட்டது (1980)

உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில், முதன்முதலாக காலடி பதித்தவர், எட்மண்ட் ஹிலாரி.
நியூசிலாந்து நாட்டின், ஆக்லாந்து நகரில் 1919 - ஜூலை 20 அன்று பிறந்தார். 
நியூசிலாந்து வான்படையில் இணைந்து பணியாற்றினார். அப்போது தான், மலையேற்றத்தில் ஆர்வம் ஏற்பட்டது. 
11 வெவ்வேறு சிகரங்களை தொட்டுவிட்டவருக்கு, இமயத்தின் மீது ஏறி நிற்க வேண்டும் என்ற பெருங்கனவு இருந்தது.
கடல் மட்டத்திலிருந்து, 29,029 அடி உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரம், பிரம்மாண்டமானது; அபாயகரமானது. 
தன் உதவியாளர் டென்சிங் நார்கேவுடன், எவரெஸ்ட் ஏறத் துவங்கினார்; 1953 மே 29ம் தேதி காலை, 11:30 மணிக்கு அதன் உச்சியில் நின்றார்.கடந்த, 1958ல், உலகின் தென்முனையான அண்டார்டிகாவை, முதன்முதலில் சென்றடைந்தார்; 
1985ல், வட துருவம் சென்றார். இதன் மூலம் உலகின் இரு துருவங்களையும், தொட்ட முதல் மனிதர் என்ற பெருமையையும் பெற்றார். 
2008 ஜன., 11ம் தேதி இறந்தார். 
====================================================================================
தீர்ப்புகள் திருத்தப்படலாம்?திருத்தப்பட்டு விட்டன!

திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, கபாலி திரைப்படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தேவராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கிருபாகரன் 
’’ ரசிகர்களே கூடுதல் கட்டணம் கொடுப்பதால் எப்படி தடை விதிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பி வழக்கை தள்ளுபடி செய்திருக்கிறார்.

இவரைப் போன்ற ஜாஸ் முதலாளிகள் கஷ்டம் தெரிந்த நீதியரசர்கள் இருப்பதால்தான் இன்று இந்தியா வல்லரசாகிக்கொண்டிருக்கிறது.

நீதி இந்தப் படத்தை போயஸ் தோட்டம் வாங்கியிருப்பதால் வளைந்து விட்டதாக சிலர் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் அடிப்படையில் ஒன்றை அறிந்து கொள்ளவில்லை "குடிமகன்கள் அலைந்து திரிந்து சாலையை கடந்து போதையில் எங்காவது விபத்தில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் டாஸ்மாக் கடைகள் தெருக்கு இரண்டாக தீராத அம்மாவுக்கு தனது குழந்தைக்கு என்ன வேண்டும் என்று தெரியாதா?

அதை அடிப்படையாக வைத்துதான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தால் குற்றமில்லை என்பது போன்ற புரட்சி கரமான தீர்ப்புகள் இந்தியாவில் வெளிவரும் புரட்சிகரமான காலத்தில் நாம் புரட்சி தலைவி  ஆடசியில் வாழ்ந்து வருவதை நாம் மறந்து விடக்  கூடாது.

ராம் குமார தானாக விருப்பப்பட்டு தான் கொலை செய்துள்ளார் அது எப்படி குற்றமாகும்?
டி.எஸ்.பி.விஷ்ணு பிரியா தானாக விருமி தான் தூக்கில் தொங்கினார் அது குற்றமில்லை.
ரேஷன் கடைகளில் விருப்பித்தானே கள்ளசந்தை காரர்கள் அரிசி,சீனி,பாமாயில்,பருப்பு கடத்துகிறார்கள் அது குற்றமில்லை.

ஆடிக்கார் ஐஸ்வர்யா விரும்பித்தான்குடித்து காரை ஓட்டினார் ,டாஸ்மாக்கை அரசுதான் திறந்துள்ளது அவர் காரில் ஒருவர் வந்து மாட்டி செத்தால் அது யார் குற்றம் ?அவர் திருமணமாகாத கன்னி என்று வக்கீல் ஜாமீன் கேட்டு கூட கொடுக்கவில்லையே.

போன்ற தீர்ப்புகளை இனி அதிகம் எதிர்பார்க்கலாம்.அந்த நல்லகாலம் நமது வாழ்நாளிலேயே வந்து விட்டது நாமெல்லாம் கொண்டாட வேண்டியதுதான்.(இந்த இழவு சீர்கேடுகள் வர நாளாகும்னு நினைத்தது நமது தவறுதான்)
இதை கூறிய நீதியரசர் கிருபாகரன் அவர்கள் இதற்கு முன்னர் அதிக விலைக்கு டிக்கெட் கொடுத்து மாட்டி தண்டனை பெற்ற திரையரங்கு உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு வழங்க ஒரு ஆணையிட்டால் நலமாக இருக்கும்.பின் அவர்கள் தங்களை இளித்த வாயர்களாக எண்ணி மனத்துயரடையக் கூடாது அல்லவா?
டிக்கெட் கட்டணம் ,இணையத்தளங்களில் படம் வெளியீடு என்று (இணையத்தளங்களில் புதிய படங்களை வெளியிட தடை ஏற்கனவே நீதிமன்றம் மூலம்பிறப்பிக்கப்பட்டும் கூட )
வழக்கு தொடர்ந்து இரு நாட்களில் இரண்டு வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த கபாலி பட  வழக்குகளுக்கு விசாரித்து தீர்ப்பு வழங்கிய உங்களுக்கு நல்ல எதிர்காலம் (அதிமுகவில்) காத்திருக்கிறது மை லார்ட்.
======================================================================================










இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?