"காந்தியார் ஊழல் செய்து விட்டார்'


  • சுப்பிரமணிய சிவா என்று அழைக்கப்பட்ட சுப்பிரமணிய சிவம் ராஜம் ஐயர் நாகலட்சுமி அம்மாள் தம்பதியர்க்கு 4-10-1884-ஆம் வருடம் மதுரை அருகே உள்ள வத்தலகுண்டு என்ற ஊரில் பிறந்தார் அவருக்கு ஞானாம்பாள், தைலாம்பாள் என்ற இரண்டு சகோதரிகளும், வைத்தியநாதன் என்ற சகோதரரும் உண்டு. இவருடைய இளமைப் பருவம் வறுமையில் கழிந்தது. 
  • 12-வது வயது வரை இவர் மதுரையில் படித்தார் பின்னர் திருவனந்தபுரம் சென்று  படித்தார் பின்னர் கோயமுத்தூரில் ஒரு வருடம் பிரவேச தேர்வுக்காக படித்தார் இக்காலமே இவரின் தேச பக்தி அரும்பத் தொடங்கிய காலம். இக்காலத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்து கொண்டிருந்த போயர் யுத்தத்தில் போயர்களின் வீரச்செயல்களை பாராட்டி ஆங்கிலத்தில் பல கவிதைகள் இயற்றியுள்ளார் ( அவற்றில் ஒன்றுகூட இப்போது நமக்கு கிடைக்கவில்லை ).

     சிவகாசியில் போலீஸ் இலாகாவில் குமாஸ்தா வேலையில் சேர்ந்தார். சேர்ந்த மறுநாளே இந்த வேலையை விட்டு விலகிவிட்டார். இவர் பார்த்த முதலும் கடைசியுமான வேலை இதுவே. 
  • 1899-ல் இவருக்கும் மீனாட்சியம்மைக்கும் திருமணம் நடைபெற்றது. இல்லறத்தில் நுழைந்தாலும் தேச சேவை மறந்தாரில்லை.

    1906-ஆம் ஆண்டு  திருவாங்கூர் சமஸ்தானம் சிவாவை திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து உடனே வெளியேற உத்தரவிட்டது. இதன் பின்னர் இவர் ஊர் ஊராகச் சென்று ஆங்கில அரசுக் கைதியாக பிரச்சாரம் செய்து வந்தார்.

    சிவா மிகச் சிறந்த சொற்பொழிவாளர் இவரது பேச்சை கேட்ட பல இளைஞர்கள் தங்களை தேச சேவையில் இணைத்துக் கொண்டனர். சிவா தன்னுடைய திட்டங்களுக்கு இளைஞர்களும், தொழிலாளர்களுமே பக்க பலமாக இருப்பார்கள் என பலமாக நம்பினார் இவர்களுக்காக அயராது பாடுபட்டார். அப்போது தான் அவருக்கு வ.உ.சி.-யின் நட்பு கிடைத்தது. அதே காலத்தில் தான் நெல்லை வந்திருந்த மகாகவி பாரதியுடன் நட்பு கொண்டார்.  மூவரையும் தமிழகத்தின் தேசிய மூம்முர்த்தினர் என்றே குறிப்பிடலாம்.
    நெல்லை,தூத்துக்குடியில் வ.உ.சி யுடன் சேர்ந்து இந்திய விடுதலைக்கால சொற்பொழிவுகள்,போராட்டங்கள் நடத்தியதால்  இருவருக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
  •  மேல் முறையீட்டினால் இருவருக்கும் தண்டனை குறைக்கப்பட்டது. சிவாவுக்கு 10 வருட தண்டனை 6 வருடமாக குறைக்கப்பட்டது. சிவா 2-11-1912-ல் விடுதலை அடைந்தார். விடுதலைக்குப் பின் சென்னையில் குடியேறினார். சென்னையில் பிரபஞ்சமித்திரன் என்ற வாரபத்திரிகையையும், ஞானபானு என்ற மாத பத்திரிகையையும் தொடங்கினார். 
  • ஞானபானு-வில் பாராதியாரின் படைப்புகளை தொடர்ந்து வெளியிட்டார். பாண்டிச்சேரியில் இருந்த பாரதிக்கு ஞானபானு சுதந்திர போராட்ட ஆயுதமாக திகழ்ந்தது. சுப்பிரமணிய சிவாவின் சென்னை வாழ்க்கை மிகுந்த நெருக்கடியில் தான் கழிந்தது. இந்நிலையில் அவருடைய மனைவி. மீனாட்சியம்மை உடல் நிலை மோசமாகி 15-5-1915-ல் சென்னையில் காலமானார். 
  • மனைவி இறந்தபின் சிவாவின் சுற்றுப் பயணங்கள் செய்து விடுதலைக்காக போராட்டங்கள்,சொற்பொழிவுகள் செய்வதிலேயே முனைந்தார்.. ஊர் ஊராக சென்று மக்களுக்கு தேச உணர்வையூட்டினார். பொது கூட்டமாக நடத்தாமல் மக்கள் எங்கு கூட்டமாக இருக்கிறார்களோ அங்கே பேசினார்.

    1919-ல் மீண்டும் இந்திய தேசாந்திரி என்ற பத்திரிகையை தொடங்கினார். 
  • 1920-ல் சென்னையில் நடைபெற்ற ட்ராட் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின் போது தீவிர ஆர்வம் காட்டி தொழிலாளர்களுக்காக பகலிரவு பாராது உழைத்தார்.

     1921-ம் வருடம் இரண்டரை வருடம் கடுங்காவல் தண்டனை வழங்கியது. பின்னர் உவாரங்களில் விடுதலை செய்து விட்டது. பின்னர் 27-11-1922-ல் ஒரு வருட சிறை தண்டனை அளித்தது. கொடுமையான சிறை வாழ்க்கை காரணமாக அவருக்கு தொழுநோய் ஏற்பட்டது. இன்றைய நிலை போல் இல்லை தொழு நோயாளியின் நிலைமை இதற்கு சுப்பிரமணிய சிவாவின் நிலைமையும் ஒரு சாட்சி, அவருடைய நோயை காரணம் காட்டி சிவாவை ரயிலில் பயணம் செய்யக் கூடாதென்று அரசு தடைவிதித்தது. இதனைக் கண்டு கலங்கவில்லை சிவா, கட்டை வண்டியிலும், கால் நடையாகவும் தன் பயணத்தை மேற்க்கொண்டு மக்களுக்கு அந்நிய ஆட்சியின் கொடுமைகளை விளக்கி பிரச்சாரம் செய்தார். பாரத ஆலயம் கட்ட தருமபுரி அருகே உள்ள பாப்பாராபட்டியில் உள்ள தனது ஆசிரமத்தில் தேசபந்து சித்தரஞ்சன் தாலைக் கொண்டு 23-1-1923-ல் அடிக்கல் நாட்டினார். அதில் முன்னணி விடுதலைப் போராட்ட வீரர்கள்  சிலைகளை நிறுவ நினைத்திருந்தார். கப்பலோட்டியதால் தனது வாழ்க்கையையே இழந்த வீரர்  வ.உ.சி. சிலைக்குதான்  முதளிடம் ஒதுங்கியிருந்தார்.

    நோயாலும் அதனை பொருட்படுத்தாமல்  அயராது பாடுபட்டதால் அவரது உடல் நலம் குன்றியது. 
  • தொழிலாளர் ,விவசாயிகள்தான் நாட்டைன் சிற்பிகள் என்பது சிவாவின் கருத்து அதனால் காங்கிரசை விட கம்யூனிஸ்ட் இயக்கம் மீது அவரின் பற்றுதல் அதிகம். 1925-ல் கான்பூரில் நடைபெறவிருந்த கம்யூனிஸ்ட்கட்சினரின் முதலாவது மாநாட்டில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார். 
சுரன் 20160723
"காந்தியார் ஊழல் செய்து விட்டார்"
  • உடல் நிலை தேறியவுடன் திருநெல்வேலி வழியாக மேற்கு கடற்கரை யோரமாக பம்பாய் சென்று அங்கிருந்து கான்பூரில் நடைபெறும் பொது கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார். 
  • சிவாவின் உடல் நிலை  மிகவும் மோசமடைந்து வந்ததினால் அவரால் திட்டமிட்டபடி கான்பூர் மாநாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை. 22-7-1925-ல் தனது சீடர் சுந்தர பாரதியின் துணையுடன் பாப்பாரபட்டியில் உள்ள தனது ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தார். 
  •  மறுநாள் அதாவது 23-7-1925 வியாழக்கிழமை காலை 5 மணிக்கு சுப்பிரமணிய சிவா தனது 41-வது வயதில் தனது இவ்வுலக வாழ்வை நீந்தார்.
  • ஏகாதிபத்தியத்தை எதிர்த்து விடுதலைக்காக புரட்சி செய்த சுப்பிரமணிய சிவா தான் கனவு கண்ட  நாடு விடுதலை அடைந்து தொழிலாளர்,விவசாயிகள் தலையிலான ஆடசி மலர்வதை காணாமலேயே  மறைந்து விட்டார்.ஆனால் வ.உ.சி ,சிவா ஆகியோர் தொழிலாளர்களை முன்னிறுத்தி போராடுவதையும் கம்யூனிஸ்ட் கருத்துக்களை கொண்டிருந்ததாலும்,குறிப்பாக காந்தியின்  ஆதரவான நடவடிக்கைகளும் சிவாவுக்கு ,அத்துடன் வ.உ.சி. க்கு தென்னாப்பிரிக்காவில் இருந்து காந்தியாரிடம்கொடுக்கப்பட்ட வாழ்க்கை நிதியை காந்தி கடைசிவரை வ.உ.சியிடம் கொடுக்கவேயி  ல்லை. அப்பணத்தில் தனது சமர்ப்பமதி ஆசிரமத்தை கட்டிக்கொண்டார்.மேலும் ஒத்துழையாமை இயக்கம் திரும்பப்பெற நடை பெற்ற வாக்களிப்பில் காந்திக்கு ஆதரவாக வாக்களிக்க பலருக்கு ரகசியமாக  பணம் கொடுக்கப்பட்டதாக வெளியான செய்திகளும் சிவாவை "காந்தியார் ஊழல் செய்து விட்டார் என்ற கடிதத்தை எழுத வைத்தது(அக்கடிதம் தனியே) அதனாலும் இந்திய விடுதலை போராட்டங்களை முன்னின்று நடத்திய காந்தி தலைமையிலான காங்கிரசு இவர்கள் மீது பாராமுகமாக நடந்து ஒதுக்கியது.
  • வ.உ.சி சிறையில் இருந்து வரும் போது அவரை வரவேற்க சுப்பிரமணிய சிவாவைத்தவிர  காங்கிரசார் யாரும் வரவில்லை.சிவாவின் போராட்டங்களுக்கு காங்கிரசு முக்கியத்துவம் கொடுப்பதில்லை அவரை கூட்டங்களுக்கு அழிப்பதில்லை.இந்த உதாசீணம் சிவாவுக்கு கவலையை தந்தது.ஆனாலும் அவரின் விடுதலை வேட்கை இறுதிவரை குறையவில்லை.தனது பாதையிலேயே நடை போட்டு மறைந்தார்.
=====================================================================================
இன்று,
ஜூலை-23.
  • கனடா மாகாணம் என்ற பெயரில் வடஅமெரிக்காவில் பிரிட்டன் குடியேற்ற நாடு அமைக்கப்பட்டது(1840)
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் லோகமான்ய திலகர் பிறந்த தினம்(1856)

  • ஃபோர்டு மோட்டார்  உலகின்  முதல் காரை விற்பனையை  செய்தது(1903)

  • இந்திய விடுதலை போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா இறந்த தினம்(1925)



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?